Wednesday, March 10, 2010

பொதுவான ஜோதிடப்பலன்கள் 2010:பாகம் 2


பொதுவான ஜோதிடப்பலன்கள் 2010:பாகம் 2

11.8.2011 வரையிலும் பாம்புக்கிரகங்களான கேது மிதுன ராசியிலும்,ராகு தனுசு ராசியிலும் இருக்கும்.இவை ஒரு ராசியைக் கடப்பதற்கு 18 மாதங்கள் அதாவது ஒன்றரை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளுகின்றன.பாம்பு எப்படி வில்லங்கமோ அதே போல ராகு கேதுக்களும் வில்லங்கங்கள் தான்.
எப்படி ஜன்மச்சனியானது இரண்டரை ஆண்டுகளாக கன்னிராசியை இம்சிக்குமோ, அதே போல தனுசு ராசியை ராகுவும், மிதுன ராசியை கேதுவும் இம்சிக்கும்.
இம்சிப்பதில் சனிதான் முன்னணி என்றும் இல்லையில்லை ராகுவும் கேதுவும் தான் முன்னணி என்றும் ஜோதிடப்பட்டிமன்றங்களில் அனுபவம் மிக்க ஜோதிடர்கள் கடும் வாக்குவாதம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.அவர்கள் வாக்குவாதம் செய்யட்டும்.நாம் இங்கு தனுசு ராசிக்காரர்களுக்கும்,மிதுனராசிக்காரர்களுக்கும் சிறந்த விதமாக வழிகாட்டப்பார்ப்போம்;

மகர ராசியிலிருந்த ராகுவும்,கடக ராசியிலிருந்த கேதுவும் 27.10.2009 அன்று எதிர்க்கடிகாரச்சுற்றின் படி ராகு மகர ராசிக்கு முந்தைய ராசியான தனுசிற்கும்,கேது கடகத்தின் முந்தைய ராசியான மிதுனத்திற்கும் இடம் மாறிவிட்டனர்.
இதன்படி, தனுசு ராசிக்கு ஜன்ம ராகுவும், மிதுன ராசிக்கு ஜன்ம கேதுவும், விருச்சிக ராசிக்கு வாக்கு ராகுவும்(?!),ரிஷப ராசிக்கு வாக்கு கேதுவும் வந்துள்ளனர்.

மூலம்,பூராடம்,உத்திராடம் 1 ஆம் பாதத்தில் பிறந்த தனுசு ராசிக்காரர்கள் 11.8.2011க்குள் ஒரு முறையாவது காவல் நிலையம் அல்லது கட்டைப் பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு வாதியாகவோ பிரதி வாதியாகவோ சென்றாக வேண்டும்.அல்லது ஊரறிய ஒரு அவமானம் உருவாகும்.

மிருக சீரிட நட்சத்திரம் 3,4 ஆம் பாதங்கள்,திருவாதிரை,புனர்பூசம் 1,2,3 ஆம் பாதங்கள் மிதுன ராசிக்காரர்களை அடையாளம் காட்டுகின்றன.இவர்களுக்கு இதே நிலை உருவாகும்.

விருச்சிக ராசிக்காரர்கள் பெரும் வாயாடிகள்.எந்த ரகசியத்தையும் மனதிற்குள் பூட்டி வைக்கத் தெரியாதவர்கள்.இவர்கள் இந்த ஒன்றரை வருடங்களுக்கு வாயைப் பொத்திக் கொண்டிருப்பது அவசியம்.இல்லாவிட்டால், நீங்கள் யாரைப் பற்றியாவது ‘முதன்முதலில்’ புறங்கூறிக்கொண்டிருப்பீர்கள்.உங்களிடம் அதை மெய் மறந்து கேட்டுக்கொண்டிருக்கும் உங்களது சக நட்புவட்டத்தில் ஏதாவது ஒன்று(!) மட்டுமாவது நேராகப்போய் சம்பந்தப்பட்டவரிடம் மெய்யான கிண்டலை உங்களது கேலியை விலாவரியாக விவரித்துவிடுவார்.நீங்கள் எல்லோர் முன்பாகவும் அவமானப்படவேண்டியதுதான்.

இந்த அவமானத்தை எப்படி தடுப்பது? 11.8.2011 வரை தினமும் ஏதாவது ஒரு காளியம்மன் அல்லது அம்மன் கோயிலுக்குச் செல்லுதல் வேண்டும்.பேச்சை 99% அளவிற்குக் குறைக்க வேண்டும். இதனால்,உங்களுக்கு வர வேண்டிய அவமானத்தை 95% அளவிற்குக் குறைத்துவிடலாம்.
அபூர்வமாக, திருவாதிரை எனப்படும் ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பவர்கள் இரவு மிகவும் தாமதமாக சுடுகாட்டுப் பாதை வழியே செல்வதை தவிர்க்கவும்.இல்லாவிட்டால்,உங்களை சில வாரங்கள் மட்டுமாவது பேய் பிடிக்கும்.ஆண் எனில் பெண் பேயும், பெண் எனில் ஆண் பேயும் பிடிக்கும்.எனது ஜோதிட வாடிக்கையாளர் வட்டத்தில் திருவாதிரையில் பிறந்தவர்கள் சிலருக்கு பேய் பிடித்திருப்பதாக தமிழ்நாடு அளவில் தகவல்கள் தெரிவிக்கின்றன.(நான் அடிக்கடி கோவை,திருச்சி,நெல்லை,நாகர்கோவில்,சென்னை,பாலக்காடு,மதுரை,கோட்டயம்,பெங்களூரு,வேலூர், விருதுநகருக்கு ஜோதிடம் பார்ப்பதற்குச் செல்வதுண்டு) எனவே,எச்சரிக்கை! தவிர தெய்வ பக்தி நம்மை நமது சிரமங்களிலிருந்து பாதுகாக்கும்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்ன சூழ்நிலையோ,அதே நிலைதான் ரிஷப ராசிக்காரர்களுக்கும்! உங்களின் நெருங்கிய உறவினர்களில் ஏதாவது ஒரு அல்லது சில பெண்ணால் நீங்கள் மாந்தீரீக பாதிப்பிற்கு உள்ளாவீர்கள்.அந்த பாதிப்பு தெரியாமலேயே யார் என்ன கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிட்டும் அருந்தியும் மாந்தீரீக பாதிப்பில் சிரமப்படுவீர்கள்.அது தெரிந்தாலாவது தப்பிக்கலாம்.தெரியாவிட்டால்?

No comments:

Post a Comment