Wednesday, December 30, 2009

அகத்தியமகரிஷியை தரிசிப்பது எப்படி?


நீங்கள் அகத்திய மகரிஷியை தரிசிக்க வேண்டுமா?

கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.
ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.
நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.
மந்திரம்:
ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.

இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச்செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம்.முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.
கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.
பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.

அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.
ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.

பொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில் அகத்திய சித்தரின் தரிசனம் கிட்டும்.
முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம்.
அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன் வேறில்லை;

Monday, December 28, 2009

2010 2010 இந்துதர்மத்தின் எழுச்சி துவங்கும் வருடம் 2010 2010


கி.பி.2010 ஆங்கிலப்புத்தாண்டு பற்றி ஒரு இந்துமத விளக்கம்

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என இம்மூன்றும் பிறந்தது ஓம் என்ற ஓம்கார மந்திரத்திலிருந்து! என இந்துதர்ம சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

ஓம் என்பது அ + உ + ம என்பதன் சேர்க்கையாகும்.அகரம் என்பதன் எண் வடிவமே 1.
உகரத்தின் எண் வடிவமே 2.
மகரத்தின் எண் வடிவமே 0.
பிரணவ மந்திரத்தின் மூன்று புள்ளிகள் கூடிய எழுத்து ஃ.

அகரம் உகரம் மகரம் இம்மூன்றின் சேர்க்கையே ஓம்.இதன் எழுத்துக்கள் 1,2,0.இதை “இரண்டில் ஒன்று, இரண்டே ஒன்று, இரண்டும் ஒன்றே” என ஆன்மீக சூட்சுமரீதியாகவும் விரிவாக்கலாம்.
ஓஃங்கார ரீங்கார மூர்த்திக்கான விசேஷமான வழிபாட்டுச்சாதகக் காலமுமாயும் 2010 ஆம் ஆண்டு ஆகிறது.0,1,2 இம்மூன்று எண்களின் வெளிப்பாடாக 2010 பிறக்கிறது.
எனவே,கி.பி.2010 முதல் கி.பி.2012 வரை இருக்கும் காலமானது இந்துதர்மத்தின் உலகளாவிலான எழுச்சிக்காலமாக நாம் உணர இருக்கிறோம்.

இதுவரை நேர்மையாக வாழ்ந்தவர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பார்கள்.பிராடுத்தனம் செய்தவர்கள்,செய்துவருபவர்கள் சகல வசதிகளுடன் வாழ்ந்துவருவார்கள்.
2010 2011 2012 க்குள் இந்த நிலை மாறப்போகிறது.
ஆமாம்! நீதி, நேர்மை, தர்மம் என வாழ்ந்து பலவிதமான சோதனைகள், அவமானங்கள்,சிரமப்பட்டவர்கள் இனி ஒஹோ வென வாழத்துவங்குவார்கள்.

பிராடுத்தனம்,பிக்காலித்தனம்,மொள்ளமாறித்தனம்,முடிச்சவிக்கித்தனம் செய்தவர்கள் அனைவரும் நேர்மை என்ற சுனாமியில் காணாமல்போகப்போகிறார்கள்.ஆம்! சித்தர்களின் ஆட்சி நமது பாரதத்தில் துவங்கப்போகிறது.

2010 ஆம் ஆண்டே வருக! நீதி நேர்மையை நிலைநாட்டுக!!!

கிரிவலம் செல்லுவதால் ஏற்படும் புண்ணியபலன்கள்

கிரிவலம் செல்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மைகள்

நீங்கள் திருஅண்ணாமலையில் கிரிவலம் சென்றால் அப்போது உங்களுடைய அத்தனை பிறவி வடிவங்களும் கூடவே சேர்ந்து வருகின்றன.ஒவ்வொருவரின் ஒட்டு மொத்தப் பிறவிச் சாரமே கூடவே சேர்ந்து அருணாச்சலத்தை வலம் வருமாம்!!!

இதற்குக் காரணம், அத்தனை கோடிப் பிறவிகளுக்கும் முற்றுப்புள்ளி இடும் ஆன்மசாதனமே அண்ணாமலை கிரிவலம் என்பதால்தான்!
நமது பிரபஞ்சத்தில் அருணாச்சலமான திரு அண்ணாமலையில் மட்டுமே இது சாத்தியமாகும்.இது நிகழ்ந்தாகிப் பிறவிப்பெரும்பயன் அடைய வேண்டுமென்றால், பவுர்ணமி தினம் போன்று மாதசிவராத்திரி நாளிலும் அருணாச்சல கிரிவலத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
நன்றி:பக்கம் 11,ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஜனவரி 2010 மாத இதழ்.

அகஸ்தியர் மகரிஷியின் முழுவிபரங்களைப்பற்றியும், ஆன்மீக அபூர்வத்தகவல்களும் அறிய

www.agnisiksha.org
www.agnisiksha.com
www.agasthiar.org
www.agasthyarashram.com
www.agasthyarashram.org

Friday, December 18, 2009

இந்தியாவின் பிரதமராவாரா ஆன்மீக சூப்பர் ஸ்டார் ரஜினி!


ஆன்மீகத்திலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்

தமிழ்த்திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த் அவர்கள்.தனது திரைப்படங்களில் அவர் வலியுறுத்தும் கருத்துக்கள் அனைத்துமே குடும்பத்தைக் காக்கும்விதமாகவும்,பெற்றோரை மதிக்கும்விதமாகவும் இருக்கின்றன.அவரே பல தடவை தனது ரசிகர்களை உங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என பேசியிருக்கிறார்.

ருத்ராட்சத்தினை முக்கிய காரெக்டராக வைத்து தயாரித்த படம் பெரும் வெற்றி பெற்றது.

அருணாச்சலம் என்ற பெயரில் தனது கதாபாத்திரத்தை அவர் உருவாக்கினார்.அண்ணாமலை என்ற பெயரில் தனி திரைப்படத்தில் நடித்தார்.இம்மூன்றுமே அவருக்குள் திரு அண்ணாமலையின் மகிமைகளால் எழுந்த தாக்கமே!

பாபா படம் மட்டும் ஹிட் ஆகவில்லை;அந்த படத்தையும் இமயமலையில் எடுக்க விரும்பினார்.பல்வேறு ஆன்மீகக் காரணங்களால் அங்கே பாபா படத்தை எடுக்க முடியவில்லை.

திரு அண்ணாமலையின் கிரிவலப்பாதையில் ஒளிரும் சோடியம்விளக்குகள் அனைத்தும் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அன்பளிப்பாக அளித்தவை.இத்தனைக்கும் இப்படி அன்பளிப்பு தந்ததை வெளியில் காட்டிக்கொள்ளவேண்டாம் என உரியவர்களிடம் அவர் தெரிவித்தும் எப்படியோ வெளியில் இந்த தகவல் கசிந்துள்ளது.

13.11.2009,14.11.2009,15.11.2009 இந்த மூன்று நாட்களும் ரஜினிகாந்த் அவர்கள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு இரண்டு உதவியாளர்களுடன் அவர் வந்திருக்கிறார்.அந்த நாட்களைப்பற்றி பஞ்சாங்கத்தில் பார்த்தால், அது மாதப்பிரதோஷமும், மாதசிவராத்திரியும் உள்ள நாட்களாக வருகின்றன.

அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனான நான் விரும்புவது என்னவென்றால், ரஜினிகாந்த் இந்தியாவுக்கே பிரதமராக வேண்டும் என்பதே!

மகர ராசி, திரு வோணநட்சத்திரத்தில் பிறந்தவர் ரஜினிகாந்த்.ஜோதிடப்படி, உலக கோடீஸ்வரர்களில் 100 க்கு 80 பேர் மகரராசிக்காரர்களாக இருப்பர்.மகர ராசி சனி பகவானின் ராசி.சனியோ தர்மம்,நீதி,நியாயத்தின் அதிபதி.ஆக, நேர்மையாக வாழ்வதும், தர்மத்தை காக்கவும்,அநீதி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எப்பேர்பட்டவராக இருந்தாலும் அவர்களை எதிர்த்துப்போராடும் குணம் சனியின் ராசியில் பிறந்தவர்களின் குணமாக இருக்கிறது.

ஆக,சாதுக்களின் நாடான நம் பாரதம்,சித்தர்களின் ஆசி பெற்ற ரஜினியின் ஆளுகைக்கு வந்தாலே அது நமது நாட்டுக்கு மட்டுமல்ல;உலகத்துக்கே நன்மை பயக்கும்.

15.12.2009அன்று குரு பெயர்ச்சியாகிவிட்டது.மகர ராசியில் நீசமாக இருந்த குரு பகவான் கும்பராசிக்கு இடம் மாறிவிட்டார்.மகரராசிக்காரர்களுக்கு இனி பொற்காலமே!எனவே,நமது ரஜினிகாந்த் அவர்கள் அரசியல்கட்சி ஆரம்பித்து, நாத்திகத்தை ஒழித்துக்கட்டி,ஆன்மீகபூமியான தமிழ்நாட்டில் மீண்டும் ஆத்திகம் வலுப்பெற வழிசெய்ய வேண்டும்.விரைவில்,இந்தியாவையே ஆட்சி செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்.

கி.பி.2011 ஆம் வருடம் ஒரு கலையுலகத்தைச் சேர்ந்தவர்தான் இந்தியாவின் ஜனாதிபதியாவார் என ஒரு ஆங்கில ஜோதிடப் புத்தகத்தில் படித்திருக்கிறேன்.ஒரு வேளை அது நம்ம ரஜினிகாந்த் ஆக இருக்குமோ?

Thursday, December 17, 2009

அதிசய உண்மை


நம்பமுடியாத அதிசயம்;ஆனால் உண்மை

நம்ம தெரு அல்லது நமது நட்பு வட்டத்தில் எம்.சி.ஏ.,எம்.பி.ஏ., பி.ஈ.படிக்கும் மாணவர்கள்,மாணவிகளுக்கு அமெரிக்கக் கனவு இருக்கிறது.அதற்காக நமது நாட்டை இழிவாக (விளையாட்டுக்குத் தான்) பேசும் குணம் இருக்கிறது.

ஆனால்,கி.பி.2011க்குள் நான் இந்தியாவுக்குப் போகப் போகிறேன் என்பதும்,இந்தியாவில் செட்டில் ஆகப்போகிறேன் எனப்பேசுவதும் ஐரோப்பாவிலும்,அமெரிக்காவிலும் பெருமைக்குரிய விஷயமாகப் போகிறது.

அமெரிக்காவின் பல மாநிலங்களில் வெட்டவெளியில் (துவைத்த) துணியைக் காயப்போடுவது (?!) பரவலாகிவருகிறது.இப்படிச் செய்வதை அமெரிக்க மாநில அரசுகள் எதிர்த்துவருகின்றன.ஆதாரம்:தினமலர் வாரமலர் 13.12.2009.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேமிப்பு பற்றி பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.ஆதாரம்:தினமலர் 17.12.2009
நம்ம கமெண்டு:உலக வல்லரசே பிச்சையெடுக்கும் நிலைக்கு வந்தபின்னர்தான் வீட்டில் சேமிக்கும் பழக்கம் பற்றி யோசிப்பார்கள் போல! இதுவும் உலக நன்மைக்குத்தான்.இனி அடாவடி அரசியல்,ஆயுத அரசியல் காணாமல் போகும்.
(கொரியாவை இரண்டாக உடைத்தது,ஜெர்மனியை இரண்டாக உடைத்தது,நாத்திக கம்யூனிசத்துக்கு எதிராக இஸ்லாமிய மதத்தினரை தீவிரவாதிகளாக மாற்றியது,இந்தியா பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை விற்றது,தற்போது இந்தியாவுக்கு எதிராக சீனாவை கொம்பு சீவுவது. . . என எப்போதுமே அழிவு அரசியலை உலக மயமாக்கிய அமெரிக்கா சாதாரண நாடாக மாறினால்தான் உலகம் அமைதியடையும்)

மேலே கொடுக்கப்பட்டிருப்பது இரவு நேரத்தில் விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட இந்தியாவின் நிஜப் புகைப்படம்.(உங்கள் வீடு தெரியுதா?)

Thursday, December 10, 2009

HOW WILL EARN MONEY BY BLOGSPOT?




வலைப்பதிவில் பணம் சம்பாதிப்பது எப்படி ?!
0 commentsLabels: , , ,
வலை உலகில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். ஏனெனில் வலை உலகம் என்பது பல கோடிக்கணக்கான மக்கள் இணைந்திருக்கும் மிகப்பெரிய பிரம்மாண்டமான வலை உலகம். உங்களுக்கு தெரிந்த விபரங்களை, தகவல்களை, செய்திகளை இணைய தளம் கொண்டு உருவாக்கி, அவைகளை இணைய உலகில் தவள விட்டால் அவை எவ்வாறு அல்லது எத்தனை மக்களைச் சென்றடைகின்றன என்பதைப் பொறுத்து உங்களுக்கு இலாபம் கிடைக்கும்.உதாரணமாக விகடன்.காம் தளம் தனது இதழ் பிரதிகளை இணையத்தில் இட்டு ஆண்டுச் சந்தா மூலம் லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டுள்ளது. பாரத்மேட்ரிமோனி.காம் என்னும் திருமண தகவல் தளம் கோடிக்கணக்கான இலவச உறுப்பினர்களைக் கொண்டும் அதில் இலட்சங்களில் பணம் செலுத்தும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. நவ்க்ரி, மான்ஸ்டர் போன்ற வேலை வாய்ப்பு தளங்களும் கோடிக்கணக்கான இலவச வேலை தேடுவோரின் தகவல்களைக் கொண்டு அவற்றை நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டாளர்களுக்கு ஆண்டுக்கு இவ்வளவு என பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறது.ஆக, இணைய தளங்கள் மக்களுக்கு தேவையான சேவைகளை அளித்து அதற்கென கட்டணங்களை நிறுவி அல்லது இடப்படும் விளம்பரங்களை வைத்து பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றன. இவற்றில் நாம் பார்க்கப் போவது வலைப்பதிவில் அதாவது இலவசமாக நமக்குக் கிடைக்கும் இவைகளில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதைப் பார்க்கப் போகிறோம்.முதலாவதாக பணம் சம்பாதிப்பது என முடிவெடுத்தவுடன் எந்தவித உழைப்புமில்லாமல் பணம் சம்பாதிக்க முடியாது என்பதை உணர வேண்டும். மேலும் வலைப்பதிவுகளில் பணம் சம்பாதிப்பது என்பது உங்களது தகவல்களை எவ்வாறு பயன்படப்போகின்றன, எத்தனை பேரின் கவனங்களை ஈர்க்கிறது, எத்தனை பேர் உங்களின் தளத்திற்கு வருகை தருகிறார்கள் எனபதைப் பொறுத்து உள்ளது. அவற்றிற்கு ஏற்ப உங்கள் தளங்களில் விளம்பரங்கள் இட்டு பணம் பார்க்கலாம். உங்களின் வலைத்தளத்தில் இடப்படும் தகவல்கல் பிற தளங்களில் இருந்து பிரதி எடுத்து இடப்படுபவையாக இருத்தல் கூடாது. ஏனெனில் இணையத்தில் தேடுபொறிகளில் தேடப்படும் பொழுது ஏற்கனவே இடப்பட்டுள்ள தளங்களுக்குச் சென்று விடுவதால் உங்கள் தளம் ஏற்கப்பட மாட்டாது. அடுத்து நீங்கள் எந்த வகையாக தகவல்களை, சேவைகளை அளிக்கப் போகிறீர்கள் என்பதை கவனத்தில் கொண்டு இருக்க வேண்டும்.வலைப்பதிவு உருவாக்கம் செய்தாகி விட்டது. வலைப்பதிவில் பதிவுகள் ஏற்றப்பட்டாகி விட்டது. தளத்திற்கு வருகையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது. தற்போது எந்த எண்ணிக்கையை எவ்வாறு பணம் சம்பாதிப்பதில் திருப்பது என்று பார்க்க வேண்டும். இணைய தளங்களுக்கான விளம்பர வருமானங்களில் முதன்மையாக உள்ளது கூகிளின் ஆட்சென்ஸ் (AdSense) எனப்படுவது தான். அதனை எவ்வாறு எனபதனைக் காண்போம்.
விகடன்.காம் இணையதளத்தின் ஆட்சென்ஸ் இடப்பட்டுள்ள பகுதிகூகிள் ஆட்சென்ஸ் மூலம் உங்களின் தள விபரங்கள் போன்றவற்றைக் கொடுத்து உங்களுக்கென கணக்கு உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆட்சென்ஸ் கணக்கு என்பது ஜீமெயில் போன்ற சாதாரண கணக்கு அல்ல, இக்கணக்கு உருவாக்கும் செயல்முறைகள் முடிந்தவுடன், கூகிள் பணியாளர்கள் உங்களது விபரங்களை ஆய்வு செய்து, தளம் சரியானதாக உள்ளதா?, வருகையாளர்கள் கணிசமாக உள்ளனரா, உங்கள் தளத்தில் பயன்படுத்தப்படும் மொழி தாம் நிறுவிய விதிகளுக்குட்பட்டு உள்ளதா என்பன போன்ற விபரங்களை ஆய்வு செய்து அனுமதி கொடுப்பார்கள். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட பின் ஆட்சென்ஸ் கணக்கில் உட்புகுந்து விளம்பரங்களுக்கான உயர, அகல அளவுகளை நிறுவி கிடைக்கும் நிரலை உங்களின் வலைத்தில் இடது, வலது, கீழ், மேல் என எந்த இடங்களிலும் பொருத்திக் கொள்ளலாம்.
கூகிள் ஆட்சென்ஸ் முகப்புப் பக்கம் - http://www.google.com/adsenseவலைப்பதிவுக்கு வருகை புரிவோர்கள் கண்களில் படும் இவ்வகை விளம்ப்ரங்கள் அவர்கள் விளம்பரங்களைச் சொடுக்கும் பொழுது உங்களுக்கு பணம் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும். ஆக எத்தனை பேர் வருகிறார்கள் என்பதைப் பொறுத்தும், அவர்கள் விளம்பரங்களைச் சொடுக்குவதைப் பொறுத்தும் உங்கள் வருமானம் உள்ளது.விளம்பரங்கள் சொடுக்கப்படுவது பற்றிய அனைத்து விபரங்களையும் உங்களால கவனிக்கவும் முடியும். தினமும் சொடுக்கிய விபரங்கள், வார அறிக்கை, மாத அறிக்கை என அறிக்கைகளை ஆய்வு செய்ய முடியும். உங்களுக்கு கிடைக்கும் அறிக்கையைப் போல் கூகிளிக்கும் உங்களால் எத்தனை இடங்களிலிருந்து விளம்பரங்கள் கிடைக்கிறது, விளம்பரங்கள் தவறாக நிறுவிய நபர்களால் சொடுக்கப்படுக்கிறதா, திரும்ப திரும்ப ஒரு சில இடங்களிடமிருந்து சொடுக்க்பபடுகிறதா என தெளிவாக கண்காணிக்கப்படும். ஆகையினால் உங்கள் விளம்பரங்களை தவறாக பயன்படுத்துதல் கூடாது. அவற்றை கூகிள் கண்டுபிடித்தால் மொத்தமாக கணக்கை செயலிழக்கம் செய்து விடுவார்கள். ஆட்சென்ஸ் பற்றிய மேலதிக தகவல்களையும், இன்னபிறவற்றையும் அடுத்த பகுதியில் காண்போம். உங்களுக்கு ஏற்படும் ஐயங்களை பின்னூட்டமாகத் தெரிவிக்கவும். அடுத்த பகுதியில் பதில் தருகிறேன்.

என்றென்றும் அன்புடன்,
நிலவன் சங்கையா
http://www.mentamil.com
தமிழனாய்...பாலாஜி.ச.இமலாதித்தன்www.tamilvaasal.blogspot.comவீரம் எனது குலத்தொழில்

சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை:பா.ஜ.க.வின் எச்சரிக்கை

புதுடில்லி:"சீனாவுக்கும், நமக்கும் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அந்த நேரத்தில் நமக்கு உதவும் வகையிலான நாடு ஒன்றுடன் நாம் நட்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்' என, பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சீன - இந்திய உறவுகள் தொடர்பாக பார்லிமென்டில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியதாவது:சீனாவுக்கு எதிராக நமக்கு உதவும் வகையில், சர்வதேச அளவில் ஒரு நாட்டுடன் நாம் நட்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது அவசியமான ஒன்று. பொருளாதார லட்சியங்களை அடைவதற்காக, அமெரிக்காவும், சீனாவும் கடந்த பல ஆண்டுகளாக பல நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்திக் கொண்டன.
மேலும், பனிப்போர் காலத்தில் ரஷ்யாவை கட்டுப்படுத்தவும் அமெரிக்கா இவ்வாறு செய்தது.ஆனால், இதையெல்லாம் நாம் கண்டு கொள்ளவில்லை. சீனா தொடர்பான நீண்ட கால கொள்கை ஒன்றையும் நாம் உருவாக்கவில்லை. சீனாவும், அமெரிக்காவும் தங்களுக்கு சாதகமான வகையில் உலகையே இரண்டாக பிளவுபடுத்தியுள்ளன. இந்தியாவும் சீனாவும் சமம் என, மற்ற நாடுகள் சொல்வதை சீனாவால் ஒரு போதும் ஜீரணித்துக் கொள்ள முடியாது. அதனால், 1962ம் ஆண்டில் நம் நாட்டின் மீது போர் தொடுத்தது. அதுபோல் மீண்டும் நடந்தால், இந்தியா சும்மா இருக்கக்கூடாது.
கடந்த இரண்டு மூன்று வருடங்களாக அணு எரிபொருள் சப்ளை நாடுகள், ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் உலக வங்கி என, பல சர்வதேச அமைப்புகளில் இந்தியாவுக்கு பலமான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது சீனா. அதே நேரத்தில், பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பெறவும் உதவியுள்ளது. அதனால், சீனா தொடர்பான கொள்கையில் மாற்றம் தேவையா அல்லது வேண்டாமா என, நாம் முடிவு செய்ய வேண்டியது அவசியம். சீனாவுக்கு என தனி கொள்கையை உருவாக்க வேண்டும்.இவ்வாறு முரளி மனோகர் ஜோஷி கூறினார்.
எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த சந்தீப் தீட்சித் கூறியதாவது:சீனாவைக் கண்டு இந்தியா பயப்படத் தேவையில்லை. மற்ற நாடுகள் உடனான எல்லையைப் போல, சீனாவுடனான எல்லை வரையறுக்கப்படவில்லை. இந்தியா - சீனா இடையேயான அனைத்து எல்லைப் பிரச்னைகளையும் தீர்க்க, முதன்முறையாக மத்தியில் உள்ள ஐ.மு.கூ., அரசு முற்பட்டுள்ளது.
நம் பகுதியை சீனா ஆக்கிரமிப்பதாக நாம் குற்றம் சாட்டுகிறோம். அதேபோல், சீனப் பகுதியை நாம் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பதாக அந்நாட்டு அரசு சொல்கிறது.சீனாவுக்கு எதிராக மற்றொரு நாட்டின் உதவியைப் பெற வேண்டுமென எதிர்க்கட்சியினர் கூறுவது, அரசியல் ஆதாயம் தேடும் செயல். நமது ராணுவம் பலமற்றது அல்ல. யாராவது நம்மை எதிர்க்கத் துணிந்தால், அதற்கு நமது ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுப்பர்.இவ்வாறு சந்தீப் தீட்சித் கூறினார்.


நன்றி:தினமலர் 10.12.2009


காங்கிரஸ் கட்சி எப்போதுமே அசட்டையாகவும், பொறுப்புணர்ச்சியின்றியுமே உலக அரசியல் மற்றும் எல்லைப்பிரச்னைகளைக் கையாண்டுள்ளது.அதற்கும்,அதன் தலைவர்களுக்கும் தேசபக்தி இருக்கிறதா? என்ற அளவிற்கே இருந்திருக்கின்றனர்.



கி.பி.1962 ஆம் ஆண்டு இந்தியா சீனா போர் நடந்த போது சோனியா தனது கணவர் ராஜீவை அழைத்துக் கொண்டு புது டெல்லியில் இருக்கும் இத்தாலி தூதரகத்தில் தஞ்சமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அப்படிப்பட்ட வீரப்பெண்மணிதான் இன்று நம்மை நிழலாக ஆளுகிறார் என உணரும்போது புல்லரிக்கிறது.






Thursday, December 3, 2009

CHINA IS A GREAT DESIRE COUNTRY-3

இந்தியா, சீனா – உறவா, பகையா?
புதன், 2 டிசம்பர் 2009( 20:51 IST )
-->
“தகராறுக்கு உட்பட்ட பகுதியில் பயணம் மேற்கொள்ள தலாய் லாமாவை அனுமதித்ததன் மூலம் சீனத்திற்கு இரட்டை அவமரியாதை செய்துள்ளது இந்தியா” என்று கூறிவிட்டு, “1962ஆம் ஆண்டு கற்ற பாடத்தை இந்தியா மறந்திருக்கலாம், அதே போன்ற தவறான பாதையில்தான் இந்தியா இப்போதும் செல்கிறது” என்று ஒரு ‘ஸ்காலர்’ கூறியதாக கட்டுரை வெளியிட்டிருந்தது. ஆனால் இதையெல்லாம் மத்திய அரசு ‘பெரிதாக’ காட்டிக்கொள்ளவில்லை .ஆனால், இந்தியாவை ஒரு அச்சுறுத்தலாகவே சீன மக்கள் கருதுவதாக ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது பீபிள்ஸ் டெய்லி. அதில் பங்கேற்றவர்களில் 90 விழுக்காட்டினர் சீனத்திற்கு இந்தியா ஒரு அச்சுறுத்தல்தான் என்று கருதுகிறார்கள் என்று கூறி ஒரு செய்தியையே வெளியிட்டுள்ளது.!அதுமட்டுமல்ல, நமக்குத் தெரியாத பல விவரங்களை அது தனது நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கிறது. கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி அன்று அளித்த ஒரு செய்தியில், இந்தியா 60,000 படையினரை சீன எல்லைக்கு அனுப்பியுள்ளது என்று கூறுவிட்டு, “இது எதிர்காலத்தில் எழக்கூடிய சவால்களைச் சந்திப்பதற்கே” என்று ஆளுநர் ஜே.ஜே. சிங் கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
FILEதலாய் லாமா அருணாச்சல பிரதேசம் சென்றுபோது, அவருடைய பயணத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் முறையில் அதி நவீன ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணைகளை சீன எல்லையை நோக்கி இந்தியா நிறுத்தியுள்ளது என்ற செய்தியும் பீபிள்ஸ் டெய்லியில் வெளியிடப்பட்டிருந்தது. சீன அரசின் பிரச்சார ஊடகங்களாகத் திகழும் இந்த இணையத் தளங்களில் வந்த செய்திகளை இந்திய அரசு மறுக்கவில்லை என்பதால் இவையாவும் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஆக, இரண்டு நாடுகளின் பிரதமர்கள் சந்தித்துக் கொண்டபோது, நீடித்த நல்லுறவு என்று பேசினாலும், எதார்த்தத்தில் நிலை வேறாகவுள்ளது புலனாகிறது. இரண்டு அரசுகளும் இரண்டு முகங்களைக் கொண்டுள்ளன, காட்டுகின்றன.

தகவல் ஆதாரம்:தமிழ் வெப்துனியா 3.12.2009 www.tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0912/02/1091202105_1

CHINA IS A GREAT DESIRE COUNTRY-2

இந்தியா, சீனா – உறவா, பகையா?
புதன், 2 டிசம்பர் 2009( 20:50 IST )
-->
அப்படிக் கூறுவதன் மூலம் எதையெல்லாம் அது தகராறுக்கு உட்பட்ட பகுதிகள் என்று கோருகிறது அல்லது நினைக்கிறது என்பது இன்றுவரை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்சனையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை 13 சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்துவிட்டது. இது வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் துவங்கி தொடர்ந்து நடந்துவருகிறது.
FILEஇந்தியாவின் தேசப் பாதுகாப்பு ஆலோசகராகவுள்ள எம்.கே. நாராயணனும், சீனத்தின் துணைப் பிரதமராக உள்ள தாய் பிங்குவாவும் பேசி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடந்து முடிந்ததும் ‘பேச்சுவார்த்தை இணக்கமாகவும், சுமூகமாகவும் நடந்தது’ என்று இந்திய அரசின் சார்பாக அறிக்கை கொடுக்கப்படும். எப்படிப்பட்ட இணக்கம், எதில் சுமூகம் என்றெல்லாம் ஒருவருக்கும் ரகசியமாகக் கூட கசிந்ததில்லை. மொத்தத்தில் இந்தியர்களாகிய நமக்கு எல்லாமே பாசிஸ்ட்டிவாகக் காட்டப்படுகிறது என்பதைத் தவிர எந்த விவரமும் தெரியாது.இறுதியாக சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த 13வது சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் சார்பாக வரைபடம் கொடுக்கப்பட்டது என்று மட்டும் கூடுதலாக ஒரு தகவல் வந்தது. ஆனால், சீனத் தரப்பு அப்படி ஏதும் அளித்ததா என்பது பற்றியெல்லாம் ஒரு தகவலும் இல்லை. ஆனால் பேச்சுவார்த்தை இணக்கமாக இருந்தது என்றும், அடுத்தச் சுற்றில் இறுதித் தீர்வுத் திட்டம் பரிமாறிக் கொள்ளப்படும் என்று இந்தியாவின் தரப்பில் கூறப்பட்டது. நமக்கு இது முன்னேற்றமாகவே எண்ணத் தோன்றும் நிலை. ஆனால், இத்தனைச் சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்ததை சீனத் தரப்பு எப்படி வர்ணிக்கிறது தெரியுமா? “இரு பெரும் பொருளாதாரங்களுக்கும் இடையிலானப் பகுதித் தகராறுகள் (Territorial disputes) திசையின்றிச் செல்வதாகவே தெரிகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இணக்கப்பாட்டை விட மோதலே அதிகம் உள்ளது. பகுதித் தகராறைத் தீர்க்க கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு மட்டங்களில் இரு நாடுகளும் பல முறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டன. ஆயினும் எந்த ஒரு நிச்சயமானத் தீர்வையும் உருவாக்குவதில் தோல்வியே ஏற்பட்டுள்ளது” என்று சீன அரசு ஆதரவு நாளிதழான குளோபல் டைம்ஸ் (அக்டோபர் 14,2009) கட்டுரை வெளியிட்டுள்ளது. அந்தக் கட்டுரையில் “சீனத்தின் அணுகுமுறையை பலவீனமாக இந்தியா கருதினால் அது படுமோசமாக தவறாகவிடும்” என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளது!ஆனால் நமக்கு மிகப் பாசிஸிட்டிவ்வான படத்தை காட்டுகிறது இந்திய அரசு. பிரதமரின் அருணாசலப் பிரதேச பயணத்திற்கு கண்டனம்
PIBஇந்த நிலையில்தான் அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிரதமர் மன்மோகன் சிங் சென்றதற்குச் சீன அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்போதெல்லாம் சீனத்தின் இணையத் தளங்களில் வெளியான கண்டனங்களையும் கட்டுரைகளையும் படித்தால்... இங்கு நமது அயலுறவு அமைச்சரும், செயலரும் பேசுவதற்கும், அந்நாட்டு அரசின் நிலைக்கும் உள்ள இமாலய வேறுபாடு அப்பட்டமாகத் தெரியும். “தங்கள் நாட்டிற்குச் சொந்தமான (தெற்கு திபெத் என்று சீனா கூறுகிறது) 1,20,000 சதுர கி.மீ. பரப்பில் 90,000 சதுர கி.மீ. பரப்பை அருணாசலப் பிரதேசம் என்ற பெயரில் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதே தகராறுக்குக் காரணம்” என்று குளோபல் டைம்ஸ் (அதே நாளில்) கூறியுள்ளது.அது மட்டுமல்ல, அருணாசலப் பிரதேசத்திலுள்ள தவாங் பெளத்த ஆசிரமத்திற்கு திபெத் தலைவர் தலாய் லாமா ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள இந்தியா அனுமதித்தை கடுமையாக எதிர்த்து சீனா.

CHINA IS A GREAT DESIRE COUNTRY-1



இந்தியா, சீனா – உறவா, பகையா?
புதன், 2 டிசம்பர் 2009( 21:01 IST )
-->
FILEஇந்தியாவின் ஒரு மாநிலமாகத் திகழும் ஜம்மு-காஷ்மீரின் நிர்வாகத்தின் கீழுள்ள எல்லை மாவட்டமான லே பகுதியில் உள்ள டெம்சோக் என்ற கிராமத்தில் 8 கி.மீ. தூரத்திற்கு சாலை போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.காரணம்: அண்டை நாடான சீனா அப்பகுதியில் சாலை போடுவதற்கு ஆட்சேபம் தெரிவித்தது. ஆட்சேபம் தெரிவித்தது சீனா இராணுவம். இந்தியாவின் ஒரு பகுதியாகத் திகழும் ஒரு மாநிலத்தின், அந்த மாநிலத்தின் நிர்வாகத்தின் கீழ் வரும் ஒரு கிராமத்தில் சாலை அமைக்கும் பணிக்குச் சீனா எப்படி ஆட்சேபம் தெரிவிக்க முடியும்? என்று கேள்வி முதன்மையானது.இரண்டாவதாக, தனது ஆட்சேபனையை அண்டை நாடான இந்தியாவிற்கு தனது தூதரின் வாயிலாகச் சொல்லாமல், நேரடியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நிர்வாகத்திடம் கூறுகிறது. அந்த மாநில நிர்வாகமும் அதனை ஏற்று பணியை நிறுத்துகிறது என்றால்... ?இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட அந்த எல்லைக் கிராமத்தில் இந்திய இராணுவமோ அல்லது இந்திய எல்லைக் காவற் படையோ (பார்டர் செக்யூரிடி ஃபோர்ஸ்) இல்லையே? இல்லையென்றால் ஏன் இல்லை? என்று கேள்வியும் முக்கியமானது.
FILEஇதையெல்லாம் விட, அங்கு சாலை போடுவதை நிறுத்தியது தொடர்பாக இதுவரை “அம்மாநில அரசிடமிருந்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை, அறிக்கை கேட்டிருக்கிறேன்” என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதிலளித்திருப்பது, எல்லைப் பகுதியின் கட்டுப்பாடு எந்த அரசின் கீழ் உள்ளது என்ற கேள்வியையும் எழுப்புகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இப்பிரச்சனை குறித்து சீன அரசு என்ன கூறியுள்ளது என்று பார்த்தால்... அது நிச்சயம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. காரணம், சீன அயலுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் குவின் காங்க், “எல்லைப் பகுதியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் இந்தியா காப்பாற்றிட வேண்டும்” என்று கூறியுள்ளார். “தகராறுக்கு உட்பட்ட இந்தியப் பகுதியில்” என்று குறிப்பிட்டே செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ள குவின் காங்க், “இரு நாடுகளும் இணைந்து முயற்சித்து எல்லைப் பிரச்சனைக்கு இறுதித் தீர்வு காண வேண்டு்ம்” என்று கூறியுள்ளதாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான ‘பீப்பிள்ஸ் டெய்லி’யின் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.குவின் காங்க் கூறியுள்ளதை ஆழமாகப் பார்க்கும்போது, ஜம்மு-காஷ்மீரின் ஒரு அங்கமான லே பகுதியை ‘தகராறுக்கு உட்பட்ட பகுதி’யாக சீனா கருதுகிறது என்பதும், அப்பகுதியில், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு வசதியளிக்கும் முகமாகவோ அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காகவோ எந்த கட்டுமானப் பணிகளை மேற்கொண்டாலும் அது இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிக்கும், நிலைத் தன்மைக்கும் எதிரான நடவடிக்கையாகச் சீனா கருதும் என்கிற எச்சரிக்கையும் கொண்டுள்ளது.13 சுற்றுப் பேச்சுவார்த்தை சாதித்தது என்ன? இரு நாடுகளுக்கும் இடையே எல்லையை வரையறை செய்த மெக்மோகன் கோட்டை சீனா ஏற்றுக் கொள்ளாததால் அதனை இரு நாடுகளுக்கும் இடையிலான ‘எல்லைப் பிரச்சனை’ என்று இந்தியா கூறிவருகிறது. ஆனால், ‘பகுதிப் பிரச்சனை’ (Territorial Dispute) என்றுதான் சீனா கூறுகிறது.