எதிர்வரும் திங்கட்கிழமையன்று பிரதோஷம் அமைந்திருக்கிறது.இந்த அபூர்வநாளில் வரும் பிரதோஷ நேரமான( மாலை 4.30 முதல் 6.00 மணி) ஒரு முகூர்த்தத்தை ஓம்சிவசிவஓம் ஜபிக்கப் பயன்படுத்துவோம்.
சனிப்பிரதோஷம் எவ்வளவு அபூர்வமானதோ,அதேபோல திங்கட்கிழமையன்று வரும் சோமவாரப்பிரதோஷமும் அபூர்வமான அரிய ஆனால்,சக்திவாய்ந்த பிரதோஷம் ஆகும்.இந்தப் பிரதோஷ நேரத்தில் இந்த பிரபஞ்சத்தையே இயக்கும் சதாசிவனிடம் நாம் கேட்கும் வரம் கிடைக்கும் என்பது ஐதீகமான நம்பிக்கை ஆகும்.அதை நாம் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதன் மூலமாக உணருவதற்கு ஒரு சந்தர்ப்பமாக இந்த சோமவாரப் பிரதோஷம் வந்திருக்கிறது.
இந்த சோமவாரப்பிரதோஷ நாளில்,பிரதோஷ நேரத்தில் நாம் பின்வரும் மூன்று வழிமுறைகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றி சிவகடாட்சம் பெறமுடியும்.யாருக்கு என்ன வழிமுறை ஒத்துவருமோ,அந்த வழிமுறையைப் பின்பற்றி,ஓம்சிவசிவஓம் ஜபியுங்கள்:
முதலாவது :பழமையான சிவாலயம் ஒன்றில் மாலை 4 மணிக்கே சென்று ஒரு தனிமையான இடத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.அங்கே,நீங்கள் வழக்கமாக வீட்டில் ஜபிக்கப் பயன்படுத்தும் மஞ்சள் துண்டினை விரித்து வைத்துக்கொள்ளவும்;நெற்றியிலும்,மார்பிலும்,வயிற்றிலும் சிவச்சின்னமாம் விபூதியை பூசிக் கொண்டு,மாலை சரியாக 4.30க்கு அமரவும்.மாலை 6.00 மணிவரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கவும்.
இரண்டாவது:ஏதாவது ஒரு மலைக்கோவிலைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.அது பெருமாள் கோவிலாக இருந்தாலும் சரி;முருகன் கோவிலாக இருந்தாலும் சரி:அம்மன் கோவிலாக இருந்தாலும் சரி:சிவாலயமாக இருந்தாலும் சரி: மாலை 4.30 முதல் மாலை 6 மணிவரையிலும் அங்கே தனிமையான,தொந்தரவில்லாத இடத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கவும்.(உயரமான இடத்தில்,சோமவாரத்தில்,பிரதோஷ நேரத்தில் எந்த மந்திரம் ஜபித்தாலும்,அதன் பலன் விரைவாக நம்மை வந்தடையும்)
மூன்றாவது:விடுமுறை எடுக்க இயலாதவர்கள் அலுவலகத்திலும்,பர்மிஷன் வாங்க முடிந்தவர்கள் வீட்டிலும் இதே நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.
ஓம்சிவசிவஓம் நாம் ஒவ்வொருவரும் 1,00,000 தடவை(ஆறு மாதத்திற்குள்) ஜபிப்போம்;சிவபெருமானின் பரிபூரண ஆசியைப் பெறுவோம்;நமது கர்மவினைகளை அடியோடு போக்கி,கடன் இல்லாமலும்/நோய் இல்லாமலும்/எதிரிகள் இல்லாமலும்/கர்மநோய் இல்லாமலும்/மனக்குறையில்லாமலும் நிம்மதியும்,செல்வச்செழிப்போடும் வாழ்வோம்!!!
ஓம்சிவசிவஓம்
வாழ்க வளமுடன்!!!
ReplyDeleteவாழ்க வளமுடன்!!!
வாழ்க வளமுடன்!!!
ஓம் சிவ சிவ ஓம்