Sunday, October 23, 2011

ஐப்பசிமாத அமாவாசையை(26.10.11) பயன்படுத்துவோம்!!!



ஆத்மாக்காரகனாகிய சூரியன்,நீசமாவது துலாம் ராசியில்! துலாம் ராசியில் சூரியன் பயணிக்கும் மாதமே ஐப்பசி மாதம் ஆகும்.இந்த ஐப்பசி மாதத்தில் சூரியனும் சந்திரனும் சேரும் நாளே தீபாவளிப்பண்டிகையாகும்.

தீபாவளிப்பண்டிகையின் சிறப்பை பல வலைப்பூக்களிலும்,தினசரிகளிலும் எழுதிக்குவித்திருப்பார்கள்.நாம் வழக்கம் போல் இந்த தீபாவளியன்று பிரம்ம முகூர்த்த நேரமான விடிகாலை 4.30க்கு முன்பே தூங்கி எழுந்து,4.30க்குள் தயாராகிவிடுவோம்.
எதுக்கு?

ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கு!

தீபாவளியை ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு ஆரம்பித்தால்,அடுத்த தீபாவளிக்குள் நமது வாழ்க்கையில் சகல செல்வங்களும்,யோகங்களும் கிடைத்துவிடும்.

ஆத்மாக்காரகன் சூரியனும்,மனக்காரகன் சந்திரனும் சேரும் நாளில் புதிதாக ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;

பல்வேறு காரணங்களால் ஓம்சிவசிவஓம் தொடர்ந்து ஜபிக்க முடியாமல் விடுபட்டுப்போனவர்கள்,மீண்டும் ஜபிக்க ஆரம்பிப்பது உத்தமம் ஆகும்.

இந்த நாளில் ஒரு மணிநேரத்துக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்களுக்கு,இதுவரையில்லாத வகையில் புதிய தெய்வீக உணர்வு உண்டாகும்.ஏனெனில்,சூரியனுக்கு நேர் எதிரே மேஷ ராசியில் குரு பகவான் இருக்கிறார்.அவரது ஆசியோடும்,குருவின் குருவாகிய பிரபஞ்சகுரு ஆதி பைரவரின் ஆசியும் இன்று ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்களுக்குக் கிடைக்கும் என்பது சத்தியம்.

ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்போமா?


No comments:

Post a Comment