இந்துக்குடும்பங்கள் எப்படி சிதைகின்றன? பாகம் 2
கணேசன் என்பவருக்கும், சித்ரலேகா என்பவளுக்கும் கி.பி.1998 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.அந்த சித்ரலேகாவிற்கு பிறந்ததுமுதல் உடலில் ஒரு ஊனம் இருந்தது.காம ரீதியான ஊனம்.சித்ரலேகாவின் 17 வயதில் பருவமடைந்தாலும்,அவளது பிறப்புறுப்பு ஒரு தையல் ஊசியளவே இருந்தது.பலவித மருத்துவம் பார்க்கும் வசதியிருந்தும் கஞ்சத்தனத்தால் சித்ரலேகாவிற்கு அந்தக்குறைபாட்டை மறைத்தே திருமணம் செய்துவிட்டனர்.முதலிரவன்றே விஷயம் தெரிந்தாலும்,கணேசன் பெருந்தன்மையோடு அதை பெரிதுபடுத்தாமல் இருந்துவிட்டார்.இருவருக்குள்ளும் தாம்பத்யம் நடைபெறவில்லை.நடைபெறும் சாத்தியக்கூறு இல்லை என்பதை தனது சாமர்த்தியத்தால் கணேசன் உணர்ந்துகொண்டார்.
திருமணம் ஆன ஒரே ஆண்டில்,சித்ரலேகா கருவுற்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள்.கணேசன் இது எனது குழந்தையில்லை என்றார்.விவகாரம் முற்றியது.இருவரும் நீதிமன்றம் போனார்கள்.கணேசன் தரப்பு கூறுவது என்னவெனில்,அவள் இது எனது குழந்தையில்லை என ஒப்புக்கொள்ளட்டும்.நான் அவனை வளர்க்கிறேன் என்கிறார்.
சித்ரலேகாவின் தரப்பு இது கணேசனின் குழந்தைதான் என பொய் கூறிவருகிறது.ஆனால்,சித்ரலேகாவின் பெற்றோர்கள் செய்தது என்ன தெரியுமா? சித்ரலேகாவின் சம்மதத்தோடு,அவளுக்கு செயற்கை கருத்தரித்தல் (ஊசிமூலமாக ஆண் உயிரணுவை செலுத்தி குழந்தை பிறக்கச் செய்தனர்.)மூலம் அவளை அம்மாவாக்கிவிட்டனர்.தற்போது சித்ரலேகாவின் மகன் பள்ளியில் படிக்கிறான்.இதில் யாரைக் குறை சொல்ல?
கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் என்ன செய்திருக்க வேண்டும்? திருமணத்தின் பொருத்தம் பார்க்கும்போதே மணமகளின் பிறந்த ஜாதகத்தை தனது ஆஸ்தான ஜோதிடரிடம் கொடுத்து, பரிசோதித்திருக்க வேண்டும்.
1.இந்தப் பெண் எனது மகனுக்குப் பொருந்தி வருவாளா?
2.இவளை எனது மகன் திருமணம் முடித்தால்,அவனது அந்தஸ்து உயருமா அல்லது தாழுமா?
3.இவளுக்கு உடல் குறைபாடு ஏதேனும் உண்டா?அப்படி இருந்தால் அதை சரி செய்ய முடியுமா?
4.இவள் தனது ஆயுள் முழுக்கவும் எனது மகனோடு வாழும் தன்மையுள்ளவளா?
5.இவளது பிறந்த ஜாதகம் உண்மையானதா?
6.இவளை எங்கள் வீட்டில் மருமகளாக ஆக்கினால் எங்களது குடும்பம் ஒற்றுமையாக இருக்குமா?
7.இவளது ஜனன ஜாதகப்படி புத்திரபாக்கியம் இருக்குமா?
8.இந்தப் பெண்ணின் பிறந்த ஜாதகப்படி,செவ்வாய் தோஷம்,சர்ப்ப தோஷம்,மாங்கல்ய தோஷம்,தார தோஷம் இருக்கிறதா?அப்படி இருக்கும்பட்சத்தில்,அதே தோஷங்கள் எங்களது மகனுக்கும் இருக்கிறதா?
இவைகளையெல்லாம் நாம் பார்க்காமல்,நமது வாரிசுக்கு திருமணப்பொருத்தத்தை சில நிமிடங்களில் பார்த்துவிட்டு முடிப்பதால்தான்,நீதிமன்றங்களில் குடும்ப நல மையங்கள் எப்போதும் பிஸியாகவே இருக்கின்றன.
மேலே கூறப்பட்டுள்ள கேள்விகளில் இவளது என்பதற்குப்பதில்,இவனது என்ற வார்த்தையைச் சேர்த்து உங்களது எதிர்கால மருமகனை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment