Monday, October 28, 2019

முன்வினை தீர்ந்து நிம்மதியாக வாழ சத்குருவின் உபதேசம்!!!


தீராத பகை,எதிர்ப்புகள் நிரந்தரமாக விலக சத்குருவின் உபதேசம்!!!

உங்களுடைய வாழ்க்கையில் இதுவரையிலும் தேவையில்லாத எதிரிகள்,துரோகங்கள் வந்துகொண்டே இருக்கின்றனவா?

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி காலம் உங்களுக்கு இல்லாத போதும் இம்மாதிரியான துயரங்கள் உங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றதா?

சத்குரு இடியாப்ப சித்தர் பெருமான் ஒரு அரிய சிவரகசியத்தை நமக்கு உபதேசம் செய்திருக்கின்றார்;

ஞாயிற்றுக்கிழமையும் மாத சிவராத்திரியும் வர வேண்டும்;மறு நாள் திங்கட்கிழமையும் அமாவாசையும் வர வேண்டும்;

அரச மரம் மட்டும் தனியாக இருக்கும் ஆலயமாக இருக்க வேண்டும்;
அந்த ஆலயம் எந்த கடவுள் ஆலயமாகவும் இருக்கலாம்;விநாயகர்,முருகக் கடவுள்,மாரியம்மன்,துர்கை அம்மன்,சிவபெருமான்,பெருமாள் கோவில்,கருப்பசாமி,முனீஸ்வரன் என்று எந்த தெய்வம் இருக்கும் கோவிலாகவும் இருக்கலாம்;

இந்த நாளில் உங்கள் ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு ஆலயத்தில் ஞாயிறு பகல் முழுவதும் அங்கே தங்க வேண்டும்;உண்ணாவிரதம் இருக்க வேண்டும்;உண்ணாவிரதம் இருந்தவாறு  சத்குருவின் ஆசியையும்,அங்காள பரமேஸ்வரியின் அருளையும் தரும் மந்திரத்தை 108 முறை ஜபித்துவிட்டு,இறை மந்திரங்களில் ஏதாவது ஒன்றை அன்று முழுவதும் ஜபிக்க வேண்டும்;

சத்குருவின் ஆசியையும்,அங்காளபரமேஸ்வரியின் அருளையும் தரும் மந்திரம்:

ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீசாக்த பரப்ரம்ம மகரிஷி
மகேஸ்வராய கெளஸ்துப புருஷாய
இடியாப்ப சித்த ஈச மஹராஜ் கீ ஜெய்!!!

அன்று இரவில் அங்கே தூங்காமல் தங்க வேண்டும்;இரவில் தாங்கள் ஜபிக்க வேண்டிய மந்திர பட்டியல்:

விநாயகர் கோவில் எனில்: ஒம் கிலி அங் உங்

முருகக்கடவுள் கோவில் எனில்:வெற்றி வேல்,வீர வேல்!!!

சிவன் ஆலயம் அல்லது ஜீவசமாதி ஆலயம் எனில்: 

காமோ கார்ஷீத் மன்யுர கார்ஷீத் நமோ நமஹ

அம்பாள் ஆலயம் எனில்:ஓம் சக்தி பராசக்தி

அங்காளபரமேஸ்வரி ஆலயம் எனில்:

ஓம் ஸ்ரீசர்வ ஸ்ரீசாக்த பரப்பிரம்ம மகரிஷி
மகேஸ்வராய கெளஸ்துப புருஷாய
இடியாப்ப சித்த ஈச மஹராஜ் கீ ஜெய்!

துர்கை ஆலயம் எனில்:

ஓம் காத்யாய நாயகி வித்மஹே
கன்னிய குமாரி தீமஹி
தன்னோஹ் துர்கி ப்ரசோதயாத்

பத்ரகாளி ஆலயம் எனில்:மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

முனீஸ்வரன் கோவில் எனில்:ஓம் ரீங் சிவசிவ அல்லது சிவசிவ

வராகி ஆலயம் எனில்:ஓம் ஐம் க்லெளம் சிவபஞ்சமியை நமஹ

குலதெய்வம் கோவில் எனில்:
ஓம் அகத்தீசாய நமஹ;ஓம் அருணாச்சலாய நமஹ

க்ருஷ்ணர் ஆலயம் எனில்: சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்

அனுமன் ஆலயம் எனில்:ஸ்ரீராமா ஜெய ராமா ஜெய ஜெய ராமா


இரவு முழுவதும் தூங்காமல் இருக்க முடியாத பட்சத்தில் நள்ளிரவு 1 மணி வரையாவது தூங்காமல் இருக்க வேண்டும்;


மறுநாள் திங்கட்கிழமை காலை சூரிய உதயம் ஆன பிறகு,காலை 8 முதல் 9 மணிக்குள் அரச மரத்தை 108 முறை பக்தியோடு வலம் வர வேண்டும்;அதன் பிறகு,பிற மரங்கள் இருந்தாலும் அதில் ஒன்று அல்லது இரண்டையும் 108 முறை வலம் வர வேண்டும்; 
பிறகு,அங்கே இருந்து அருள் பாலித்து வரும் தெய்வத்திடம் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ள வேண்டும்;அன்று மதியம் 12 மணிக்கு மேல் வீடு திரும்ப வேண்டும்;

ஞாயிறும் சிவராத்திரியும் வரும் நாளில் திருவாதிரை நட்சத்திரம் வந்தால்,பல கோடி மடங்கு புண்ணியத்தினால்,ஈசனின் அருள் கிட்டும்;ஆழ்ந்த மன நிம்மதி கிடைக்கும்;நன்றி:ஸ்ரீ அகஸ்திய விஜயம் ,மாத இதழ்,பக்கம்4,5;வெளியீடு டிசம்பர் 2018


ஞாயிற்றுக் கிழமையும் சிவராத்திரியும் சேர்ந்து 22.3.2020 அன்று வர இருக்கின்றது;

திங்கட்கிழமையும் அமாவாசையும் 23.3.2020 அன்று சேர்ந்து வந்தாலும்,அமாவாசை திதியானது மதியம் 1.13க்கு தான் ஆரம்பமாகிறது;எனவே,அரச மரத்தை 108 முறை சுற்ற வேண்டும் எனில்,மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சுற்ற வேண்டும்;

Sunday, October 27, 2019

சத்குருவின் அருளைத் தரும் அண்ணாமலை கிரிவலம்!!!


சத்குருவின் அருளைத் தரும் அண்ணாமலை கிரிவலம்!!!

உங்கள் ஒவ்வொருவருக்கும் காரண குரு,காரிய குரு,வித்தை குரு,வழிகாட்டும் குரு,சத்குரு என்று ஐந்து விதமான குருமார்கள் தேவை;இதில் காரண குருவும்,காரிய குருவும் வாழ்க்கைப் பயணத்தில் தானாகவே ,தக்க நேரம் பார்த்து வருகை தருவர்;வருகை தந்து,நமக்கு எதைப் போதிக்க வேண்டுமோ அதை போதித்துவிடுவர்;


வழிகாட்டும் குரு என்பவரை நம்மால் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும்;நமது பிறந்த நட்சத்திரம் தெரிந்தால் போதும்;நமது பிறந்த நட்சத்திரத்தை 1 வது நட்சத்திரமாகக் கொண்டு,15 வது நட்சத்திரம் எதுவோ அதைக் கண்டுபிடிக்க வேண்டும்;அந்த 15 வது நட்சத்திரத்தில் யார் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்களோ,அவரே நமது வழிகாட்டும் குரு ஆவார்;

இந்த ஜோதிடம் சார்ந்த தெய்வீக ரகசியத்தை அடியேனுக்கு அருணாச்சலேஸ்வரர் அருளால் பாம்பாட்டி சித்தரின் பரம்பரையைச் சேர்ந்த ஒரு ஆத்மா உபதேசம் செய்தார்;
சத்குருவின் அருளும்,வழிகாட்டுதலும் கிட்டினால் மட்டுமே மீண்டும் இந்த பூமியில் பிறவாமல் வாழும் தெய்வீக வாழ்க்கை கிடைக்கும்;


நம் ஒவ்வொருவருக்கும் சத்குரு அண்ணாமலை என்ற அருணாச்சலத்தில் காத்துக் கொண்டு இருக்கிறார்;நமது பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் நமக்கு என்று ஒரு சத்குரு அண்ணாமலையில் இருக்கின்றார்;அவரை நேரில் சந்திக்கும் பாக்கியம் நமக்கு வேண்டும் எனில்,இரண்டு விதமான முயற்சிகளில் ஒன்றை செயல்படுத்த வேண்டும்;


1.இந்த பிறவிக்குள் அல்லது இந்த பிறவி முதல் அடுத்து வரும் ஒரு சில பிறவிகளுக்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய வேண்டும்;

அல்லது

2.செவ்வாய்க்கிழமையும் விசாகம் நட்சத்திரமும் இணைந்த நாளில் அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்;இப்படிப்பட்ட நாட்கள் ஒரு தமிழ் வருடத்தில் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே வரும்;அதில் 1008 நாட்கள் அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்;

 பின்வரும் சத்குரு இடியாப்ப சித்தரின் மந்திரத்தை மட்டும் ஜபித்தவாறு கிரிவலம் வர வேண்டும்;

இதுவரை இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் இடியாப்ப சித்தர் பிரான் நமக்கு உபதேசமாக தெரிவித்திருக்கின்றார்;


ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீசாக்த பரப்பிரம்ம மகரிஷி
மகேஸ்வராய கெளஸ்துப புருஷாய
இடியாப்ப சித்த ஈச மஹராஜ் கீ ஜெய்!


29.10.2019 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2.24 வரை விசாகம் நட்சத்திரம் இருக்கின்றது;அன்று காலை சூரிய உதயத்தில் இருந்து நள்ளிரவு 2.24 க்குள் இருக்கும் நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;

ஆத்மபலமும்,குரு அருளும்,அண்ணாமலையாரின் அருளும் பெற்றவர்கள் இரண்டு முறை கூட கிரிவலம் செல்லலாம்;


அடுத்தபடியாக,26.11.2019 செவ்வாய்க்கிழமை காலை சூரிய உதயத்தில் இருந்து காலை 10.14 வரை விசாகம் நட்சத்திரம்  இருக்கின்றது;அப்போதும் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;


ஆனால்,காலை 10.14க்குள் அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்திருக்க வேண்டும்;


காலை 6 மணி முதல் காலை 10.14 க்குள் அதாவது 4.14 மணி நேரத்திற்குள் அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்யும் மன வலிமை உள்ளவர்கள் இந்த கிரிவலம் செல்லலாம்;


குரு அருள் இல்லாமல் திரு(இறை) அருள் கிடைக்காது என்பதற்காக இதை தங்களுக்கு தெரிவிக்கின்றோம்;

Wednesday, October 23, 2019

வழிகாட்டும் குருமார்கள்: (பல புதிய மகான்களின் ஆசியோடு) பகுதி 6

நம் ஒவ்வொருவருக்கும் சத்குரு,வழிகாட்டும் குரு என்று இரண்டு குருவின் அருள் தேவை;


வழிகாட்டும் குரு என்பவரை எப்படிக் கண்டுபிடிப்பது?
பின்வரும் பட்டியலைக் கொண்டு கண்டுபிடிக்கலாம்;
அசுபதியில் பிறந்தவர்கள் சுவாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வீட்டில் போட்டோ வைத்து சில நிமிடங்களாவது வழிபட வேண்டும்;
சுவாதியில் ஐக்கியமானவர்கள்:சுந்தரமூர்த்தி (சைவ சமய அடியார்களில் ஒருவர்!)

அல்லது

ஒடுக்கத்தூர் சுவாமிகள் ஜீவசமாதி,அல்சூர் ஏரி அருகில்,பெங்களூர் அவர்களை வழிபடலாம்;இவர் 1915 ஆம் ஆண்டு,தை மாதம் சுவாதி நட்சத்திரம்  அன்று ஐக்கியமானார்;

மனதில் அடிக்கடி தோன்றும் விகாரமான காம எண்ணங்களை நீக்கும் ஆற்றல் உள்ள மஹான் இவர்;விகாரமான  காம எண்ணங்கள் அடியோடு நீங்க வேண்டும் என்று எண்ணும் மனிதர்கள் யார் வேண்டுமானாலும்,சுவாதி நட்சத்திர தினத்தன்று இந்த மஹானின் ஜீவசமாதிக்கு வர வேண்டும்.ஒரு மணி நேரம் வரை மனப்பூர்வமாக தியானிக்க வேண்டும்;அவர்கள் அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று இல்லை;

பல துறவிகளுக்கு ஞானத்தையும்,முக்தியையும் வழங்கிய அற்புதமான சுவாமிகள் இவர்!!!

அல்லது

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ராஜபாளையம் மாநகரில்(தமிழ்நாட்டில் பல ராஜபாளையம் ஊர்கள் இருக்கின்றன) சஞ்சீவிமலை அடிவாரத்தில் சாந்தானந்தா சுவாமிகள் ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்;



பரணியில் பிறந்தவர்கள் விசாகம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை வழிபட வேண்டும்;
ஸ்ரீதர் சுவாமிகள்,மம்சாபுரம் பேரூராட்சி,
,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா ;(சித்திரை மாதத்தில் வரும் விசாகம்)


கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் அடிபணிய வேண்டும்;
காஞ்சிப் பெரியவா,காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே இவரது ஜீவசமாதி இருக்கின்றது;(மார்கழி மாதத்தில் வரும் அனுஷம் அன்று ஜீவசமாதி ஆனார்)

அல்லது

நெல்லை மாவட்டம்,ராதாபுரம் தாலுகா,விஜயாபதி என்ற கடலோர கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு விஸ்வாமித்ர மஹாலிங்க சுவாமி திருக்கோவிலில் தவம் செய்து கொண்டு இருக்கும் ஸ்ரீவிஸ்வாமித்ர மகரிஷியை அடிக்கடி வந்து(அனுஷம் நாளன்று) ஜபிக்க வேண்டும்;

அல்லது

பூண்டி மகான் ஐயா அவர்களின் ஜீவசமாதி சென்னை கலசப்பாக்கம் என்ற ஊரில் அமைந்திருக்கிறது;இவர் அனுஷம் அன்று ஐக்கியமானவர்! இவரது வரலாறு மிகவும் பிரமிக்கத் தக்கதாக அமைந்திருக்கிறது;

அல்லது

ஆவுடையப்பர் ஐயா அவர்கள் மார்கழி மாத அனுஷம் அன்று திருச்செந்தூர் கடற்கரையில் ஐக்கியமாகி இருக்கிறார்.இன்றைய திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்டிய மூவர் ஜீவசமாதிக்கும் பின்புறம்(தெற்கு பக்கம்) இவரது ஜீவசமாதி இருக்கிறது;


ரோகிணியில் பிறந்தவர்கள்,கேட்டை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
சூட்டுகோல் மாயாண்டி சுவாமிகள்,திருப்பரங்குன்றம்;(புரட்டாசி மாதத்தில் வரும் கேட்டை அன்று ஜீவசமாதி ஆனார்)
வியாசர் ஆடி மாதத்தில் வரும் கேட்டை அன்று ஜீவசமாதி ஆனார்;


மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவர்களில் ஒருவரை தினமும் வழிபட வேண்டும்;
ஆனி மாதத்தின் மூலம் அன்று அருணகிரிநாதர் அண்ணாமலையில் ஐக்கியமானார்;
ஐப்பசி மாத மூலம் அன்று கசவனம்பட்டி சுவாமிகளும்
அதே ஐப்பசி மாத மூலம் அன்று மணவாளமாமுனிகளும்
மார்கழி மாத மூலம் அன்று மூக்குப்பொடி சுவாமிகள் அண்ணாமலையிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்;


திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
பங்குனி மாத பூராடம் அன்று ராமதேவர்,அழகர்கோவிலிலும்,யாகோபு சித்தர் மெக்காவிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்;


புனர்பூசத்தில் பிறந்தவர்கள் உத்திராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
உத்திராடம் நட்சத்திரத்தில் கொங்கண சித்தர் திருப்பதியில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;

அல்லது

சென்னை திருவொற்றியூர் நகரில் பட்டினத்தார் சுவாமிகள் உத்திராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கிறார்;


பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,திருவோணம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஒரு திருவோண நாளன்று மாயம்மாள்,சேலத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
சித்திரை மாத ஓணம் அன்று அம்மணி அம்மாள் சித்தர் பழனி கிரிவலப் பாதையில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;விஜய பைரவர் கோவிலுக்கு அருகில் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கின்றது;
வைகாசி மாத ஓணம் அன்று சாக்கடை சித்தர் பழனியில் ஐக்கியமாகி இருக்கின்றார்;


ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அவிட்டம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
அவிட்டம் அன்று மாதவானந்த சுவாமிகள்,பாம்புக் கோவில் சந்தையிலும் (சங்கரன் கோவில் அருகில்) ஐக்கியமாகி உள்ளார்கள்;ராஜபாளையம் டூ தென்காசி ரயில் மார்க்கத்தில் இருக்கின்றது;ரயில் நிலையம்:பாம்புக்கோவில் சந்தை

அல்லது

கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் அமைந்திருக்கும் ஊர் பசுவந்தனை;இங்கே ஒரு ஆவணி மாதத்தில் வரும் அவிட்டம் அன்று சங்கு சுவாமிகள் ஜீவ ஐக்கியமாகி இருக்கிறார்;


மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,சதயம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன கெளபாலரை தினமும் வழிபட வேண்டும்; அல்லது
மதுரை அழகர்கோவிலில் இருந்து சத்திரப்பட்டி(ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த பெயரில் ஊர்/கிராமம் இருக்கிறது) செல்லும் வழியில் இருக்கும் ஏரியா சிங்கப்பூர் நகர்;இங்கே சதயம் நட்சத்திரத்தன்று முனீஸ்வர சுவாமிகள் ஐக்கியமாகி இருக்கிறார்.


பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூரட்டாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
பங்குனி மாத பூரட்டாதி அன்று ஜீவசமாதி ஆனவர் சிவப் பிரபாகர்;கேரளா மாநிலம் ஓமலூரில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;இவர் 723 ஆண்டுகள் வாழ்ந்தவர்;பாம்பாட்டி சித்தரின் முதல் சீடர்!!!


உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன டமருகரை தினமும் வழிபட வேண்டும்;


அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
திருச்செந்தூரில் நாழிக்கிணற்றின் பின்புறம் இருக்கும் மூவர் சமாதியில் ஒரு மகான் ரேவதியில் ஜீவசமாதி ஆகியுள்ளார்;


சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அசுபதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
அசுபதியில் திருச்செந்தூரில் நாழிக்கிணற்றின் அருகில் இருக்கும் மூவர் சமாதியில் ஒருவர் ஐக்கியமாகி இருக்கின்றார்;
ஐப்பசி மாதம் வரும் அசுபதி அன்று திருமூலர் சிதம்பரம் கோவிலுக்குள் ஐக்கியமாகி இருக்கின்றார்;


சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பரணியில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி மாதம் வரும் பரணி அன்று போகர் பழனியிலும்,
பங்குனி மாதம் வரும் பரணி அன்று சங்கரானந்தர் சுவாமிகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்(ஸ்ரீவி.சிவகாசி சாலையில் பணியாரத் தோப்புக்கு எதிர்ப்புறம் இருக்கும் சாலியர் சமுதாய இடுகாட்டுக்கு அருகில் ஐக்கியமாகி இருக்கின்றார்.)

புரட்டாசி மாதத்தின் பரணி அன்று சத்ரு சம்ஹாரமூர்த்தி அவர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் ஐக்கியமாகி இருக்கிறார்;


விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,கார்த்திகை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஆடி மாத கார்த்திகை அன்று குருசாமி,ராஜபாளையத்திலும்(அம்பலபுளி பஜார் என்ற பகுதியில் இருக்கும் ப்ரம்மாண்டமான ஆலயம்)
ஆவணி மாத கார்த்திகை அன்று ரோமரிஷி எறும்பீஸ்வரர் கோவில் வளாகத்திலும்
சித்திரை மாத கார்த்திகை அன்று சித்த ராஜசுவாமிகளும் ஐக்கியமாகி உள்ளார்கள்;

ஆடி மாத கார்த்திகை அன்று இலஞ்சி அருகில் அமைந்திருக்கும் ஜீவநல்லூர் என்ற ஊரில் திரு.கண்ணப்பசுவாமிகள் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;இங்கே சென்று சிவசிவ மந்திரம் 1 மணி நேரம் வரை ஜபித்து வந்தால்,வீண் பழியில் இருந்தும்,நாக தோஷத்தில் இருந்தும் விடுபடலாம்;இது அப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகளாக கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்;


அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணியில் ஜிவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஆடி மாத ரோகிணி அன்று மச்சமுனி திருப்பரங்குன்றத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்;


கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,மிருகசீரிட நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
கார்த்திகை மாத மிருகசீரிடத்தில் பாம்பாட்டி சித்தர் சங்கரன் கோவிலில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,திருவாதிரையில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
புரட்டாசி மாத திருவாதிரை அன்று இடைக்காடர் அண்ணாமலையில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,புனர்பூசம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
மாசி மாத புனர்பூசம் அன்று கணக்கம்பட்டி சுவாமிகள் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
அல்லது
புரட்டாசி மாதத்தில் வரும் புனர்பூசம் அன்று வள்ளியம்மை திருச்செந்தூர் கடற்கரையில் தனது குருவாகிய ஆவுடையப்பர் ஜீவசமாதிக்கு அருகிலேயே ஐக்கியமாகி இருக்கிறார்.
அல்லது
மார்கழி மாதத்தில் வரும் புனர்பூசம் அன்று சேஷாத்திரி சுவாமிகள் அண்ணாமலையில் ஐக்கியமாகி இருக்கிறார்;

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூசம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி மாத பூசம் அன்று வல்லநாட்டு சுவாமிகளும்
ஆவணி மாத பூசம் அன்று யூகிமுனியும்
தைப்பூசம் அன்று ராமலிங்க அடிகளாரும் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்கள்;அல்லது

சேர்மன் அருணாச்சல சுவாமிகள் ஜீவசமாதிக்குச் சென்று வரலாம்;இவர் 27.7.1908 அன்று காலை 11 மணி க்கு ஆடி அமாவாசை அன்று பூசம் நட்சத்திரத்தில் ஐக்கியமானார்;இவரது ஜீவசமாதி திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் தென் திருப்பேரை செல்ல வேண்டும்;அங்கிருந்து விசாரித்து சென்றால்,ஏரல் நகரில் தாமிரபரணி நதிக்கரையில் இவரது ஜீவசமாதியைச் சென்றடையலாம்;


திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,ஆயில்யம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
கார்த்திகை மாத ஆயில்யம் அன்று கோரக்கர்,வடக்குப் பொய்கை நல்லூரிலும்
மாசி மாத ஆயில்யம் அன்று இன்னொரு சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்திலும்
இன்னொரு ஆயில்யம் அன்று மிஸ்டிக் செல்வம் அவர்கள் தூத்துக்குடி அருகிலும் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்கள்;


அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,மகம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
முனியாண்டி சுவாமிகள்,மூவர் சமாதி,சாலியர் சமுதாய இடுகாடு அருகில்,ஸ்ரீவில்லிபுத்தூரிலில் சித்திரை மாத மகம் அன்று ஜீவசமாதி ஆனார்;இவர் ஜீவசமாதி ஆன இடத்தில் ஒரு ஆலமரம் வளர்ந்து வருகின்றது;

அல்லது

திருச்செந்தூர் கடற்கரையில் பங்குனி மாதத்தின் மகம் அன்று ஐயம்பட்டி சங்கரசுவாமிகளும்,இன்னொரு பங்குனி மாதத்தின் மகம் அன்று அவரது தம்பியான யாழ்ப்பாணம் சுவாமிகளும்,இன்னொரு பங்குனி மாதத்தின் மகம் அன்று சூழைவா சுவாமிகளும் ஐக்கியமாகி இருக்கிறார்கள்:திருச்செந்தூரில் இருக்கும் ஐயா வைகுண்டர் கோவிலுக்கு அருகில் இந்த மூவர் சமாதி அமைந்திருக்கிறது;

அல்லது

சிவராஜயோகி சுவாமிகளை வழிபடலாம்;இவரது ஜீவசமாதி கரிவலம் வந்த நல்லூர் அருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்திருக்கிறது;இவர் 1945 ஆம் ஆண்டு மாசி மாதம் வரும் மகம் அன்று ஐக்கியமாகி இருக்கிறார்;இங்கே ஒவ்வொரு பவுர்ணமிக்கும் மாலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன;


சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூரம் நட்சத்திரத்தில்ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி பூரம் அன்று சண்டிகேஸ்வரரும்;

ஸ்ரீஜெயராம சுவாமிகள் ஆவணி மாத பூரம் அன்று திருத்தணி வட்டம்,ஆற்காடுகுப்பம் என்ற கிராமத்தில் ஐக்கியம் ஆனார்;
மாசி பூரம் அன்று ராமதேவர்,அழகர்கோவிலிலும் ஐக்கியமாகி உள்ளார்கள்;


பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,உத்திரம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
காகபுஜண்டர் உத்திரம் நாளன்றும்;

ஒரு புரட்டாசி மாத உத்திரம் நட்சத்திர தினத்தன்று,அருள்மிகு குமராண்டி சுவாமிகள் ராஜபாளையம் நகரில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்;இவரது ஜீவசமாதி பார்க் ஸ்டாப் அருகில் ஒரு தெருவின் முனையில் அமைந்திருக்கின்றது;

புரட்டாசி மாத உத்திரம் அன்று சிவப்பிரகாசம் சுவாமிகள்,முதலியார் பட்டித் தெரு,சிவகாசி சாலை,ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அஸ்தம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஆடி மாத அஸ்தம் அன்று கரூவூர் சித்தர் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஜீவசமாதி ஆனார்;


ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,சித்திரை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
சித்திரை நட்சத்திரத்தில் புண்ணாக்கீஸர்,திருவாரூரில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


இது முதன்மைப் பட்டியல் தான்;இதில் சில தவறுகள் இருக்கலாம்;சரியான தகவல்கள் உங்களிடம் இருந்தால் தெரிவியுங்கள்.


உங்கள் ஊரில் ஐக்கியமான மகானின் பெயர்;முகவரி,ஜீவசமாதி ஆன நட்சத்திரத்தை ஆதாரத்தோடு தெரிவித்தால்,அடுத்த பட்டியலில் இணைத்துவிடுவோம்;
உங்கள் வழிகாட்டும் குருவின் படத்தை அல்லது பிறந்த ஜாதகத்தை உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடுங்கள்;


ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில்,உங்கள் வழிகாட்டும் குருவின் ஜீவசமாதி ஆன நட்சத்திர தினத்தன்று ஜீவசமாதி ஆன இடத்திற்குச் சென்று அபிஷேகமும்,அன்னதானமும் செய்துவாருங்கள்;அப்போது அவருடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்;


இதில் சண்டிகேஸ்வரர்,டமருகர்,கெள்பாலர்,வியாசர்,சுந்தரர் =இவர்களுடைய ஜீவசமாதி பூமியில் கிடையாது;உங்கள் ஊர் சிவாலயம் அல்லது வசிக்கும் ஊரின் சிவாலயத்தில் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகமும் அன்னதானமும் செய்ய வேண்டும்;


வளமோடும் நலமோடும் வாழ்க!!!
எல்லாப் புகழும் அருணாச்சலேஸ்வரருக்கே அர்ப்பணம்!!!
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

Saturday, October 19, 2019

தொழில் முறை ஜோதிடப் பயிற்சி


நேரடி ஜோதிடப் பயிற்சி




உங்கள் ஊரின் ஜனத் தொகைக்கு இணையாக திறமையான மற்றும் நேர்மையான ஜோதிடர்கள் இல்லை;பெருமளவு குறைந்துவிட்டார்கள்;

ஜோதிடத்தில் உண்மைத் தன்மையை நிலைநாட்டிட நீங்களும் ஜோதிடம் கற்றுக் கொண்டு,தொழில் முறை ஜோதிடர்கள் ஆகுங்கள்;

குறைந்த பட்ச கல்வித் தகுதி:10 ஆம் வகுப்பு

மூன்று பெரும்பகுதிகளைக் கொண்டது எமது தொழில் முறை ஜோதிடப் பயிற்சி!

1.அடிப்படை ஜோதிடம்

2.ஜாதகம் கணிக்கும் கலை

3.பலன் சொல்லும் முறைகள்

இன்று வரையிலும் பலருக்கு மேலே சொல்லப்பட்டிருக்கும் 3 பகுதிகளில் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு மட்டுமே தெரிந்திருக்கிறது;அவர்கள் மீதி ஒரு பகுதியை அறிந்து கொள்ளவும் நேரடியாக வந்து கற்றுக் கொள்ளலாம்;

பயிற்சி நடைபெறும் ஊர்:
ஸ்ரீவில்லிபுத்தூர்,விருதுநகர் மாவட்டம்,தமிழ்நாடு

பயிற்சி காலம்:வேகமாக புரிந்து கொள்பவர்களுக்கு 7 நாட்கள் போதுமானது;

அடிப்படையில் இருந்து பலன் சொல்லும் வரை முதன் முதலில் கற்றுக் கொள்ள வருபவர்களுக்கு 45 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ஆகும்;

பயிற்சி முறை:தொடர்ந்து 7 முதல் 90 நாட்கள் வரை தங்கியும் கற்றுக் கொள்ளலாம்;

அல்லது

வாரம் இரண்டு (சனி மற்றும் ஞாயிறு அல்லது வேறு எதாவது இரண்டு நாட்கள்) நாட்கள் வந்து கற்றுக் கொள்ளலாம்;

15 நாட்களுக்கு ஒரு முறை 3 நாட்கள் வந்து கற்றுக் கொள்ளலாம்;


எனவே,ஜோதிடத்தைக் கற்றுக் கொள்ள விரும்புவோர் எமது வாட்ஸ் அப்பில் 9092116990 உங்கள் ஜாதகத்தை அனுப்பவும்.கூடவே Like2Learn Astrology என்று அனுப்பவும்;

கட்டணம் உண்டு;






ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

கண்டச்சனி தீர பைரவப் பரிகாரம்



ஜனவரி 2020 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு கடகராசியினருக்கு கண்டச்சனி எனப்படும் ஏழாமிடத்துச்சனி நடைபெறுகிறது.இது இல்லறத்தில் இணையற்ற துன்பங்களைத் தரும்.இதைச் சரி செய்ய, அசைவம் சாப்பிடுவதை கைவிட வேண்டும்.கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.மதுப் பழக்கத்தையும் கைவிட்டிருக்க வேண்டும்;

ஓவ்வொரு திங்கட் கிழமையும் காலை 7.30 முதல் 9 மணிக்குள் அல்லிமலர் மாலை ,புனுகு பூசி,சாம்பல் பூசணியில் இலுப்பையெண்ணெய் தீபமேற்ற வேண்டும்.பாகற்காய் கலந்த சாதத்தை படையலிட்டு,அர்ச்சனை செய்ய வேண்டும்.அல்லது அர்ச்சனை செய்வதற்குப் பதிலாக பைரவ சதநாமாவளியை மனதுக்குள் பாட வேண்டும்.


சனிப்பிரதோஷ நாட்களில்  திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருக்கும் கால பைரவரை இவ்வாறு வழிபாடு செய்வது உடனடி பலன்களைத் தரும்.இது பல்லாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
அல்லது
திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமானது தென் தமிழ்நாட்டின் நவகைலாசங்களில் ஒன்றாகும்.இங்கு இருக்கும் சிவபெருமான்,சனி பகவானின் அம்சத்தோடு அருள்கிறார்.இங்கு மேற்கூறிய சனிப்பிரதோஷ நாட்களில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பாகும்


அல்லது

உங்கள் வீட்டிலேயே தினமும் 1008/108 முறை ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தையோ அல்லது ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தையோ ஜபித்து/எழுதி வர வேண்டும்;

பாதச்சனி/வாக்கு சனி தீர பைரவப் பரிகாரம்




ஜனவரி 2020 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு   தனுசு ராசிக்காரர்களுக்கு பாதச்சனி என்னும் வாக்குச்சனி வருகிறது.இவர்கள்,சைவ உணவுப்பழக்கத்துக்கு மாறிவிட்டு,இந்த வழிபாட்டுமுறையைப் பின்பற்ற வேண்டும்.


கால பைரவர் சன்னிதியில் சாம்பல் பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வைத்து,பைரவ அஷ்டோத்திரம் எட்டு முறை வாசிக்க/ஜபிக்க வேண்டும்.தினமும் செய்ய முடியாதவர்கள் சனிக்கிழமை காலை 9 முதல் 10.30க்குள் செய்யலாம்.இதனால்,வாக்குச்சனியின் துயரம் நீங்கும்.

சனிப்பிரதோஷ நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருக்கும் கால பைரவரை இவ்வாறு வழிபாடு செய்வது உடனடி பலன்களைத் தரும்.இது பல்லாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
அல்லது
திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமானது தென் தமிழ்நாட்டின் நவகைலாசங்களில் ஒன்றாகும்.இங்கு இருக்கும் சிவபெருமான்,சனி பகவானின் அம்சத்தோடு அருள்கிறார்.இங்கு மேற்கூறிய சனிப்பிரதோஷ நாட்களில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பாகும்

அல்லது

சனிக்கிழமை காலை 7.30 முதல் 9 மணிக்குள் உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் அமைந்திருக்கும் பைரவர் சன்னதிக்குச் செல்லுங்கள்;அங்கே ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தையோ அல்லது ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தையோ ஜபிக்க வேண்டும்;


விரையச் சனியின் துயரங்கள் தீர பைரவப் பரிகாரம்




ஜனவரி 2020 முதல் இரண்டரை ஆண்டுகள் வரையிலும் தனுசு ராசியினருக்கு விரையச்சனி நடைபெற்று வருகிறது. எனவே, தினமும் தனுசு ராசிக்காரர்கள் கால பைரவர் சன்னிதிக்குச் சென்று தேங்காயில் நெய்தீபம் ஏற்றி வைத்து,கால பைரவ சதநாமாவாளியை எட்டு முறை ஜபிக்கவும்.

சனிப்பிரதோஷ நாட்களில் திரு அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;மாலை 4.30க்கு ஈசான லிங்கத்தை வந்தடைந்திருக்க வேண்டும்;அங்கே நடைபெறும் சனிப்பிரதோஷ பூஜையை தரிசிக்க வேண்டும்;இதனால்,சனியின் தாக்கம் பெருமளவு குறையும்;

அல்லது

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமானது தென் தமிழ்நாட்டின் நவகைலாசங்களில் ஒன்றாகும்.இங்கு இருக்கும் சிவபெருமான்,சனி பகவானின் அம்சத்தோடு அருள்கிறார்.இங்கு மேற்கூறிய சனிப்பிரதோஷ நாட்களில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பாகும்;மேலும் தேய்பிறை அஷ்டமி நாட்களில் இங்கே வருகை தந்து ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபிக்கலாம்;






கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள்,வீட்டில் மேற்குச் சுவர் அல்லது தெற்குச் சுவரில் எலுமிச்சை பழத்தில் சூலாயுதம் வரைந்து,அதன் மீது குங்குமம் தடவிட,சூலாயுதம் தெளிவாகத் தெரியும்.

இந்த சூலாயதத்தின் முன்பாக,கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து தேங்காயில் நெய்தீபம் ஏற்றிட வேண்டும்.ஏற்றி வைத்துவிட்டு,பைரவரது சதநாமாவளியை எட்டு முறை ஜபிக்க வேண்டும்.இந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் அசைவம் சாப்பிடுவதைக் கைவிடவும்.பைரவ சதநாமாவளி கிடைக்காதவர்கள் ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்ற பைரவ மந்திரத்தையோ அல்லது ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற பைரவ மந்திரத்தையோ 108 முறை ஜபித்து வர வேண்டும்;

Friday, October 18, 2019

அஷ்டமச்சனியை அனுபவிக்க இருக்கும் மிதுன ராசியினருக்கு....





ஜனவரி 2020 முதல் இரண்டரை ஆண்டுகள் வரையிலும் மிதுனராசிக்கு மகர சனிப்பெயர்ச்சியானது அஷ்டமச்சனியாக பரிணமிக்க இருக்கின்றது;

எனது ஜோதிட குரு  அவர்கள் அஷ்டமச்சனி பற்றி சொன்னதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.ஏழரைச்சனி முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பின்னர்,வருவது அஷ்டமச்சனி ஆகும்.இந்த 15 ஆண்டுகளில் நாம் நீதியோடும்,நியாயத்தோடும் நடந்திருக்கிறோமா என்பதை கண்டறிந்து அதற்கேற்றாற்போல நல்ல பலன்கள் அல்லது தீய பலன்களைத் தரவே அஷ்டமச்சனி வருகிறார்.அதாவது,நமது வாழ்க்கையில் நாம் செய்த பாவபுண்ணியங்களை தணிக்கை செய்யவே வருகிறார்.




அஷ்டமச்சனி நடைபெறும்போது செய்ய வேண்டிய கால பைரவர் வழிபாடு இது:சனிக்கிழமை இரவு 7.30 முதல் 9.30க்குள் கால பைரவருக்கு கறுப்பு பட்டு அணிவிக்க வேண்டும்.இந்த கறுப்பு பட்டுத்துணியை உரிய ராசிக்காரர்கள் தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் வாங்கியிருக்க வேண்டும்.உளுந்துவடை மாலை,கருங்குவளை மாலை,நீலோற்பவ மாலை போன்றவைகளில் ஏதாவது ஒரு மாலையை கால பைரவருக்கு அணிவிக்க வேண்டும்.


பிறகு புனுகு பூசி,கறிவேப்பிலை சாதம் படையலிட வேண்டும்.இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.அர்ச்சனை செய்த பின்னர்,பைரவர் அஷ்டோத்திரம் அல்லது பைரவர் நாமாவளியை கால பைரவரது சன்னிதியில் வாசிக்க வேண்டும்.(மனதுக்குள்தான்) 


தொலை தூர நாடுகளில் வசிப்பவர்களால்,இவ்வாறு செய்ய முடியாது இல்லையா? அவர்கள் தமது வீட்டில் பூஜையறையில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி எலுமிச்சையால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்.அப்படி வரைந்தபின்னர்,பைரவ நாமாவளி அல்லது பைரவ அஷ்டோத்திரம் மேற்கூறிய நேரத்தில் வாசித்தால் போதுமானது.கண்டிப்பாக அசைவத்தை தவிர்க்கவும்.

நீங்கள் 22 வயதுக்கு உட்பட்ட மிதுன ராசிக் காரர் எனில்,பின்வரும் பைரவ மந்திரத்தை தினமும் 1008 முறை ஜபிக்க/எழுத வேண்டும்;இயலாதவர்கள் 108 முறையாவது ஜபிக்க/எழுத வேண்டும்;

ஓம் சம்ஹார பைரவாய நமஹ

22 வயதுக்கு மேற்பட்ட மிதுன ராசிக்காரர்கள் பின்வரும் பைரவ மந்திரத்தை தினமும் 1008/108 முறை ஜபிக்க/எழுத வேண்டும்;

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

இந்தியாவுக்குள்ளும்,தமிழ்நாட்டுக்குள்ளும் இருப்பவர்கள் அசைவத்தை கண்டிப்பாக கைவிட வேண்டும்.அப்படி கைவிட்ட பின்னரே,மேற்கூறிய வழிபாடு செய்ய வேண்டும்.










ஜன்மச் சனியின் துயரம் தீர பைரவ ஜபம் அல்லது வழிபாடு



ஜனவரி 2020 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு மகர ராசியை சனிபகவான் கடக்கிறார்;

இதுவே மகர ராசியினருக்கு ஏழரைச்சனியில் இரண்டாவது பகுதியான ஜன்மச்சனி ஆகும்.இந்த ஜன்மச்சனியின் தாக்கத்தைக் குறைக்க பின்வரும் முறையில் பைரவர் வழிபாடு செய்துவர வேண்டும்.


சனிக்கிழமை வரும் இராகு காலத்தில் கால பைரவர் சன்னிதியில் மண் அகல் விளக்கை,கருப்பு வண்ணம் பூசி,அதில் பாதி நெய்யும்,பாதி இலுப்பெண்ணெய்யும்,ஒரு சொட்டு எலுமிச்சை சாறும் கலந்து விளக்கு ஏற்றிட வேண்டும்.அதன்பிறகு பைரவ அஷ்டகம் மனதுக்குள் வாசிக்க வேண்டும்.ஓய்வு நேரமிருப்பவர்கள் பைரவ அஷ்டகத்தை எட்டு முறை வாசிப்பது நன்று.

அதே சமயம்,இந்த இரண்டரை ஆண்டுகள் முழுவதும் மகர ராசியினர் அசைவம் சாப்பிடக்கூடாது;முட்டை,முட்டை கலந்த பொருட்கள்,புரோட்டா போன்றவைகளையும் சாப்பிடுவது தவறு.
மேலும் எளிய வாழ்க்கை வாழ வேண்டும்.தரையில் படுத்து தூங்க வேண்டும் .(ஆடம்பரமான படுக்கையில் தூங்கக்கூடாது)ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முகத்தை மழிக்க வேண்டும்.சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றோர்களுக்கும்,அனாதைகளுக்கும் அன்னதானம் செய்துவரவேண்டும்.எண்ணிக்கை உங்களது பண வசதியைப் பொருத்தது.

சனிப்பிரதோஷ நாட்களில் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;மாலை 4.30க்குள் ஈசானலிங்கத்தை அடைந்திருக்க வேண்டும்; அங்கே நடைபெறும் சனிப் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்; இதனால்,சனிபகவானின் தாக்கம் படிப்படியாக குறையத் துவங்கும்;இது பல நூற்றாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை.(விழுப்புரம் அருகில் இருப்பது தான் உண்மையான அண்ணாமலை என்ற திருவண்ணாமலை ஆகும்)

அல்லது

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமானது தென் தமிழ்நாட்டின் நவகைலாசங்களில் ஒன்றாகும்.இங்கு இருக்கும் சிவபெருமான்,சனி பகவானின் அம்சத்தோடு அருள்கிறார்.இங்கு மேற்கூறிய சனிப்பிரதோஷ நாட்களில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

அல்லது

தினமும் ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை 1008 முறை ஜபிக்க வேண்டும்;ஜபிக்க இயலாதவர்கள் எழுதலாம்;

1008 முறை இயலாதவர்கள் 108 முறையாவது அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு நாள் விடாமல் ஜபிக்க/எழுத வேண்டும்;

21 வயது முதல் 39 வயதுக்கு உள்பட்ட மகர ராசியில் பிறந்தவர்கள்,தினமும் 1008 முறை ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்று ஜபித்து வர வேண்டும்;ஜபிக்க இயலாதவர்கள் எழுதி வர வேண்டும்;

1008 முறை இயலாதவர்கள் 108 முறையாவது அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு நாள் விடாமல் ஜபிக்க/எழுத வேண்டும்;

ஒரு மாதம் வரை குறைவற்ற வருமானம் தரும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


விகாரி வருடம்,     ஐப்பசி  மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 21.10.2019 திங்கட்கிழமை 

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;


திங்கட்கிழமை இராகு காலம்:காலை 7.30 முதல் 9 வரை;

திங்கட்கிழமை குளிகை காலம்:மதியம் 1.30 முதல் 3 வரை;



இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

44.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,
அருள்மிகு கொழுக்கட்டை சுவாமிகள் ஆஸ்ரமம்,
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி பின்புறம்,
சதுரகிரி மலை அடிவாரம்,
மஹாராஜபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,
விருதுநகர் மாவட்டம்.
வழி:வத்ராப் டூ அழகாபுரி 
செல் எண்:6383652969

45.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,ஸ்ரீ ஆஞ்சனேயர் திருக்கோவில்,ரயில் நிலையம் அருகில்,அரக்கோணம்.

46.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி, பைரவ சாய் பீடம்,எண்:77 மேலக் காரைக்காடு,திருநாராயணபுரம் போஸ்ட்,தொட்டியம் தாலுகா,திருச்சி மாவட்டம்;செல் எண்கள்:9976919106, 6380762294

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது

ஓம்,ஸ்ரீம்,ஹ்ரீம்,க்லீம்,ஐம்,க்ராம்,க்லீம்,க்லூம்,ஹ்ராம்

ஹ்ரீம்,ஹ்ரூம்,குரு குரு,ஆபதுத்தோரணாய,அஜாமிள

பந்தனாய,ஸ்வர்ணாகர்ஷண பைரவாய,மம தாரித்ரிய

த்வேஷிணேஸானந்தாய ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

அல்லது

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.




அடுத்த தேய்பிறை அஷ்டமி: விகாரி வருடம், கார்த்திகை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 19.11.2019 செவ்வாய் மதியம் 1.50 முதல் 20.11.2019 புதன் காலை 11.41 வரை அமைந்திருக்கின்றது!!!