Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு...திரைவிமர்சனம்.


தமிழ் திரைப்படத்தில் சமீபகாலத்தில் இந்த படத்துக்கு கிடைத்த எதிர்பார்ப்பு போல வேறு எந்த திரைப்படத்துக்கும் கிடைத்து இல்லை...காரணம் பெரிய பட்ஜெட், சூர்யா,ஸ்ருதி,முருகதாஸ்.ரவிகேசந்திரன்,ஹாரிஸ்,ஆண்டனி என்று எல்லாம் பெரிய கைகள்.. அதனால்  இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு நிறைய....



பொதுவா 500 வருடங்களுக்கு முன் தோன்றிய அமெரிக்காவை பெருமையா தூக்கி வச்சி கொண்டாடுகின்றோம்..ஆனால் பல்லாயிரம் வருஷத்துக்கு முன்னலேயே நாகரிகத்தில் சிறந்து விளங்கி,இன்னைக்கும் 1000 வருடங்கள் கடந்து போன தஞ்சை பெரியகோவிலை பற்றிய பெருமை எத்தனை பேருக்கும் தெரியும்...??? 

ஆயிரம் வருஷத்துக்கு முன்னயே அப்படி ஒரு கோவிலை கட்ட  முடிச்சா அப்ப அதுக்கு முன்னாடி இருந்த மக்கள் எந்த அளவுக்கு நாகரிகத்தில், கல்வியில், கட்டகலையில் சிறந்து விளங்கி இருக்க முடியும்?? 

ஆயிரம் ஆண்டு  கோவில் ஒரு சான்று அவ்வளவே...

250 வருசத்துக்கு முன்னாடி இருக்கும் பொருளை கூட ஒரு அமெரிக்கன் கடவுளை பார்ப்பது போல  பீல் பண்ணி பார்ப்பான்.ஆனா இங்க ஆயிரம் வருஷத்து கோவில் சுவத்துலேயே பான்பராக் போட்டு  எச்சி துப்பி வைப்போம்.....காரணம் நம்ம கிட்ட இருக்கும் அலட்சியம்.. அப்படி அலட்சியம் வரக்காரணம் என்ன?? நாம் மிக மிக பழமையானவர்கள்..


பொதுவாகவே தமிழர்கள் பற்றிய  செய்தியை இருட்டடிப்பு செய்வதற்க்கு என்றே உலகம் முழுவதும் பல குழுக்கள்   இருக்கின்றது.. அவர்களுக்கு தமிழர்கள் என்றால் எட்டிக்காய் போல கசக்கும்...தமிழ் என்ற வார்த்தையை பிரயோகித்தால் நக்கல் விடுவார்கள்.. தமிழில் பேசினால் அவர்களை அசிங்கப்படுத்துவார்கள்...அதனால்தான் இந்திய சுதந்திர போராட்டத்தில் முதல் கிளர்ச்சியும் முக்கிய கிளர்ச்சியுமான வேலூர் சிப்பாய் கலகத்தை வரலாற்றில் இருந்தே தூக்கி தூர எறிந்தார்கள்..இந்திய அளவில் தமிழன் பெயர் பெற்றவிட்டால்..??

எப்போது எல்லாம்  தமிழர்கள் ஒற்றுமையாக எந்த செயலை செய்தாலும் உறவாடிக்கெடுக்க அவர்கள் காய் நகர்த்துவார்கள்.. அதனை செய்து முடிக்க தமிழ் இனத்திலேயே எட்டப்பர்கள் நிறைய பேர் அவர்களுக்கு உதவி செய்வார்கள்.. உதாரணம் இலங்கை ...



இலங்கையில் யாழ் நூலகத்தை எரித்து பசி தீர்த்தார்கள்..ஒரு இனத்தை வேர் அறுக்க அவர்கள் பற்றிய பழம்தகவல்களையும் கலாச்சாரத்தையும் சொல்லும் நூல்களை அழித்தாலே போதும்... உதாரணத்துக்கு தஞ்சை பெரிய கோவிலே இல்லையென்றால் நம்மாளே நம்மளை பத்தி பெருமையா நினைச்சி இருக்கமாட்டான்..

கல் தோன்றுவதற்கு முன் பிறந்த மூத்த தமிழ் என்று பெருமையாக சொன்னால் எல்லாம் நாம் நம்பப்போவதில்லை.. ஏதோ அந்த தஞ்சை பெரிய கோவில் இருப்பதால் இப்ப இருக்கற பயபுள்ளைங்க எங்களுக்கு ஆயிரம் வருஷத்திய பாராம்பரியம் இருக்குன்னு பீத்திக்கிறோம்..


இப்படியாக தமிழ் இனத்தின் மீது திட்ட மிட்ட காய் நகர்த்தலின் காரணமாக ஆறாம் நூற்றாண்டில், இங்கு இருந்து சீனாவுக்கு போய் குங்பூ எனும் தற்காப்பு கலை கத்துக்கொடுத்தது, புத்தமதத்தை பரப்பியவரும், பல்லவ அரச குடும்பத்தில் பிறந்து காஞ்சிபுரத்தை சேர்ந்த போதிதர்மர் என்றால்  எந்த தமிழருக்கும் தெரியாது... ஆனால் சீன பயணி யுவான்சுவாங் பல்லவ ஆட்சிகாலத்தில் தமிழகத்துக்கு வந்தார்  என்பதை மட்டும் தொடர்ந்து வாழையடி வாழையாக படித்து வருகின்றோம்.. 

காரணம் மேலே   சொன்னதுதான்.. காலம் காலமாய் நடந்து வரும் தமிழ் இனத்துக்கு எதிரான போர்...தமிழர்கள் புத்திசாலிகள் அவர்களை தட்டி வைக்கவில்லை என்றால் வளர்நது விடுவார்கள் என்பதுதான் பொறாமைக்கான அடிப்படை...

எம்ஜியார், சிவாஜி, ரஜினி , கமல் பற்றி அதிகம் தெரிந்து வைத்து இருக்கும் தமிழர்களுக்கு சீனா, ஜப்பான்,தாய்லாந்து போன்ற நாடுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு தமிழரின் பெருமையை  சொல்லும்கதைதான்..ஏழாம் அறிவு.. அதை கமர்சியல் கலந்து மசாலா தூவி சொல்லி இருக்கின்றார்...இயக்குனர் முருகதாஸ்.

1 comment:

  1. உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்;
    பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ;
    மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்;
    அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

    உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும்.

    ReplyDelete