Wednesday, March 24, 2010

உங்கள் கடன் தீர ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது

உங்கள் கடன் முழுமையாகத் தீர ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.

14.4.2010 அன்று நமது தமிழ்வருடம் விக்ருதி பிறக்கிறது.14.4.2011 வரை நமது தமிழ்வருடம் விக்ருதியில் சில குறிப்பிட்ட நாட்களில்,சில குறிப்பிட்ட நேரங்கள் வரும்.அந்த நேரங்களுக்கு மைத்ர முகூர்த்தம் என்று பெயர்.இந்த நேரத்தை முறையாகப் பயன்படுத்தினால்,நமது கடன் முழுமையாகத் தீர்ந்துவிடும். எப்படி என்பதைப் பார்ப்போம்:

நான் ராமன் என்பவரிடம்15.7.2004 அன்று ரூ.1,00,000/-கடன் வாங்கியிருக்கிறேன்.வருடங்கள் பல கடந்தும்,என்னால் வட்டி மட்டுமே கட்ட முடிகிறது.எனக்கோ எரிச்சல்! உழைக்கும் சம்பளம் வட்டி கட்டவே சரியாகிவிடுகிறது என நான் நினைக்கிறேன்.எப்படி நான் இந்த ஒரு லட்ச ரூபாய்க் கடனை அடைப்பது?
கீழே ஜோதிடப்படி, மைத்ர முகூர்த்த நேரங்கள் கணிக்கப்பட்டு,தரப்பட்டுள்ளன.இந்தப்பட்டியல், சித்திரை 1,விக்ருதி வருடம் முதல் பங்குனி 30 வரை (கிறிஸ்தவத் தேதி 14.4.2010 முதல் 13.4.2011 வரை ) தரப்பட்டுள்ளன.இந்தப் பட்டியலில் வரும் நேரத்தில்,நான் ராமன் என்பவரை சந்திக்க வேண்டும்.நான் ரூ.1,00,000/-வாங்கினேன் அல்லவா? அதற்கு வட்டி மாதா மாதம் தந்துகொண்டிருக்கிறேன் என கூறியிருக்கிறேன்.இந்த நேரத்தில் அசலில் ஒரு பகுதியைக் கொண்டு சென்று,(உதாரணம் ரூ.5000/- அல்லது ரூ.10,000/-) ராமன் அவர்களிடம் கொடுத்து இந்த நேரத்தில் வரவு வைக்கச் சொல்ல வேண்டும்.இப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை மைத்ர முகூர்த்தத்தில் கடன் வாங்கியவரிடம் செலுத்திவிட்டால்,அதன்பிறகு,மீதிக் கடன் தொகை(ரூ95,000/- அல்லது ரூ.90,000/-) வெகு விரைவாக,வெகு எளிதாகத் தீர்ந்துவிடும்.
போன வருடம் விரோதி (14.4.2009 முதல் 13.4.2010 வரை) இதே போல், மைத்ர முகூர்த்தம் நேரப்பட்டியல் நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டோம்.இந்தப் பட்டியலைப் பயன்படுத்தியவர்கள் பலரது கடன்கள் தீர்ந்துள்ளன.(மொத்தம் 64 பேர்கள் எமக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ரூ2,00,000/- கடன் இருந்தது.இந்தக் கடன் தீர்ந்தது.ஒரே ஒருவருக்கு ரூ 1கோடி கடன் இருந்தது.இன்று அவருக்கு கடன் ரூ.20,00,000/-ஆகக் குறைந்துவிட்டது என மகிழ்ச்சிபொங்கிடக் கூறியுள்ளார்.)

விக்ருதி வருடத்தின் மைத்ர முகூர்த்தங்கள்:

14.4.2010 புதன் இரவு 7.45 முதல் இரவு 9.45 வரை

30.4.2010 வெள்ளி இரவு 7.50 முதல் இரவு 9.50 வரை

12.5.2010 புதன் காலை 4.17 முதல் காலை 6.17 வரை

27.5.2010 வியாழன் மாலை 5.48 முதல் இரவு 7.48 வரை

9.6.2010 புதன் காலை 6.54 முதல் காலை 8.54 வரை

24.6.2010 வியாழன் மாலை 3.02 முதல் மாலை 5.02 வரை
21.7.2010 புதன் மதியம் 1.50 முதல் மதியம் 3.50 வரை
7.8.2010 சனி காலை 6.00 முதல் காலை 6.40 வரை
7.8.2010 சனி காலை 10.40 முதல் மதியம் 12.40 வரை
7.8.2010 சனி மாலை 4.40 முதல் மாலை 6.40 வரை
7.8.2010 சனி இரவு 10.40 முதல் இரவு 12.40 வரை

17.8.2010 செவ்வாய் மதியம் 12.20 முதல் மதியம் 2.01 வரை

29.8.2010 ஞாயிறு இரவு 9.14 முதல் இரவு 11.14 வரை

14.9.2010 செவ்வாய் காலை 10.18 முதல் மதியம் 12.18 வரை

25.9.2010 சனி இரவு 7.28 முதல் இரவு 9.28 வரை

12.10.2010 செவ்வாய் காலை 8.50 முதல் காலை 10.50 வரை

23.10.2010 சனி மாலை 5.22 முதல் இரவு 7.22 வரை

8.11.2010 திங்கள் காலை 6.45 முதல் காலை 8.45 வரை

19.11.2010 வெள்ளி மாலை 4.05 முதல் மாலை 6.05 வரை
5.12.2010 ஞாயிறு காலை 5.25 முதல் காலை 7.25 வரை

16.12.2010 வியாழன் மதியம் 2.40 முதல் மதியம் 4.40 வரை

18.12.2010 சனி காலை 8.30 முதல் காலை 10.30 வரை
1.1.2011 சனி காலை 4.21 முதல் காலை 6.21 வரை

1.1.2011 சனி காலை 8.21 முதல் காலை 10.21 வரை

1.1.2011 சனி மதியம் 2.21 முதல் மாலை 4.21 வரை

1.1.2011 சனி இரவு 8.21 முதல் இரவு 10.21 வரை

13.1.2011 வியாழன் மதியம் 12.15 முதல் 2.15 வரை

28.1.2011 வெள்ளி நள்ளிரவு 1.37 முதல் விடிகாலை 3.37 வரை

9.2.2011 புதன் காலை 10.45 முதல் மதியம் 12.45 வரை

24.2.2011 வியாழன் இரவு 11.39 முதல் நள்ளிரவு 1.39 வரை
8.3.2011 செவ்வாய் காலை 9.53 முதல் காலை 11.53 வரை

9.3.2011 புதன் காலை 9.01 முதல் காலை 11.01 வரை

24.3.2011 வியாழன் இரவு 9.45 முதல் இரவு 11.45 வரை

5.4.2011 செவ்வாய் காலை 6.46 முதல் காலை 8.46 வரை

எனது ஆன்மீகக்கடல் வாசகர்களே! கடன் இல்லாத தமிழ்நாடு உருவாக வேண்டும் என்பது எனது ஆசை.இந்த ஆசையை நீங்களும் உங்களது லட்சியமாக்கிடலாம்.நீங்கள் பொதுச்சேவை செய்வதில் விருப்பம் உள்ளவராக இருந்தால்,இந்த வலைப்பூ பக்கத்தை மட்டும் பிரிண்ட் எடுத்து, பிட் நோட்டீஸாக 1000 அல்லது அதன் மடங்குகளில் அச்சடிக்கலாம்.அச்சடித்து,உங்கள் ஊரில் உள்ள பழமையான கோவில்களில் விநியோகம் செய்யலாம்.இதுவும் கூட ஒரு புண்ணியமான காரியமே!

சென்றவாரம்,(மார்ச் 3 ஆம் வாரத்தில்),ஜீனியர்விகடனில் வந்த ஒரு செய்தி என்னை கடும் கோபத்துக்கு ஆளாக்கியது.திருப்பூர் அருகே பள்ளிப்பாளையம் என்ற ஊரில் ஒரு சாதாரண குடும்பத்தினர், ஒரு கந்து வட்டி கும்பலிடம் கடன் வாங்கியிருந்தனர்.வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாததால்,அந்தக் குடும்பத்தின் பருவ வயதுப்பெண்ணை அந்த கந்துவட்டிகும்பல் கடத்திச் சென்றுள்ளது.கடத்திச் சென்று,அவளைக் கற்பழித்துள்ளது.அப்படிக் கற்பழித்ததை,வீடியோவாக எடுத்து,இணையதளத்துக்கு விற்றுள்ளது.இதை விடக் கேவலம் நம் தமிழ்நாட்டில் வேறு என்ன இருக்க முடியும்?
அது மட்டுமல்ல; அந்த கற்பழிக்கப்பட்ட, மானமிழந்தப் பெண்ணுக்கும்,குடும்பத்திற்கும் ஆதரவாகக் களமிறங்கிய அந்தப்பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரை அந்த கந்துவட்டிக்கும்பல் வெட்டிக் கொன்றுள்ளது.தமிழினத்தலைவர் கருணாநிதி ஆளும் தமிழ்நாட்டில் இதுதான் நடக்கும்போலும்.
என்னிடம் மட்டும் அதிகாரம் இருந்தால்,அந்த கந்துவட்டிக்கும்பலை வெறிநாய்களால் கடிக்க வைத்தே சாகடித்திருப்பேன்.அந்தப்பெண்ணைக் கெடுத்தவன்களின் பிறப்புறுப்பை வெட்டி எறிந்திருப்பேன்.இவன்களுக்கு ஆதரவாக எவன் வந்தாலும் அவனுக்கும் இதே கதிதான்.

2 comments:

  1. தங்கள் கருத்தை அமோதிக்கிறென். இத்தகைய செயலுக்கு அரசு சம்மபந்தபட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.

    ReplyDelete
  2. thanks for ur sharing...

    தங்கள் கருத்தை அமோதிக்கிறென்.

    ReplyDelete