Friday, October 7, 2011

சீனர்களின் ஆரோக்கிய இரகசியம்





உலகின் மிகச் சிறந்த உணவாக சீன உணவே போற்றப்படுகிறது. இந்த உணவு முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம். குறிப்பாக 1.கொழுத்த சரீரம் உருவாகாது. 2. இதய நோய்களுக்கான அறிகுறியே காணப்படாது.




இந்த இரண்டு தன்மைகளும் ஒருவரிடம் தொடர்ந்து இருந்தால் அவர் ஆரோக்கியமாக வாழலாம். ஆரோக்கியம் தொடர்வதால் வாழ்நாளும் நீடிக்கிறது. பிறநோய்கள் இருந்தாலும் எளிதில் அவற்றைக் குணப்படுத்தலாம்.



ஹாங்காங்கின் சீனப்பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஊகாம்ஸாங் என்பவர் தனது ஆய்வின் முலம் இந்த உண்மையைக் கண்டுபிடித்துள்ளார்.



சரி. சீனர்கள் அப்படி என்னதான் சாப்பிடுகிறார்கள்?



பால் சேர்க்காத கிரீன் டீ யை நாலைந்து தடவை தினமும் அருந்துகின்றனர். நீராவியில் வேகவைத்த காய்கறிகள் மற்றும் சில நேரங்களில் காய்கறிகளை சிறிய அளவில் எண்ணெயில் வறுத்தும் சாப்பிடுகின்றனர்.



சோயா பீன்ஸ், தயிரையும் நிறையச் சேர்த்துக் கொள்கின்றனர்.



காலையில் முட்டை ஆம்லட் அல்லது கொத்துக்கறி சேர்த்துக் கொள்கின்றனர். இதில், இஞ்சி, வெள்ளைப் பூண்டு உட்பட மசாலா வகைகள் சேர்த்துவிடுகின்றனர். இதுவே காலை நேரத்திற்கும் பகல் உணவிற்கும் எற்ற ஒரே உணவாகும்.



மற்ற நேரமெல்லாம் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுடன் சோயா மற்றும தயிர் சேர்த்த சாதம் ஒரு முறையும், பச்சையான காய்கறிகளை ஒரு முறையும் சாப்பிடுகின்றனர்.



இவர்கள் அடிக்கடி விரும்பியும் போற்றியும் குடிப்பது கிரீன் டீதான். இது முதுமை அடைவதை தடுக்கும் தேநீர். மேலும் இந்தத் தேநீரில் இளமையை நீடிப்பதுடன் இதயத்துக்குப் பாதுகாப்பையும் வழங்கும் பாலிபெனால் என்ற சத்துப் பொருள் இருக்கிறது.



கிரீன் டீக்கும் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுக்கும் நீங்களும் முக்கியத்துவம் கொடுங்கள். உலகின் மிகச்சிறந்த இந்த உணவால் ஆரோக்கியம் தொடர்வது உறுதி. உலக சுகாதார நிறுவனம் சிபாரிசு செய்துள்ள உணவுமுறை இது என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் 2000ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்.








thanks: our reader

No comments:

Post a Comment