பூமியின் வயது 432 கோடி வருடங்கள் என்று கணித்தார்கள். பிரம்மனின் ஒரு நாள் (கல்பா) கணக்கில், பூமியின் வயது ஆயிரம் சதுர்யுகம் என்றார்கள். ஒரு யுகம் என்பது 108 கோடி ஆண்டுகள் என்று எழுதினார் ஆர்யபட்டர். சத்ய யுகம் - 17,28,000 ஆண்டுகள் திரேத யுகம் - 12,96,000 ஆண்டுகள் துவாபர யுகம் - 8,64,000 ஆண்டுகள் கலியுகம் - 4,32,000 ஆண்டுகள் சதுர்யுகம் -- 43,20,000 ஆண்டுகள் ஒரு நாளின் 4,05,000 (நாலு லட்சத்து ஐந்தாயிரம்) பகுதியை (0.21 நொடி) நிமிஷா என்றார்கள். ஒரு நொடியை 33,750-ஆல் (முப்பத்தி மூன்றாயிரத்து எழுநூற்றைம்பது) வகுத்து, அதை ‘த்ருதி’ என்றார்கள். உலகின் மற்ற நாடுகள் நொடியைவிடச் சிறிய கால அளவை கண்டுபிடிக்கவே இல்லை. ஒளியின் வேகத்தை 19-ஆம் நூற்றாண்டில் மேலைநாட்டு விஞ்ஞானிகள் நொடிக்கு 2,99,792 கி.மீ. என்று கணக்கிட்டார்கள். ஆனால், ரிக்வேதத்தில் குறிப்பிட்ட அளவுக் கணக்கை இதற்கு நிகராக வைத்துப் பார்த்தால், ஒளியின் வேகம் நொடிக்கு 2,99,334 கி.மீ. என்று வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் கண்டுபிடித்த Black-Hole-ஐ (அண்ட சராசரத்தின் மேல் பகுதி), விஷ்வருசி என்ற பெயரில் முண்டக உபநிஷத்தில் எழுதி வைத்தார்கள். அதேபோல் பரம அணு என்பது 0.000000614 கிராமுக்கு நிகரானது என்ற அளவுக் கணக்கை அந்தக் காலத்திலேயே கண்டுபிடித்ததும் நம்மவர்கள். இன்றைய அணுசக்தி விஞ்ஞானத்துக்குத் தந்தை மேலைநாடுகள் என்றால் கொள்ளுத்தாத்தன் நம்மவர்கள்தான். அணுவிலிருந்து வெளிவரும் அபார சக்தியை முண்டக உபநிஷத்திலேயே விவரித்திருக்கிறார்கள். இயற்கைதான் வாழ்வின் ஆதாரம் என்ற கருத்தில்தான் பூமாதேவியை வழிபட்டார்கள். ஒரு இடத்தில் கட்டடம் கட்டும்போது பூமி பூஜை செய்வதே, அந்த பூமி கட்டுமானத்துக்கு ஏற்றதா என்று ஆய்வு செய்து, சரியென்றால், அதை வாழ்த்தும் வகையில் செய்யும் பூஜைதான். சீதை என்றாலே, ஏர் என்று பொருள். சீதை பூமியிலிருந்து பிறந்தாள் என்பதுடன் ராமாயண வாழ்க்கை முடிந்ததும், பூமி பிளந்து சீதையை ஏற்றுக்கொள்வதாக புராணம் சொல்கிறது. ஏரின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவே சீதை கதாபாத்திரத்தை ஏராகவும், பூமாதேவியாகவும் சித்தரித்தார்கள். மரங்களிலேயே சுற்றுப்புறத்துக்கு அதிக நலன் தரும் மரத்தை ‘அரசமரம்’ என்றதுடன், போதிமரம் என்றும் சொன்னார்கள். புத்தருக்கு ஞானம் போதித்த மரம் என்பதால் போதிமரம் என்று சொன்னதாகச் சொன்னாலும், பூதேவியின் மரம் என்பதால் போதிமரம் என்ற பெயர் என்றும் நம்பிக்கை. அரச மரத்தைத்தான் கல்பதரு என்று சொல்லி வணங்கினார்கள். இன்று Global Warming பிரச்னையை எதிர்கொள்ள, மேலைநாட்டு விஞ்ஞானிகள் சொல்வது - மரங்களை நடுங்கள். அதுவும் அரச மரங்களை! மனிதர்களின் நோய்க்கு வைத்தியம் நமக்குத் தெரியும். பிராணிகளுக்கும் வைத்தியர்கள் உண்டு. மரம், செடி, கொடிகளுக்கு வைத்தியம் என்ற சாஸ்திரம், விருக்ஷ ஆயுர்வேதாவில் முழுமையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் ஒருவகை மலரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். மலர்ந்திருக்கும் அந்த மலர், நீங்கள் கவலையுடன் அதன் அருகில் சென்றால் மலர் மூடிக்கொள்ளுமாம். கவலை அகன்றாலோ, கவலையாயிருப்பவர் நகர்ந்து விட்டாலோ திறந்து கொள்ளுமாம். இன்றும் நீலகிரியில், தோடர்கள் இந்த மலர் இருப்பதை உறுதி செய்கிறார்கள் (Gentiana Pedicellata என்பது இன்றைய பெயர்). கலியுகத்தில் செடி, மரம் நடுவது, பூங்கா அமைப்பது, கிணறு, குளம் தோண்டுவது குறையும். அதனால் இயற்கையின் சீற்றம் அடிக்கடி ஏற்படும் என்று சிவ புராணத்தில் (பாடல் 11.1.23), அன்றே சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்! ராஜரிஷி நன்றிகள்:திரிசக்தி மாத இதழ் |
ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Tuesday, October 25, 2011
சொன்னது நம்மாளு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment