Wednesday, August 16, 2017

அண்ணாமலை அன்னதானத்தின் பெருமைகள்

கடந்த 5 முற்பிறவிகளில் நாம் செய்த புண்ணியத்தின் விளைவாக நமக்கு இந்தப் பிறவியில் இவ்வளவு சொத்துக்கள்,இவ்வளவு பெயரும் புகழும்,இவ்வளவு சுகங்கள் கிடைத்திருக்கின்றன;அதே போல,நாம் கடந்த 5 முற்பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவுகளே இப்பிறவியில் கடனாக,நோயாக,எதிரியாக,அவமானங்களாக,முழுமை பெறாத வெற்றிகளாக ,பொறாமை உணர்ச்சியாக,நிம்மதியில்லாத வாழ்க்கையாக நம்மை பாடாய்படுத்துகின்றன;


அதென்ன கடந்த 5 முற்பிறவிகள்?


நாம் இப்பிறவியில் செய்யும் அனைத்துச் செயல்களின் பாவ புண்ணியங்கள் நமது இப்பிறவி லக்னத்துக்கு 10 ஆம் இடத்தில் பதிவாகின்றன;உதாரணமாக,இப்பிறவியில் நாம் மீன லக்னத்தில் பிறந்திருக்கிறோம்;என்று வைத்துக் கொண்டால் இப்பிறவியில் நாம் செய்யும் அனைத்து பாவ புண்ணியப்பதிவுகளும் தனுசு லக்னத்தில் பதிவாகும்;அதனால்,அடுத்த(2 ஆம்) பிறவியில் தனுசு லக்னத்தில் பிறப்போம்;2 ஆம் பிறவியில் செய்யும் அனைத்து செயல்களின் பதிவுகளும் தனுசுக்கு 10 ஆம் இடமான கன்னியில் பதிவாகி, 3 ஆம் பிறவியில் கன்னி லக்னத்தில் பிறப்போம்; 

கன்னி லக்னத்தில் பிறந்து வாழும் போது,நமது அனைத்துச் செயல்களும்,கன்னிக்கு 10 ஆம் இடமான மிதுனத்தில் பதிவாகும்;அதனால், 4 ஆம் பிறவியில் மிதுன லக்னத்தில் பிறப்போம்;4 ஆம் பிறவியில் மிதுன லக்னத்தில் பிறந்து வாழும் போது,நமது அனைத்துச் செயல்களும் மீனராசியில் பதிவாகி, ஐந்தாம் பிறவியில் நாம் மீண்டும் மீன லக்னத்தில் பிறப்போம்;


நமது முன்னோர்கள் செய்த பாவம்+புண்ணியங்கள் எட்டில் ஒரு பங்கு மட்டுமே நம்மை வந்து சேருகின்றன;


பாவம் 0%,புண்ணியம் 0% என்ற நிலையை எப்போது எட்டுகிறோமோ,அப்போதுதான் நம்மால் சித்தர் ஆக முடியும்;சித்தர் ஆனால் மட்டுமே வாலை தரிசனம் செய்ய முடியும்;

இன்று வரை நாம் படும் கஷ்டத்தை நினைத்துப் பார்க்கும் போது இனி ஒருபோதும் பிறக்கவே கூடாது என்ற விரக்தி வந்திருக்கும்;அந்த விரக்தியோடு நம்மால் முக்தியைப் பெற முடியாது;ஆனால் பிறவிகளின் எண்ணிக்கையைக் குறைக்க பல ஆயிரக்கணக்கான வழிமுறைகள் இருக்கின்றன;அதில் நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் மிகச் சுலபமானது அன்னதானம்;அதுவும் அண்ணாமலை அன்னதானமே!


ஒரு சாதாரண நாளில் காசியில் ஒரு லட்சம் பேர்கள் வீதம் ஒரு வருடம் வரை தினமும் அன்னதானம் செய்தால் என்ன புண்ணியமோ அதைவிடவும் அதிகப் புண்ணியம் ஒரு சாதாரண நாளில் அண்ணாமலையில் அன்னதானம் செய்தாலே கிடைத்துவிடும்;


நாம் பிறந்தது முதல் நமது மரண நாள் வரை தினமும் காசியில் ஒவ்வொரு நாளும் 1,00,00,000 பேர்களுக்கு அன்னதானம் செய்தால் என்ன புண்ணியம் கிடைக்குமோ அதைவிடவும் அதிகமான புண்ணியம் அண்ணாமலையில் ஒரு துவாதசி திதியன்று மூன்று வேளைகளும் தலா ஒரே ஒருவருக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;கூடவே மறுபிறவி இல்லாதமுக்தி கிடைத்துவிடும்;என்பதை அருணாச்சலபுராணம் தெரிவிக்கின்றது;


ஒரு தமிழ் வருடத்தில் 24 துவாதசி திதிகள் வருகின்றன;ஆனால்,முழுத் துவாதசி திதியானது 10 முதல் 12 தான் வருகின்றது;அந்த முழுத் துவாதசி திதி வரும் நாட்களை இங்கே உங்களுக்காக கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்.27 வருட ஜோதிடர்(9092116990/9364231011) தெரிவிப்பதில் பெருமை கொள்கிறோம்;


இந்த நாட்களில் காலையில் 6 மணி முதல் 7 மணிக்குள் குறைந்தது பதினெட்டு சாதுக்களுக்கும்;
மதியம் 12 மணிக்கு மேல் 2 மணிக்குள் குறைந்தது பதினெட்டு துறவிகளுக்கும்;
இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் குறைந்தது பதினெட்டு சாமியார்களுக்கும் அன்னதானம் செய்தால் நமது அனைத்து கர்மவினைகளும் நீங்கி முக்தி கிடைத்துவிடும்;

அன்னதானம் முடித்தப் பின்னர்,இரவு 12 மணிக்கு இரட்டைப்பிள்ளையார் கோவிலில் இருந்து கிரிவலம் புறப்படவேண்டும்;மஞ்சள் நிற ஆடை அணிந்து கொண்டு,இடுப்பில் குறைந்தது மூன்று எலுமிச்சை பழங்களை ஒரு துண்டில் கட்டிக் கொண்டு,நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு ஓம் அருணாச்சலாய நமஹ என்று ஜபித்தவாறு,புறப்படவேண்டும்;

அங்கிருந்து புறப்பட்டு,தேரடி முனீஸ்வரரை வழிபடவேண்டும்;மனதுக்குள் "வழித்துணைக்கு வாருமையா" என்று அவரிடம் கோரிக்கை வைக்க வேண்டும்; அங்கிருந்து சில நூறு அடிகள் தூரத்தில் கிழக்கு கோபுரவாசலுக்கு நேராக சாலைப் பகுதியில் நின்று கொண்டு அண்ணாமலையாரிடம் வேண்ட வேண்டும்;இங்கே "பிரபஞ்சத்தின் தந்தையே! எமது முன்னோர்கள் சாபம் தீர அருள்வீராக" என்று முதலில் வேண்டிக்கொண்டு, பிறகு,நமது வேண்டுதல்களை வேண்டிக்கொண்டு கிரிவலம் செல்ல வேண்டும்;

கிரிவலப்பாதையில் ஒரு போதும் பேசக் கூடாது;(கூட்டாகச் சென்றால் தேவாரப்பதிகங்கள் பாடலாம்) நள்ளிரவு 12 மணிக்கு கிரிவலம் புறப்பட்டதால்,அதிகாலை 4 முதல் 6 மணிக்குள் பூதநாராயணப் பெருமாள் கோவிலில் கிரிவலம் நிறைவடையும்;(நேரம் இல்லாதவர்கள் இங்கே இருந்து வீடு திரும்பலாம்)

மற்றவர்கள்,அங்கிருந்து கோவிலுக்குள் சென்று,உள்பிரகாரத்தினை அடைய வேண்டும்;முதலில் சப்தகன்னியர் சன்னதிக்கு அருகில் அமைந்திருக்கும் துர்வாசரை தரிசிக்க வேண்டும்;அவரிடம் "ஐயா,எமது முன்னோர்கள் சாபம் தீர நேற்று எமக்குத் தெரிந்தவகையில் அன்னதானம் செய்துவிட்டோம்;பிறகு,எமக்கு அறிந்தவகையில் கிரிவலம் சென்றுவிட்டோம்;அண்ணாமலையாரை தரிசிக்க அனுமதி தருவீர்களாக" என்று வேண்ட வேண்டும்;

அதன் பிறகே,அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;பிறகு, உண்ணாமலையை தரிசிக்க வேண்டும்;பிறகு,உண்ணாமலை சன்னதிக்கு வெளியில் இருக்கும் நவக்கிரக சன்னதிக்கு அருகில் அமைந்திருக்கும் சித்திரகுப்தர் சன்னதியை பக்க வாட்டில் இருந்து தரிசிக்க வேண்டும்;இப்படிச் செய்தால் மட்டும் தான் இங்கே வந்தமைக்கான புண்ணியம் சூட்சுமமாக அண்ணாமலையாருக்குத் தெரிவிக்கப்படும்;பிறகு,மஹா காலபைரவப்பெருமானை தரிசித்துவிட்டு சொந்த ஊர் திரும்ப வேண்டும்;இந்த முறையை நமக்கு உபதேசித்தவர் சித்தர்களின் தலைவரான அகத்திய மகரிஷி ஆவார்;


வசதி உள்ளவர்கள்,அண்ணாமலையில் அன்னதானம் செய்வதை தமது கடமையாக நினைப்பவர்கள் மதியம் மட்டுமாவது ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் அன்னதானம் செய்யலாம்;


18.8.2017 வெள்ளி

2.10.2017 திங்கள்

16.10.2017 திங்கள்

30.11.2017 வியாழன்

14.12.2017 வியாழன்

13.1.2018 சனி

28.1.2018 ஞாயிறு

12.2.2018 திங்கள்

28.3.2018 புதன்

12.4.2018 வியாழன்

ஜோதிடப்படி,ஒருவரது ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் சனியும்,செவ்வாயும் இணைந்திருந்தாலோ அல்லது செவ்வாய் நிற்கும் ராசிக்கு நான்காம் ராசியில் சனி நின்றாலோ அவர்களுக்கு முன்னோர்கள் சாபம் இருக்கின்றது என்று அர்த்தம்; 

அவர்கள் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் இப்படி முழுத் துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்யவேண்டும்;


(முடிந்தவரையிலும் எவரிடமும் தெரிவிக்காமல் செய்ய வேண்டியது அவசியம்)

ஓம் அருணாச்சலாய நமஹ

அனைத்துப் பிறவிகளின் கர்மவினைகளையும் தீர்க்கும் அண்ணாமலை கிரிவலம்!!!

இன்று நாம் மனிதப் பிறவி எடுத்து வாழ்ந்து வருகிறோம்;
நமது முற்பிறவிகளைப் பற்றி நாம் அறிவதில்லை;அறிய முயன்றாலும்,10,000 பேர்களில் ஒருவருக்குத் தான் சரியான முற்பிறவி ரகசியங்கள் கிடைக்கின்றன;
இந்நிலையில் ஒரு சிவரகசியம் அடியேனுக்கு சித்தர் பெருமக்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு போதிக்கப்பட்டிருக்கின்றது;அதை அனுபவபூர்வமாக உணர்ந்தப் பின்னரே,தங்களிடம் பகிர்கிறோம்;அப்படிப் பகிர்ந்து கொள்வதை எமது கடமையாக எண்ணுகின்றோம்;
84,00,000 உயிரினங்கள் பூமியில் இருக்கின்றன;இவைகளில் பெரும்பாலானவைகளின் ஆயுள் ஒரு நாள் அல்லது சில வாரங்கள் தான்;இந்த 84,00,000 உயிரினங்களாகவும் நாம் பிறந்து,பிறந்து இறந்தப் பின்னரே இறுதியாக மனிதப் பிறப்பு நமக்குக் கிட்டியிருக்கின்றது;
மனிதப் பிறவியாக பிறந்தப் பின்னர்,சுமாராக 2,00,000 முறை திரும்பத் திரும்ப மனிதப் பிறப்பு எடுத்துள்ளோம்;
3000 மனிதப் பிறவிகளில் நமக்கு ஒரு சரியான குரு கிடைக்க மாட்டாரா? என்று ஏங்கியப் பின்னரே 3001 வது பிறவியில் தகுந்த குரு நமக்கு அமைவார்;என்பது சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியின் தந்தையுமாகிய அகத்தியப் பெருமான் தெரிவிக்கும் சித்தரகசியம் ஆகும்;
ஒரு வருடத்தில் ஒரு நாள் வரும்;அந்த நாளில் குறிப்பிட்ட நேரம் வரும்;அந்த நேரம் குறைந்தது 4 மணி நேரம் வரை இருக்கும்;அதிக பட்சம் 24 மணி நேரம் வரை இருக்கும்;
இந்த நாளில்,இந்த நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் சென்றால்,இதுவரை நாம் மனிதப் பிறவி எடுத்தது முதல் இன்று வரையிலும் எத்தனை பிறவிகளில் எவ்வளவு கர்மவினைகளை(பாவம்) சேர்த்தோமே? அத்தனையும் கரைந்து காணாமல் போய்விடும்;
19.8.2017 சனிக்கிழமை காலை 6.33 முதல் இரவு 7.20க்குள் புனர்பூசம் நட்சத்திரத்தில் (மிதுனம் மற்றும் கடகம் ராசி) பிறந்தவர்களுக்கு இப்படிப்பட்ட அரிய சந்தர்ப்பம் அமைந்திருக்கின்றது;
19.8.2017 சனிக்கிழமை இரவு 7.21 முதல் நள்ளிரவு (மறுநாள் விடிகாலை) 3.48 வரையிலான நேரத்தில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டியது ஜன்மாந்திரக் கடமை ஆகும்;

3.9.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 11.22 முதல் 4.9.2017 திங்கட்கிழமை காலை 12.13க்குள் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அருணாச்சல கிரிவலம் வர வேண்டும்;

17.9.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2.56 முதல் அன்று நள்ளிரவு 1.04க்குள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலையை வலம் வரவேண்டும்;

17.9,2017 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு(திங்கள் விடிகாலை)1.05 முதல் 18.9.2017 திங்கட்கிழமை மதியம் 1.25க்குள் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் வரவேண்டும்;

2.10.2017 திங்கட்கிழமை நள்ளிரவு 1.40 முதல் 3.10.217 செவ்வாய்க்கிழமை இரவு 9.42 வரை சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,இரவு 9.43 முதல் நள்ளிரவு 1.54 வரை பூரட்டாதி(கும்பம் ராசி மற்றும் மீனம் ராசி) நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அருணாச்சல கிரிவலம் வர ஏற்ற நேரமாக அமைந்திருக்கின்றது;

16.10.2017 திங்கட்கிழமை நள்ளிரவு 1.20 முதல் 17.10.2017 செவ்வாய்க்கிழமை காலை 7.44 வரை பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,காலை 7.45 முதல் இரவு 12.42 வரை உத்திரம் நட்சத்திரத்தில் (சிம்மம் மற்றும் கன்னி ராசி) பிறந்தவர்களும் கிரிவலம் வர உகந்த நாட்கள் ஆகும்;

1.11.2017புதன்கிழமை மதியம் 3.30 முதல் பின்னிரவு(மறுநாள் வியாழக்கிழமை) விடிகாலை 5.37 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,2.11.2017 வியாழக்கிழமை அதிகாலை 5.38 முதல் மதியம் 2.16 வரை ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் வரலாம்;

15.11.2017 மதியம் 2.50 முதல் மதியம் 3.53 வரை அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்(ஒரு மணி நேரத்தில் கிரிவலம் வருவது மிகவும் கடினம்;இருந்தாலும் புண்ணியமான நேரத்தை அறிவிப்பது எமது கடமை)மதியம் 3.54 முதல் 16.11.2017 வியாழன் மதியம் 3.07 வரை சித்திரை நட்சத்திரத்தில்( கன்னி மற்றும் துலாம் ராசி) பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் வர உகந்த ஆன்மீக ரகசிய நேரம் ஆகும்;

30.11.2017 வியாழக்கிழமை நள்ளிரவு(வெள்ளி விடிகாலை)3.49 முதல் 1.12.2017 வெள்ளிக்கிழமை மதியம் 12.07 வரை அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,மதியம் 12.08 முதல் நள்ளிரவு 2.06 வரை பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அருணாச்சலவலம் வர ஏற்ற நேரமாக அமைந்திருக்கின்றது;

15.12.2017 வெள்ளிக்கிழமை காலை 6.07 முதல் நள்ளிரவு(சனிக்கிழமை விடிகாலை) 3.06 வரை விசாகம் நட்சத்திரத்தில் (துலாம் மற்றும் விருச்சிகம்) பிறந்தவர்களும்,3.07 முதல் 16.12.2017 சனிக்கிழமை காலை 8.16 க்குள் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை வலம் வர உகந்த நேரமாக இருக்கின்றது;

30.12.2017 சனிக்கிழமை மதியம் 3.10 முதல் மாலை 5.37 வரை கார்த்திகை நட்சத்திரத்தில் (மேஷ ராசி மற்றும் ரிஷப ராசி) பிறந்தவர்களும்( இரண்டு மணி நேரத்தில் கிரிவலம் வருவது கடினமே);மாலை 5.38 முதல் 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.04 வரை ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் வர உகந்த நேரமாக அமைந்திருக்கின்றது;

13.1.2018 சனிக்கிழமை நள்ளிரவு 1.42 முதல் 14.1.2018 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.56 வரை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;மதியம் 2.57 முதல் நள்ளிரவு 3.41 வரை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் வர உகந்த நாட்களாக இருக்கின்றன;

28.1.2018 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 2.04 மணி முதல் 29.1.2018 திங்கட்கிழமை இரவு 9.02 வரை திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் வர ஏற்ற நாளாக அமைந்திருக்கின்றது;

29.1.2018 திங்கட்கிழமை இரவு 9.03 முதல் இரவு 11.41க்குள் புனர்பூசம் நட்சத்திரத்தில்(மிதுனம் ராசி மற்றும் கடகராசி) பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் வர ஏற்ற நாளாக இருக்கின்றது;

12.2.2018 திங்கட்கிழமை இரவு 9.21 முதல் நள்ளிரவு 3.18 வரை பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,நள்ளிரவு 3.19 முதல் 13.2.2018 செவ்வாய்க்கிழமை இரவு 11.24 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் (தனுசு ராசி மற்றும் மகர ராசி) பிறந்தவர்கள் கிரிவலம் செல்லக்கூடிய நேரமாக இருக்கின்றது;

27.2.2018 செவ்வாய்க்கிழமை மதியம் 12.26 முதல் நள்ளிரவு 2.10 வரை பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்;நள்ளிரவு 2.11 முதல் 28.2.2018 புதன் கிழமை காலை 10.14 வரை ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அண்ணாமலை கிரிவலம் செல்லலாம்;

14.3.2018 புதன் கிழமை மாலை 5.05 முதல் அவிட்டம் நட்சத்திரத்தில் (மகரம் மற்றும் கும்பம்)15.3.2018 வியாழக்கிழமை மாலை 5.14 வரையிலான நேரத்தில் அண்ணாமலை கிரிவலம் வரலாம்;

28.3.2018 புதன் கிழமை இரவு 10.26 முதல் 29.3.2018 வியாழக்கிழமை இரவு 7.45க்குள் வரும் நேரத்தில் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அண்ணாமலை கிரிவலம் வரவேண்டும்;

13.4.2018 வெள்ளிக்கிழமை காலை 8.15 முதல் நள்ளிரவு 3.33க்குள் பூரட்டாதி நட்சத்திரத்தில்(கும்பம் ராசி மற்றும் மீனம் ராசி) பிறந்தவர்களும்;நள்ளிரவு 3.34 முதல் 14.4.2018 சனிக்கிழமை அன்று காலை 8.41க்குள் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் கண்டிப்பாக அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்; 
அண்ணாமலையாரின் அருளைப் பெற இதுவும் ஒரு சிறந்த சந்தர்ப்பம்! பயன்படுத்தி அருளோடும்,வளமோடும் வாழ்க!!!
ஓம் ரீங் அருணாச்சலா அருணாச்சலா!!!

அம்பிகையின் சாந்நித்யம் பொலியும் 34 ஷேத்திரங்கள் !



இந்தியாவில் அம்பிகையின் சாந்நித்யம் பொலியும் 34 ஷேத்திரங்கள் !
தேவியின் புகழைப் பாருக்குப் பறைசாற்றும் பல முக்கிய க்ஷேத்திரங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே இடம் பெறுகின்றன.

பரசுராம க்ஷேத்திரத்தில் செங்கனூர் பகவதி கோயில் விசேஷமாக உள்ளது. நீலாசலத்து காமரூப நாயகி போலவே தேவிக்கு தாய்மைக்கு உரிய நீர்மைக்கசிவு ஏற்படும் வியக்கத் தகும் தலம் இது. அவ்வப்போது நிகழும் இத்தெய்விக நிகழ்ச்சியின் போது இங்கு மகோற்சவம்தான்.
அடுத்து கொடுங்கல்லூர் காளி தேவி மிகவும் பிரசித்தி பெற்ற பகவதி க்ஷேத்திரம். திருச்சூரிலிருந்து சுமார் இருபத்தி ஐந்து மைல் உள்ள இத்தலத்து தேவியின் உக்கிரம் குறைய ஸ்ரீ சங்கரர் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. பெரிய உருவத்தோடு உட்கார்ந்த நிலையில் காட்சியருளுவாள் அன்னை.சோட்டானிக்கரை பகவதியைத் தெரியாதவர்கள் மலையாளத்தில் இருக்கமாட்டார்கள். இது ஒரு பிரார்த்தனை தலம். ஜேஜே என்று எப்போதும் சந்நிதியில் கூட்டம்.
Image may contain: one or more people
பழையனூர் பகவதியும் இப்படியே மிகவும் பிரபலமானவள்: தேவியின் மிக உக்கிர’ப்ரத்யுங்கரை’ அம்சங்களே இந்த க்ஷேத்ரங்களில் இருக்கின்றன என்பர். அடுத்து ஹேமாம்பிகை என்னும் தேவி உறையும் ஒலவக்கோடும் பகவதி க்ஷேத்திரத்தில் புராதனமானது. அன்னையின் இரு கைகளை மட்டுமே இங்கு தரிசிக்கிறோம்.

வெயிலுகந்தம்மன்
திருச்செந்தூரில் உள்ள அம்மன் கோவில். முருகனுக்கு சக்திவேல் அளித்து, பாண்டிய ராஜகுமாரிக்கு குதிரை முகமும் நீக்கிய சக்தி. அன்னையின் அருளொளி பரப்பும் தோற்றம் ஆனந்தமயமாக இருக்கும். வேல் உவந்தாள் என்பதே இப்படி மருவியுள்ளது.

சங்கரநாராயணர் - கோமதி
ஹரிஹர க்ஷேத்திரமாக புகழுடன் விளங்கும் தலம் சங்கரநாராயணர் கோவில். இங்கு கோவில் கொண்டிருப்பவள் கோமதி அன்னை. அம்பாள் தவக்கோலம் பூண்ட தலங்கள் சில. அவற்றில் இதுவும் ஒன்று. ‘ஆடித்தபஸ், உற்சவத்தில் லட்சோப லட்ச ஜனங்கள் கலந்து கொள்கிறார்கள்’

வேதாரண்யம்
‘சுந்தரி பீடம்’ என்று தேவி பீடங்களில் சிறப்பு கொண்டது, வேதாரண்யம். பரமசிவனின் சப்தவிடங்கத் தலங்களில் இதுவும் ஒன்று. நால்வராலும் தேவாரப் பாடல் பெற்றது இத்தலம். இங்கு அன்னை வேதநாயகி என்று புகழப்படுகிறாள்.

திருக்கடவூர் அபிராமி
காலனையே தன் பக்தன் மார்க்கண்டேயருக்காகக் கடிந்த காலசம்ஹாரரும் அபிராமியும் வதியும் அழகு கொழிக்கும் கோவிலிது. அன்புடன் ஆராதித்த அபிராமிபட்டர் அன்னையின் அருள் பெற்ற தலம். அமாவாசையிலும் பூர்ண நிலவு காட்டி அபிராமி பட்டரை ஆண்டு கொண்டாள் இங்கு. அன்னையின் பேரில் பட்டர் அந்தாதி பாடினார். பிரசித்தமாக விளங்குபவள் தேவி அபிராமி.

அம்பர் மாகாளம்
சோமாசி என்ற நாயனாரின் சோம யாகத்துக்கு இறைவன் சண்டாள உருவத்தோடு எழுந்தருளி நேரிலே அவியைப் பெற்ற புனிதத்தலம். காளிதேவி அம்பன், அம்பராசுரன் என்ற அரக்கர்களைக் கொன்ற தோஷம் நீங்க இறைவனைப் பூசித்தாள். இங்குள்ள மோஹினி அம்மை மிக விசேமுடையவள். பூஜிப்பவர்கூட கையினால் தொடாது தூரத்திலிருந்து கோலால் ஆடை, மாலை முதலியன அணிவிப்பார். ‘பயக்ஷயாம்பிகை’ பயம் போக்கு பவளாக நின்ற கோலமாகத் யாசனத்தில் கருணையோடு அருள் பாலிப்பாள். இத்தலம் பூந்தோட்டம் (மாயவரம் - அறந்தாங்கி மார்க்கம்) ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளது.
No automatic alt text available.Image may contain: 1 person
சமயபுரத்தாள்
இது திருச்சி அருகில் உள்ள தமிழகத்து முக்கிய மாரியம்மன் ஆலயம். பிரசித்தி பெற்றவள். தசரத சக்ரவர்த்தி பூஜித்த விக்கிரகம் என்று கூறப்படுகிறது. கண் கண்ட தெய்வம் இவ்வன்னை. உபாசனாசக்தியின் பலனை உடனுக்குடன் உணர்த்தும் கருணை முகில்.
சிறந்த பக்தரான ஒருவர் தர்மகர்த்தாவாக இருந்த காலம். உற்சவம் சிறப்பாக நடக்கும். யானை மட்டும் கோவிலுக்கு அப்போது இல்லை. ஆகவே பக்கத்து ஊர்களிலிருந்து வரவழைப்பது வழக்கம். என்ன காரணமோ அந்த வருடம் யானை வராது என்று கூறிவிட்டனர். பக்தர் தவித்தார். திருச்சி தெப்பக்குளத்து வீதியில் மேலும் கீழும் நடந்து கொண்டே கவலை தோய்ந்து காணப்பட்டார். ஒரு வியாபாரியான நண்பர், இதைக் கண்டவர் தாமே வாங்கித் தருவதாகக் கூறினாராம். அதற்கேற்றாற்போல் ஆச்சர்யமாக குறைந்த விலையில் கிடைத்ததாம் ஒரு யானைக்குட்டி.
கோவிலுக்கு மேளதாளத்தோடு யானையை அழைத்துச் செல்ல ஏற்பாடு நடந்தது. புதிதாகையால் திடீரென்று மிரண்டால் என்ன செய்வது என்று இரண்டு தேங்காய்களை எடுத்துவரச் சொன்னான் பாகன். ஆனால் எடுத்துவர மறந்து விட்டனர். ஊர்வலம் தொடங்கி காவிரிப்பாலம் தாண்டியதும், யானை மிரளுவதைக் கண்ட பாகன் தேங்காய் கேட்டான். தேங்காய் இல்லை. அன்னையின் அருளால் உடனே சாலை ஓரத்திலிருந்த மரத்திலிருந்து இரண்டு தேங்காகள் விழுந்தன. யானைக்கு அதைக் கொடுத்தான். ஆயினும் அது அடங்காமல் குறுக்கே இறங்கி ஓடிவிட்டது. கடைசியில் யாவரும் வியக்கும் வண்ணம் அன்னையின் சந்நிதியில் கொடி மரத்திற்கு அருகில் போய் நின்றதாம். முன்பின் தெரியாத புது யானை தானே கோவில் முன் வந்து நின்றதைக் கண்டவர் மெய்சிலிர்த்தனராம்.
இதைப் போலவே மற்றொரு பக்தர் (திருச்சி மளிகைக்காரர்) வருடம் தோறும் வைகாசி 1ஆம் தேதி சிறப்பாக அபிஷேகம் செய்து அன்னதானம் முதலியனவும் செய்வது வழக்கம். கோவிலுக்கு எதிரேயுள்ள வாய்க்காலில் தண்ணீர் விட எவ்வளவோ கேட்டும் அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பக்தர்கள் சிரமப்படுவார்களே என்று வருந்தினார் அப்பக்தர். அன்னையின் அருளால் அன்று மழை விடாது பெய்து வாய்க்கால் நிரம்பி ஓடியதாம். குறையின்றி அன்னதானம் செய்தாராம். இன்றும் தொடர்ந்து இத்தருமத்தை நடத்தி வருகிறார். இப்படி ஏராளமான அனுபவ அதிசயங்கள். பிரார்த்தனைக்குரிய சிறந்த தலம். சமயபுரத்தாளுக்கு கும்பாபிஷேகம் என்றால், பணம் வேண்டுமே என்று கவலைப்படாமல் நடக்கும் கோயில் இது. அப்படி குவியும் நிதி. அன்பினால் கருணையினால் அடியார்களை ஆட்கொள்ளுபவள் ஆதிமகமாயி அம்மை சமயபுர நாயகி.

மாகாளிக்குடி
சமயபுரத்து மாரியம்மன் கோவிலுக்கு வெகு அருகில் ‘மாகாளிக்குடி’ என்ற தலம் உள்ளது. இது விக்ரமாதித்தனால் பூஜிக்கப்பட்ட விக்ரஹம் என்று கூறுகின்றனர். அமைதி யான கிராமிய சூழ்நிலையில் அருமையான கோவில் இன்று சிதிலமாக உள்ளது. இராஜராஜேச்வரியின் கோவில் இது என்று கூறுகின்றனர்.

சிறுவாச்சூர்
திருச்சி - பெரம்பலூர் பாதையில் உள்ள பிரசித்தமான பிரார்த்தனைத் தலமிது. இங்கு முடியிறக்க வரும் குடும்பங்கள் அநேகம். பலருக்கு குலதெய்வமாகவும் விளங்குகிறாள் அன்னை. இக்கோவில் திங்கள், வெள்ளி இரண்டு தினங்கள் மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாள்களில் மூடியே இருக்கின்றது.இங்கு வந்து நீராடி இங்கேயே மாவு இடித்து மாவிளக்கு போடுவார்கள். மாவு இடிப்பதற்கு என்று ஆட்கள் இங்கு இருக்கின்றனர். தேவியின் சக்தி மிளிரும் சிறப்பான கோவில் இது.

கோனியம்மன் (கோவை)
ஒவ்வோர் ஊரிலும் கிராமதேவதை என்றும், எல்லைப்பிடாரி என்றும் சக்தியே வழிபடும் தெய்வமாயிருக்கிறாள். சில ஊர்களில் சிறப்புற்றும், பல இடங்களில் சாதாரணமாகவும் இவ்வழிபாடு இன்றும் நடைபெறுகிறது. அக்காலத்தில் கோவை மாநகர் ‘கோவன் புதூர்’என்ற கிராமமாக இருந்தது. அக்கிராம தேவதையாக கோனியம்மன் அமர்ந்து ஊரைக் காப்பாற்றினாள். இன்றும் காப்பாற்றி வருகிறாள். ஊர் ஜனங்களும் நன்றிப் பெருக்கோடு இவ்வன்னைக்கு பொங்கல் இடுவதும் அபிஷேகம் செய்வதும் வழக்கமாகியது. ஆரவார மிகுந்ததான கோவையின் மத்தியில் அமைதியே உருவாக, காண்பவர் கருத்தை ஈர்க்கும் வண்ணம் ‘அஞ்சேல்’ என அபயம் கொடுத்து வீற்றிருக்கும் இத்திருக்கோலம் மனத்தை விட்டகலாது. கோவையின் பாக்கியமே கோனியம்மன்.
Image may contain: 1 person
கருவாழைக்கரை
மாயவரத்துக்கு அருகில் வனதுர்க்கை கோவில் உள்ளது. ஒரு சமயம் மிகவும் உக்கிரமாக இருந்தது இக்கோவில். உக்கிரத்தைக் குறைக்க சந்நிதிக்கு எதிரே குளம் ஒன்றை வெட்டச் சொல்லி காமகோடி பீட கருணைக்கு ஆக்ஞாபித்தார். உக்கிரச்சக்தி, இன்று அனுக்கிரஹ சக்தியுடன் செயல்படுகிறது. இதைத் தாண்டி சுமார் நான்கு மைலில் ‘கருவாழைக்கரை’ என்ற சிற்றூரில் உள்ள இம்மாரிக்கு ‘காமாட்சி’ என்று பெயர். எழிலும் துடிப்பும் கொண்ட அன்புருவான அன்னை. ‘இவளை’ ஆராதிக்கும் குடும்பங்கள் பல. தினம் உச்சியில் சரியான 12 மணிக்கு அபிஷேகம் ஆராதனை செய்வார்கள். யார் வந்தாலும் இந்நேரத்தில் மாற்றம் இல்லை. குறிசொல்லும் வழக்கம் இங்கு உள்ளது. சிறிது தொலைவில் காவிரி அமைதியாக சிறு வாய்க்கால் போல கடலாடச் செல்கிறாள். இங்கு ‘காவிரியிலிருந்து நீர் சுமந்து வந்து அபிஷேகம் செய்கிறேன். தண்ணீர் (கிணற்றிலிருந்து) எடுத்து வைக்கிறேன்’ என்று பெரும்பாலும் பிரார்த்தித்துக் கொண்டு பக்தி சிரத்தையுடன் அதை நிறைவேற்றுகின்றனர்.

தஞ்சாவூர் மாரி
தஞ்சையின் பெரிய கோவிலும் ப்ரும்மாண்டமான லிங்கத்திருவுருவும் பெரிய நாயகியும், ஷண்முகசுந்தரன் முதலியவர்களும் நந்தியம் பெருமானும் உலகிலுள்ள கலைரசனை, பக்தி ரசனை, மிக்கோரை இழுக்கின்றனர் எனில் மாரியம்மன் பயம் காட்டி அடியாரைத் தன்னிடம் ஈர்த்துக் கொள்கிறாள். பெரியம்மை போடப் பெற்றவர்கள் வரிசையாக பிராகாரம் முழுவதும் இருப்பார்கள். அவ்வளவும் அன்னையின் அருட்சக்தியால் சமனமாகிறது. அஷ்டகம் படித்து வைசூரி குணமாவதைப் போல், அன்னை தஞ்சை மாரியைப் பிரார்த்தித்துக் குணம் கண்டவர் பலர். கண் பார்வை இழந்தவர்களுக்குக்கூட, பார்வை கிடைக்கச் செய்த கண்கண்ட தெய்வம், அன்னையின் அருளாலும் பிரபலத்தாலும், ஊரே மாரியம்மன் கோயில் என்று வழங்கலாயிற்று. (முன்பு புன்னைநல்லூர் என்று கூறப் பட்டது) ஆவணிமாதத் திருவிழாவிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டம் அலைமோதும்.

அலங்காரவல்லி
மூர்த்தி,தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் சிறப்பாக விளங்கும் தலம் ஹரித்துவாரமங்கலம். ‘அரதைப் பெரும் பாழி’ என்று அன்று விளங்கிய இப்பதி, இன்று ‘ஹரித்துவார மங்கலமாக’ மருவி வந்துள்ளது.
பக்தர் ஒருவர் சிவத்தை அனவரதம் சிந்திப்பார். சந்தனக் கட்டையை பொதி ஏற்றி வியாபாரம் செய்வார். வன்னிக்காடுகளின் வழியே செல்வார். ஆதவன் அரைவழி வந்து, உச்சி வேளையில் பெரிய குட்டை ஒன்றில் நீராடினார். விபூதியைக் காணோமே என்று சந்தனக் கட்டையை எடுத்து அருகிலிருந்த பாறையில் தேய்க்கிறார். கல்லிலிருந்து ரத்தம் பீரிடவே துணுக்குற்றார். ஆட்களை அழைத்து ஆராய்ச்சி செய்து பார்த்தார்: அருமையான சிவலிங்கம் வெளிப் பட்டது . பாதாளேச்வரர் என்று திருநாமம் சூட்டி அன்புடன் அழைத்தார். அழகிய கோவில் ஒன்றை உருவாக்கினார். நால்வரில் ஞானசம்பந்தப் பெருமான் காலினால் நடக்கவும் அஞ்சி, பரண் ஒன்று கட்டி அதிலிருந்து ‘பைத்த பாம்போடரைக் கோவணம் பாய் புலி’ என்று பதிகம் பாடிய தலம் இது. நீடாமங்கலத்துக்கு ஏழாவது மைலில் உள்ள தலம் இது. இங்கு அம்மை அலங்காரவல்லி அருள்பாலிக்கிறாள்.

திருவாமாத்தூர் வட்டப்பாறையம்மன்:
விழுப்புரத்துக்கு அருகில் செஞ்சி ரோட்டில் 4 மைல் தூரத்தில உள்ளது. இரட்டைப் புலவரால் பாடப்பெற்ற தலம் இது. மாடுகளுக்குக் கொம்பு முளைக்க அருளியதாக புராண வரலாறு கூறும். இறைவனுக்கும் இறைவிக்கும் தனித்தனி கோவில் எதிரெதிரே உள்ளது. அம்பிகை ‘முத்தை வென்ற முறுவலாள்’ கோவிலுக்குத் தென்பக்கம் வட்டப்பாறையம்மன் சந்நிதி உள்ளது. சிக்கலான வழக்குகளில் மக்கள் அன்னையின் சந்நிதியில் சத்தியம் செய்யச் சொல்லி தீர்ப்பு காண்பார்களாம். பொய்ச் சத்தியம் செய்தால் பாறையிலிருந்து பாம்பு வந்து கடித்துவிடும் என்பது மக்கள் நம்பிக்கை.

கோலியனூர் பிட்லாயம்மன்
விழுப்புரம் - பாண்டி ரோட்டில் உள்ள கோயில் இது. இந்த வட்டாரத்து மக்களின் பிரார்த்தனைத் தலம் கோலியனூர். சக்தி வாய்ந்த மாரியம்மன் இவள். ஆள் உயரத்துக்கு பாம்புப் புற்று கோவிலினுள் உள்ளது. அதில் பெரிய நாகங்கள் இருந்து பக்தர்கள் வைக்கும் பால், முதலியவற்றை அருந்துமாம். ஆடிவெள்ளி, தைவெள்ளி என்றால் அக்கம்பக்கத்து ஜனங்கள் திரண்டு வந்து தரிசனம் செய்யாமல் இருக்க மாட்டார்கள்.

செங்கழுநீர் அம்மன் (புதுவை)
பாண்டிச்சேரியில் வீராம்பட்டணத்து கடற்கரையோரம் கொலு வீற்றிருக்கும் இச் சக்தியும் சமயபுரத்தாள் போல பக்தர்களைக் கவருபவள். மாசி மகம் உற்சவம் என்றால் மக்கள் வீராம்பட்டினம் செல்லாமல் இரார். அழகிய புராதனமான ஆலயம் ஆழியின் கரையிலே உள்ளது.

பட்டீச்வரம்
பிறப்பில் வேதியனாகவும், பதவியில் அமைச்சராகவும், குணத்தில் உயர்ந்தவராகவும், தவத்தில் சிறந்தவராகவும், தர்மத்திற்கு இருப்பிடமாகவும் விளங்கிய உத்தமர் ஐயன் என்று மக்கள் உணர்ந்த ஸ்ரீகோவிந்த தீக்ஷிதர். பக்தியில் ஆழ்ந்து திளைத்த தலம் பட்டீச்வரம். கும்பகோணத்துக்குத் தென்மேற்கே நான்கு மைல் தொலைவில் உள்ள அழகு கொழிக்கும் அம்பிகைப் படிவம் இது. கும்பகோணத்து (மங்களாம்பிகை) மந்திர பீடேச்வரியிடம் ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும், பட்டீச்வரத்தில் பற்று மிகுந்து அன்னையின் அருளிலே மூழ்கினார். அன்னை ஞானாம்பிகையாக தவமிருந்து கருணைக்கடலான பரமசிவத்தை மணாளனாக அடைந்த பதி இது.

திருமயிலை கற்பகம் (சென்னை)
இறைவி மயிலுருக் கொண்டு இறைவனை வழிபட்ட தலம் திருமயிலை என்னும் மயிலாப்பூர். கற்பகாம்பாள் கடைக்கண் நோக்கிற்கு ஆளாகும் பேறு பெற்றவர்கள் பாக்கியசாலிகள். இறந்த பூங்கோதையையே உயிர் பெற்றுவரத் துணை செய்த கடைக்கண்ணையுடையவள் இவ்வன்னை. பாடல் பெற்ற பழம் பெரும்பதி.

மாங்காடு
சென்னை பூந்தமல்லிக்கு அருகேயுள்ள அற்புதமான சக்தித்தலம் இது. ஆதிசங்கரரே ‘அர்த்த மேருவை’இங்கு பிரதிஷ்டை செய்ததாகக் கூறுகின்றனர். தவத்தின் பயனாக எந்தப் பராசக்தி அடையப்படுகிறதாக வேத உபநிஷதங்கள் கூறுகின்றனவோ, அந்தத் தவப்பயனான அன்னையே இங்கு ஐந்து பக்கமும் அக்னி சூழ ஒற்றைக் காலில் நின்று தவமியற்றுகிறாள். ‘ஒற்றைக் காலில் நின்று சாதிக்கிறாள்’ என்பது வழக்கு. அன்னை இவ்வாறு உலகம் உய்ய தவக் கோலம் பூண்டிருக்கிறாள். பக்தர்களுக்கு விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுக்கிறாள்.

திருவேற்காடு
கருமாரியம்மன் கோயில் சமீப காலத்தில் பிரபலமாகி ஞாயிறுதோறும் மக்கள் திரள் திரளாகக் கூடுகின்ற அருள் விளங்கும் அற்புதத் தலம் இது. பலன் கண்டவர் மீண்டும் மீண்டும் செல்வது இயல்புதானே? சென்னையைத் தலமோங்கு க்ஷேத்ரமாக்கும் பதிகளில் இதுவும் ஒன்று.

பெரியபாளையத்தாள்
‘ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை’ என்று அபிராமி பட்டர் கூறியதுபோல், அகில உலகத்தாய் ஊருக்கு ஆத்தாளாக இருப்பதில் என்ன வியப்பு உள்ளது? பெரிய பாளையம் என்னும் ஊரைத் தெரியாத சென்னையும் அதன் சுற்றுப்புரத்து வாசிகளும் இல்லை எனலாம். “மகமாயி! தாயே!” பெரியபாளையத்தாளே! ‘பாடைக்கட்டி’ எடுத்து வந்து போடுகிறேன். பொங்கலிடுகிறேன். இளநீர் கண்திறக்கிறேன்” என்று பலவிதமாக பிரார்த்தனைகள் செய்யும் தலம் இது. எது பொய்த்தாலும் பெரியபாளையத்தாள் அருள் பொய்க்காது.

கனகதுர்க்கை
விஜயவாடாவில் கிருஷ்ணா நதி ஸ்நானமும், கனக துர்க்கையின் தரிசனமும் பரம பாவனம். சண்டிகாதேவியே இங்கு கோயில் கொண்டிருக்கிறாள். அன்னைக்கு பிரார்த்தனை செய்து கொண்டு வஸ்திரங்கள் ஏராளமாகப் அளிக்கின்றனர். அவற்றை ஏலத்தில் எடுத்து அன்னையின் நினைவாக உடுத்துவோரும் உண்டு. சிறு குன்றில் ரமணீயமான சூழ்நிலையோடு விளங்குகிறது துர்க்கை க்ஷேத்திரம்.

ஸ்ரீ சாரதாதேவி
சிருங்கேரியின் ப்ரதான தேவி அன்னை சாரதாம்பாள். ஷண்மத ஸ்தாபனம் செய்த ஸ்ரீசங்கரர் மண்டனமிச்ரரை வாதில் வென்று அன்னை ஸரஸ்வதியின் அவதாரமான சரஸவாணி பின் தொடர வந்து கொண்டிருந்தாள். திரும்பிப் பாராமல் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை ஸ்ரீசங்கரருக்கு விதித்தாள் வாணி. கேட்டுக் கொண்டே வந்தவர் நூபுரத்து ஓசை நிற்கவே திரும்பினார். அன்னை வாணி அங்கேயே நின்று விட்டாள். கர்ப்பமுற்றுத் திணறும் தவளையொன்று வெயிலின் தாபம் தாங்காமல் தவித்தது. அதை, இயல்பாக பகைக் குணம் கொண்ட பாம்பொன்று படமெடுத்து நிழலளித்துக் காத்ததைக் கண்டார். ஆனந்தமான துல்லிய படிக நீரோடும் துங்காவின் கரையில் வெள்ளைத் தாமரையில் வெள்ளைப் பணிபூண்டு, வெள்ளை உள்ளம் கொண்டோர் உள்ளத்தே விளங்கும் வாணிக்கு பீடம் அமைத்தார். புகழ் ஓங்கு பெரும் பீடமாக சிருங்கேரி ஆல்போல் தழைத்து இன்று விழுது விட்டு வளர்ந்து ஞானதாகம், வேதாந்தப் பசி, தவவேட்கை கொண்டோரைத் தன் நிழலில் அருளுடன் அணைக்கிறது.
சுற்றிலும் இயற்கை, வனாந்தரமும் மலையும், ஆறும் அன்னையின் ஆலயமும், வித்யாரண்யர் என்ற வித்தகப் பேரருளாளரின் கோயிலும் கண்ணையும் கருத்தையும் கவரும்.

குருக்ஷேத்திரம்
குருக்ஷேத்திரம் மலைவாச ஸ்தலமாகிய சிம்லாவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் மார்க்கத்தில் ‘அம்பாலா’ சந்திப்பின் வழியாக 112 கி.மீ. தொலைவில் உள்ளது. புராதனச் சிறப்பும் பெருமையும் கொண்டது இத்தலம். பாண்டவர்களுக்கும் துரியோதனாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மகா பாரத யுத்தம் இங்குதான் நடந்ததாகக் கூறுகிறார்கள். இவ்வூரில் அநேக நீர்நிலைகள் உள்ளன. அந்நிலைகளில் பல்லாயிரக்கணக்கான அழகிய செந்தாமரைப் பூக்களும் வெண் தாமரைப் பூக்களும் பூத்து நிரம்பிக் கிடக்கின்றன. இது காண வேண்டிய காட்சிகளில் அருமையான ஒன்றாகும். யுத்தத்தில் ஈடுபட்டு மாண்ட போர் வீரர்களே இப்படி மலர்களாக மலர்ந்திருப்பதாக அழகான கலா ரசனையோடு கூறப்படுகிறது.
இங்கு நீராட வேண்டிய முக்கிய தடாகமாகிய புஷ்கரம் தாமரை மலர்கள் நிறைந்து தாமரைக்குளமாகக் காட்சியளிக்கிறது. தரிசிக்க வேண்டிய இறைவர் “தானேச்வர மகாதேவ்” இறைவி ஸ்தாணுப் பிரியை. இது ஒரு சக்தி பீடமாக விளங்குகிறது.

சோமநாதம்:
பன்னிரு ஜோதிர்லிங்க க்ஷேத்திரங்களில் ஒன்றான சோமநாதம் பிரபாச க்ஷேத்திரம் என தேவிக்குரிய படிவத்தில் புகழ் பெற்றது. சந்திரபாகா என்றும் இத்தேவியைக் கூறுவர். தக்ஷனால் ஏற்பட்ட சாபம் நீங்க சந்திரன் உபாசித்த தலமாகக் கருதப்படுகிறது.

ஜ்வாலாமுகி: 
பஞ்சாப் அம்பிகையின் நாக்கு விழுந்த இடமாகக் கூறப்படும் இத் தலத்து தேவி அருவுருவாக அக்னி ரூபமாக விளங்குகிறாள். எந்தப் பொருளை நெருப்பில் போட்டாலும், அது அப்பொருளைத் தன்மயமாக்கிவிடுகிறது. இது இன்றும் காணும் உண்மை. எப்பொருளையும் தன்மயமாக்கும் அக்னி வடிவம். அன்னையும் எவ்வுயிரையும் தன் மயமாக்குகிறாள் என்று கூறாமல் விளக்குகிறது இப்பதி. அக்னியின் ஜ்வாலைக்கு (தீநாக்குகள்) பூஜை நடக்கிறது. கர்ப்பக் கிருஹத்தின் பல இடத்தில் சுடர்விட்டு எரியும் தீயை இன்றும் காணலாம். தங்கக் கூரை வேய்ந்த இத்தலம் காங்கரா ஜில்லாவில் மலைகளின் இடையே விளங்கி பாரதத்தின் ஆன்மிகச் சுடர் இன்றும் கொழுந்து விட்டு இன்றும் எரிகிறது என்பதை நினைவூட்டுகிறது.
இங்கேயேதான் வஜ்ரேச்வரியின் ஆலயமும் இருக்கிறது. பதான் கோட்டிலிருந்து பஸ்கள் இக்கோயில் வரை செல்லும்.
காச்மீரம் விவேகானந்தரை மிகவும் கவர்ந்தவள் அன்னை க்ஷீர பவானி. காச்மீரத்து ஸ்ரீநகரிலிருந்து பத்து, பதினைந்து மைல்கள் சென்று ‘துலாமுலா’ என்ற இடத்தை அடையலாம். நான்கு புறமும் ஜலத்தால் சூழப்பட்ட தீவின் மத்தியில் மரத்தடியில் உள்ளது ஒரு குளம். இங்குள்ள மண்டபத்திலே ஸ்ரீ சங்கரரும், பவானியும் அமைந்துள்ளனர். இத்தீர்த்தத்தையே தேவியாகக் கருதி பூஜை செய்கின்றனர்.

சிவப்பு, பச்சை, வெண்மை என்று இக்குளத்து நீர் தன் நிறத்தை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் என்கின்றனர்.
கருமையாகக் காணப்பட்டால் சம்பவிக்க இருக்கும் கெடுதலைக் குறிக்கும் என்று நம்புகின்றனர்.

வைஷ்ணவி ஜம்முவிலிருந்து ‘காட்ரா’ வரை பஸ் செல்லும். பிறகு நடந்து சுமார் 15கி.மீ. மலை ஏற்றம், பாணகங்கை என்ற சிற்றாறு ஓடுகிறது. குகைவாசியாக வைஷ்ணவி தேவி இங்கு உயர்ந்த இடத்திலிருந்து பாரதத்தைக் கண்காணிக்கிறாள்.

சிறுவாயிலாக இருக்கின்ற நுழைவாயிலானதால் முதலில் தவழ்ந்துதான் உள்ளே செல்லமுடியும். நல்ல ஐதீகம். அன்னையிடம் மண்டியிட்டுத் தவழ்ந்து குழந்தை உள்ளத்தோடுதான் வரவேண்டும் என்பதற்குத் தகுந்த அத்தாட்சியுடன் கொலுவிருக்கிறாள். தனக்கு அளிக்கப்படும் காணிக்கையில் ஒரு பகுதியைப் பிரசாதமாக அளித்து அருளுடன் பொருளும் பெருக பக்தனை ஆசீர்வதிக்கிறாள் அன்னை.

ஹரித்வாரம் மோக்ஷபுரிகளில் ஒன்றான மாயாபுரி என்னும் ஹரித்வார் யாத்திரிகர்களின் மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் விளங்குகிறது. அன்னை கங்காதேவியின் அரவணைப்பினால் அது பேராதவு பெற்றிருக்கிறது. மாலை நேரத்தில் அன்னை கங்கைக்கு இலையிலே கப்பல் போல் செய்து ‘ஹாரதி’ பாடி தண்ணீரில் மிதக்க விடுவது இங்கு கண்கொள்ளாக் காட்சி. எளிய பிச்சைக்காரன் முதல் பெரும் தனவந்தர் வரை இதை சக்திக்குத் தகுந்தவாறு செய்யாமல் இருப்பதில்லை. கரையிலே ஆங்காங்கே புராணங்கள், கதை முதலியனவற்றைப் பிரசாரம் செய்வதைக் கேட்கக் கூடியிருக்கும் ஜனங்களைப் பார்த்தால் இது பூலோகமா கயிலாயமா என ஐயம் தோன்றும்.
கேதாரம்கேதாரத்தின் அன்னை உலகுக்கு வழிகாட்டும் அன்னையாக ‘மார்க்க தாயினி’ என்ற பெயருடன் விளங்குகிறாள். ஆறுமாதம் பனியினால் மூடியிருக்கும் கோயில். எளிதில் அடையமுடியாத ஒரு படிவம். சிலரே இதைக் காணும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
பத்ரிநாத்நர - நாராயணர் தவமிருந்த புனிதமான பத்ரிகாச்ரமம் வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் பிரதானமாக விளங்குகிறது.
நர - நாரணர்களின் தவத்தைக் கெடுக்க இந்திரனால் தேவமாதர் பலர் அனுப்பப்பட்டனர். ஆனால் தெய்விகத் தவச்ரேஷ்டர் துடையைத் தட்டினாராம். அதிலிருந்து அதிஸௌந்தர்யமான பெண் தோன்றினாளாம். வந்த அரம்பையர் வெட்கிச் சென்றனராம். அப்பெண் ‘ஊரு’ (தொடை)விலிருந்து தோன்றியதால் ஊர்வசி என்று போற்றப்படுகிறாள்.
இப்படியே நேபாளத்திலும் இன்னும் பல பிரதேசங்களிலும் பராசக்தியானவள் பிரசித்தமாக விளங்கி அருள் பாலிக்கிறாள்.

Saturday, August 12, 2017

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!



ஹேவிளம்பி,ஆடி மாதத்தின்  தேய்பிறை அஷ்டமி 14.8.2017 திங்கட்கிழமை மாலை 6.15 முதல் 15.8.2017 செவ்வாய்க்கிழமை மாலை 4.03 வரை வருகின்றது; 

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை துதிக்கலாம்;இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

செவ்வாய்க்கிழமை ராகு காலம் மதியம் 3 முதல் 4.30 வரை

செவ்வாய்க்கிழமை குளிகை காலம் மதியம் 12 முதல் 1.30 வரை



இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,ரிஷபம் ,சிம்மம் ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:
1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்
2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)
3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)
4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்
5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)
6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)
7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)
8. சிதம்பரம்
9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை
10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை
11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்
12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)
14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6
15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455
16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)
18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்
19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்
20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)
21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)
22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்
24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
26.26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை
33.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)
34.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
35.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

36.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

37. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;
இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;
ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
அல்லது
ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ
அடுத்த தேய்பிறை அஷ்டமி:

ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி13.9.2017 புதன்கிழமை அன்று வர இருக்கின்றது;;

இந்த நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலயங்கள் பழமையான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் ஆகும்;இவைகள் அளவற்ற வரங்களை அனைத்து மக்களுக்கு அள்ளித் தந்து கொண்டிருக்கின்றன;