Saturday, October 22, 2011

உலகிற்கு வழிகாட்டும் பாரதம்(நம் இந்தியாவின் நிஜப்பெயர்)



சுயச்சார்பு என்றால்,யாரையும் எப்போதும்,எதற்காகவும் நம்பியிராமல் தன்னை மட்டுமே நம்பி வாழ்ந்துவருதல் என்று பொருள்.உலகிலேயே சுயச்சார்புள்ள ஒரே நாடு நமது பாரதம் என்ற இந்தியா மட்டுமே! அப்போ. . .சீனா? உலகிலேயே சுயச்சார்பு போதுமான அளவுக்கு இல்லாத நாடு சீனாதான்.சீனாவின் பொருளாதாரம் உலக நாடுகளை நம்பியே இருக்கிறது.இதுபற்றி இன்னோரு தடவை விரிவாக பார்ப்போம்.இப்போ நம்ம இந்தியா என்ற பாரதத்தின் பெருமைகளைப் பார்ப்போம்:
வெளிநாட்டின் முதலீட்டினை சிறிதும் நம்பியிராமல் இருக்கும் ஒரே நாடு இந்தியா மட்டுமே!உலகமயமாக்கலில் உலக நாடுகளிடையே வர்த்தகப் போட்டி,வர்த்தகப் போராக மாறியிருக்கிறது.இந்த வர்த்தகப் போரை ஆரம்பித்த அமெரிக்கா ,அடுத்து எப்படி இந்த வர்த்தகப்போரில் ஜெயிப்பது? என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறது.இதே வர்த்தகப்போரில் சீனாவோ யாரிடமாவது சண்டைபோட மாட்டோமா? என்று வெறிபிடித்து அலைவதோடு,அதன் ஒரே கூட்டாளியான நம்மை அடிக்கடி மிரட்டியும்,தொல்லை கொடுத்தும் வருகிறது.(உலக வர்த்தக அமைப்பில் மேற்கு நாடுகள் சீனாவை சேர்க்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்தன;இந்தியாவாகிய நாம்தான் சீனாவுக்காக வாதாடி,அதில் இடம் பிடித்துக் கொடுத்தோம்)
நமது நாட்டை நாம்தான் முன்னுக்குக் கொண்டு வர முடியும்;வெளிநாட்டுக்கருத்து,அன்னிய வாழ்க்கைமுறை,மேற்கு பொருளாதாரம்,மேல்நாட்டு தொழில் முனையும் தன்மை என எதுவும் நமக்குப் பொருந்தாது.
இந்த விஷயங்களையெல்லாம் கல்லூரிக்குச் சென்று பொருளாதாரப் பட்டம் பெற்று அறிந்துகொள்ள முடியாது.ஏனெனில்,நாம் படிக்கும் பொருளாதாரத்தில் ‘இந்தியாவின் பொருளாதாரப் பிரச்னைகள்’மட்டும் தான் இருக்கின்றன.இந்தியாவின் உள்ளார்ந்த பொருளாதார வலிமை எதுவென்பதை இன்னும் இந்திய அரசே கண்டறிய வில்லை;சுதேசி விழிப்புணர்வு இயக்கம் கடந்த 15 ஆண்டுகளாக உருவாகி,மாநில,மாவட்ட அமைப்பாக வலுவடைந்து,கண்டறிந்துள்ளது.இதற்கு,இதன் தாய் அமைப்பாகிய ஆர்.எஸ்.எஸ்.ஸீக்குத் தான் இந்திய மக்களே கடமைப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் தொழில் நகரங்களை கடந்த 15 ஆண்டுகளாக ஆராய்ந்ததில் இந்தியாவின் பொருளாதாரம் வலிமையாகவும் சுயச்சார்பாகவும்,தன்னிறைவாகவும் செயல்பட்டுவருகிறது என்பதைக் கண்டறிய முடிந்தது.உதாரணமாக,1992 முதல் 93 வரை லூதியானா நகரத்தில்,இயந்திரக்கருவிகளை தயாரிக்கும் ஒரு சிறு தொழிற்சாலையை  பார்க்க முடிந்தது.மிதிவண்டிக்கான உதிரிபாகங்களை சிறப்பாக தயாரிப்பதால்,பல பன்னாட்டு நிறுவனங்களும் இவர்களிடம் பொருட்களை கொள்முதல் செய்து வருகின்றனர் இன்று 2011 வரையிலும்!!!
ஜலந்தரில் கிரிக்கெட் மட்டைகள் சிறப்பாக தயாராவதை அறிந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் இவர்களிடம் மட்டுமே கிரிக்கெட் மட்டைகளை வாங்கிவருகிறது.இங்கு தச்சுவேலை செய்பவர்கள் சொந்தக் காரில் வந்து இறங்குவதை 1993 லேயே பார்த்துள்ளேன்.அப்போதைய ஆண்டு லாபமோ ரூ.3,00,00,000/-இவர்களெல்லாம் நமது பள்ளிக்கூடங்களிலேயோ,கல்லூரியிலோ சிந்திக்கக் கற்றுக்கொள்ளவில்லை;இவர்களெல்லாம் பிறப்பிலேயே பொறியாளர்கள்!!!
காரல்மார்க்ஸ் டஸ்கேப்பிடல் எழுதுவதற்கு முன்பே பாரத நாட்டைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.அதில்,
“உலக அரங்கில் பாரத நாடு தனிச்சிறப்பு பெற்றது.இவர்கள் அரசாங்கத்தை நம்பியிருக்கவில்லை;வியாபாரம்,உற்பத்தி என அனைத்துமே கிராமங்களே பார்த்துக்கொள்கின்றன.ஒவ்வொரு கிராமமும் ஒரு தன்னிறைவு பெற்ற நாடாக செயல்பட்டுவருகிறது.கடந்த 25,000 ஆண்டுகளாக இந்த சுயச்சார்பான கிராம வாழ்க்கையில் எந்த பிரச்னையுமில்லை;இவர்களின் பாரம்பரியத்தை (கத்தோலிக்க கிறிஸ்தவ )ஆங்கிலேயர்கள் மாற்றியமைக்க முயற்சித்துவருகின்றனர்”.
சுமார் 25,000 ஆண்டுகளாக உருவான  6,00,000 இந்திய சுயச்சார்பு கிராமங்களின் தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தை வெறும் 150 ஆண்டுகால ஆங்கிலேய ஆட்சியானது சிதைத்து ,சின்னாபின்னமாக்கி,சுரண்டி,இங்கிலாந்துக்கு கொள்ளையடித்து சென்றது. ‘2001ல் உலகப்பொருளாதாரம்:ஒரு ஆயிரம் ஆண்டின் கண்ணோட்டம்’ என்ற புத்தகத்தில் ஆங்கஸ் மாடிசன் என்பவர், ‘1750 வரையிலும் ஆசிய நாடுகளே உலக பொருளாதாரத்தை வளப்படுத்தி,முன்னேறியிருந்தன.ஐரோப்பியநாடுகள் மிகவும் பின் தங்கியிருந்தன.’என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் 60 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவினை ஒட்டி வில்லியம் டாய்ரிம்பில் டெலிகிராப் பத்திரிகையில்கி.பி.1600 இல் கிழக்கிந்தியக்கம்பெனி வலுவாக இருந்தபோது பிரிட்டனின் GDP உலக அளவில் வெறும்1.8% மட்டுமே!ஆனால்,இந்தியாவின் GDP 22.5% இருந்தது.1870 களில் இந்தியப் பொருளாதாரம் இங்கிலாந்தினால் உறிஞ்சப்பட்டு,சுதந்திரம் வாங்கும்போது 1%க்கும் கீழே சென்றுவிட்டது.
1992 இல் நமது நாட்டின் சேமிப்பு 23% என்று இருந்தபோது,நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு வெளிநாட்டிலிருந்து ஜகதீஷ்பகவதி என்னும் நிபுணரை அழைத்து வழிமுறைகளை நமது பிரதமர் கேட்டறிந்தார்.அதற்கு அவர் 72 பக்க ஆலோசனையை வழங்கினார்.அதில், “உலக மயம்,தாராளமயம்,தனியார்மயம் மிகவும் இந்தியாவுக்கு அவசியம்.பெண்களுக்கு இங்கு கருமித்தனம் அதிகமாக இருக்கிறது.இவ்வாறு சேமிக்கத் தேவையில்லை;அவர்களை செலவு செய்யத்தூண்டுங்கள்;பெரிய மாளிகை கட்டி,வாசனை திரவியம்,அழகு சாதனப் பொருட்கள் என பலவற்றைக் காட்டி அவர்களது வழக்கத்தை மாற்றுங்கள்.10% சேமிப்பு போதுமானது” எனக்குறிப்பிட்டார்.
ஆனால்,இந்தியப்பெண்கள் இதற்கெல்லாம் மயங்க வில்லை;23% ஆக இருந்த சேமிப்பு 38% ஆக உயர்ந்தது.இதுவே இந்தியப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்குக் காரணம்.பெண்கள் வீட்டு நிதி நிர்வாகத்தை திறம்படக் கையாள்வதே காரணம்.
கோல்ட் மேன் சாக்ஸ் என்னும் நிதி நிறுவனம், ‘இந்தியாவில் அபரிதமான வளர்ச்சி ஏற்படப்போகிறது.இந்தியாவில் அடிப்படைக் கட்டுமானப் பணிகளுக்கு 1 முதல் 2 ட்ரில்லியன் டாலர்கள் தேவை.ஆனால்,இந்தியா அந்நிய முதலீட்டை நாடத் தேவையில்லை;அவை இந்தியக் குடும்பங்களின் சேமிப்பிலிருந்தே கிடைத்துவிடும்.2016 இல் இந்தியாவில் மட்டுமே ஆண்டு சேமிப்பு 800 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்று குறிப்பிட்டது.
பால்குருக்மேன்,பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை 1998 இல் வென்றவர்.அமெரிக்க வழிமுறையிலான பொருளாதார சித்தாந்தங்கள் உபயோகமற்றவை;கேடுவிளைவிக்கக் கூடியவை;என்றார்.எனவே,இந்தியாவுக்குத் தேவை சிந்தனை மாற்றமே!அதற்கு அனைத்து சாதி,மதம்,பிரிவைச் சேர்ந்த மக்கள் இணைந்து முன்வந்து இந்த சிந்தனை மாற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பேச்சு:ஆடிட்டர் குருமூர்த்தி,நன்றி:விஜயபாரதம் பக்கம் 12, 12.8.11
ஓம்சிவசிவஓம் 

No comments:

Post a Comment