Sunday, October 23, 2011

மாளிகைக்கு வழிவகுத்த முதல் செங்கல்



திருவனந்தபுரம் வங்கிக்கிளையில் கடன் வழங்குதல் அதிகாரியாக பணியாற்றிய்ய திரு.கே.சங்கர் என்பவர் ‘தி நியு இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் தனது அனுபவம் ஒன்றை விவரிக்கிறார்: திரு.கோலப்பன் என்பவருக்கு மாட்டுவண்டி வாங்க ரூ.5,000 கடன் வழங்கப்பட்டது.கடன் கொடுத்த தினத்தில்,மாதம் ரூ.200/- தவறாமல் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று நினைவூட்டினேன்.அவர் சொன்ன பதில், இதயபூர்வமாக இருந்ததால் நான் திகைத்துப்போனேன். ‘சார்.நானும் என் பிள்ளைகளும் பட்டினி கிடந்தாலும் சரி,தவணையை தவறாமல் கட்டிடுவேன்’ என்றாரே பார்க்கலாம்.
அதுபோலவே,மாதா மாதம் தவறாமல் தவணை கட்டிவந்தார்.ஒரு வருடத்திற்குப்பிறகு தன் மனைவிக்கு பசுமாடு வாங்க வங்கியில் கடன் பெற்றார்.தற்போது இரண்டு கடன்களுக்கான தவணைகளையும் மாதம் தவறாமல் செலுத்திவருகிறார்.சில ஆண்டுகள் கடந்தன.ஒரு நாள் தன் மகளின் திருமண அழைப்பிதழை என்னிடம் கொடுத்து தகவல் ஒன்றையும் சொன்னார்.தற்போது அவரிடம் 2 மாட்டுவண்டிகள்,6 பசுக்கள் இருக்கின்றன.இதனால்,குடும்பம்  செழிப்பாக இருப்பதால்,மகளுக்கு வசதியான இடத்தில் சம்பந்தம் பேசி முடித்திருக்கிறார்.இதுதான் அந்தத் தகவல்.ஒரு சிறு கடனுதவி ஒரு குடும்பத்தையே எந்த அளவுக்கு கைதூக்கிவிட்டிருக்கிறது.அவரவர் மனது வைத்தால் மாற்றத்திற்கான கிரியா ஊக்கியாக மாற முடியுமே என்று!!!
நன்றி: த நியு இண்டியன் எக்ஸ்பிரஸ் 22.7.2011,விஜயபாரதம் பக்கம் 15,12.8.11

2 comments:

  1. .அவரவர் மனது வைத்தால் மாற்றத்திற்கான கிரியா ஊக்கியாக மாற முடியுமே/

    நிறைவான பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. உண்மைதான் நண்பரே
    உண்மையாக நேர்மையாக உழைப்பவர்களுக்கு அதற்குரிய பலனை இறைவன் நிச்சயம் தந்து உயர்த்துவான். மது,மாது, சுது போன்ற தவறான வழிகளில் செல்லாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

    ReplyDelete