Wednesday, October 19, 2011

கோடி மடங்கு புண்ணியம் தரும் திருவாதிரை நட்சத்திர திருஅண்ணாமலை கிரிவலம் REPOST





திருஅண்ணாமலையின் பெருமைகளைப் பற்றி விளக்கவே ஒரு தனி வலைப்பூவை உருவாக்கலாம்;இருந்தபோதிலும்,திரு அண்ணாமலை பற்றி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்?



சுமார் 240 கோயில்களில் ஒராண்டு வரை தினமும் நாம் செய்யும் வழிபாடுகள்,பூஜைகளுக்குச் சமமானது ஒரே ஒரு முறை திருஅண்ணாமலை கிரிவலம் செல்வது.அதனால் தான் திரு அண்ணாமலையைப் பற்றி நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் இவ்வளவு விரிவாக,நிறைய தகவல்களை நிரப்புகிறோம்.



ஒரு சாதாரண நாளில் திரு அண்ணாமலை கிரிவலம் சென்றாலே நமது முன்வினைகள் கடுமையாக நீங்கிவிடும்.அமாவாசை அல்லது பவுர்ணமியன்று ஆண்கள் மேலாடை இல்லாமல் கிரிவலம் செல்வது கர்மங்களை அழிக்கும்.ஏனெனில்,இந்த நாட்களில் பல ஆயிரக்கணக்கான சித்தர்கள் கிரிவலம் செல்லுவார்கள்.அவர்களின் உடலில் பட்ட காற்று நம்மையும் அறியாமல் நமது உடல் மீது பட்டாலே நமது பல்லாயிரம் முற்பிறவிபாவங்களை அழித்துவிடும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.இதுக்கெல்லாம் ஆதாரம் தர முடியாது;உணர மட்டுமே முடியும்.(அப்படிப் படும் சித்தர் நமது தாத்தாவுக்கு தாத்தாவாக இருப்பார் என்பதும் சூட்சும ஆன்மீக ரகசியம்)



தீராத கடன் தொல்லை,பல வருட நோய், துரத்திகொண்டே இருக்கும் எதிரி,அரசாங்கத்தின் கோபத்தினை எதிர்கொள்ள முடியாத அப்பாவிகள்,சட்டத்தினால் பாதிக்கப்பட்டு நியாயம் கிடைக்காமல் குமுறும் சராசரி மனிதர்கள்,வாழ்க்கைத்துணையை இழந்து அல்லது பிரிந்து தவிக்கும் இளம்பெண்கள் /இளைஞர்கள், திருமணம் தாமதமாகும் முதிர்கன்னிகள்,முதிர் இளைஞர்களுக்காகவும் மேலும் பல சொல்ல முடியாத பிரச்னைகளிலிருந்து மீளவும் பல்லாயிரக்கணக்கான பரிகாரங்கள் இருக்கின்றன.அவற்றில் மிக மிக சுலபமான பரிகாரமே திருஅண்ணாமலை கிரிவலம்.



முன்பே சொன்னபடி,திருஅண்ணாமலை கிரிவலம் செல்லுவதிலேயே 1,00,008 விதங்கள் இருக்கின்றன.அவற்றில் ஒன்றுதான் திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாளில் செல்லும் கிரிவலம்.



சிவபெருமானின் அவதார நட்சத்திரம் திருஆதிரை எனப்படும் திருவாதிரை.இந்த நட்சத்திரம் நிற்கும் நாளில் திருஅண்ணாமலைக்கு வந்து நாம் கிரிவலம் சென்றால்,மற்ற நாட்களில் கிரிவலம் சென்றால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விட பல கோடி மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்பது உறுதி.இதை அருணாச்சல புராணம் பாடல்களாகவே தெரிவிக்கிறது.



கூடவே,கிரிவலம் செல்லும்போது அன்னதானம் செய்வது இன்னும் அதிகமான புண்ணியத்தை நமக்குத் தரும்;நமது முற்பிறவி கர்மாக்கள்;நமது முன்னோர்களின் கர்மாக்களை அழித்துவிடும்.(நமது அம்மா,அப்பாவின் ஐந்து தலைமுறை முன்னோர்களின் புண்ணியம் மற்றும் பாவத்தின் ஒரு பகுதியை நாம் அனுபவித்துவருகிறோம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்).



கிரிவலம் செல்லும்போது மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என ஜபித்துக்கொண்டே 14 கிலோ மீட்டர்களும் பயணிப்பதால்,இன்னும் அதிகமான புண்ணியம் நமக்குக் கிடைக்கும்;நமது கடுமையான கர்மங்கள் அழியும்.



கர வருடத்தின்(14.4.2011 முதல் 13.4.2012 வரை) திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாட்கள்(ஆங்கிலத் தேதிப்படி)



7.5.2011 சனி காலை 8.05 முதல் 8.5.2011 ஞாயிறு காலை 8.08 வரை



3.6.2011 வெள்ளி மதியம் 3.54 முதல் 4.6.2011 சனி காலை 4.03 வரை



30.6.2011 வியாழன் இரவு 11.41 முதல் 1.7.2011 வெள்ளி இரவு 11.57 வரை



28.7.2011 வியாழன் காலை 7.24 முதல் 29.7.2011 வெள்ளி காலை 7.47 வரை



24.8.2011 புதன் மதியம் 2.57 முதல் 25.8.2011 வியாழன் மதியம் 3.26 வரை



20.9.2011 செவ்வாய் இரவு 10.28 முதல் 21.9.2011 புதன் இரவு 11.04 வரை



18.10.2011 செவ்வாய் காலை 6 முதல் 19.10.2011 புதன் காலை 6.38 வரை



14.11.2011 திங்கள் மதியம் 1.18 முதல் 15.11.2011 செவ்வாய் மதியம் 2.08 வரை



11.12.2011 ஞாயிறு இரவு 8.36 முதல் 12.12.2011 திங்கள் இரவு 9.34 வரை



8.1.2012 ஞாயிறு காலை 4.04 முதல் 9.1.2012 திங்கள் காலை 5.09 வரை(இது மார்கழி மாத பவுர்ணமி)



4.2.2012 சனி காலை 11.31 முதல் 5.2.2012 ஞாயிறு மதியம் 12.22 வரை



2.3.2012 வெள்ளி இரவு 7 முதல் 3.3.2012 சனி இரவு 8.18 வரை



30.3.2012 வெள்ளி விடிகாலை 2.15 முதல் 31.3.2012 சனி விடிகாலை 4.01 வரை



ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment