Sunday, October 30, 2011

பூதக்கண் சித்தரின் ஜீவ சமாதி,திருபுவனம்,சிவகெங்கை மாவட்டம்



சிவகெங்கை மாவட்டம் திருபுவனத்திலிருந்து மடப்புரம் செல்லும் வழியில்,வைகை ஆற்றுப்பாலத்தைக் கடந்ததும்,ஒரு யு வளைவு வரும்.அப்படி வந்ததும்,நால்வர் கோவில் என்று ஒரு பலகை உங்களை வரவேற்கும்.படம் எண்:1A;அந்தப் பலகைக்கு அடுத்ததாக பிரதான சாலைக்கு முதுகு காட்டியபடி ஒரே ஒரு நந்திபகவான் அமர்ந்திருக்கிறார்.படம் எண்:1
அந்த நந்தியின் அருகில் நின்றவாறு சாலையின் எதிர்ப்புறம் பார்த்தால் ஒரு பிரம்மாண்டமான ஆலமரம் தெரியும்.அதுதான்.அதே தான்! பூதக் கண் சித்தரின் ஜீவ சமாதி:படம் எண்:2
ஒரு சிறு ஓடையில் இறங்கி ஏறினால்,நாகராஜாக்களுடன் ஒரு விநாயகர் தென்படுவார்;அவருக்குப் பின்னால்,ஒரு கருங்கல் மண்டபத்தின் மையத்தை ஒரு தொந்தியில்லாத விநாயகர் அருள்புரிந்துவருகிறார்.படம் எண்:3
அப்படியே பக்கவாட்டில் பார்த்தால்,இரண்டு சிவலிங்கங்கள் தென்படும்.இரண்டு சிவலிங்கங்களும் சிறிது வித்தியாசத்துடன் தென்படுகின்றன.படம் எண்:4
தொந்தியில்லாத கணபதிக்குப் பின்னால் ஒரு பிரம்மாண்டமான ஆலமரம்,ஒரு சிறிய  கருங்கல் மண்டபத்தையும்  பிளந்துகொண்டு,வானையே முட்டுமளவுக்கு வளர்ந்து கிளைபரப்பி நிற்கிறது.அதன் நடுவே ஒரு சிறு கோயில் போன்ற அமைப்பும் தென்படுகிறது.படம் எண்:5இங்கேதான் பூதக்கண் சித்தர் உறைகிறார்.இங்கிருந்து எதிரே தூரத்தில் பார்த்தால்,முதலில் மடப்புரம் செல்லும் சாலை தென்படும்.இன்னும் தூரத்தில் பார்த்தால் வைகை ஆறு தென்படும்.அந்த வைகை ஆற்றைக் கடந்து தூதூதூரத்தில் திருப்பூவனத்தின் நாதர் புஷ்பவனநாதரின் கோவில் இருக்கிறது.அவ்வளவு தூரத்தில் இருக்கும் எம்பெருமான் புஷ்பவன நாதரை இங்கிருந்து பூதக்கண் சித்தர் நொடிதோறும் தொழுதுகொண்டிருக்கிறார் எனில்,இது எப்பேர்ப்பட்ட தெய்வீக ரகசியம்!!!
ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு இந்தப் புகைப்படங்களை வழங்குவதில் பெருமகிழ்ச்சியும்,பெருமிதமும் கொள்கிறேன்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம்,மதுரை,திருபுவனம்,பரமக்குடி,இராமநாதபுரம்,மடப்புரம்,நரிக்குடி,அருப்புக்கோட்டை வாசகர்கள் இங்கு வந்து,மஞ்சள் துண்டினை விரித்து,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சம் வைத்துக்கொண்டு,ஓம்சிவசிவஓம் ஜபிப்பது நன்று.இதன் மூலமாக நாம் ஜபிக்கும் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் சக்தி அதிகரிக்கும்.ஆன்மீக வாழ்க்கையில் கிடுகிடு முன்னேற்றம் உண்டாகும்.சிலருக்கு பூதக்கண் சித்தரின் ஆசியும்,சந்திப்பும் கிட்டும்.முயலுவோமா?
ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. hanks for sharing ....


    கோவையில் உள்ள ஜீவ சமாதிகள் பற்றி அறிய

    http://spiritualcbe.blogspot.in/

    ReplyDelete