Wednesday, October 19, 2011

பிறரது உணர்வுகளை மதித்த ஈ.வே.ரா.


    
ஒருமுறை குன்றக்குடி அடிகளார் ஈ.வே.ரா.வின் வீட்டுக்கு வந்தார்.அவரை வரவேற்பதற்கு ஏற்பாடுகள் செய்தார் ஈ.வே.ரா.அதன் ஒரு பகுதியாக, தனது வீட்டின் முகப்புச் சுவற்றில் எழுதப்பட்டிருந்த, “கடவுளை நம்புகிறவன் முட்டாள்” என்ற வாசகங்களை அழிக்கச் சொன்னார்.மேலும்,குன்றக்குடி அடிகளார் வரும்போது தன்னோடு இருக்கும் எவரும் கடவுள் இல்லை என்ற கோஷம் போடக்கூடாது என கண்டிப்பான உத்தரவிட்டார்.

அடிகளார் ஈ.வே.ரா.வின் வீட்டுக்கு வந்து சாப்பிடத் தயாரானார்.சாப்பிடும் முன்பு முகம் கழுவினார்.அப்போது விபூதி எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தார் ஈ.வே.ரா.குன்றக்குடி அடிகளார் தனது வீட்டுக்கு வருகைதருவது உறுதியானதும்,அவர் வருவதற்கு முதல் நாளே விபூதி வாங்கி வைத்துக்கொண்டார்.

கடவுள் இல்லை;கடவுள் இல்லவே இல்லை;கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி என்ற கொள்கையை தமிழ்நாடு முழுவதும் பரப்புவதற்காகவே திராவிடர்க் கழகம் நடத்திய ஈ.வே.ராமசாமி விபூதி கொடுத்ததும்,குன்றக்குடி அடிகளார் அதிர்ச்சியடைந்தார்.
“என்ன நீங்களா திருநீறு கொடுக்கிறீர்கள்? என்று வியப்புடன் கேட்டார்.

“எனது கொள்கை என்பது வேறு;எனது வீட்டுக்கு வந்துள்ள விருந்தினர் நீங்கள்.உங்கள் உணர்வுகளை நான் மதிக்க வேண்டும்.அதுதான் தமிழ் நாகரீகம்” என்றார் ஈ.வே.ரா.
நன்றி:தினமலர் வாரமலர் பக்கம் 3,25.9.11

ஆன்மீகக்கடலின் கருத்து: ஆக பகுத்தறிவின் தந்தையாகிய ஈ.வே.ராமசாமிக்கு தமிழ் நாகரீகம் தெரிந்திருக்கிறது.அவரது வாரிசுகள் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தமிழ் நடிகர்கள்,கட்சித்தலைகளுக்கு இந்த காமன் சென்ஸ் சிறிதும் இல்லை;திரும்பத் திரும்ப தமிழ் நாகரீகமாம் இந்து நாகரீகத்தை அவமதிப்பதை பெருமையாக நினைக்கின்றனர்.
மன்சூர் அலிகான் தனது திரைப்படம் ஒன்றின் துவக்க விழாவில் குத்துவிளக்கை விதவையை வைத்து ஏற்றியும்,பூனையை குறுக்கே ஓட விட்டும் துவக்கி வைத்தா.
நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு பகுத்தறிவுச்சுடர் என்று நினைப்பு வேறு.நமது புராதனமும் விஞ்ஞான சூட்சுமங்களும் நிறைந்த இந்துதர்ம மரபுகளைக் கேலி செய்வதும்,கிண்டல் செய்வதுமாக தனது நகைச்சுவையை பலமுறை அமைத்திருக்கிறா.
ஈரோட்டில் பிறந்திருக்கிறோம் என்ற ஒரே பெருமைக்காக சத்தியராஜின் படங்களில் நாத்திகம் ஓவர்.அதற்கு ஒவ்வொன்றிற்கும் விஞ்ஞான விளக்கமும் சாஸ்திர அறிவும் உண்டு.அதில் ஒரு சதவீதம் கூட சத்தியராஜீக்குத் தெரியுமா?ஆனால்,இவர்களெல்லாம் இந்துதர்மம் அல்லாத பிற மதங்களை கேலியே செய்ய முடியாது.
1990களில் ஒரு புது இயக்குநர் ஒரு திரைப்படம் இயக்கினார்.அந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை;அவரது திரைக்கதையின் மையக்கரு: ஒரு கன்னியாஸ்திரி காதல் வசப்படுகிறாள்.இந்தக் கதையானது,படவெளியீட்டின்போது பத்திரிகைகளில் வெளிவந்ததால்,இந்தப்படம் வெளிவரவில்லை.
அந்தளவுக்கு தமிழ்நாட்டின் கிறிஸ்தவசமுதாயம் எதிர்ப்பைத் தெரிவித்தது.விளைவு? படம் வெளியாகும் முன்பே பெட்டிக்குள்!!!
இந்தியாவில் இஸ்லாமியர்களும்,கிறிஸ்தவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகின்றனர்.இப்படி ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு இந்தியாவுக்கு வெளியே பல நாடுகளிடமிருந்து ஆதரவு கிடைத்துக்கொண்டே இருக்கிறது.ஆனால்,இந்துக்கள் இந்து என்று ஒருங்கிணைவது கிடையாது;இதுதான் இந்தியா வல்லரசாகாமல் தடுக்கிறது.காஷ்மீர் பிரச்னை,வடகிழக்கு மாநிலங்களில் பங்களாதேஷத்துக்காரர்களின் ஊடுருவல்,நக்சலைட் பிரச்னை,இலங்கைத் தமிழர்கள் பிரச்னை என அனைத்துப் பிரச்னைகளும் இந்தியாவையும்,நமது ஒவ்வொரு குடும்பத்து வருமான உயர்வையும் தடுத்துவருகிறது.இதை நாம் உணர்வதுமில்லை;புரிந்துகொள்வதுமில்லை;

ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. உண்மைதான் நம்மவருக்கு ஒற்றுமையில்லை.

    ReplyDelete