இந்து மதத்தை சீர்திருத்த தனது சக்தியை செலவிடும் சன் டிவிக்கு நன்றி
2.3.2010 அன்று இரவு சன் டிவியின் செய்தித்தொகுப்பில் ஒரு முக்கிய செய்தி ஒளிபரப்பானது.
ஆனந்த ஸ்புரா என்ற பெயரிலும்,சுவாமி நித்யானந்தர் ஆசிரமம் என்ற அமைப்பிலும் பிரபலமான சுவாமி நித்யானந்தம் என்பவன் ஒரு சினிமா நடிகையுடன் படுக்கையில் இருக்கும் காட்சிகளை வெளியிட்டு “கடவுளும் சாமியார்களும் தேவையா? ,மக்களே சிந்திப்பீர்” என்ற வாசகங்களுடன் சன் டிவி வெளியிட்டது.இந்தக்காட்சியானது http://www.youtube.com/watch?v=KCNYbWvkAzc&feature=player_embedded என்ற முகவரியில் வீடியோவாக வந்துள்ளது.
பகுத்தறிவுப் பகலவன் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் கொள்கைகளை அப்படியே (இந்துமதத்தினை சீர்திருத்துவதில் மட்டும்) பின்பற்றும் சன் டிவி நிர்வாகத்தை நான் பாராட்டுகிறேன்.இந்த உலகம் இருக்கும்வரை இதுபோன்ற விழிப்புணர்வுச்செயல்களை தொடர்ந்து சன் டிவி செய்யும்படி நான் வேண்டுகிறேன்.
நான் ஏன் நாத்திகனானேன்? என்ற புத்தகத்தில் ஈ.வே.ராமசாமி நாயக்கர் சொல்லியிருப்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும்.
“வெளிநாட்டு மதங்களைப் பற்றி எனக்கு சிறிதும் கவலையில்லை;எனது மதமான இந்துமதம் பிராடுகளின் கையில் சிக்கி சீரழிந்து அழிந்து போய்விடக்கூடாது.பிராடுகளின் ஜாதியை நான் எதிர்த்தால்,நான் ஜாதி வெறியன் என்ற முத்திரைகுத்தப்படுவேன்.எனவே,பிராடுகள் யாரை காட்டி இந்து மக்களை ஏமாற்றுகிறார்களோ,அந்த யாரையே நான் எதிர்த்தால்தான் இந்து மக்களுக்கு விழிப்புணர்வு வரும்.அதனால்தான் நான் கடவுள் இல்லை என பிரச்சாரம் செய்கிறேன்”
ஈ.வே.ராமசாமியின் வழிவந்தவர்களல்லவா சன் டிவியின் கலாநிதிமாறனும்,தயாநிதிமாறனும்.இவர்கள் இந்துதர்மத்தை சீர்திருத்துவதற்காக தன்னால் ஆன முழுமுயற்சி (இது போன்ற போலி இந்துத்துறவிகளின் முகமூடியை கிழிப்பது) எடுப்பதற்கு ஆன்மீகக்கடலின் பாராட்டுக்கள்.தொடரட்டும் உங்களது இந்துதர்மத்தின் சீர்திருத்தப்பணி!!!
Yes iam also agree to SUN TV but they display one in Hindu that iam not agree to them, they publish cristian father also do this kind of thing, they are ready to show that file in TV ? no never they do it.
ReplyDeleteசன் டிவி என்ன முட்டாள் டிவியா? கிறிஸ்தவ பாதிரியார்களின் செக்ஸ் சேட்டைகளை வெளியிடுவதற்கு?
ReplyDeleteவெளியிட்டால் என்ன ஆகும் தெரியுமா? தமிழ்நாட்டின் அனைத்து கிறிஸ்தவர்களும் தி.மு.க.வுக்கு ஓட்டு போட மாட்டார்கள்.சன் டிவியில் பணிபுரியும் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஓரே நாளில் வேலையை ராஜினாமா செய்துவிடுவார்கள்.சோனியாவின் கோபத்துக்கு ஆளாகி சன் டிவியின் ஒளிபரப்பு லைசென்சே சில மாதங்களுக்கு கேன்சல் ஆனாலும் ஆச்சரியமில்லை.இங்கிருக்கும் கிறிஸ்தவ அமைப்புக்கள்,தனது தலையான வாடிகன்,அமெரிக்கா,இங்கிலாந்திடம் நீண்ட புகார் அளித்து சன் டிவியின் வெளிநாட்டு வர்த்தகத்தை நசுக்கும்.ஏன் அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் கறுப்புப் பட்டியலில்சன் டிவி இடம் பெறும்.அதோடு சன் டிவியின் ஆயுள் முடிந்துவிடும்.முடிவாக தயாநிதி மாறனின் மத்திய மந்திரி பதவி பிடுங்கப்படும்.
தமிழ்நாட்டின் அனைத்து கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களும் ஒரு நாள் அடையாள விடுமுறை விட்டு தனது கிறிஸ்தவ ஓட்டு பலத்தைக் காட்டி,திமுகவையும்,சன் டிவியையும் கிறிஸ்தவ சமுதாயத்தின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கச் செய்யும்.
இந்துக்களாகிய நாம்,நமது வர்த்தக ஜாம்பவான்களாகிய போத்தீஸ்,சென்னை சில்க்ஸ்,ஆரெம்கேவி,சரவணா ஸ்டோர்ஸ் ஒரே ஒரு கண்டன அறிக்கை சன் டிவியிடம் ஆஃப் த ரெக்கார்டாக சொல்லியிருப்பார்களா?அந்த இந்து உணர்வு நம்மிடம் இருக்கிறதா?