Tuesday, December 24, 2019

பெரும் செல்வ வளத்தைத் தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஜபம்!!!


பெரும் செல்வ வளத்தைத் தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஜபம்!!!

உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் நவக்கிரகங்கள் இயக்குகின்றன;நவக்கிரகங்களை பஞ்சபூதங்களும்,பஞ்சபூதங்களை 11 ஏகாதச ருத்ரர்களும்,11 ஏகாதச ருத்ரர்களை மஹாகால பைரவப் பெருமானும் நிர்வாகித்து வருகின்றார்;மஹா கால பைரவர்,தனது தந்தையும்,குருவுமாகிய ஈசனின் ஆணைப்படி,அவர் சார்பாக நிர்வகித்து வருகிறார்;


நாம் நம்முடைய அனைத்து கர்மாக்களையும் அனுபவித்து தான் தீர்க்க வேண்டும் என்று விதி இருந்தால்,நம் ஒவ்வொருவருக்கும் இன்று முதல் 80,000  முதல் 26 கோடி பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கும்;

இருப்பினும் ஈசனாகிய அருணாச்சலேஸ்வரர் மிகுந்த கருணை மிக்கவர்;திருந்த வேண்டும்,மனம் வருந்த வேண்டும் என்ற எண்ணமுள்ள பல கோடி மனிதர்கள் நமது ஆன்மீகத் தமிழ்நாட்டில் பிறந்துள்ளார்கள்;

அவர்களில் யாரெல்லாம் இப்பிறவியில் மஹா கால பைரவ ஜபம் அல்லது அண்ணாமலை கிரிவலம் செய்கிறார்களோ அவர்களுக்கு வெகு சீக்கிரமாக கர்மவினைகள் குறையத் துவங்கும்;தொடர்ந்து மஹா கால பைரவ ஜபம் செய்து வருபவர்களுக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு,தானே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண  ஆகர்ஷண பைரவ ஜபம் தேடி வரும்;தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு தேய்பிறை அஷ்டமி அன்று இப்படி ஜபித்து வருவதால்,அடுத்த சில ஆண்டுகளுக்குப்பிறகு வளர்பிறைஅஷ்டமியின் மகிமைகளும்,அந்த நாளில் எந்த பைரவரை எப்படி ஜபிக்க வேண்டும் என்ற வழிமுறையும் தேடிவரும் ;

இன்னும் தொடர்ந்து பைரவ ஜபம் செய்து வந்தால்,பைரவ ஜபம் பற்றிய பல அரிய பெரிய ஜப ரகசியங்கள் நம்மைத் தேடி வரும்;அதில் ஒன்றுதான் பைரவரின் ஜனன திதியான அஷ்டமி திதியும்,ஈசனின் ஜன்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரமும்!
இந்த இரண்டும் சேர்ந்து வரும் நாளில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ மந்திரம் ஒன்றை 108 முறை ஜபித்தால்,வருமான அளவு அதிகரிக்கும்;இப்படிச் சேர்ந்து வரும் நாட்கள் ஒரு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே வரும்;சில வருடங்களில் வராமலும் இருப்பது உண்டு;எனவே,இன்று முதல் தினமும் 108 முறை வீதம்,ஓராண்டு வரை ஜபித்து வருவதாலும் மகத்தான செல்வ வளத்தைப் பெறலாம்;


1.4.2020 புதன்கிழமை இரவு 10.25 வரை வளர்பிறை அஷ்டமி திதி இருக்கிறது;அன்று மதியம் 2.41 வரை திருவாதிரை நட்சத்திரம் இருக்கின்றது;


இந்த நாளில் காலை சூரியம் உதயம் ஆனதில் இருந்து,மதியம் 2.41 வரையிலான நேரத்தில் தொடர்ந்து 8 மணி நேரம் ஜபிக்கலாம்;அல்லது 3 மணி நேரத்திற்குள் 1008 முறை ஜபிக்கலாம்;

9.10.2020 வெள்ளிக்கிழமை மதியம் 1.24 முதல் 10.10.2020 சனிக்கிழமை மதியம் 1.19 வரை தேய்பிறை அஷ்டமி திதி இருக்கிறது.9.10.2020 வெள்ளிக்கிழமை இரவு 8.58 வரை திருவாதிரை இருக்கிறது.


9.10.2020 வெள்ளி மதியம் 1.24 முதல் இரவு 8.58 வரை ஜபிக்கலாம்;


21.3.2021 ஞாயிறு மாலை 4.22 முதல் மறுநாள் 22.3.2021 திங்கட்கிழமை விடிகாலை 5.32 வரை அஷ்டமியும்,திருவாதிரையும் சேர்ந்து வர இருக்கின்றது;இந்த நேரத்திற்குள் ஜபிக்கலாம்;





கண்டிப்பாக அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;


ஓம் பைரவாய பைரவக்சனாய குபேராய
தன தான்யாதிபதயே நமஹ
சொர்ணம் தனதான்யம் சம்ருத்மே ஸ்தாபய ஸ்வாஹா


தமிழ்நாடு,ஸ்ரீலங்காவில் எல்லா ஊர்களிலும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயம் அல்லது சன்னதி இல்லை;எனவே,உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் இருக்கும் கால பைரவர் சன்னதியில் தினமும் ஜபிக்கலாம்;உங்களுக்கு வசதிப்படும் நேரத்தில் ஜபித்துவரலாம்.


வீட்டில் எனில்,ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படம் இருக்க வேண்டும்;அவரை வடக்கு நோக்கி வைக்க வேண்டும்;அவர் அருகில்,கிழக்கு நோக்கி ஒரு தூய விரிப்பின் மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;உடலின் எந்த பகுதியும் தரையில் படாமல் அமர்ந்து கொள்ள வேண்டும்;   சந்தன வாசம் வெளிப்படுத்தும் பத்தியை பொருத்தி வைக்க வேண்டும்;பசு நெய் தீபம்  ஏற்றி வைக்க வேண்டும்;ஜபித்து முடித்ததும்,பத்தி,தீபத்தை அணைத்து வைக்க வேண்டும்;அந்த விரிப்பினை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது;ஒரு போதும் துவைக்கக்கூடாது;


நீங்கள் எப்படி வருமானம் பார்க்கிறீர்கள் என்பதை எப்படி எவரிடமும் சொல்லாமல் இருக்கிறீர்களோ,அதே போல,இந்த செல்வ வளம் பெருக்கும் ஜப முறையையும் உங்களைச் சுற்றி இருப்பவர்கள் அறியாதவாறு ஜபித்து வர வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே பலிதம் ஆகும்;


வேறு எந்த தெய்வத்தை ஜபித்தாலும் செல்வ வளம் பெருக்கும் வரம் கிடைத்துவிடும்;ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை தினமும் ஜபித்தால்,நமது கர்மவினைகள் படிப்படியாகக் குறையத் துவங்கும்;அது குறையும் வேகத்திற்கு ஏற்றவாறு,வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்லும்;



செல்வ வளங்களை அருளும் பைரவ மந்திரம்



வறுமை நீங்கி செல்வ வளம் பெருகிட:
கண்டிப்பாக அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;இல்லாவிட்டால்,இம்மந்திர ஜபம் பலன் கிடைப்பது கடினம்;

250 கிராம் அல்லது 500 கிராம் கொண்ட தங்கக் காசு வைத்திருப்பவர்கள்,அதில் சுத்தமான சந்தனத்தை தங்கக் காசின் மீது வைக்கவும்;அந்த சந்தனத்தின் மீது குங்குமம் வைக்கவும்;
இந்த தங்கக் காசினை பைரவரின் பாதம் அருகில் வைத்து பின்வரும் மந்திரத்தை 1008 முறை ஜபிக்கவும்;

ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் சொர்ணப்ரதாயி நம ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம்

மறுநாள் ஜபிக்கும் முன்பு,தங்கக் காசின் மீது இருக்கும் சந்தனம்,குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைக்கவும்;


வீட்டில் ஜபிக்க விரும்புவோர்,ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் போட்டோவின் முன்பாக இந்த தங்கக் காசினை வைக்கவும்;முதல் நாள் வைத்த சந்தனம்,குங்குமத்தை அடுத்த நாள் முழுமையாக எடுத்து நெற்றியில் அணிய வேண்டும்;

தங்கக் காசு இல்லாதவர்கள்,மேலே கூறிய வழிமுறையைப் பின்பற்ற வேண்டியதில்லை;அவர்களுக்கு எளிமையான வழிமுறை இதோ:


இம்மந்திரத்தை மட்டும் வீட்டில் தினமும் 1008 முறை ஜபித்து வரலாம்;ஆனால்,ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமி நாள்,தேய்பிறை அஷ்டமி நாள்,வெள்ளிக்கிழமைகளில் உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் சென்று அங்கே இருக்கும் கால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து 1008 முறை இம்மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;

முதல் 48 நாட்கள் ப்ரம்மச்சார்யத்தைக் கடைபிடித்தால்(எந்த ஒரு ரொமான்ஸ் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருப்பது=படம் கூட பார்க்காமல் இருப்பது அவசியம்) அளவற்ற செல்வ வளத்தை படிப்படியாகத் தரும்;


தினமும் 1008 முறை மந்திரம் ஜபிப்பவர்களுக்கு முதல் நாளில் இருந்தே உடல் வெப்பம் அடையும்;சூடான உணவில் நெய் சேர்த்து தினமும் சாப்பிட வேண்டும்;அல்லது தினமும் ஒருமுறையாவது இளநீர் அருந்தி வர வேண்டும்; மோர் மற்றும் தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும்;

கால பைரவப் பெருமானின் அருளைப் பெற....

கால பைரவப் பெருமானின் அருளைப் பெற....


கால பைரவர் பரணி நட்சத்திரத்தில் உதயமானார்!
கால பைரவர் அஷ்டமி திதியில் உதயமானார்;
அஷ்டமி திதியும்,பரணி நட்சத்திரமும் சேர்ந்தே வருவது மிகவும் அபூர்வம்....


2.2.2020 ஞாயிறு அன்று மாலை 4.44 வரை அஷ்டமி திதியும்,இரவு 8.13 வரை பரணி நட்சத்திரம் சேர்ந்து வருகின்றது;

கால பைரவரின் அருளைப் பெற இந்த நேரத்தில் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்கவும்;


முடிந்தால் இந்த நேரத்திற்குள் அண்ணாமலை கிரிவலம் செல்வதால்,அண்ணாமலையாரின் அருளும்,கால பைரவரின் ஆசிகளும்,பைரவ சித்தர்களின் தரிசனமும் கிடைக்கும்;


கும்பகோணம் அருகில் இருக்கும் சோழபுரம் அருள்மிகு பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் திருக்கோவிலுக்குச் சென்று ஜபிக்கலாம்;இதுதான் பைரவ உலகத்திற்கும் நமது பூமிக்கும் இடையே இணைப்பு ஆன்மீகப் பாலமாக இருக்கின்றது;

ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் பிறந்த பொன் பேத்தி அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலுக்குள் இருக்கும் பொற்றளி பைரவர் சன்னதியில் ஜபிக்கலாம்;இவர்தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவராக கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியில் உதயமானார்;


அட்டவீரட்டானங்கள் என்ற பைரவரின் எட்டு படைவீடுகளில் ஜபிக்கலாம்

(திருக்கோவிலூர் வீரட்டேஸ்வரர்,
பண்ருட்டி அருகில் இருக்கும் திருவதிகை,
தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் இருக்கும் திருக்கண்டியூர் அருள்மிகு பிரம்மசிர கண்டீஸ்வரர் திருக்கோவில்,
திருக்கடையூர் கால சம்ஹார மூர்த்தி மற்றும் திருக்கடையூர் மயானம்,
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 12 வது கி மீ தொலைவில் அமைந்திருக்கும் வழுவூர் வீரட்டானம்
திருவாரூர் அருகில் இருக்கும் திருவிற்குடி வீரட்டேஸ்வரர்,
மயிலாடுதுறை அருகில் இருக்கும் செம்பொனார் கோவில் பகுதியைச் சேர்ந்த திருப்பரசலூர்
மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 18 கி மீ பயணித்து பிறகு விசாரித்துச் சென்றால் வரும் குறுக்கை என்ற கொறுக்கை=இங்கே இந்த ஆலயத்திற்கு அருகில் ஒரு தென்னந்தோப்பில் மன்மதனை எரித்த சாம்பல் இன்றும் இருக்கின்றது)

தவிர,அவரவர்களுடைய ஜன்ம நட்சத்திர பைரவர் ஸ்தலங்கள்:-
அசுபதி = பேரூர் சிவாலாயத்தில் இருக்கும் ஞானபைரவர்

பரணி = காரைக்குடி திருப்பத்தூர் அருகில் அமைந்திருக்கும் கண்டரமாணிக்கம் சென்று பெரிச்சி கோவில்


கார்த்திகை = அண்ணாமலை உள்பிரகாரத்தில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்

ரோகிணி = திருக்கண்டியூர் பிரமசிரகண்டீஸ்வரர் கோவிலுக்குள் இருக்கும் வடுக பைரவர்


மிருகசீரிடம் = க்ஷேத்திரபாலபுரம்(கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழி)

திருவாதிரை = திருவண்டார் கோவில் பைரவர்(விழுப்புரம் டூ பாண்டிச்சேரி சாலையில் கண்டமங்கலம்)


புனர்பூசம் = விஜயபைரவர்,பழனி(ரோப்கார் அருகில் இருக்கும் சாது சுவாமிகள் மடாலயம்)


பூசம் = யோக பைரவர்,ஸ்ரீவாஞ்சியம்

ஆயில்யம் = பாதாள பைரவர்,காளஹஸ்தி


மகம் = அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோவில் பைரவர்,வேலூர்

பூரம் = பட்டீஸ்வர பைரவர்(கும்பகோணம் அருகில்)


உத்திரம் = ஜடாமண்டல பைரவர்,அருள்மிகு ஆவுடையம்மன் சமேத அம்மநாதர் கோவில்,சேரன்மாதேவி,நெல்லை மாவட்டம்


அஸ்தம் = யோக பைரவர்,திருப்பத்தூர்

சித்திரை = அருள்மிகு கல்யாண காமாட்சி சமேத மல்லிகார்ஜீனர் கோவிலில் இருக்கும் பைரவர்,தர்மபுரி


சுவாதி = திருவரங்குளம் (பொற்பனைக்கோட்டை) பைரவர்,வழி:புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குளம் செல்லும் வழியில் 6 வது கி மீ

விசாகம் =கோட்டை பைரவர்,திருமயம்(சாலையோரம் இருக்கும் ஆலயம்)

அனுஷம் = அருள்மிகு ஆபத்சகாயர் கோவில் பைரவர்,ஆடுதுறை

கேட்டை= அருள்மிகு ஆவுடைநாயகி சமேத தேசிகநாதர் கோவிலில் இருக்கும் கதாயுத பைரவர்,சூரக்குடி,பள்ளத்தூர்(காரைக்குடி)

மூலம் = ஆகாச பைரவர்,சட்டநாதர் கோவில்,சீர்காழி


பூராடம் = அவிநாசி கோவிலில் இருக்கும் இரண்டு பைரவர்கள்


உத்திராடம் = வடுக பைரவர்,அருள்மிகு பசுபதி நாதர் கோவில்,கரூர்


திருவோணம் = மார்த்தாண்ட பைரவர்,வைரவன்பட்டி

அவிட்டம் = அருள்மிகு பிரம்மபுரிஸ்வரர் கோவில்,சீர்காழியில் இருக்கும் அஷ்ட பைரவர்கள்


சதயம் = சர்ப்ப பைரவர்,சங்கரன் கோவில்

பூரட்டாதி = திருச்செங்கோடு தாலுகா,கொக்கராயன்பேட்டையில் இருக்கும் அருள்மிகு பிரம்மலிங்கேஸ்வரர் கோவில் பைரவர்


உத்திரட்டாதி = ஓசை உடைய பைரவர்,சேங்கனூர்,கும்பகோணம் அருகில்


ரேவதி = கரூர் மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருக்கும் பஞ்சமுக பைரவர்

அல்லது

காலபைரவர் ஆட்சி புரியும் காசியில் 64 படித்துறைகள் இருக்கின்றன;அதில் ஏதாவது ஒரு படித்துறையில் கங்கையில் மூழ்கியவாறு ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஒரு மணி நேரமாவது ஜபிக்கலாம்;

அல்லது

காசியில் எட்டு பைரவர்களின் ஆலயங்கள் இருக்கின்றன;இங்கே ஏதாவது ஒரு இடத்தில் ஜபிக்கலாம்;


அல்லது

சூரியனின் ப்ராண தேவதை ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்;இவர் சிதம்பரம் ஆலயத்தில் இருந்து அருள்பாலித்து வருகின்றார்;இங்கே ஜபிக்கலாம்;


சந்திரனின் ப்ராண தேவதை கபால பைரவர்;இவர் தென்காசிக்கு அருகில் இருக்கும் திருமலைக்கோவில் முருகன் கோவிலில் அருள்பாலித்து வருகின்றார்;இங்கே ஜபிக்கலாம்;

குருவின் ப்ராண தேவதை அசிதாங்க பைரவர்;இவர் ஆம்பூர் சிவாலயத்தில் அருள்புரிகின்றார்;இங்கே ஜபிக்கலாம்;

மற்ற கிரகங்களின் ப்ராண தேவதையாக இருக்கும் பைரவ ஆலயங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன;


அல்லது

உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் கால பைரவர் சன்னதி

அல்லது

இங்கே எங்கேயும் செல்ல இயலாதவர்கள் உங்கள் தெருவில் வசிக்கும் பைரவ வாகனத்திற்கு உணவு தானம்,பிஸ்கட் தானம் செய்யலாம்;

நம்முடைய கடுமையான கர்மவினைகளை கரைக்க ஓர் பொன்னான பைரவ வாய்ப்பு!!!

கலியுக குரு ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர்!!!

கலியுக குரு ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர்!!!


உங்களை கலியுகத் துன்பங்களில் இருந்து காக்கும் வீரபிரம்மேந்திரர்!!!

உலகம்,உயிர்கள்,ப்ரபஞ்சம் அனைத்தும் காலத்திற்கும்,கால மாற்றத்திற்கும் உட்பட்டவையே! சக்ரா தியானம் என்ற ஆன்மீகப் பயிற்சி வகுப்புகள் நமது பாரத தேசம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன;இலவச இணைய வீடியோக்களிலும் இதுபற்றிய பாடங்கள் இருக்கின்றன;

உலகத்தில் 84,00,000 உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன;ஒரு நாள் ஆயுள் கொண்ட ஈசல் முதல் 300 வருட ஆயுள் கொண்ட ஆமை,6000 வருட ஆயுள் கொன்ட மரங்கள் வரை இருந்தாலும்,மனித இனம் இவைகளில் இருந்து    எப்படி வேறு பட்டது தெரியுமா?


மனிதன் ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ஆறு சக்கரங்கள் சூட்சுமமாக இயங்குகின்றன;மனிதனின் உடலுக்கு வெளியே தலைக்கு மேலே இன்னும் 3 சக்கரங்கள் இயங்குகின்றன;இந்த சக்கரங்கள் மனித இனத்திற்கு மட்டுமே உண்டு;வேறு எந்த உயிரினத்திற்கும் கிடையாது;


இந்த 9 சக்கரங்களையும் பல கோடி ஆண்டுகள் தவ முயற்சியாலும்,பல உலகங்களில் பலப்பல பிறவிகள் எடுத்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர்கள் தான் சித்தர்கள்!


அதில் ஒரு சித்தர் பிரான் தான் இன்றைய ஆந்திர மாநிலத்தில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீவீரபிரம்மேந்திரர்!!!இவர் கலியுகம் முழுவதும் எப்போது என்ன நடக்கும் என்பதை காலக்ஞானம் என்ற பெயரில் கணித்துள்ளார்;இந்த நூல் தெலுங்கு,தமிழ்,ஹிந்தி,ஆங்கில மொழிகளில் வெளிவந்திருக்கின்றது;


இவர் 175 ஆண்டுகள் வாழ்ந்தார்;கலியுகாதி 4094,விசாக சுத்த தசமி அன்று கடப்பா மாவட்டம்,கந்திமல்லையபல்லி என்ற இடத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;இன்று அது பிரம்மம்காரி மடம் என்று அழைக்கப்படுகின்றது;

அவர் எழுதிய ஓலைச்சுவடிகள் அனைத்தையும் ஒரு பானையில் போட்டு மூடி வைத்து,அதை பூமியில் புதைத்துள்ளார்கள்;அதன் மீது ஒரு புளியமரம் நடப்பட்டு,இன்றும் வளர்ந்து வருகின்றது;அந்த புளியமரத்தின் வயது 701 ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றது;இந்த புளியமரம்,இன்றைய கர்னூல் மாவட்டத்தில் பனகனாபல்லி மடத்தில் இருக்கின்றது;இம்மடத்தை சிந்தமானு மடம் என்று பொது மக்கள் அழைக்கின்றார்கள்;

இருவிதங்களில் ஸ்ரீவீரபிரம்மேந்திரர் காலக்ஞானம் நூலை எழுதியிருக்கின்றார்;ஒன்று வசன நடை;மற்றது செய்யுள் போல எழுதியிருக்கின்றார்;இன்று வரையிலும் பனகனாபல்லி நகரத்தில் நாடோடிப் பாடல்கள் போல பாடப்பட்டு வருகின்றது;அவ்வூர் மக்கள் இதை சாந்திர சிந்து வேதம் என்று அழைக்கின்றார்கள்;
கலியுகத்தில் அக்கிரமங்கள் அதிகரிக்கும் போது ,துஷ்டர்களை சம்ஹாரம் செய்ய நான் மீண்டும் வருவேன் என்று ஸ்ரீவீரபிரம்மேந்திரர் தெரிவித்திருக்கின்றார்;அதன் படி,இவரே மஹாவிஷ்ணுவின் கல்கி அவதாரம் என்று மக்கள் போற்றுகின்றார்கள்;

ஸ்ரீவீரபிரம்மேந்திரர் கலியுகம் முடியும் வரை எப்போது என்ன நடைபெறும் என்பதை 3,34,000 பாடல்களாக எழுதியிருக்கின்றார் என்ற கருத்து உண்டு;அதில் சிறு பகுதி மட்டுமே கால ஞானம் என்ற பெயரில் பலர் தமிழ்,தெலுங்கு,ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்;இவை அனைத்தும் ஆந்திர மாநிலத்தில் கந்திமல்லையாபல்லி,முடுமாலா,நகரிபாடு,பனகானபல்லி போன்ற ஊர்களில் இருக்கும் ஸ்ரீவீரபிரம்மேந்திரர் மடங்களில் இருக்கின்றன;


ஸ்ரீவீரபிரம்மேந்திரர் அவர்களின் கணிப்புகள் அனைத்தையும் இந்த இணைய வெளியில் வெளியிட முடியாது;உரிய நூல்களை வாங்கி படித்துக் கொள்ளுங்கள்;ஒரு சில உதாரணங்களை மட்டும் ஸ்ரீவீரபிரம்மேந்திரரின் அருளாசியுடன் இங்கே குறிப்பிடுகின்றோம்;

சுயம் அறிந்த குரு தேவர்கள் வருவது இனி அரிதாகும்;போலிச் சாமியார்கள் பெருகுவார்கள்;


வெண்மை நிறத் தோலுடைய மக்கள் இந்த பாரத நாட்டை ஆள்வார்கள்;

கலியுகாதி 5000 ஆண்டுகள் முடிந்த பின்னர்,இந்த புண்ணிய பூமியான பாரத நாட்டில் தர்மம் படிப்படியாக தேய்ந்து போகும்;தற்போது கலியுகாதி 5119 (கிபி 2019) நடைபெற்று வருகின்றது;கலியுகாதி 4095 இல் (கி.பி.1995) நமது புண்ணிய பூமிக்கு இணைய வசதி வரத் துவங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்;


மிதுனத்தை சனி கடக்கும் போது அழிவுகள் அதிகமாகும்;1913, 1943, 1973, 2003 ஆகிய ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்;அடுத்தபடியாக 2033 இல் மீண்டும் மிதுனத்தை சனி கடக்க இருக்கின்றார்;பாவங்கள் கடுமையாகச் செய்பவர்கள் மொத்தமாக இறக்கும் காலம் இந்த இரண்டரை ஆண்டுகள் தான்!!!


சுபக்ருதி ஆண்டில் (நவம்பர் 2022) பாரதத்தின் தெற்குப் பகுதியில் வால் நட்சத்திரம் தெரியும்;அதனால்,நிறைய உயிர்ச் சேதங்கள் உண்டாகும்;


யார் ஒருவர் தினமும் 108 முறையாவது பின்வரும் மந்திரத்தை எழுதி வருகின்றார்களோ,அவர்களை நான் காப்பாற்றுவேன்;


ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமசிவாய ஸ்ரீவீரப் பிரம்மேந்திர சுவாமினே நமஹ


ஸ்ரீவீரப்பிரம்மேந்திர சுவாமிகள் விசுவாச ஆண்டில் மீண்டும் வெளிப்படுவார்;அடுத்த விசுவாச ஆண்டு கி.பி.2025 டூ 2026 ஆம் ஆண்டு வருகின்றது;


கலியுகம் செல்லச் செல்ல நிம்மதியாக தினசரி வாழ்க்கையை கழிப்பதே பெரும்பாடாக இருக்கும்;இது ஏழைகளுக்கும்,செல்வந்தர்களுக்கும்,மிகப் பெரும் செல்வந்தர்களுக்கும் பொருந்தும்;


எந்த ஒரு நவீன தொழில் நுட்பத்தாலும்,அரசாங்கத்தாலும்,கார்ப்பரேட் நிறுவனத்தாலும் ஒரு தனி மனிதனின் நிம்மதியைத் தர முடியாது;
அவரவர் தனது பக்தி உணர்ச்சியின் மூலமாக நிம்மதியைத் தேடிக் கொள்ள வேண்டியதுதான்;


மேலே கூறப்பட்டிருக்கும் மந்திரத்தை தினமும் சிவாலயத்தில் 30 நிமிடம் வரை ஜபிக்கவும் செய்யலாம்;எந்த ஒரு ஆச்சார அனுஷ்டானங்களும் தேவையில்லை;ஸ்ரீ வீரபிரம்மேந்திரர் என்னைப் பாதுகாக்கும் குரு என்று எண்ணிக் கொண்டு தினமும் ஜபித்து வந்தால் போதும்!!!


குரு அருள் பெற்று,இறைவனின் ஆசிகளை பெறுங்கள்! நிம்மதியாக நீடூழி வாழுங்கள்!!!

அகத்தியரின் அருளைப் பெற நாம் செய்ய வேண்டியது

அகத்தியரின் அருளைப் பெற நாம் செய்ய வேண்டியது




உங்கள் வாழ்க்கையில் இதுவரை நீங்கள் பட்ட சிரமங்கள்,அவமானங்கள்,ஏக்கங்கள் நிறைவேறாமல் இருப்பதற்கு உங்கள் முற்பிறப்பு கர்மவினைகள் தான் காரணமாக அமைந்திருக்கின்றன;

ஆனால்,எப்போது திருந்தவேண்டும்,மனம் வருந்த வேண்டும் என்ற எண்ணம் உண்டானதோ அப்போதே உங்களுக்கு குருவருள் கிட்டப் போகின்றது என்று அர்த்தம்;

மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது பழமொழி மட்டும் அல்ல;நம்மைப் பெற்றவர்கள் மாதாவும்,பிதாவும்;ஆனால்,குருவின் அருள் கிட்டினால் மட்டுமே திரு (கடவுள்) வின் அருள் கிட்டும்;

உங்களுடைய குரு எந்த சித்தராக இருந்தாலும் சரி;எந்த மஹானாக இருந்தாலும் சரி;எந்த துறவியாக இருந்தாலும் சரி;

இந்த ப்ரபஞ்சத்தில் மனிதப் பிறவி எடுத்த ஆதி மூல முதல் குரு அகத்தியர் மட்டுமே! அகத்திற்குள்(மனதிற்குள்) இருக்கும் ஈசனை எப்படி தேடிக் கண்டுபிடிப்பது? என்பதை பல கோடி யுகங்களுக்கு முன்பே கண்டுபிடித்தவர்;அவர் தமிழ் மொழியின் தாயகமான நமது தமிழ்நாட்டில் 1008 சிவாலயங்களை உருவாக்கி இருக்கின்றார்;

ஒவ்வொரு சிவாலயத்திலும் 12 ஆண்டுகள் தினமும் பூஜை செய்திருக்கின்றார்;12 ஆண்டுகள் என்பது பூமி ஆண்டுகள் அல்ல; 12  தேவ ஆண்டுகள்!!! பூமி ஆண்டுகள் கணக்கில் 16,00,000 ஆண்டுகள் வருகின்றது; அதில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஆலயங்கள் புனர்நிர்மாணத்திற்காக காத்துக் கொண்டு இருக்கின்றன;

அகத்தியரின் அருளைப் பெற விரும்புவோரும்

அகத்தியர் உதயமான ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

ஈசனின் அருளைப் பெற விரும்புவோரும்

சித்தர் ஒருவரின் தரிசனத்தைப் பெற விரும்புவோரும் கீழே இருக்கும் எதாவது ஒரு கோவிலின் திருப்பணியில் கலந்து கொள்ளலாம்;இந்த கட்டுரை 14.12.2018 அன்று எழுதப்பட்டது;அதற்குள் இந்த ஆலயங்களில் ஏதாவது ஒன்றில் திருப்பணிகள் நிறைவடைந்துவிட்டால்,பிற ஆலயங்களில் திருப்பணிக்கு உங்களால் ஆன பொருள் உதவியை நேரில் சென்று செய்யும் படி வேண்டுகின்றோம்;

இதனால்,அகத்தியரின் அருளும்,இந்த ஆலயங்களில் அருளாட்சி புரிந்து கொண்டு இருக்கும் அகத்தீஸ்வரரின் ஆசிகளும் பூரணமாகக் கிட்டிவிடும்;

1.அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவி,சோமூர்,கரூர் மாவட்டம்.

மிகவும் பாழடைந்து இருக்கின்றது;

2.அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையபாளையம்,துவரங்குறிச்சி அருகில்(வேறு அருகு ஊர்கள்:செவல்பட்டி,மேலூர்)திருப்பணிக்கு காத்துக் கொண்டு இருக்கின்றது; 1.9.2018

3.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பரதூர் (முற்காலத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமம் இங்கே இருந்துள்ளது)சேத்தியாத்தோப்பு,கடலூர் மாவட்டம்.(திருப்பணிக்காக காத்துக் கொண்டு இருக்கின்றது)1.9.2018

4.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பென்னலூர்,ஸ்ரீபெரும்புதூர் தாலுகா(2017 முதல் புனரமைப்பு ஆரம்பம்)

5.
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,மேலையூர்,பூம்புகார் அருகில்(மயிலாடுதுறை டூ பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 19 வது கி மீமேலையூரில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் காவிரிக் கரையோரம் அமைந்திருக்கின்றது;

6.அருள்மிகு அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சித்தாலப்பாக்கம்,தாம்பரம் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.(தற்போது புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன;இன்னும் ரூ.21 லட்சம் தேவை;தொடர்புக்கு:9884995203


 ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

கர்மவினைகளைத் தீர்க்கும் ருத்ராட்சக் குளியல்!!!

கர்மவினைகளைத் தீர்க்கும் ருத்ராட்சக் குளியல்!!!


உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை கழுத்தில் அணிவது அவசியம்;இப்படி அணிந்திருக்கும் ருத்ராட்சத்தை எக்காரணம் கொண்டும் வாழ்நாள் முழுவதும் கழற்றக் கூடாது;ஒரே ஒரு ருத்ராட்சம் அணிவதற்கு ஒரே ஒரு ஆச்சாரம்(கட்டுப்பாடு) உண்டு;அதுதான் அசைவம் சாப்பிடாமல் இருப்பது;


ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 கொண்ட ஒரு மாலையை நாம் ஒவ்வொருவரும் சிவ வழிபாட்டின் போது அணிந்திருக்க வேண்டும்;

அண்ணாமலை கிரிவலம் செல்லும் போதும்

பர்வதமலை கிரிவலம் செல்லும் போதும்

வெள்ளியங்கிரி கிரிவலம் செல்லும் போதும்

திருக்கையிலாய பயணத்தின் போதும்

அமர்நாத் பனிலிங்கப் பயணத்தின் போதும்

நர்மதா பரிக்ரமா செல்லும் போதும்

ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளும் போதும்

வீட்டில் தினசரி கணபதி பூஜை/முருக பூஜை/சிவ பூஜை/பைரவ பூஜை/வராகி பூஜை/மஹாலக்ஷ்மி பூஜை/சத்திய நாராயண பூஜை/குபேர பூஜை என்று எந்த ஒரு பூஜை செய்தாலும் அவ்வாறு பூஜை செய்யும் போதும்

அன்னதானம் செய்யும் போதும்

பித்ரு தர்ப்பணம் செய்யும் போதும்

திலா ஹோமம் செய்யும் போதும்

யாகத்தில் கலந்து கொள்ளும் போதும்

சதுரகிரி பயணத்தின் போதும்(அடிவாரமான தாணிப்பாறையில் இருந்து சதுரகிரி சென்றடையும் வரை)

ஆடை தானம் செய்யும் போதும்

இஷ்ட தெய்வ மந்திர ஜபம் செய்யும் போதும்

ப்ராணயாமம் செய்யும் போதும்

குலதெய்வ வழிபாட்டின் போதும்

கும்பாபிஷேகம் செய்யும் போதும்/கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் போதும்

கோபூஜை செய்யும் போதும்

கோசாலையில் மந்திரம் ஜபிக்கும் போதும்

ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 கொண்ட மாலையை அணிந்திருக்க வேண்டும்;

இம்மாலையை அணிந்து கிரிவலம் செல்லும் போது,இயற்கை உபாதை ஏற்பட்டால் கழற்ற வேண்டும்;அதன் பிறகு,மீண்டும் கழுத்தில் அணிந்து கொள்ளலாம்;

இம்மாலையை அணிந்திருக்கும் போது,எக்காரணம் கொண்டும் யாரையும் திட்டக் கூடாது;ஆபாசமான வார்த்தையை ஒரு போதும் பேசக் கூடாது;அது கடுமையான சாபங்களைத் தரும் என்பதை மறக்காதீர்கள்;

ருத்ராட்சக் குளியல் செய்து வருவதன் மூலமாகவும் ஈசனின் அருள் கடாட்சத்தை பெறலாம்;

தினமும் குளிக்கும் நீரில் இந்த ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 உள்ள மாலையை குறைந்தது 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்;அதன் பிறகு,குளியலறைக்குள் புகுந்து கிழக்கு நோக்கி நிற்க வேண்டும்;(நிற்க இயலாதவர்கள் அமர்ந்து கொள்ளலாம்) 

வாளி தண்ணீரில் புதைந்திருக்கும் ருத்ராட்ச மாலையை எடுத்து தலைமீது வைத்துக் கொள்ள வேண்டும்;சுருட்டியும் வைக்கலாம்;சுருட்டாமலும் வைத்துக் கொள்ளலாம்;அவ்வாறு வைத்துக் கொண்டு உங்களுக்குத் தெரிந்த சிவமந்திரம் ஒன்றை 12 முறை ஜபிக்க வேண்டும்; ஜபித்துமுடித்தப் பின்னர் மீண்டும் தண்ணீர் வாளிக்குள் ருத்ராட்ச மாலையை போட்டுவிட்டு அந்த தண்ணீரால் குளிக்க வேண்டும்;


இதை பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும்,துக்க வீடுகளுக்கு சென்று வந்த நாட்களிலும் கூட செய்யலாம்;

தினமும் இந்த ருத்ராட்சக் குளியலைச் செய்து வரலாம்;

தினமும் செய்ய இயலாதவர்கள் அமாவாசை,சிவராத்திரி,திருவாதிரை,ப்ரதோஷ நாட்களிலும்,அவரவர் ஜன்ம நட்சத்திர நாட்களிலும் செய்யலாம்;

ஏதாவது ஒரு அமாவாசை அன்று ருத்ராட்சக் குளியல் செய்யத் துவங்கி 90 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்;(சில பல தடைகள் வந்தாலும் விட்டுவிட்டாவது 90 நாட்கள் நிறைவு செய்யலாம்)

இப்படிச் செய்து வருவதால்,ஆத்ம பலம் அதிகரிக்கும்;பிறர் நமக்கு எதிராக செய்த,செய்துவிட்ட,செய்ய இருக்கின்ற எல்லாவிதமான மாந்திரீகத் தீங்குகளும் நம்மையும்,நமது இருப்பிடத்தையும் விட்டு விலகிச் சென்றுவிடும்;


உணவு,உடை,இருப்பிடம்,காற்று,நீர் என்று அனைத்திலும் செயற்கையான கண்டுபிடிப்புகள் அதிகரித்துவருகின்றன;அதனால்,நமது ஆன்மீக பலம் குறைந்துவருகின்றது;அதை ஈடுசெய்யக் கூடியதுதான் இந்த ருத்ராட்சக் குளியல்!!!

தினசரி வாழ்க்கையில் ப்ளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பயன்பாடு அதிகரித்துவிட்டதால்,நம் அனைவருக்கும் சராசரியைக் கடந்த சிற்றின்ப உணர்ச்சிகள் அதிகரித்துவிட்டன;அதைச் சமப்படுத்தும் செயல் தான் இந்த ருத்ராட்சக் குளியல்!!!


ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

தமிழ்ப் பண்பாடே இந்துப்பண்பாடு:ஆதாரத்துடன்

தமிழ்ப் பண்பாடே இந்துப்பண்பாடு:ஆதாரத்துடன்


தமிழ்ப்பண்பாடே இந்துப்பண்பாடு:ஆதாரத்துடன்

பூர்வத்திலேயே தமிழ்நாட்டுப் பிராமணர்கள் பலர் வடக்கே போயிருக்கிறார்கள்.ஆந்திரர்களுக்கும் சோழர்க்கும் கல்யாண கொள்வினை, கொடுப்பினை இருந்த காலத்தில் இப்படி பலர் வடக்கே போயிருக்கிறார்கள்.இப்போது வட நாட்டில் திராவிட் (Dravid)என்று குடும்பப்பெயர் போட்டிருக்கிறார்கள்.
ஆனால் வெளிமாநிலங்களில் குடியேறிய இந்த திராவிடர்களுக்கு தமிழ் மொழி போகப் போக தெரியவில்லை.


ஒரு பகுதியில் குடியேறும் பிற பகுதி மக்கள் நாளாவட்டத்தில் தம் தாய் மொழியை மறந்துவிடுகிறார்கள்.
ஆரியர் திராவிடம் என்ற பேதம் இரு வேறு இனமாக பேதப்படுத்தப்பட்டதற்கு ஆதாரமில்லை.பஞ்ச திராவிடர்கள் என்பது பிரதேச ரீதியாக பிரிக்கப்பட்டதேயன்றி வேறில்லை;பிற்காலத்தில்தான் இதை அரசியல் சுயநலத்திற்காக இனப்பாகுபாடாக்கிவிட்டனர்.

ஆதாரம்:463-464,தெய்வத்தின் குரல் பாகம்-1
காஞ்சிப் பரமாச்சாரியார் அவர்கள்.வானதிப் பதிப்பகம் வெளியீடு.

தமிழர்களின் ஆதிகுரு அகத்தீஸ்வரர் ஆலயங்கள் =56


தமிழ்நாடு முழுவதும் 1008 க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் அகத்திய மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன;
இந்த ஆலயங்களில் அகத்தியர் 12  ஆண்டுகள் வரை தினமும் சிவபூஜை செய்திருக்கின்றார்;


மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வெறும் அடுக்கு மொழி அல்ல;

குருவின் அருள் கிட்டினால் மட்டுமே தெய்வத்தின் அனுக்கிரகமும்,ஆசிகளும்,வரங்களும் நமக்குக் கிட்டும்;

தமிழ் மொழியின் தந்தை அகத்திய மகரிஷியின் அருள் கிட்டிட அவர் உருவாக்கிய சிவாலயங்களில் 108 சிவாலயங்கள் சென்று வழிபட்டால்,நிச்சயமாக அகத்திய மகரிஷியின் அருள் நமக்கு கிட்டும்;

இங்கே காணப்படும் ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்தில் உங்கள் ஜன்ம நட்சத்திர நாளன்று அல்லது அமாவாசை அன்று அகத்திய மகரிஷியின் பெயரால் அன்னதானம் தொடர்ந்து செய்து வரலாம்;நமது வாழ்நாள் முழுவதும் இப்படி அன்னதானம் செய்து வருவது நன்று;


இதை வாசிக்கும் ஆத்மாக்கள் உங்களுக்குத் தெரிந்த ஆலயங்களைத் தெரிவிக்கவும்;

அகத்திய லிங்கம் என்று பல சிவாலயங்களில் இருக்கின்றன;இங்கே வருகை தந்து அகத்திய மகரிஷி சிவ வழிபாடு செய்திருக்கின்றார்;

அகத்தீஸ்வரம் அல்லது அகத்திய....என்|ற பெயரில் பல ஆலயங்களும்,கிராமங்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ளன;இவைகள் தான் அகத்திய மகரிஷி முந்தைய யுகங்களில் உருவாக்கிய சிவாலயங்கள் ஆகும்;
1.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத ஆதி அகத்தீஸ்வரர் திருக்கோவில்,ஆடையூர்,(சந்திரலிங்கத்திற்கு அருகில் செல்லும் சாலை) கிரிவலப் பாதை,அண்ணாமலை;
2. அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்,சென்னை -49.   (ஐஸ்வர்ய வீரபத்திரர் சன்னதியும்,அம்பிகையின் நேரடிப்பார்வையில் குரு பகவான் சன்னதியும் இருக்கும் ஆலயம்)
3. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,         பொழிச்சலூர்,பல்லாவரம் அருகில்,சென்னை(விமான நிலையம் பின்புறம் 2 கி மீ  தொலைவில்,பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ தொலைவில்)
4.தாராபுரம்,கோவை நெடுஞ்சாலை
5.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நாபளூர்,திருத்தணி(திருத்தணியில் இருந்து 10 கி மீ தொலைவில் லஷ்மாபுரம் பேருந்து நிலையத்திற்கு தெற்கே 1 கி மீ தொலைவில்)
6.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகிலாண்டபுரம்,காங்கேயம்

7.அருள்மிகு அசலம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில்,நுங்கம்பாக்கம்,சென்னை;.

8.அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகத்தியான்பள்ளி,வேதாரண்யம்.நாகை மாவட்டம்.(வேதாரண்யம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ)

9.ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில்,துஞ்சனூர்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.

10.ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில்,ஏம்பல்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.

11.ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையூர்,பெருகமணி; (வழி=திருச்சி டூ கரூர் சாலை)

12.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,மேல்தானம் கிராமம்;திருக்கோளக்குடி அருகில்,புதுக்கோட்டை மாவட்டம்.

13.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில், எட்டயத்தளி,பேராவூரணி அருகில்(புதுக்கோட்டை)=கேட்டை நட்சத்திர ஸ்தலம்

14.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,கருவளர்ச்சேரி என்ற பீஜபுரம்.(வழி=கும்பகோணம் டூ மருதாநல்லூர் டூ ஆலங்குடி பேருந்து வழித்தடத்தில் மருதாநல்லூரில் இருந்து 1 கி மீ தொலைவில்)

15.அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் மூலவர்கள்,அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில்,மாகறல்(வழி),காஞ்சிபுரம்(உத்திர மேரூர் காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கின்றது)

16.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,பஞ்செட்டி,பொன்னேரி,திருவள்ளூர் மாவட்டம்,(வழி:சென்னை டூ கொல்கொத்தா நெடுஞ்சாலையில் 30 கி மீ தொலைவில்) ரெட் ஹில்ஸ்ஸில் இருந்து 21 கி மீ தூரத்தில்,சென்னையில் இருந்து புழல் வழியாக 45 கி மீ தொலைவில்;பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது;(பஞ்சேஷ்டி என்றும் கூறுவது உண்டு) (செங்குன்றம் டூ காரனோடை அருகில்)

17.ஸ்ரீலோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்,அம்பாசமுத்திரம்,திருநெல்வேலி மாவட்டம்;

18.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருவொற்றியூர்,சென்னை;

19.அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வில்லிப்பாக்கம்(வில்லிவாக்கம் அல்ல),சென்னை(வழி:சென்னை டூ பாண்டிச்சேரி சாலையில் கடப்பாக்கம் சென்றடைய வேண்டும்;அங்கிருந்து  வெண்ணாங்குப்பட்டு செல்ல வேண்டும்;அங்கிருந்து மேற்காகச் செல்லும் குணாம்பேடு சாலையில் 5 கி மீ பயணித்தால் வில்லிப்பாக்கம் வரும்;

20.அருள்மிகு  முத்தாம்பிகை சமேத    அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புத்திரன் கோட்டை,செய்யூர் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.(வழி:மதுராந்தகத்தில் இருந்து 25 கி மீ தொலைவில் இருக்கின்றது;மதுராந்தகம் மற்றும் சூணாம்பேட்டையில் இருந்து புத்திரன் கோட்டைக்கு பேருந்து வசதி இருக்கின்றது;புத்திரன் கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது)

21.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாலவேடு,வந்தவாசி வட்டம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

22.அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சோமூர்,கரூர் மாவட்டம்(மிகவும் பாழடைந்திருக்கின்றது;வாருங்கள் புனர் நிர்மாணம் செய்வோம்=2018)

23.அருள்மிகு பாடகவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருச்சுனை.(வழி:மதுரை டூ திருச்சி சாலையில் 45 கி மீ பயணித்து கருங்காலக்குடி செல்ல வேண்டும்;அங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கி மீ பயணித்தால் கோவிலை அடையலாம்)

24.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நெமிலிச்சேரி,சென்னை(வழி:குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி மீ)

25.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மேலக்காட்டூர்,தஞ்சாவூர் மாவட்டம்;(திருப்பனந்தாளில் இருந்து 5 கி மீ)


26.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர்,பூந்தோட்டம்.(மயிலாடுதுறை டூ பேரளம்)

27.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பொதட்டூர் பேட்டை,திருத்தணி அருகில்,சென்னை;

28.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாம்பவர் வடகரை;திருநெல்வேலி மாவட்டம்;

29.அருள்மிகு ஆவுடைநாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நஞ்சுண்டாபுரம்,தாராபுரம் தாலுகா;

30.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புரிசை.(செய்யாறு டூ வந்தவாசி சாலையில் அமைந்திருக்கின்றது)

31.அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழைய பாளையம்,துவரங்குறிச்சி அருகில்;(வேறு அருகு ஊர்கள்:செவல்பட்டி,மேலூர்)திருப்பணிக்கு காத்துக் கொண்டிருக்கின்றது;1.9.2018

32.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பரதூர்(முற்காலத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமம் இங்கே இருந்திருக்கின்றது)சேத்தியாத்தோப்பு;கடலூர் மாவட்டம்.(திருப்பணிக்கு காத்துக்கொண்டிருக்கின்றது 1.9.2018

33.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பென்னலூர்,ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.(2017 முதல் புனரமைப்பு ஆரம்பம்)

34.அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வன்னிவேடு,வாலாஜாபேட்டை;

35.அருள்மிகு  சிவகாமிசுந்தரி சமேத      அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி.திருச்சி அருகில்

36.அருள்மிகு ப்ரத்யங்கரதேவி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பாதூர்,உளுந்தூர்ப்பேட்டை.

37.அருள்மிகு வடிவுடைநாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணப்பாறை(ஆண்டார்கோவில் பேருந்து நிறுத்தம் அருகில்),திருச்சி மாவட்டம்.


38.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சிறுமலை,திண்டுக்கல் மாவட்டம்.(வழி:திண்டுக்கல் டூ நத்தம் சாலை)

39.அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புதுப்பாளையம் கிராமம்,வெம்பாக்கம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

40.அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,திருப்பதி நகர்,வடசேரி,நாகர்கோவில்.

41.அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி டூ வயலூர் சாலை,மல்லையம்பட்டு,ஸ்ரீரங்கம் தாலுகா,திருச்சி மாவட்டம்.(கண் பார்வைக்கு உரிய பரிகார ஸ்தலம்)

42.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,அயத்தூர்,வேப்பம்பட்டு,திருவள்ளூர் மாவட்டம்.

43.அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோவில்,ஆற்காடு சாலை,வளசரவாக்கம்,சென்னை-87.

44.அருள்மிகு அகத்தியர் கோவில்,ஓரத்தூர்,மாடம்பாக்கம்,நீலாமங்கலம்,கூடுவாஞ்சேரி,காஞ்சிபுரம் மாவட்டம்-603202

45.அருள்மிகு பெரிய நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,நெய்வாசல் கிராமம்,கீழச்செவல்பட்டி அருகே,திருமயம் புதுக்கோட்டை மாவட்டம்;

46.அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம்,கும்பமுனி மங்கலம்,பொன்னேரி.(சென்னைக்கு அருகில்)

47.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,மேலையூர்,பூம்புகார் அருகில்(மயிலாடுதுறை டூ பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 19 வது கி மீ) மேலையூரில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் காவிரிக் கரையோரம் அமைந்திருக்கின்றது;

48.அருள்மிகு வண்டார்க்குழலி (ஸ்ரீபிரம்மராம்பிகை) சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையங்குடி,ஆலத்தம்பாடி அருகில்,திருவாரூர்.

49.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம்,செம்மங்குடி(கும்பகோணம்  குடவாசல் அருகில்)

50.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,கீழ்த்தானம்(பொன்னமராவதி - காரையூர் அருகில்)

51. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,  அனகாபுத்தூர்,சென்னை

52.அருள்மிகு யோகாம்பாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,குளவாய்ப்பட்டி(புதுக்கோட்டை டூ அறந்தாங்கி)=புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலைவிடவும் மிகவும் பழமையான ஆலயம்;யோகா ஆசான்கள் அடிக்கடி வந்து செல்ல வேண்டிய ஆலயம் இது;

53.அருள்மிகு அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சித்தாலப்பாக்கம்,தாம்பரம் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.( புனர் நிர்மாணப்பணிகளுக்கு அன்பளிப்பு வழங்கிட செல் எண்:9884995203) இன்று 11.4.2019 தேதிப்படி இவர்களுக்கு ரூ.21 லட்சம் தேவை; சிவத்தொண்டில் விருப்பம் உள்ளவர்கள்,அகத்தியர் தனது குருவாக எண்ணுபவர்கள் தொடர்பு கொண்டு புனர் நிர்மாணப் பணிகளில் இணைத்துக் கொள்ளலாம்

54.அருள்மிகு மனோன்மணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணமை(மகாபலிபுரத்தில் இருந்து புதுச்சேரி சாலையில்  8 கி மீ சென்றால் மணமை கிராமம் வரும்;அதன் பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது)

55.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,செம்மங்குடி,குடவாசல் அருகில்,திருவாரூர் மாவட்டம்,

108.அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,வடுகன்பற்று,  அகத்தீஸ்வரம்,குமரி மாவட்டம்.


முக்கியக் குறிப்பு:இவைகள் அனைத்தும் இணைய தளங்கள் மூலமாக மட்டுமே தேடப்பட்டவை;ஒரே ஆலயம் இரு பெயர்களில் அல்லது இரு ஊர்களின் பெயர்களில்(பழைய பெயர்,புதுப் பெயர்) இருக்கலாம்;இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்;உங்களுக்கு தெரிந்த அகத்தீஸ்வரர் ஆலயங்களின் முகவரிகளை தெரிவிக்கும் படி  தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்;


அவைகளை தொகுத்துவெளியிடுவோம்;

எல்லோரும் 108 அகத்திய சிவாலயங்களுக்குச் செல்வோம்;

அகத்திய மகரிஷியின் ஆசிகளைப் பெறுவோம்;

அவரது வழிகாட்டுதலால் உயர்ந்த ஆத்மாவாக உயர்வோம்!!!

தமிழ் இனம் உலகத்தை ஆளத் துவங்கும்....!!!