Sunday, October 23, 2011

செல்வ வளம் பெருக உதவும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு











ஒரே நேரத்தில் நமது முன் ஜன்ம கர்மாக்கள் கரைய வேண்டும்;அதே நேரத்தில் நமது வருமானமும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் இரண்டே இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும்.முதலாவது அசைவம் சாப்பிடுவதைக் கைவிட வேண்டும்.(என் மகன்/ள் அசைவம் சாப்பிடாம இருக்க மாட்டானே/ளே என்று சமாளிக்காதீர்கள்;அந்த குழந்தைச் செல்வங்களுக்கு அசைவம் சாப்பிடும் பழக்கத்தை ஆரம்பித்துவைத்தது யார்?)இரண்டாவதாக ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யத் துவங்க வேண்டும்.(ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோ வேண்டுவோர் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்)

அதெப்படி , கடவுளிடம் வரம் தான் கேட்க வேண்டும்.நிறைய பணம் கொடுன்னு கேட்பது தப்பில்லையா?

சரி,நமெல்லாம் பரம்பரைப் பணக்காரராகப் பிறக்குறதுக்கு நாம் முற்பிறவிகளில் நற்செயல்கள் மட்டுமா செய்திருக்கிறோம்?திமிர் அல்லது பொறாமை அல்லது அகம்பாவம் இல்லாத மனிதர் நம்மில் யாராவது உண்டா? கடந்த ஐந்து ஜன்மங்களில் உருவான சுபாவம்தான் இந்த ஜன்மத்திலும் நம்மிடம் இயற்கை குணமாக அமைந்திருக்கிறது.ஆதாரம் இதுக்கெல்லாம் எதுக்கு? அதான் நம்மோடு பழகுறவங்களே நம்மைப் பத்தி சொல்வாங்களே!  சரி,கவனத்தை திசை திருப்பாம ஆக வேண்டியதைப் பார்ப்போம்.


இதுவரை செய்த தவறுகள்,தப்புகள்(வேணும்னே செஞ்சது) இனி செய்யாமலிருக்கவும்,இனிமேல் யாருக்கும் நேரடியாகவோ,மறைமுகமாகவோ தீங்குகள் தராமலிருக்கவும்,நிம்மதியாகவும் ,செல்வச் செழிப்போடு வாழவுமே இந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டை  ,நமது ஆன்மீக குரு  மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆசியோடும் அறிமுகப்படுத்துகிறோம்.

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில், செல்வம் தர்மத்தைக் காக்கிறது;தர்மம் செய்ய நிறைய பூர்வ புண்ணியம் வேண்டும்.என்று சொல்லியிருக்கிறார்.
பூர்வ புண்ணியம் இல்லாதவர்கள்,சிவனுடைய முதல் அவதாரத்தை வழிபட்டாலே போதுமானது என நமது ஆன்மீக குரு மிஸ்டிக் செல்வம் ஐயா ஆன்மீகரீதியாக ஆராய்ந்து  சொல்லியிருக்கிறார்.


வெள்ளிக்கிழமைகள் தோறும் ,மாலை நேரத்தில் சுமார் 6 மணி முதல் 10 மணிக்குள் நமது வசதியான நேரத்தில்,வீட்டில் இருக்கும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வில்வ இலைகளால்(வில்வ இலை கிடைக்காதவர்கள் சிகப்பு அரளிப்பூக்கள் அல்லது வேறு எந்த பூக்களாலும்) பைரவ மூர்த்தி சத நாமாவளி கூறி ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை அர்ச்சனை செய்ய வேண்டும்.இப்படி தொடர்ந்து பதினாறு வெள்ளிக்கிழமைகள் வழிபாடு செய்ய வேண்டும்.

ஏதாவது சகுனத் தடை வந்தாலும்,விட்டு  விட்டு செய்யலாம்.பதினாறு வெள்ளிக்கிழமைகளுக்குப் பிறகும் தொடர்ந்து செய்யலாம்.(நீண்டகாலக் கடன்கள் தீரவும் இந்த பூஜைமுறையைப் பின்பற்றலாம்)

ஸ்ரீபைரவர் அஷ்டோத்திர  சத நாமாவளி

1.ஓம் பைரவாய நமஹ
2.ஓம் பூத நாதாய நமஹ
3.ஓம் பூதாத்மனே நமஹ
4.ஓம் பூதபாவநாய நமஹ
5.ஓம் க் சேத்ர தாய நமஹ
6.ஓம் க் சேத்ரக்ஞாய நமஹ
7.ஓம் க் சேத்ர பாலாய நமஹ
8.ஓம் சத்ரியாய நமஹ
9.ஓம் விராஜே நமஹ
10.ஓம் மாசான வாசினே நமஹ
11.ஓம் மாம்சாசினே நமஹ
12.ஓம் ஸர்ப்பராஜயே நமஹ
13.ஓம் ஸ்மார்ந்தக்ருதே நமஹ
14.ஓம் ரக்தபாய நமஹ
15.ஓம் பானபாய நமஹ
16.ஓம் சித்தாய நமஹ
17.ஓம் சித்திதாய நமஹ
18.ஓம் சித்த சேவிதாய நமஹ
19.ஓம் கங்காளாய நமஹ
20.ஓம் காலசமானாய நமஹ
21.ஓம் கலாய நமஹ
22.ஓம் காஷ்டாய நமஹ
23.ஓம் தநவே நமஹ
24.ஓம் தவயே நமஹ
25.ஓம் த்ரிநேத்ரே நமஹ
26.ஓம் பகுநேத்ரே நமஹ
27.ஓம் பிங்களலோசனாய நமஹ
28.ஓம் சூலபாணயே நமஹ
29.ஓம் கட்க பாணயே நமஹ
30.ஓம் கங்காளிநே நமஹ
31.ஓம் தூம்ரலோசனாய நமஹ
32.ஓம் அபீரவவே நமஹ
33.ஓம் பைரவாய நமஹ
34.ஓம் நாதாய நமஹ
35.ஓம் பூதபாய நமஹ
36.ஓம் யோகினி பதயே நமஹ
37.ஓம் தநதாய நமஹ
38.ஓம் தனஹாரிணே நமஹ
39.ஓம் தனவதே நமஹ
40.ஓம் ப்ரீதி பாவனாய நமஹ
41.ஓம் நாகஹாராய நமஹ
42. ஓம் நாக பாசாய நமஹ
43.ஓம் வ்யோமகேசாய நமஹ
44.ஓம் கபால ப்ருதே நமஹ
45.ஓம் காலாய நமஹ
46.ஓம் கபால மாலிநே நமஹ
47.ஓம் கமநீயாய நமஹ
48.ஓம் கலாநிதியே நமஹ
49.ஓம் த்ரிலோசனாய நமஹ
50.ஓம் ஜ்வாலந் நேத்ராய நமஹ
51.ஓம் த்ரிசிகிநே நமஹ
52.ஓம் த்ரிலோக பாய நமஹ
53.ஓம் த்ரிநேத்ர தனதாய நமஹ
54.ஓம் டிம்பாய நமஹ
55.ஓம் சாந்தாய நமஹ
56.ஓம் சாந்த ஜனப்ரியாய நமஹ
57.ஓம் வடுகாய நமஹ
58.ஓம் வடுவேஸாய நமஹ
59.ஓம் கட்வாங்க வரதாரகாய நமஹ
60.ஓம் பூதாத்யக்ஷ்சாய நமஹ
61.ஓம் பசுபதயே நமஹ
62.ஓம் பிக்ஷுதாய நமஹ
63.ஓம் பரிசாரகாய நமஹ
64.ஓம் தூர்தாய நமஹ
65.ஓம் திகம்பராய நமஹ
66.ஓம் சூராய நமஹ
67.ஓம் ஹரிணாய நமஹ
68.ஓம் பாண்டுலோசனாய நமஹ
69.ஓம் ப்ரசாந்தாய நமஹ
70.ஓம் சாந்திதாய நமஹ
71.ஓம் சித்தாய நமஹ
72.ஓம் சங்கராய நமஹ
73.ஓம் ப்ரியபாந்தவாய நமஹ
74.ஓம் அஷ்டமூர்த்தியே நமஹ
75.ஓம் நிதீசாய நமஹ
76.ஓம் ஞான கடாட்சே நமஹ
77.ஓம் தபோமயாய நமஹ
78.ஓம் அஷ்டாதாராய நமஹ
79.ஓம் சடாதாராய நமஹ
80.ஓம் ஸர்ப்ப யுக்தாய நமஹ
81.ஓம் சிகீஸகாய நமஹ
82.ஓம் பூதராய நமஹ
83.ஓம் பூதராதீசாய நமஹ
84.ஓம் பூபதயே நமஹ
85.ஓம் பூதராத்மஜாய நமஹ
86.ஓம் கங்கால தாரிணே நமஹ
87.ஓம் முண்டிநே நமஹ
88.ஓம் நாக யக்ஞோபவீதவதே நமஹ
89.ஓம் ஜ்ரும்பணோ மோஹன ஸ்தம்பீ மாரண க்ஷோபனாய நமஹ
90.ஓம் சுத்த நீலாஞ்சன ப்ரக்யாய நமஹ
91.ஓம் தைத்யக்நே நமஹ
92.ஓம் முண்டபூஷிதாய நமஹ
93.ஓம் பலிபுஜே நமஹ
94.ஓம் பலிபுங் நாதாய நமஹ
95.ஓம் பாலாய நமஹ
96.ஓம் அபால விக்ரமாய நமஹ
97.ஓம் ஸர்வ ஆபத்தோரணாய நமஹ
98.ஓம் துர்க்காய நமஹ
99.ஓம் துஷ்டபூத நிவேசிதாய நமஹ
100.ஓம் காமிநே நமஹ
101.ஓம் கலாநிதையே நமஹ
102.ஓம் காந்தாய நமஹ
103.ஓம் காமினி வசக்ருதே நமஹ
104.ஓம் வசினே நமஹ
105.ஓம் சர்வசித்தி பிரதாய நமஹ
106.ஓம் வைத்யாய நமஹ
107.ஓம் பிரபவே நமஹ
108.ஓம் விஷ்ணவே நமஹ
நன்றி:பைரவ விஜயம்,பக்கங்கள்108,109,110.

ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு நான் கொடுக்கும் தீபாவளிப்பரிசு இது.
ஓம்சிவசிவஓம்



2 comments:

  1. Your blogs are excellent.....! I have chanted swarna akarshana bhairava's moola mantra just once on thaeipirai astami.....I have got Rs. 15,000 the next day. It is a great miracle....

    Keep continuing your good work. God bless you.

    OmsivasivaOm.

    ReplyDelete
  2. Could you please post to me the swarna akarshana bhairava's moola mantra for me to start chanting......

    Thanks.

    ReplyDelete