இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தலைவர் போப்பை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்
வாத்திகனின் தீபாவளி வாழ்த்து நயவஞ்சகமானது!
கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்பின் தலைமையிடமான வாத்திகனிலிருந்து வெளியாகியுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தைச் சுதந்திரமாகப் பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்றும், பிற மதங்கள் மீது வெறுப்பு, மதச்சகிப்புத்தன்மை அற்ற துவேஷப் பிரச்சாரம், பாரபட்சமான நடவடிக்கை, பிற மதத்தின் மீது நம்பிக்கை கொண்டதற்காக தண்டித்தல் போன்றவை காரணமாக இந்தியாவில் பாதிக்கப்படும் கத்தோலிக்கர்களோடு தோள் சேர்ந்து ஹிந்துக்களும் போராட வேண்டும் என்று கூறியுள்ளது விஷமத்தனமானது, இந்து முன்னணி இதனை வன்மையாகக் கண்டிக்கிறது.
துவேஷப் பிரச்சாரம் என்பது கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கை. சமீபத்தில் சென்னை அம்பத்தூர் புதூர் இம்மானுவேல் பள்ளியில் பூவும் பொட்டும் வைத்து வந்த மாணவியைக் கேவலப்படுத்தி, திட்டியதால் மனம் உடைந்து அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதை நடுநிலையாளர்கள் மறந்திருக்க முடியாது. இதுபோல் ஐயப்ப மலைக்கு மாலை போட்டு விரதமிருக்கும் மாணவர்களைத் துன்புறுத்தும் கிறிஸ்துவ கல்விக் கூடங்களையும், கல்லூரிகளையும், தொழிலாளியைக் கேவலப்படுத்தும் கிறிஸ்தவ முதலாளிகளையும் நம்மால் சுட்டிக் காட்ட முடியும்.
கர்த்தர் ஒருவரே மெய்யானவர் என்றால் மற்ற தெய்வங்கள் எல்லாம் பொய்யானதா?கிறிஸ்தவத்தை எற்றுக் கொள்ளாதவர்கள் பாவிகள் என்று கிறிஸ்தவர்கள் சொல்வது ஏன்? இந்துக்களை ஏமாற்றி மத மாற்றியதற்குப் போப் மன்னிப்பு கேட்கத் தயாரா?
இந்துக்களின் நம்பிக்கைகளை, வழிபாட்டை சாத்தான், பேய் என்று பிரச்சாரம் செய்வது ஏன்?
மற்ற மதத்தினர் மீது விஷம் கக்கும் கிறிஸ்தவ அமைப்புகள் தங்களை மாற்றிக் கொள்ளத் தயாரா?
இத்தகைய துவேஷக் கொள்கைகளைக் கொண்ட கிறிஸ்தவ அமைப்பு,தங்கள் மதத்தினர் மீது துவேஷப் பிரச்சாரம் செய்கின்றனர் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?
இந்துக்களை மயக்கி, ஏமாற்றி, அச்சுறுத்தி மதமாற்ற எவருக்கும் யாரும் உரிமை தரவில்லை. உங்கள் மதத்தைப் பின்பற்ற உங்களுக்குச் சுதந்திரம் தந்தால் அடுத்த வீட்டுக்குப் போய் பிரச்சாரம் செய்து, மயக்கி மதமாற்றி ஆள்பிடிப்பது எந்த வகையில் நியாயமானது? இந்தச் சுதந்திரத்தை முஸ்லீம் நாடுகளில் போப் கேட்டுப் பார்ப்பதுதானே? காங்கிரஸ் தலைவியான இத்தாலிய சோனியாவின் பக்கபலத்தில் வாத்திகன் இத்தகைய விஷத்தைத் தீபாவளி வாழ்த்தாகக் கக்கியுள்ளது.
தாய் மதத்தைவிட்டு வேற்று மதத்திற்குச் செல்வது நாட்டையும், இந்து சமயத்தையும் பாதுகாக்கத் தியாகம் செய்த முன்னோர்களுக்குத் தாங்கள் செய்த துரோகம் என்பதை உணர்ந்து மதம் மாறிப்போனவர்கள் மீண்டும் தாய் மதம் திரும்ப வேண்டும்.
ஒரு சமயத்தின் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது அந்த மதத்தின் பெருமையைக் கூறி வாழ்த்துத் தெரிவிக்கும் நாகரீகம் கூடத் தெரியாத நாலாந்தர மனிதர்கள் தாங்கள் என அடையாளம் காட்டிக் கொண்டுள்ளது வாத்திகன். இவர்கள் மதத்தின் சிறப்பை இந்து மதத்தின் ஆன்றோர்களோடு விவாதிக்கத் தயாரா?
மதமாற்றம், பயங்கரவாதம் எனும் நவீனகால நரகாசுரர்களை ஒடுக்கிட ஸ்ரீ கிருஷ்ணர் நமக்குப் பக்கத் துணையாக இருக்கிறார். தர்மம் என்றும் வெல்லும். தீயோர், தீய எண்ணம் கொண்டோர் செயல்களை முறியடிப்போம், தாய்மதமான இந்து தர்மத்தை என்றும் காத்திட இந்துக்கள் தீபாவளித் திருநாளில் சூளுரைப்போம்.
நன்றி: ஹிந்து சங்கச் செய்தி
ராம கோபாலன் அவர்களின் கண்டனம் நியாயமானது. இந்த போப்பும் கிறிஸ்தவ பிராட்டஸ்டண்ட், பெந்தேகொஸ்தே போன்ற பல கோஷ்டிகளும் மோசடி மதமாற்ற வேலைகளுக்கு கோடி கோடியாக வாரியிறைக்கிறார்கள். முஸ்லீம் நாடுகளில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழும் கிறிஸ்தவர்களுக்கு என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் தரும் பணத்துக்காக இங்கே ஊளையிடும் விசுவாசிகள் பஞ்சத்தில் அடிபட்டு கிடக்கும் முஸ்லீம் நாடு சோமாலியாவிற்கு சென்று தங்கள் மதமாற்ற வேலைகளை செய்து பார்க்க வேண்டியதுதானே. பிராடுகளின் கழுத்தில் தலை இருக்காது.
ReplyDeleteRamagopalan is 100% Correct.
ReplyDelete100 % true
ReplyDelete