Thursday, March 18, 2010

உங்களால் ஒரு கோயிலை பராமரிக்க முடியும்:தேவை மாதம் ரூ.3000/-மட்டுமே.

இறைபணியில் ஈடுபட ஒரு அரிய வாய்ப்பு

கேட்பாரற்றுக்கிடக்கும் கோவில்கள் ஒருபுறம்,கேட்பார் இருந்தும் கவனிப்பார் இல்லாமல் இருக்கும் கோவில்கள் மறுபுறம்.இரண்டும் இல்லாமல்,பெயருக்கு ஓர் அர்ச்சகர் மட்டும் இருக்கும் கோவில்கள் தமிழகத்தில் ஏராளம்.

வருமானம் இல்லாவிட்டாலும்,அதே கோவில்களில் அர்ச்சகர் வேலை பார்த்துக்கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.ஒரே காரணம் தலைமுறை தலைமுறையாக தங்கள் முன்னோர்கள் அர்ச்சித்துவந்த கோவில் என்பது தான்.

அர்ப்பணிப்பு(டெடிக்கேட்டடு) உணர்வோடு செயல்படும் அர்ச்சகர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் சென்னை தி.நகரில் உள்ள மகாலக்ஷ்மி!

இவரின் முயற்சியால்,இந்து சமய அறநிலையத்துறை ஒத்துழைப்பு மற்றும் உபயதாரர்களின் பங்களிப்போடு இதுவரை 14 கோவில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.இன்னும் 42 கோவில்களில் குடமுழுக்கு நடந்துகொண்டிருக்கின்றன.

இவர் அர்ச்சகர்கள் வாழ்விலும் ஒளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
அவர் கூறியது:
ஏராளமான கோவில்களில்,அர்ச்சகர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வருவாய் இருப்பதில்லை.இருந்தும்,தெய்வம் தங்களைக் கைவிடாது என்ற நம்பிக்கையில் தொடர்ந்து இறைபணி ஆற்றிவருகின்றனர்.அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில்,தமிழகம் முழுவதும்,முதல் கட்டமாக 30 கோவில்களை தேர்ந்தெடுத்துள்ளோம்.
இங்கு உள்ள அர்ச்சகர்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள்,ஆளுக்கு ஒரு அர்ச்சகர் என்ற ரீதியில் தத்தெடுத்துக்கொள்ளலாம்.சம்பளமாக மாதம் ரூ.1500/-,பத்து கிலோ எண்ணெய், 15 கிலோ அரிசி,,300 ரூபாய்க்கு பூ என மாதம் சுமார் 3,000 ரூபாய்க்குள் அடங்கும் செலவுகளை ஏற்றுக்கொள்ளலாம்.
சைவம்,வைணவம்,சாக்தம் என அனைத்துக் கொவில்களும் இந்தப் பட்டியலில் இருக்கின்றன.

யாரும் நேரடியாக எங்களிடம் பணம் தர வேண்டியதில்லை.சம்பந்தப்பட்ட கோவில்களுக்கே சென்று, நிலைமையை நேரில் பார்த்து, அதன்பிறகு, அர்ச்சகர்களிடமே அந்தத் தொகையை வழங்கினால் போதுமானது.இதன்மூலம், அந்தக் கோவில்களில் ஒரு கால பூஜையாவது தடைபடாமல் நடப்பது நிச்சயிக்கப்படும்.

இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு 044-2815 2533, 98400 53289 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி:தினமலர் பக்கம்4, நாள் 28.2.2010.
எனது ஆன்மீகக்கடல் வாசகர்களே! உங்களில் மாதம் ரூ.3000/- செலவழிக்க முடியும் எனில் இந்த மிகவும் புண்ணியமான காரியத்தைச் செய்ய உடனே துவங்குங்கள்.இன்று, நம்மில் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது முன்வினையால் ஏதாவது ஒரு பெரிய கஷ்டத்தோடுதான் நமது வாழ்க்கைப்பயணம் செல்கிறது. நம்மில் எத்தனைபேருக்கு குழந்தையில்லை; நம்மில் எத்தனை பேருக்கு தீராத நோய் இருக்கிறது? இவையெல்லாம் ஒரேயடியாகத் தீர இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ளபடி ஏதாவது ஒரு கோவிலை நீங்கள் பரமாரிக்க முடியும்.புண்ணியம் சேர்ப்போம்; நிம்மதியாக வாழ்வோம்.

No comments:

Post a Comment