Wednesday, March 3, 2010

விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட திருஅண்ணாமலையின் பழமை


விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்ட திருவண்ணாமலையின் பழமை

திருவண்ணாமலையின் வயது 360 மில்லியன் வருடங்கள் ஆகின்றன என்பதை புவியியல் வல்லுநர்கள் இங்கு வந்து ஆராய்ந்து கூறியுள்ளனர்.அதே சமயம்,கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் அஷ்ட(8)லிங்கங்களின் வயது 3000 ஆண்டுகளாகும்.

கி.பி.2000 க்குப்பிறகு நடந்த ஒரு புவியியல் ஆராய்ச்சிப்படி,அஷ்ட லிங்கங்களும் தத்தம் திசைக்கு நேராக அமையவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது கிழக்குத் திசையின் அதிபதியான இந்திர லிங்கம் துல்லியமாக கிழக்குத்திசையை நோக்கி அமையவில்லையாம்;

தென்கிழக்குத் திசையின் அதிபதியான அக்னிலிங்கம் துல்லியமாக தென்கிழக்கு திசையை நோக்கி அமையவில்லையாம்;

தென் திசையின் அதிபதியான எம லிங்கம் துல்லியமாக தென் திசையை நோக்கி அமையவில்லையாம்;

தென் மேற்கு திசையின் அதிபதியான நிருதி லிங்கம் துல்லியமாக தென் மேற்குதிசையை நோக்கி அமையவில்லையாம்;

மேற்கு திசையின் அதிபதியான வருண லிங்கம் துல்லியமாக மேற்கு திசையை நோக்கி அமையவில்லையாம்;

வடமேற்குதிசையின் அதிபதியான வாயுலிங்கம்

துல்லியமாக வடமேற்கு திசையை நோக்கி அமையவில்லையாம்;

வடக்கு திசையின் அதிபதியான குபேர லிங்கம்

துல்லியமாக வடக்கு திசையை நோக்கி அமையவில்லையாம்;

வடகிழக்கு திசையின் அதிபதியான ஈசான்ய லிங்கம்

துல்லியமாக வடகிழக்கு திசையை நோக்கி அமையவில்லையாம்;

சரி! 3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அஷ்ட லிங்கங்களை நிர்மாணித்த நமது முன்னோர்கள் முட்டாள்களா? இல்லை.இல்லவே இல்லை.இங்குதான் விஞ்ஞான ஆய்வு தேவைப்படுகிறது.

இந்த விஞ்ஞான புவியியல் ஆய்வின்படி,அஷ்ட லிங்கங்களும் தத்தம் திசையிலிருந்து 30 டிகிரி விலகியிருக்கிறது.ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை துருவ நட்சத்திரம் 10 டிகிரி நகரும்.அதன் அடிப்படையில் திசைகளின் போக்கும் பத்துடிகிரி விலகிப்போகும்.

இந்த வானியல் உண்மையின் அடிப்படையில்,அஷ்டலிங்கங்கள் தத்தம் திசையை விட்டு 30 டிகிரி வரை விலகி இருக்கிறது என்றால் அவை 3000 ஆண்டுகள் பழமையானது என்றுதானே அர்த்தம்.

No comments:

Post a Comment