Wednesday, October 19, 2011

அனைவரும் கர்மாக்களிலிருந்து விடுதலையடைய செய்ய வேண்டியது




ஐப்பசி மாதம் பிறந்துவிட்டது.சூரியன் மீண்டும் பலம் பெறத்துவங்குவது தை மாதத்தில்!! சூரியன் உச்சமடையப்போவது சித்திரை மாதக் கடைசியில்!!! அதுவரையிலும் தமிழ்நாட்டை மழையும்,குளிரும் ஆளப்போகின்றன.இந்த வாய்ப்பை நாம் எப்படி பயன்படுத்துவது?
ஜனவரி 2011 ஆம் ஆன்மீகக்கடல் பதிவுகளில் துவாதசி திதி மற்றும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாட்களை பட்டியலிட்டிருக்கிறேன்.இதில் சனிக்கிழமையும்,ஞாயிற்றுக்கிழமையும் உங்களுக்குரிய விடுமுறை நாட்களும் இருக்கின்றன.இதில் ஏதாவது ஒரு நாளைத் தேர்ந்தெடுங்கள்.மழை மற்றும் குளிருக்குரிய ஆடைகள்,பொருட்கள்(அதாங்க குடை,மப்ளர்,ரெயின் கோட்,உங்களின் உடல் நிலைக்கேற்ற மருந்துகள் மற்றும் உணவுகள்) தயார் செய்துவிட்டு,திரு அண்ணாமலைக்கு வாருங்கள்.வரும்போது ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் தேவையான மஞ்சள்துண்டு,ஐந்துமுக ருத்ராட்சங்கள் இரண்டையும் உடன் கொண்டு வருக!!!
அதிகாலையிலேயே குளித்து தயாராகி,காலை 6 மணிக்குள் அண்ணாமலையாரை தரிசியுங்கள்.குறைந்தது ஐந்து கிலோ நவதானியங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்;நவதானியங்களில் எல்லாம் கலந்ததே விலை குறைவு.ஒரு கிலோ ரூ.50/-க்குள் இருக்கும்;காலை 9 மணிக்குள் கிரிவலம் புறப்படுங்கள்.அக்னி லிங்கம் கடந்ததும்,அரசு கலைக்கல்லூரி வரும்;அதைக் கடந்ததும் ஒரு பெரிய மைதானம் வரும்;அந்த மைதானத்துக்கு எதிர்ப்புறம்தான் உட்பிரகாரம் செல்லும் வழி ஆரம்பமாகிறது.குளிர்காலம் என்பதால் குடிநீர் அதிகம் தேவைப்படாது.உட்பிரகாரம் வழியே கிரிவலப்பயணத்தை தொடருங்கள்.உட்பிரகாரத்தில் பயணிக்கும்போது நீங்கள் வாங்கிய நவதானியங்களை மனிதர்கள் காலடி படாதவிதமாக தூவுங்கள்.பெரும்பாலும் முட்களாலான புதர்களைக் காண்பீர்கள்.அதனருகே தூவி விடுங்கள். கிரிவலம் செய்யும்போது மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே வாருங்கள்;இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சங்கள் இருப்பது அவசியம்.கிரிவலம் நிறைவுற்றதும்,நேரமிருந்தால்,அண்ணாமலையாரின் கோவிலுக்குள் ஏதாவது ஓரிடத்தில் அமர்ந்து மஞ்சள் துண்டினை விரித்து,அதில் அமர்ந்து இரு உள்ளங்கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்து அண்ணாமலையாரை நோக்கியவாறு ஓம்சிவசிவஓம் ஜபிக்கவும்.கூச்சப்படுவோர்,தங்குமிடத்தில் உங்களது அறையிலேயே இதுபோல ஒரு மணிநேரத்துக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் ஜபிக்கவும்.
சொந்த ஊர் திரும்பிய சில நாட்களில் என்ன நடக்கிறது? என்பதை அனுபவ பூர்வமாக உணருவீர்கள்.உங்களின் பூர்வ ஜன்ம பாவங்களின் விளைவாக இப்போது இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறீர்கள் என்பதையும்,மேற்கூறிய சுலபப் பரிகாரத்தைச் செய்ததால்தான் அந்தக் கஷ்டம் தீர்ந்தது என்பதையும் அனுபவபூர்வமாக உணருவீர்கள்.அப்படி உணர்வதாக நீங்கள் நினைத்தால், அந்த அனுபவத்தை ஆன்மீகக்கடல் வலைப்பூவுக்கு எழுதுங்கள்.

உங்கள் அனுபவத்தினால்,இந்த பூமியில் வாழும் ஏதாவது ஒரு சில தமிழர்களும் அவர்களின் சிரமங்கள் நீங்க உங்களின் அனுபவம் ,ஆன்மீகக்கடலில் வெளியிட்டபின்னர்,வழிகாட்டியாக அமையும்.முயற்சி செய்யலாமா?
ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment