Sunday, October 30, 2011

மதுரை அழகர்கோவில் பகுதியில் உறைந்திருக்கும் யாகோபுசித்தர்



மதுரை அழகர்கோவிலில் இருந்து மேலூர் செல்லும் வழியில் ஒரு கிராமத்தையொட்டி ஒரு சாலை பிரிகிறது;அந்தச் சாலையின் வழியே சென்றால்,சில கிராமங்கள் வருகின்றன.அதையும் கடந்து சாலைகளே இல்லாத பல மாந்தோப்புக்களைக் கடந்தால்,ஒரு வற்றாத சுனை விழுந்துகொண்டிருக்க,அதன் மையப்பகுதியில் யாகோபு சித்தரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
சித்தரைப் பற்றி ஆராய்பவர்கள்,ஆன்மீகத் தேடல் உள்ளவர்களில் பலர் மதுரையில் இருக்கின்றனர்.அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த யாகோபு சித்தரின் ஜீவசமாதியின் இருப்பிடம் தெரிந்திருக்கும்.இந்த இடத்துக்கு நமது ஆன்மீகக்கடல் வாசகர் ஒருவரின் மூலமாக செல்லும் பாக்கியம் கிடைத்தது.இந்த பெருமையை ஆன்மீகக்கடல் வாசகர்கள் அனைவருக்கும் பகிர்ந்துகொள்வதில்,ஆன்மீகக்கடல் பெருமை கொள்கிறது.
சந்தர்ப்பமும் நேரமும் இருப்பவர்கள்,இங்கும் சென்று,ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.
மதுரை ஆன்மீக மக்களின் மத்தியில் இன்னொரு தகவலும் உலவுகிறது.இந்தப் படத்தில் இருப்பது யாகோபு சித்தரின் ஜீவசமாதி அல்ல;அழகர்கோவிலின் மலையுச்சியில் இருக்கிறது.அந்த இடத்துக்கும் பலர் சென்று தியானித்துவிட்டு வருவது உண்டு.
சித்தர்கள் ஆட்சி பூமியில் விரைவில் ஆரம்பித்து,பூமியில் அன்பும் அமைதியும் பரவ ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!!!
ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. kindly tell the village name or correct location

    ReplyDelete
  2. மதுரை அழகர்கோவில் ஆர்ச்சிலிருந்து மேலூர் செல்லும் வழியில் 5கிலோ மீட்டர்கள் தூரம் சென்றால்,கிடாரிப்பட்டி வரும்.கிடாரிப்பட்டியில் ஆண்டிச்சாமி கோயிலுக்கு எப்படி போகணும்?னு கேட்டாலே சொல்லிடுவாங்க. கிடாரிப்பட்டியிலிருந்து 5 கிலோ மீட்டர்கள் தூரத்துக்கு கிராமத்துச்சாலை,மாந்தோப்புக்கள் என பயணிக்க வேண்டும்.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete