Wednesday, March 10, 2010

இந்திய விவசாயிகளை சாகடிக்கும் மான்சாண்டோ நிறுவனம்

பி.டி. பருத்தியால் கடும் இழப்பு; ஆந்திர விவசாயிகள் போர்க்கொடி
புதன், 10 மார்ச் 2010( 11:11 IST )


மான்சான்டோ, மகிகோ நிறுவனங்கள் விற்ற மரபணு பருத்தி விதைகளால் விளைச்சல் இல்லாமல் போனதால் கடனாளியாகி விட்டோம் என்று ஆந்திர விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மான்சான்டோ விதை நிறுவனம் இந்திய விவசாயிகளுக்கு மரபணு பயிர் விதைகளை விற்பனை செய்ய முடிவு செய்தது. இந்த மரபணு பயிர்களை பயிரிட்டால் விளைச்சல் அமோகமாக இருக்கும். பூச்சிகள் தாக்காது என்று அந்நிறுவனம் கூறியது.

இதையடுத்து மத்திய அரசு முதன் முதலாக மரபணு (பி.டி.) பருத்தி பயிரிட அனுமதி அளித்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் இந்த மரபணு பருத்தி விதைகளை மான் சாண்டோ, மகிகோ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி விதைத்தனர்.

ஆனால் அந்த மரபணு பருத்தியை பூச்சிகள் தாக்கியதால் விளைச்சல் சுத்தமாக இல்லாமல் போனது. இதனால் கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இது குறித்து ஆந்திர விவசாயிகள் சங்கம் தெரிவிக்கையில்:

"மான் சான்டோ, மகிகோ போன்ற மரபணு விதை நிறுவனங்கள் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று எங்களை ஏமாற்றி மரபணு பருத்தி விதைகளை அதிக விலைக்கு விற்றன. ஆனால் விளைச்சல் இல்லாததால் நாங்கள் கடனாளியாக மாறி விட்டோம். மரபணு பருத்தி பயிரிட்ட நிலத்தில் வேறு பயிர்களை பயிரிட்டோம். அதுவும் விளையவில்லை.

இதுபற்றி நாங்கள் வேளாண்மை விஞ்ஞானி களிடம் கேட்டபோது, மரபணு பயிர்களை விளை வித்த நிலத்தில் வேறு இயற்கையான பயிர்கள் விளைவிக்க முடியாது. அப்படியே அதில் பயிரிட்டாலும் விளைச்சல் இருக்காது. மரபணு பயிர்களை பயிரிடும் நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழுக்கள் அழிந்து விடும். இதனால் அந்த நிலம் தரிசு நிலமாக மாறி விடும் என்று எங்களிடம் கூறினார்கள்.

இதுபற்றி நாங்கள் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மத்திய அரசு தற்போது மரபணு அரிசி, வெண்டைக்காய், முட்டைக்கோஸ் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்க இருப்பதாக அறிந்தோம். மத்திய அரசு அனுமதி அளித்தாலும் நாங்கள் ஆந்திராவில் மரபணு பயிர்களை பயிரிட அனுமதிக்க மாட்டோம்.

இந்திய இயற்கை விவசாயத்தை அடியோடு அழிக்க நினைக்கும் மான்சான்டோ போன்ற சர்வதேச விதை நிறுவனங்களின் சதி செயலுக்கு மத்திய அரசு துணை போகக்கூடாது.

மரபணு செடிகளை ஆடு மாடு மேய்ந்தால் உடனே இறந்து விடும் அபாயம் உள்ளது."

என்று அவர் கூறினார். நன்றி:தமிழ் வெப்துனியா 10.3.2010 ஆன்மீகக்கடலின் கருத்து:
உலகின் மிக மோசமான பிராடு நிறுவனம் மான்சாண்டோ என்ற பெயரை கி.பி.1980களில் அமெரிக்காவிலேயே வாங்கிவிட்டது.அந்த நிறுவனத்தின் அக்குளில் நமது மத்திய அரசு அதிகாரிகளும்,மத்திய அமைச்சர்களும் இருக்கிறார்களோ? கடந்த சில ஆண்டுகளில் 1,00,000 விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமான இந்த நிறுவனத்தை ஏன் இந்திய அரசு விட்டுவைத்திருக்கிறது? இரண்டாவது (பொருளாதார) சுதந்திரப்போர் உண்டானப்பிறகுதான் மத்திய அரசுக்கு சுயபுத்தி வருமா?

No comments:

Post a Comment