சிறப்பான வாழ்க்கைக்கு சிறந்த வழிகள்
1.நீங்கள் மகிழ்ச்சியானவராக இருக்க விரும்புகிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டிய செயல் உங்களை நீங்களே நேசிக்கத் தொடங்குங்கள்.
2.வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களையும் வெற்றிபெறச் செய்யுங்கள்.உங்களுக்கான வெற்றி உங்களைத் தேடி வரும்.
3.கடந்த கால தோல்விகள் பயமுறுத்துமானால், நிகழ்காலமும் வருங்காலமும் தோல்வியாகிவிடும்.அதனால்,கடந்த காலத்தோல்விகளை வெல்ல வேண்டும்.
4.புண்பட நேரும்போது பொறுமையுடன் இருங்கள்.தகுந்த நேரத்தில் உணர்வுகளை,அமைதியாக புரியும்படி வெளிப்படுத்தி அதை சரிப்படுத்துங்கள்.
5.பணத்திற்காக, லாபத்திற்காகப் பழகுபவர்கள் நல்ல நண்பர்களாக இருக்க முடியாது.அவர்களை விட்டு நாசூக்காக (அவர்களுக்குத் தெரியாமல்) விலகி விடுங்கள்.
6.நம் மனதில் உள்ள குற்ற உணர்வுகள் நம் மகிழ்ச்சியைப் பாதிக்கும்.நாம் செய்துவிட்ட குற்றங்களுக்காக மனம் வருந்திப் பயனில்லை.அதிலிருந்து மீள முயற்சி செய்யுங்கள்.
7.கவலைகள் நம்முடைய உடலில் நோய்களை மட்டும் உருவாக்குவதில்லை.நமது வயதையும் மிகுதிப்படுத்திக் காட்டுகிறது.
8.ஆணவம் மிக்க மனிதனே பல இடங்களில் அடிமைப் பட்டுப் போகிறான்.
9.உங்களைப் பற்றி உண்மை அல்லாத ஒன்றை யாராவது கூறினால்,அதற்காக கோபப் படாதீர்கள்.ஒருவேளை அது உண்மையானதாக இருப்பின்,உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்.
10.கருத்துவேறுபாடு ஏற்பட்டுவிட்டால்,அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டுமென காத்திருக்காமல், நீங்களே முதலில் சென்று பேச்சைத் தொடங்குங்கள்.
11.நீங்கள் கூறுவது சரியாக இருந்தாலும் அதற்காக மற்றவர்களிடம் வாதாடாதீர்கள்.விவாதத்தை வெல்ல சிறந்த வழி அதைத் தவிர்ப்பதுதான்.
12.உங்கள் நெருங்கிய நண்பரைப் பற்றி பிறர் ஏதேனும் கூறினால்,அதை அப்படியே நம்பிவிடாமல் நேரடியாகப்பேசி உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.இல்லையென்றால் நட்பில் பிளவு ஏற்பட்டுவிடும்.
13.கருத்துவேறுபாடு இல்லாத குடும்பம் இருக்க முடியாது. அது மனித உறவுகளில் ஒரு அங்கம்.இருப்பினும், “நீ எப்போதும் அப்படித்தான்.உன்னை மாற்றவே முடியாது” என்பதுபோன்ற கடுஞ்சொற்களை பயன்படுத்தாதீர்கள்.(அது நிரந்தரப் பிரிவினையை உருவாக்கும்)
14.ஒருவனுடைய சிந்தனை,சொல்,செயல்,பழக்கவழக்கங்கள் தீயதாகவும், நய வஞ்சகமாகவும் இருக்குமானால் அவனிடமிருந்து தொடக்கத்திலிருந்தே விலகி விடுங்கள்.அல்லது அவனைப் புரிந்துகொண்ட உடனே விலகிவிடுங்கள்.
நன்றி:லட்சுமி இரவு உணவகம்.
நன்றி:தமிழ் லெமூரியா பக்கம் 59, 15.11.2009
No comments:
Post a Comment