Friday, October 14, 2011

விஜயபாரதம் கேள்வி பதில் பகுதியிலிருந்து



கேள்வி:நான் ஒரு முருக பக்தன்.எந்த மந்திரத்தைச் சொல்லிப்பிரார்த்திப்பது?

பதில்:ஓம் சரவணபவ என்ற மந்திரத்தை தினசரி 108 முறை சொல்லுங்கள்.

கேள்வி:சாமி சிலைகள் திருடு போகின்றன.தங்களையே காத்துக்கொள்ல முடியாத தெய்வங்கள் எவ்வாறு மக்களைக் காப்பாற்றும்?

பதில்:’சிவன் சொத்து குல நாசம்’ என்பர்.அவ்வாறு திருடுபவர்களின் வாழ்க்கை கண்டிப்பாக நாசமாகப் போய்விடும்.அதனால்தான் நமது பெரியவர்கள் கோயில் தீபத்தைக் கூட விரலால் தூண்டக்கூடாது என்பர்.விரலில் உள்ள ஒரு துளி எண்ணெய் கூட நமது தலையில் தேய்க்கக் கூடாது என்பதற்காக!

கேள்வி:கூடங்குளம் அணுமின் நிலையம் முழுமையாக பணி நடக்கும்வரை சும்மா இருந்துவிட்டு,இப்போது திடீரென கிறிஸ்தவ பாதிரிகள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவதின் நோக்கம் என்ன?

பதில்: ரஷ்யாவின் திட்டம் என்பதால் அமெரிக்காவின் தாசர்களுக்குப் பிடிக்கவில்லையோ. . .என்னமோ. . .

கேள்வி:திருப்பரங்குன்றம் மலையை முஸ்லீம்கள் ‘சிக்கந்தர் மலை’ என்று அழைப்பது ஏன்?

பதில்:அப்துல்காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்மந்தமோ அவ்வளவுதான்.மலை மீது ‘சிக்கந்தர் பாட்சா’ என்ற முஸ்லீம் சமாதி கட்டிவிட்டு, மலையை சிக்கந்தர் மலை என்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.மலை மீது கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றக்கூட தடுத்துவருகின்றனர்.

கேள்வி:தமிழக அரசியல்வாதிகளும் ,தமிழக அரசும் மும்மொழி திட்டத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்குவது ஏன்?

பதில்: குப்பனும் சுப்பனும் இந்தி வேண்டாம் என்றவர்கள்,தங்கள் குழந்தைகளை மட்டும் இந்தி படிக்கவைத்தார்கள்.அற்ப அரசியல் காரணங்களும்,சுயநலமும் தான் காரணம்.இந்தவிஷயத்தில் தேசியக் கட்சிகள் கூட அடக்கியே வாசிக்கின்றன.

கேள்வி:இந்துக்களின் வரலாறு பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.சில புத்தகங்களைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லுங்களேன்?

பதில்: ‘பாரத நாட்டின் வரலாற்றில் ஆறு பொன்னேடுகள்” என்ற வீரசாவர்க்கர் புத்தகம் நமது நாட்டின் வரலாற்றை விளக்குகிறது.மற்றபடி இந்துக்களின் வரலாறு என்பதாக புத்தகங்கள் வரவில்லை;இந்து தர்மத்தின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்ள விவேகானந்தரின் ‘ஞான தீபம்’ போன்ற புத்தகங்களைப் படிக்கலாம்.

ஆன்மீகக்கடலின் பதில்: மிகப் பெரிய பட்டியல் இருக்கிறது.முதலில் ஆனந்த விகடன் கார்டூனிஸ்ட் மதன் எழுதிய ‘வந்தார்கள்;வென்றார்கள்’ படிக்கவும்.மிகவும் பெருமையும்,சாதனையும் நிறைந்த இந்து தர்மம் எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டது என்பதை போதுமான ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.
பாலகுமாரன் எழுதிய கூடு என்ற நாவல்

சாண்டில்யன் எழுதிய விலைராணி ,கடல்புறா=நாவல்கள்

ஓஷோ எழுதிய மறைந்திருக்கும் உண்மைகள்,நான் நேசிக்கும் இந்தியா

ஸ்ரீரங்கன் உலா=இவைகளில் இந்துக்களின் பெருமை மிகுந்த வரலாறு ஒளிந்திருக்கிறது.

கேள்வி:நரேந்திர மோடி உண்ணாவிரதத்தின் போது ஒரு முஸ்லீம் பிரமுகர் அவருக்குக் கொடுத்த தொப்பியை வாங்க மறுத்தது பற்றி?

பதில்:தொப்பி கொடுத்தா வாங்கிப் போடணுமா? கருணாநிதியிடம் குங்குமம் கொடுத்தால் வாங்கி,நெற்றியில் இட்டுக் கொள்வாரா?

1 comment:

  1. மோடி உண்ணாவிரத பந்தலில் இஸ்லாமிய மக்கள் வந்ததை பெரிய நியூஸாக போட காங்கிரஸுக்கும் ராகுலுக்கும் கொஞ்சம் பயம் வந்துவிட்டது என்பது உண்மை. ராகுல் குடிசைகளுக்கு போய் டீ குடித்தது வீணாகிவிடுமோ என்று பயப்படுகிறார்கள்.

    சொல்லி வைத்தது போல் குஜராத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த தர்கா ஒன்றின் இஸ்லாமிய மத குருவான செய்யத் இமாம் என்பவர் நேற்று உண்ணாவிரத மேடையில் ஏறினார். தமது ஆதரவாளர்களுடன் சென்று மோடிக்கு வாழ்த்து தெரிவித்த அவர், இஸ்லாமியர்கள் தலையில் அணியும் "குல்லா" ஒன்றை அவரிடம் அளித்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த மோடி, தாம் அதை அணிய மாட்டேன் என்றும், அதற்கு பதிலாக சால்வை ஒன்றை அணிவிக்குமாறும் கேட்டார்.அதன்படியே அவரும் சால்வையை அளிக்க,அதனை மோடி பெற்றுக்கொண்டார்.
    பிறகு செய்தியாளர்களிடம் கூறிய இமாம் "குல்லாவை மோடி ஏற்க மறுத்தது எனக்கு அவமானமல்ல; அது இஸ்லாத்திற்குதான் அவமானம்!"

    இது எப்படி இஸ்லாத்துக்கு அவமானம் ? முஸ்லீம்கள் குல்லா அணிவது அவர்கள் மத சம்பந்தப்பட்டது. தமிழகத்தில் குல்லா அணிந்து கஞ்சி குடித்து நியூஸ் பேப்பருக்கு போஸ் கொடுக்கும் திராவிட மதசார்பற்ற போர்வையை போர்த்திக்கொள்ளும் நடிகர்களை பார்க்கலாம். இதே குல்லா வழங்கிய நபருக்கு யாராவது திருநீர் அல்லது குங்குமம் கொடுத்தால் அணிந்துக்கொள்ளுவாரா ? அப்படி மறுத்தால் அது மதசார்பின்மை ஆகிவிடுமா ? மோடி மறுத்ததை ஏதோ தீவிரவாதிகள் குண்டு வைத்து நாசம் செய்ததை காட்டிலும் பெரிய குற்றம் போல மீடியாக்கள் செய்தி போடுவதில் உள்நோக்கம் உள்ளது. அவர்களுக்கு ராகுல் காந்தி தான் பிரதமாராக வர வேண்டும் என்று விருப்பம்.

    இஸ்லாத்தின் அடையாளமான குல்லாவை மறுத்து மத அடையாளம் இல்லத சால்வையை பெற்றக் கொண்ட மோடியின் செயலை நம் அனைவரும் பாராட்ட வேண்டும்

    ReplyDelete