Tuesday, October 25, 2011

வெற்றிமீது ஆசை வைத்தேன்:நமக்கு ஒரு பாடம்



“கொடுக்கல் வாங்கலில் பணம் இல்லாததால் கடைக்கு சரக்கு தர யாரும் முன்வரவில்லை;வாடிக்கையாளர் பலரை இழக்க நேர்ந்தது.இருக்கும் ஒரு சில வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள, எங்கள் கடையில் இல்லாத ஒரு சில பொருட்களைப் பக்கத்தில் கடை வைத்திருந்த அத்தான் கடையில் வாங்கிக் கொடுத்தோம்.அங்கும்கூட கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய்வரை கடனாகிவிட்டது.இதனாலும்,எனது வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்துக்கொள்ளலாம் என்ற நினைப்பால் எங்களுக்கு கடனாகப் பொருட்கள் கொடுப்பதையே நிறுத்தி விட்டார் அத்தான்.

இந்த சமயத்தில் எங்கள் வீட்டுக்கே கூட அரிசி இல்லாத நிலை ஏற்பட்டது.அப்பொழுது என் மனைவி ஒரு பையனை அத்தான் கடைக்கு அரிசி வாங்க அனுப்பியிருந்தார்.அவரோ,
“பழைய கடனை அடைத்தால்தான் அரிசி தருவேன்” என்று திருப்பி அனுப்பிவிட்டாராம்.

நான் வீட்டிற்குப் போனதும் என்னிடம் இதைச் சொல்லி அழுதாள் என் மனைவி. ‘நமக்கா இந்த நிலைமை’ என்று கூட எனக்கும்கூட கண்ணீர் வந்துவிட்டது.இத்தனைநாள் பட்ட கஷ்டம் பாழாகிவிட்டதோ என்று வருத்தம்.பெரிய அளவில் முன்னேறவேண்டும் என்ற ஆசைப்பட்டு இருக்கிற மளிகைக்கடை வியாபாரத்தையும் கெடுத்துக்கொண்டோமே என்று ஒரே சிந்தனை.
அத்தான் தனது கடையிலிருந்து முப்பது ரூபாய் மதிப்புள்ள பத்துகிலோ அரிசி கூட எங்கள் வீட்டிற்குக் கொடுக்க மறுத்துவிட்டார் என்ற விஷயமே என்னை உறுத்தியது.இப்படியொரு  சொந்தக்காரரே எனக்கு உதவ மறுத்த நிலையில்,சொந்த பந்தத்தின் மீதான பாசம் விட்டுப்போனது”

மளிகைக் கடை வைத்து தோல்வி அடைந்த அந்த வி.ஐ.பி.சாப்பாட்டிற்காக சொந்தக்காரரிடம் அரிசி கடனாகக் கேட்கப்போய், அது கிடைக்காமல், அவமானம் மட்டும் கிடைத்தது.அதன் பலன் அவர் தீவிரமாக சிந்தித்தார்.நம்மிடம் பணம் இல்லாததால்தான் நம்முடைய உறவினர் கூட நம்மை மதிக்கவில்லை;(இந்தக் காலத்தில் பெற்றோரே மதிப்பதில்லை)இந்த நிலையை மாற்றிக்காட்டுவேன்;நானும் கடுமையாக உழைத்து பெரும் பணக்காரராக வாழ்வேன் என்று அந்த வி.ஐ.பி.சபதம் எடுத்துக்கொண்டார்.


கடுமையாக உழைக்கத்துவங்கினார்.மெல்ல அவர் பார்வை ஹோட்டல் பக்கம் திரும்பியது.தெரியாத தொழிலாக இருந்தாலும் துணிந்து இறங்கினார்; கடுமையாக உழைத்தார்;தரமான உணவுப்பொருட்களை மட்டுமே அவரது ஹோட்டலில் விற்பனை செய்யும்படி வைத்தார்.சில புதுமைகளையும் ஹோட்டல் தொழிலில் செய்தார்;படிப்படியாக முன்னேறினார்.ஒரு ஹோட்டல் இரண்டானது;இந்த 25 ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட ஹோட்டல்களைத் திறந்துவிட்டார்.அந்த ஹோட்டல்தான் சென்னையில் புகழ்பெற்றுவிளங்கும் சரவணபவன்!!! அந்த வி.ஐ.பி.யின் பெயர் கே.ராஜகோபாலன் !!! சரவணபவன் ராஜகோபாலன் அண்ணாச்சி என்றால் அனைவருக்கும் தெரியும்.

பணம் இல்லாததால் அவருக்கு ஏற்பட்ட அனுபவமே அவரை வாழ்க்கையில் இந்த நிலைக்கு உயர்த்தியது.இன்றைக்கு மிகப்பெரிய கோடீஸ்வரராக சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

ஆன்மீகக்கடலின் கருத்து: நம்மை உருவாக்குவது பாராட்டுக்களும்,புகழ்ச்சிகளும் அல்ல; திட்டுகளும்,அவமானங்களும்,உதாசினப்பத்தல்களுமே! எக்காரணம் கொண்டும் உங்களை நம்புவதை மட்டும் கைவிட்டுவிடாதீர்கள்.

அதே சமயம் எதிராளி நம்மைத் திட்டும்போது அதனுள் நம்மைப் பற்றி ஏதும் உண்மை இருக்கிறதா என்பதை மட்டும் பாருங்கள்.அப்படி உண்மை இருந்தால்,திட்டு வாங்கிய ஓரிரு நாட்களுக்கும் மேலாக நமது மனசு வலிக்கும்.இல்லாவிட்டால் இரண்டாம் நாளே அதை மறந்திருப்போம்.தவறில்லாத மனிதன் யார்? தன்னைத் தானே திருத்துவதற்கு ஒரு சந்தர்ப்பமே அந்த திட்டுக்கள்!!!

ஜோதிடப்படி,யாருக்கெல்லாம் ஏழரைச்சனியில் ஜன்மச்சனியும்,அஷ்டமச்சனியும் நடைபெறுகிறதோ,அந்த இரண்டரை ஆண்டுகள் தான் உங்களை,உங்களின் உள்ளார்ந்த மதிப்பை சனிபகவான் உணர வைக்கும் காலம் ஆகும்.எனவே, ஜன்மச்சனி முடியும் வரையும் எரிச்சலே மிஞ்சும்.அது உங்களை பொறுமை மிக்கவராக மாற்றும்.பொறுப்புள்ளவராகவும் ஆக்கும்.கவலை வேண்டாம்.

ஓம்சிவசிவஓம்

4 comments:

  1. anna,
    ashtama sani nadakkum bothu, kalyanam pannalaama? thelivupaduthungal.

    saiganesh

    ReplyDelete
  2. ஏழரைச்சனியில் ஜன்மச்சனியும்,அஷ்டமச்சனியும் நடக்கும்போது திருமணம் செய்யக்கூடாது.முடித்தால்,நல்ல நேரம் வந்ததும்,அவர்கள் பிரிந்துவிடுவார்கள்.

    ReplyDelete
  3. sir if 7.1\2 sani starts a person at the age of 27 yrs , he has to wait 7.1\2ys for marriage ?

    ReplyDelete
  4. ஏழரைச்சனியில் ஜன்மசனி நடக்கும்போது திருமணம் தவிர்ப்பது அவசியம்.அப்படி முடிக்க நினைப்பவர்கள்,ஜன்மச்சனி கடந்ததும் ,குருப் பார்வை வரும்போது முடித்தால் அந்தத் தம்பதி நீடுழி வாழ்ந்துவருகின்றார்கள்.இதுவும் அனுபவ உண்மை.

    ReplyDelete