Friday, March 12, 2010

இந்துக்குடும்பங்கள் எப்படி சிதைகின்றன?பாகம் 1


இந்துக்குடும்பங்கள் எப்படிச் சிதைகின்றன?உதாரணம்:1

எனதருமை ஆன்மீகக்கடல் வாசகர்களே! இங்கு நான் குறிப்பிடும் சம்பவங்கள் எனது உலகத்தில் கேள்விப்பட்டவை.இவை அனைத்தும் ஒரு தம்பதி எப்படி இருக்கக்கூடாது? என்பதை உங்களுக்குப் புரிய வைக்கவே இந்த விளக்கங்கள்.
இன்றைய காலகட்டத்தில் விலைவாசி படுவேகமாக உயர்ந்துவருகிறது.உழைக்கும் மனோபாவம்(ஒர்க்ஹார்லிக்) குறைந்துவருகிறது.இந்நிலையில் தமிழ்நாட்டில் பல குடும்பங்களில் தனது மகன் அல்லது மகளுக்குத் திருமணம் செய்வதைத் தாமதப்படுத்துவதை பல பெற்றோர்கள் ஒரு கொள்கையாகவே வைத்திருக்கின்றனர்.இது அந்த மகன் அல்லது மகளுக்குப் புரிவதில்லை.ஒரு உதாரணக்கதையைப் பார்ப்போம்:

ஒரு தம்பதிக்கு மூன்று மகன்கள்;மூத்தவன் தனது 37 ஆம் வயதில் அரசுப் பணியில் சேருகிறான்.இரண்டாமவன் சென்னையில் கனவுத்தொழிற்சாலையில் தனக்கென்று தனி இடம் பதிக்க தனது 20 ஆம் வயதில் போய்விட்டான்.மூன்றாமவன் இறுதியாண்டுப் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறான்.முதல் மகனின் வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க அவனது அம்மா அவனதுஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு தனது ஊரில் உள்ள எல்லா ஜோதிடர்களையும் போய்ப்பார்க்கும்.எப்போது தனது மகனுக்குத் திருமணம் நடக்கும்? என்று.ஆனால்,தானாகவே வரும் வரனை தந்திரமாக நிராகரித்துவிடும்.(ஏனெனில்,இந்தத் தம்பதிக்கு மகள் இல்லை.தவிர,இந்தத்தம்பதியில் கணவரும் அரசு ஊழியர்.அவர் தனது சம்பளத்தை வீட்டிற்குத் தருவதேயில்லை.இத்தனைக்கும் தனது கணவன் அரசுப்பணியில் சேருவதற்காக தனது தங்கத்தாலியையும்,தனது அத்தனை நகைகளையும் விற்று பணம் கொடுத்தவள் அந்த மகராசி!)
இந்நிலையில்,அந்தத் தம்பதியின் மூத்தமகன் கடுமையாக உழைத்து,ஒரு அரசுப்பணியில் சேர்ந்தான்.

நமது தமிழ்ச்சமுதாயத்தில் ஒருவன் அரசாங்கவேலைக்குப் போய்விட்டால்,அவனை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுவர்.அதுமட்டுமல்ல;அவனுக்கு தங்கத் தட்டில் தனது மகளை வைத்து மனைவியாகத் தரும் போக்கு இன்றும் இருக்கிறது.(ஏனெனில்,தனது மகள் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக செல்வச் செழிப்போடு வாழ்வாள் என்ற நம்பிக்கைதான்).

இதே ஊரில்,மேலே கூறிய தம்பதிவாழும் தெருவிற்கு ஐந்துதெருக்கள் தள்ளி,இன்னொரு தம்பதி! அவர்களுக்கு இரண்டே குழந்தைகள்.ஒரு ஆண்.ஒரு பெண்.ஆணுக்கு திருமணம் ஆகி பெங்களூரில் வாழ்ந்துவருகிறான்.அந்தப்பெண் பள்ளிஆசிரியை.
அந்தப்பெண்ணை தனது கண்ணின் மணியாக வளர்த்து வந்தனர்.அந்த பள்ளிஆசிரியை தனது ஐந்தாம் வகுப்பில் இருந்து எம்.பில்., முடிக்கும் வரை முதல் ரேங்க் எடுத்து வந்திருக்கிறாள்.அதனால்,அவளைப்புகழாத ஆளே கிடையாது.கலிகாலத்தில் பெண்ணையும்,மனைவியையும் அடிமையாக வைத்திரு என அர்த்தசாஸ்திரம் கூறுகிறது.
வழக்கம்போல,அந்த அரசு ஊழியராக இருப்பவரின் அம்மா ஒரு ஜோதிடரிடம் சென்று,எனது மகனுக்கு எப்போது கல்யாணம் நடக்கும்? என கேட்டிருக்கிறார்.அந்த ஜோதிடர், பள்ளிஆசிரியையின் அப்பாவின் நண்பர்.இந்த ஜோதிடர், தனது நண்பரின் மகளுக்கு திருமணம் செய்யுமாறு சில அரசியல் உள் வேலைகளை செய்துவிட்டார்.
திருமணமான 70 நாட்களில் 12 குடும்பப் பஞ்சாயத்து வைக்குமளவிற்கு தம்பதிகளிடையே மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது.முதலிரவன்று,அந்த பள்ளிஆசிரியை தனது அரசு ஊழியரைத் தொடவிட வில்லை.அன்று இரவே,அந்த பள்ளிஆசிரியை தனது கணவனிடம் கேள்வி கேட்டாள்:ஏன் உங்களால் ‘அது’ இல்லாமல் இருக்க முடியாதா?
பிறகென்ன இருவரும் நீதிமன்றத்தால் 3 ஆண்டுகளில் பிரிந்துவிட்டனர்.இதில்,குறிப்பிடத்தக்க விஷயங்கள் என்னவெனில்,அந்த பள்ளிஆசிரியை எவரையும் எடுத்தெறிந்து பேசுவது அதன் சுபாவம்.சுமார் 12 வருடக் கல்வியில் முதலிடம் பெற்றே இருந்ததால்,அதற்கு தனக்கு மிஞ்சிய ஆள் இல்லை என்ற குணம் வளர்ந்துவிட்டது.


அந்த பள்ளிஆசிரியையின் அப்பா ஒரு சர்வாதிகாரி.தனது ஒரேமகளிடம் ‘உனக்கு இந்த பையனைப்பிடித்திருக்கிறதா?’என்று கூட கேட்கவில்லை.மாறாக, ‘நான் சொல்லுற பையனைத் தான் நீ கட்டிக்கணும்(திருமணம் செய்யணும்)’என மிரட்ட, பாவம் அந்த அரசு ஊழியர்.



மறுபக்கம், அந்த அரசு ஊழியருக்கு நெருங்கிய நண்பர்களே 3 அல்லது 4 பேர்கள்தான்.இந்த அரசு ஊழியர் தான் பெண் பார்க்கச் செல்வதை தனது நெருங்கிய நண்பனிடம் கூட சொல்லவில்லை.சொல்லாமல், பெண் பார்க்கச் சென்றது முதல் தவறு.போன இடத்தில்,பெண் வீட்டாரும்,மாப்பிள்ளை வீட்டாரும் அவனை பெண்ணிடம் தனியாகச் சென்று பேசு என்று வற்புறுத்தியும் பேசவில்லை.
தனது நெருங்கிய நண்பர்களிடம் அந்த அரசு ஊழியர் என்ன சொன்னார் தெரியுமா?
‘மாப்ள எனக்கு இன்னிக்கு மாலை 5 மணிக்கு நிச்சயதார்த்தம்.வந்துரு.’
‘சரி,பொண்ணு யாரு?’
‘பள்ளி ஆசிரியை’
‘அவளா?’ என அதிர்ச்சியாக கேட்க, ‘ஆமா வந்துரு’ என அரசு ஊழியருக்கு பரம சந்தோஷம்.
‘டேய்,மாப்ள,அவளைப் போய் . . .’
‘அவ ரொம்ப நல்லவடா’
அதுக்குமேலே என்ன? மீதிதான் தெரியுமே!

ஒரு மணமகள் திருமணத்தின் இரவில்,தனது கணவனிடம் உங்களுக்கு ‘அது’ இல்லாமல் இருக்க முடியாதா? எனக் கேட்டால் அந்த மணமகள் எப்படிப்பட்டவளாக இருக்கமுடியும்.
பின்குறிப்பு:பெண் இனம்தான் இந்தபூமியை வாழ வைக்கும் இனம். உதாரணத்திற்காகத்தான் இந்த நிஜ சம்பவத்தை விவரிக்கிறேன்.இன்றைய காலகட்டத்தில்,பெண் இனம் எப்படியெல்லாம் சந்தர்ப்ப சூழ்நிலையில் மாறிவருகிறது என்பதை விவரிப்பதற்காக மட்டுமே இந்த நிஜ சம்பவம்.

No comments:

Post a Comment