Monday, October 24, 2011

உலுக்கிய சம்பவம்;உணர்த்திய கோரம்


   
மேற்கு வங்காள மாநிலம், நாடியா மாவட்டம் ஜோத்பாரா என்ற ஊரைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி மம்பி சர்க்கார்,ஆறாம் வகுப்பு படித்துவந்தார்.கூலிவேலை செய்யும் மிருதுள் சர்க்காருக்கு கண்பார்வை கிடையாது.அண்ணன் மனோஜித்தின் சிறுநீரகமும் செயலிழந்துவிட்டது.வேலைக்குப் போக முடியவில்லை; யாராவது சிறுநீரகம்,கண் இவற்றைத் தானமாகக் கொடுத்தால் அப்பாவுக்கு கண்ணும்,அண்ணனுக்கு சிறுநீரகமும் கிடைத்து குடும்பம் வறுமையிலிருந்து விடுபட முடியும்.இது மம்பியின் காதில் விழுந்து,மனதில் பதிந்தது.ஜீன் 27 ஆம் தேதி தன் அக்கா மோனிகாவிடம், ‘நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.என் உடல் உறுப்புகளை அப்பாவுக்கும் அண்ணனுக்கும் பொருத்துவார்கள் அல்லவா?’ என்று கேட்டாள்.மோனிகா சிரித்தாள்.அதைப் பெரிது படுத்திக்கொள்ளவில்லை;ஆனால்,மம்பி அதன்பிறகு,வயலில் தெளிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து உயிரை விட்டுவிட்டாள்.முறைப்படி இறுதிச் சடங்கு நடந்தது.மம்பி எழுதி வைத்திருந்த கடிதத்தை மறுநாள் பார்த்த பெற்றோர் கதறினார்கள்.இந்த தகவலால் மாநிலம் நெடுக பரபரப்பு ஏற்பட்டது.அப்பகுதி எம்.எல்.ஏ.சமீர் போத்தார் அந்த ஊருக்கு வந்து மம்பியின் பெற்றோரை சந்தித்தார்.மனோஜித்,மிருதுள் இருவருக்கும் தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.அந்தச் சிறுமியின் ஆசை நிறைவேறியது.ஆனால்,இன்று வசதியாக உள்ள தன் குடும்பத்தில் மம்பி இல்லை;

(இந்தச் செய்தியைப் படித்ததும், முகலாய கொள்ளையர்களிடமிருந்து திருப்பரங்குன்றம் கோயிலைக் காப்பாற்ற கோபுரத்திலிருந்து குதித்து(பேயாக மாற) உயிர்விட்ட முத்துமகன் குட்டி வரலாறு சிலருக்கு நினைவுக்கு வரக்கூடும்)

ஆதாரம்:தினமலர் வாரமலர் 11.9.11,விஜயபாரதம்,பஞ்சாமிர்தம் பகுதி,பக்கம்11,30.9.11

No comments:

Post a Comment