Monday, March 29, 2010

இன்றைய இந்திய இளைஞனின் தேசபக்தி:கவிதையாக

படித்த இளைஞனே!
வா!

படித்து விட்டாயா?

வந்தவுடன் என்ன அவசரம்?

ஜார்ஜ் புஷ் உன் கனவில் வருகிறாரா?

பில் கேட்ஸ் உன் முன் மாதிரியா?

சரி நீ!

இந்திய இளைஞனே தான்!

இந்தியாவை விட்டுப்

போய் விட வேண்டும் என்ற எண்ணம்

இந்திய இளைஞனைத் தவிர

எந்த இளைஞனுக்கும் வராது!

உன் அதிகபட்ச இலட்சியம்

ஆறாயிரம் மைல்கள் தாண்டிய

அமெரிக்கா!

உன் குறைந்தபட்சஇலட்சியம்

இரண்டாயிரம் மைல்கள் தாண்டிய

அரேபியா!

வயிற்றை

இந்தியாவில் நிரப்பிக் கொண்டு

மூளையை

அயல் நாட்டில் விற்கப் போகிறாய்!

உன்னை

இந்தியப் புழு என்றால்

அழுவாய்!

அமெரிக்கப் புழு என்றால்

ஆனந்தமாவாய்!

அமெரிக்க-பிரிட்டிஷ்

தூதரக சாலைகளை

நடந்து நடந்து தேய்ப்பாய்!

ஒரு வழியாய் பயணமாவாய்…

அதுவும்

இந்தியன் ஏர்லைன்ஸ் என்றால்

“ச்சீ” என்பாய்!

என்னே உன் தேசியப் பற்று!

நீ இந்தியத் தாயின்

கண்ணில் விழுந்த

தூசி அல்ல…ஊசி!

உனக்கு சின்ன வயதில்

சுதந்திர தினத்தன்று

தேசியக் கொடியை

குண்டூசியால் சட்டைப் பையில்

குத்தியிருக்கக் கூடாது!

ஒரு ஆணி வைத்து

இதயத்தில் அடித்திருக்க வேண்டும்!

—-யாரோ.


~~~~~ ~~~~~~~~~~ இதற்க்கு தங்கள் கருத்து என்ன?~~~~~~~~~~~~~~

நன்றி:எனது பள்ளித் தோழன் கலசலிங்கம்

1 comment:

  1. migavum arumai! ungalukku antha yaarovin peyar theriyuma? ithupondra kavithaikalai melum varavetkiren!

    ReplyDelete