Thursday, March 18, 2010

இந்துக்குடும்பங்கள் எப்படி சிதைகின்றன? பாகம் 3

இந்துக்குடும்பங்கள் எப்படி சிதைகின்றன? பாகம் 3

ஒரு பெண் குழந்தை பருவமடைந்தது முதல் அவளுக்கு திருமணம் ஆகி,பிரசவம் பார்க்கும் வரை அவளது அனைத்து காம சந்தேகங்களையும் அவளது அம்மாவும்,சகோதரிகளும் நிவர்த்திசெய்து தருகிறார்கள்.

அப்படி சொல்லித்தந்தாலும்,திருமணம் ஆன நாள் முதல், அந்தப் பெண்ணின் பக்குவமான மனநிலையே அவளையும்,அவளது கணவனையும் ஒன்றாக சேர்ந்தோ அல்லது பிரிந்தோ இருக்கச் செய்யும்.
ஆனால்,எந்த அப்பா தனது மகனுக்கு காமம் பற்றிய அடிப்படைச் சந்தேகங்களை சொல்லித்தருகிறார்?இன்றைய நவீன காலத்தில் எப்படி தனது மகன் காம வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்பதை சொல்லித்தராததால் தான் பல மகன்கள் கணவனாகும்போது அவர்களின் நிலை ஐயோ பாவம் என்றாகிறது.அப்படிப்பட்ட ஐயோ பாவமான ஒரு கணவனை பார்ப்போம்:


ஐந்து சகோதரிகளுடன் பிறந்தவன் நாகராஜ்.வீம்பும் வீறாப்பும்கொண்டவர் நாகராஜின் அப்பா சிவானந்தம்.நான்காவது ஆணாகப் பிறந்தவன் நாகராஜ். நாகராஜீக்கு ஒரே ஒரு தங்கை இருக்கிறாள்.அக்காக்களோ, மூன்றுபேர்கள்.மூன்று அக்காகளில் ஒருத்தி பிறமனிதர்களைப் படிப்பதில் திறமைசாலி.அவள் பெயர் முத்துமாரி.


நாகராஜிக்கு பெண்பார்க்கும் படலத்திற்கு நாகராஜ் தனது சகோதரிகளுடன் வந்திருந்தான்.பெண்ணையும்,பெண்ணின் அம்மாவாகிய முத்துலட்சுமியையும் முத்துமாரி பார்த்த உடனே,சிவானந்தத்திடம்,முத்துமாரி ‘நம்ம தம்பி நாகராஜீக்கு இந்த வரன் வேண்டாம்பா.’என பலமுறை கதறியிருக்கிறாள்.சிவானந்தத்தின் வீறாப்பில் அது எடுபடவில்லை.

சிவானந்தம் போலவே நாகராஜீம் வீராப்பானவன் தான்.ஆனால்,பட்டதாரியாக இருப்பதாலும்,நிறைய்ய புத்தகங்கள் படிப்பதாலும்,எதையும் சிந்தித்துச் செயல்படுவதாலும், தயாளகுணம் அவனது கூட பிறந்த குணமாக இருக்கிறது.இந்த தயாளகுணம் நாகராஜை அவனது குடும்ப வாழ்க்கையில் எப்படி வீழ்த்தியது என்பதை இனி பார்ப்போம்:


கி.பி.1999 ஆம் ஆண்டில் ,25 வயதில் நாகராஜீக்கு திருமணம்நடந்தது.நாகராஜின் மனைவியின் சொந்த கிராமம்,நாகராஜின் பிறந்த நகரத்திலிருந்து 16 கி.மீ.தூரத்தில் இருக்கிறது..நாகராஜின் மனைவியின் பெயர் கோதை.அப்போது கோதைக்கு வயது 23.(கணவன் மனைவி வயது வித்தியாசம் குறைந்தது 4 வருடங்களும்,அதிகபட்சம் 10 வருடங்களும் இருப்பது இருவருக்கும் நல்லது;அவசியமானதும் கூட.)
ஒருவேளை கணவனின் வயதைவிட மனைவியின் வயது 3 வயதுக்குள் இருந்தாலோ,10 வயதைவிட அதிகமாக இருந்தாலோ அது தீராத பிரச்னையைத் தரும்.(விதிவிலக்குகள் இங்கும் உண்டு)





25 வயது வரை நாகராஜ் எந்தப் பெண்ணையும் ஏறெடுத்தும் பார்த்ததில்லை.இவர்களுக்கு ஒரு ஆண்டில் ஒரு குழந்தை பிறந்தது.அது பெண் குழந்தை.அந்தக்குழந்தை பிறந்ததிலிருந்து நாகராஜிற்கும் அவனது அப்பாவுக்கும் அடிக்கடி வாக்குவாதம் வந்தது.இந்த வாக்குவாதம் அடிதடியாகி மூன்று வருடங்களில் அப்பாவும் மகனும் எதிரியாகிவிட்டனர்.மூர்க்க குணம்,தற்பெருமையடிப்பது,எந்தப்பெண் வந்து என்ன சொன்னாலும் அதை அப்படியே நம்புவது,யார் தன்னைப் புகழுகிறார்களோ,அவர்களுக்காக அடாவடித்தனம் செய்வது அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது சிவானந்தத்தின் பிறவிகுணம்.
இதே குணத்துடனும் காம ரீதியான அரசியல் செய்வதில் முத்துலட்சுமியை மிஞ்சிட யாராலும் முடியாது.காமத்தால் யாரையும் எவரையும் எப்படியும் வீழ்த்தி,அவர்களின் சொத்தினை திருடும் குணம் முத்துலட்சுமிக்கு உண்டு.
யாரையும்,எப்போதும்,எதற்காகவும் சார்ந்திருக்காமல் தன்னை மட்டும் சார்ந்து வாழும் சுயச்சார்பான வாழ்க்கையே நாகராஜின் கொள்கை.அதே சமயம் தன்னை நம்பிவந்தவர்களுக்காக தனது உயிரையும் தருவது,எவர் மனதும் புண்படாமல் பேசுவதும்,பழகுவதும்,ஒருவனுக்கு ஒருத்தி என்பதே ஒரு தமிழனின் அடையாளம்;இவையெல்லாம் நாகராஜின் சுபாவங்கள்.


கோதையின் அம்மா முத்துலட்சுமி(நாகராஜின் மாமியார்) ஒரு திட்டம் போட்டாள்.கோதைக்கு ஒரே ஒரு தங்கை மீரா இருக்கிறாள்.கோதைக்கும்,நாக ராஜிக்கும் திருமணம் ஆனதிலிருந்து கோதையின் உறவினர்கள் கோதையின் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் நாகராஜையும் கோதையின் தங்கை மீராவையும் இணைத்துக் கிண்டல் செய்வது வழக்கம்.

இதை நிஜத்தில் செய்து பார்த்தால் என்ன? என்று கோதையின் அம்மா முத்துலட்சுமி முடிவே எடுத்துவிட்டாள்.கோதையின் அம்மாவின் அப்பா கிருஷ்ணனுக்கு மூன்று மனைவிகள்.(கோதையின் தாத்தா கிருஷ்ணனுடன் பிறந்த 11 ஆண்களுக்கும் தலா இரண்டு அல்லது மூன்று மனைவிகள்!!!)

இந்தக் கிண்டலை சிறிதும் கூட கண்டுகொள்ளாமல் இருந்தாள் கோதை.விஷயம் விபரீதமானது.கோதையின் அம்மாவின் திட்டப்படி,நாகராஜின் கோதையின் தங்கையும் தனிமையில் சந்திக்கத்துவங்கினர்.கோதையின் தங்கை, தனது அம்மாவின் திட்டத்தை நாகராஜிடம் போட்டு உடைத்துவிட்டாள்.

தன்னை நாகராஜிக்கு மணம்முடிப்பது மூலமாக நாகராஜின் மொத்த சொத்தையும் கோதையின் தங்கையின் பெயருக்கு மாற்றிவிட வேண்டியது.மாற்றியதும்,கோதையின் தங்கையை அவளது முறைமாமனுக்கு (மறு)மணம் முடித்துவிடவேண்டியது.நாகராஜிக்கு அதிர்ச்சி.



உடனே,கோதையின் தங்கை மீராவும்,நாகராஜீம் சேர்ந்து ஒரு திட்டமிட்டனர்.அதன்படி, இருவரும் கடுமையாக சண்டை போட வேண்டியது.அதுவும்,கோதையும், முத்துலட்சுமியும் சேர்ந்திருக்கும்போது கெட்ட வார்த்தைகளால் பெரிய்ய கலாட்டா செய்ய வேண்டியது.நாகராஜ் தப்பிக்க,மீராவுக்கு வேறிடத்தில் திருமணம் ஆனது.இது எப்படி என்று முத்துலட்சுமிக்கு புரியவில்லை.முதன்முதலில் தனது மருமகன் நாகராஜை நினனத்துப் பயந்தாள்.


நாகராஜிக்கு ஒரு குரு உண்டு.அந்த குரு சொன்னது நமது இந்தியாவுக்கே பொருந்தும்:
பணக்காரக்குடும்பங்களிலும் சரி; கண்ணியமான குடும்பங்களிலும் சரி; குடும்பத்து பெண்கள் பாதை மாறாமல் இருப்பதற்கு ஒரே காரணம் தான்.அது என்ன வெனில்,அந்தக் குடும்பங்களில் ஒவ்வொன்றிலும் குறைந்தது மூன்று குழந்தைகள் இருக்கும்.அதுவும் ஒவ்வொன்றும் சரியாக ஒன்றரை வருடங்கள் இடைவெளியில் பிறந்திருக்கும்.
முதல் குழந்தைக்கு ஒன்றரை வயதாகும்போது அடுத்த குழந்தை பிறந்துவிடும்.இரண்டாவது குழந்தைக்கு ஒன்றரை வயதாகும் போது மூன்றாவது குழந்தை பிறந்துவிடும்.இதனால்,இந்த மூன்று குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்குவதிலேயே மனைவிக்கு கவனம் இருக்கும்.இதையும் மீறி எவனாவது அந்த மனைவியை பிக்.அப் செய்ய நினைத்தாலும்,அந்த மனைவியால் திசைமாறவே முடியாது.

இந்த யோசனையை செயல்படுத்த நினைத்து,கோதையுடன் நாகராஜ் ஆலோசனை செய்தால்,கோதை சம்மதிப்பதில்லை.கோதை மீது அவ்வளவு பிரியம் மற்றும் ஆசையில் தனது குருவின் யோசனையை மறந்துவிட்டான்.அதையும் மீறி,கோதையை கர்ப்பிணியாக்கும் நோக்கோடு நெருங்கினால்,கோதை சொல்வது ‘எனக்கு அதில் புண் இருக்கிறது’ என்றே 6 வருடத்தைக் கடத்திவிட்டாள்.
ஏழாம் வருடத்தில்தான் நாகராஜிக்கு வீரம் வந்தது.7 ஆம் ஆண்டின் முடிவில்,நாகராஜ் கோதை தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது.அதற்குள்,முத்துலட்சுமியானவள்,தனது மூத்த மகளான கோதையை பெரும் பணம் சம்பாதிக்கும் நோக்கோடு விபச்சாரத்தில் இறக்கி அதன் ருசியை பார்க்க வைத்துவிட்டாள்.
நாகராஜ் வேலைக்குப் போனதும்,கோதையும் ‘வேலைக்குப் போய்விடுவாள்’.
கோதை தடம் மாறிச்செல்லுவது நாகராஜின் அப்பா சிவானந்தத்திற்கு எட்டியது.ஒருநாள்,சிவானந்தம் தனது மனைவி மற்றும் மகள்களோடு நாகராஜின் வீட்டிற்கு (நாகராஜ் இல்லாதபோது) வந்து,நாகராஜின் மனைவி கோதையை வம்பிற்கிழுத்து, நான்கு பெண்களும் கோதையை அவளின் குழந்தைகளின் முன்பாகவும்,தெரு மக்களின் முன்பாகவும் அடித்து உதைத்தும்,கோதையை மிகவும் கேவலமான வார்த்தைகளால் திட்டியும் விட்டுப்போய் விட்டனர்.இரவு வேலை முடிந்து வந்த நாகராஜீக்கு விஷயம் தெரிந்ததும்,நாகராஜ்,கோதையிடம் ஒரேஒரு கேள்வி கேட்டான்:
என்ன சொல்லி என் அப்பனும் எனது அக்காக்களும் உன்னைத் திட்டினர்?
அதற்கு கோதை பதில் சொல்ல வில்லை.
தனது ஆத்மநண்பனிடம்,விசாரித்து தான் வசிக்கும் தெருவில் நடந்த தனது குடும்பச்சண்டையைத் தெரிந்துகொண்டான்.ஆனால்,அது பற்றி தனது மனைவியிடம் மூச்சுவிட வில்லை.மனைவியின் மீதும் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்ததால்,அவன் வேறுபதில் கூறவில்லை.ஆனால்,கோதை,நாகராஜிடம் நாகராஜின் அப்பா,அம்மா,அக்காக்களை போலீஸில் புகார் செய்யும்படி நச்சரித்தாள்.நாகராஜ் அதற்கு சம்மதிக்கவில்லை.மாறாக,நீ இனிமே ஒழுங்கா இரு என்றான்.இதை அப்படியே கோதை தனது அம்மாவாகிய முத்துலட்சுமியிடம் சொல்லிவிட்டாள்.உடனே,முத்துலட்சுமி வேறு ஒரு திட்டமிட்டாள்.
தனது மகளிடம் பேசிபேசியே சம்மதித்தாள்.அதன்படி,கோதை நாகராஜினை வம்புக்கிழுக்க வேண்டும்.இதனால்,இருவரும் கடும் சண்டை போடுவர்.அடி நன்றாக வாங்குவதுபோல் நடித்துவிட்டு,அந்த காயத்துடன் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ய வேண்டும்.இதுதான் திட்டம்.
இதற்கு கோதை முதலில் ஒப்புக்கொள்ளவில்லை;அதற்கு முத்துலட்சுமி சொன்ன காரணமோ சூப்பர் காரணம்.
ஏண்டி,உன் மீது பாசமா ‘அவன்’ இருந்தான்னா, உன்னை அவனோட அப்பா,அம்மா,அக்காக்கள் அடித்ததும் ஏன் அவர்களை போலீஸில் அவர்கள் மீது புகார் கொடுக்க வில்லை?ஆக, பத்துவருடம் உன்னோடு குடும்பம் நடத்தியும்,உன்னைவிட அவனுக்கு அவனது அப்பாவும் அம்மாவும் அக்காவும்தானோ முக்கியம்? என கேள்வி கேட்க கோதையும் சரியென அதன்படி செயல்படத்துவங்கிவிட்டாள்.
(இதே கோதைக்காக நாகராஜ் தனது அப்பாவையும், அம்மாவையும் எதிர்த்து எத்தனை வருடங்கள் சண்டையிட்டிருப்பான்? கோதையே முக்கியம் என பலமுறை நிருபித்தும்,கோதையைப் பற்றி நாகராஜின் அப்பா பலமுறை இழிவாகப்பேசியும் கூட அதை நம்பாமல்,அதை அப்படியே கோதையிடம் கூறியிருப்பதை கோதையானவள் உணரவில்லை.)

ஒரு வெள்ளிக்கிழமையன்று,காலை நாகராஜ் வேலைக்குப் புறப்பட்ட போது,கோதை திட்டமிட்டபடி, சண்டையைத் துவக்கினாள்.நாகராஜ் பொறுமையாக பதிலளித்தான்.உனக்கும் எனக்கும் இனி எந்த ஆசையும் இருக்கக் கூடாது? நமது குழந்தைகளின் எதிர்காலம் மட்டுமே முக்கியம் என்பது உனக்குப் புரியவில்லையா? எனக்கூறியதற்கு அவனது சட்டையின் மேல்பையைக் கிழித்தாள்.இதுபோதாதா? நாகராஜ், கோதையின் தலைமுடியைப் பிடிக்க இதுதான் காத்திருந்த முத்துலட்சுமி தெருவின் வாசலில் அமர்ந்துகொண்டு,
“ஐய்யய்யோ என் மகளைக் கொல்லுறானே! யாராவது காப்பாத்துங்களேன்” எனக்கூக்குரலிட, தெருவே கூடிவிட்டது.
திட்டமிட்டபடி,கோதை அனைத்து மகளிர் காவல்நிலையம் சென்றாள்.தனது கணவன் தனக்குச் சம்பளம் தருவதில்லை; தன்னைக் கொல்ல வருகிறான் என சொல்ல மகளிர்க் காவலர்கள் அவளின் உடலை பார்த்து (எந்த ரத்தக் காயமும் இல்லாதது கண்டு) அப்படிப்போய் உட்காரு என அதட்டினர்.
கோதையோ தனது அருமை அம்மா முத்துலட்சுமியின் யோசனைப்படி, அவனை ஜெயிலில் போடுங்க, அவனை ஜெயில் போடுங்க என கத்திட, ஓங்கி ஒரு அறை வாங்கினாள்.போடி யாரை என்ன செய்யணும்ணு எனக்குத் தெரியும்.
நாகராஜை அனைத்துமகளிர் காவல் நிலையத்தில் அழைத்து வந்தனர்.இருதரப்பையும், விசாரித்தனர்.ஒருமாதம் வரை இருவரையும் நாளை வா! அடுத்த வாரம் வா! என அலைக்கழித்தனர்.
ஒரு மாதம் கழிந்தது.முடிவில்,கோதையை அனுப்பிவிட்டு, நாகராஜிடம் மகளிர் இன்ஸ்பெக்டர் கூறினார்: எலேய், உன் பொண்டாட்டி இனி உருப்படாமல் நாசமாப் போகணும்ணு முடிவு பண்ணிட்டாடா.இனி மகளைப் பார்க்கணும்ணு அவளையோ உன் பொண்டாட்டியையோ நீ போய் பார்க்காதே.அப்படி நீ பார்த்தால் நாங்க உன்னை அரெஸ்ட் பண்ண வேண்டியிருக்கும்.ஏன்னா, நியாயம் உன் பக்கம் இருக்கு.சட்டம் அவ பக்கம் இருக்கு.நீ கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ் அவ மேல போடு.நான் வந்து உனக்கு ஆதரவாக சாட்சி சொல்லுறேன்.
இதைச் சொல்லிமுடித்ததும், கோதை எங்கிருந்தோ மீண்டும் அனைத்து மகளிர்க் காவல் நிலையம் வந்தாள்.அப்படி வந்ததும்,சில பெண் ஏட்டுக்கள் கேட்டனர்.
சரிடி, இரண்டு குழந்தை வச்சிருக்கியே.எப்படி நீ இருவரையும் கரை சேர்ப்பே.
“நானா உழைச்சு நானா என் குழந்தைகளை கரைசேர்ப்பேன்.எனக்கு அவன் ஒண்ணும் தர வேண்டாம்.” என வீர வசனம் பேசினாள் கோதை.

உடனே, நாகராஜிடம், ‘சார்,உங்க ஒய்ப் மேல ஏதும் தப்பு இருந்தால் சொல்லுங்க.நாங்க கண்டிக்கிறோம்.’
நாகராஜ், “மேடம்,அவளுக்கு சொந்தபுத்தி கொஞ்சமும் கிடையாது.அவளோட அம்மாவும் அவளும் பேசாமல் இருந்தால் போதும்” என்றான்.
இன்று, நாகராஜ் 50 கிலோமீட்டர்கள் தள்ளிச் சென்று தனது வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.கோதையை அவளது அம்மாவே விபச்சாரத்தில் தள்ளிவிட்டாள்.கோதையின் அம்மா முத்துலட்சுமிக்கு நோக்கம் பணம் மட்டுமே.
இந்நிலையில்,பிப்ரவரி 2009 ஆம் மாதத்தில் சிவானந்தம் ஒரு காரியம் செய்தார்.அதன்படி,நாகராஜீக்கு மனித உரிமைக்கழகத்திலிருந்து ஒரு ஓலை வந்தது.அதில்,நாகராஜீம்,நாகராஜ் மனைவி கோதையும் சேர்ந்து,சிவானந்தத்தின் வீட்டிற்குப் போய் சிவானந்தத்தையும்,அவரது மனைவியையும் அடித்ததாகவும்,சொத்துக்களைக் கேட்டுக் கொடுமைப் படுத்தியதாகவும்,குறிப்பிட்ட நாளில் ஆஜராகவிட்டால்,சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என ஒரு மனித உரிமைக்கழகம் நாகராஜை மிரட்டியிருந்தது.
(அந்த மனித உரிமைக் கழகத்தின் உறுப்பினர்களுக்கும்,சிவானந்தத்திற்கும் ஒரு ஒப்பந்தம் ஆகியிருந்தது.அதன்படி,சிவானந்தத்தின் மகன் நாகராஜை வரவழைத்து,அவனிடமிருந்து ‘எனக்கு என்னுடைய அப்பா சிவானந்தத்தின் சொத்துக்கள் வேண்டாம்’ என எழுதி வாங்கிட வேண்டியது மனித உரிமைக்கழகத்தின் பொறுப்பு.அப்படி வாங்கிவிட்டால்,மனித உரிமைக் கழகத்திற்கு கணிசமான தொகையை வழங்க சிவானந்தம் முடிவு)
மனித உரிமைக் கழகத்தினரிடம் நாகராஜ் செல்ல, நாகராஜின் உயிர் நண்பர் ஒருவர் செய்த கலாட்டாவில் மனித உரிமைக் கழகத்தினர் இந்த வழக்கை உடனடியாக டிஸ்மிஸ் செய்துவிட்டனர்.

நவம்பர் 2008 ஆம் ஆண்டில் கோதையும் நாகராஜிம் பிரிந்தனர்.2009 மே மாதத்தில் நாகராஜின் அப்பா சிவானந்தம் அடுத்த காரியம் செய்தார்.நாகராஜீக்கு மனைவியோடு வாழ்வதற்கு தந்த சொந்த வீட்டின் பூட்டை உடைத்து நாகராஜின் உடமைகள்,சான்றிதழ்கள்,பொருட்களை வெளியே வீசினார்.கொட்டும் மழையில் அவை 4 மணி நேரம் அனைத்தும் நனைந்தன.நாகராஜை வலுக்கட்டாயமாக அவனது சொந்த ஊரிலிருந்து வெளியேற்றினார்.மறுநாள்,நாகராஜ்,தனது அப்பா சிவானந்தம் மீது போலீஸில் புகார் கொடுத்தான்.
போலீஸில் இந்த சாதாரண வழக்கை விசாரித்தவர்,ஒரு பயிற்சி எஸ்.ஐ.ஆவார்.இதனால்,சிவானந்தம் நான் வீடு தருகிறேன் என நடிக்க,சிவானந்தத்தின் மனைவி (நாகராஜின் அம்மா) இவனுக்கு நான் வீடு தர மாட்டேன் என பிடிவாதம் பிடித்தனர்.மறு நாள்,இருவரையும் வரச்சொல்லிவிட, இருவருமே போக வில்லை.வீடும் போனது.சிவானந்தம் இப்போது அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார்.வாடகை ரூ.700/-

ஏற்கனவே,சிவானந்தம் வெறும் 35 ஆண்டுகளில் ரூ.20,00,000/- சொத்து சேர்த்துள்ளவர்.ரூ.5,00,000/-க்கு வட்டிக்கு விட்டிருக்கிறார்.மாதம் ரூ.20,000/-வட்டி வந்துகொண்டிருக்கிறது.அது போதாமல்தான்,தனது ஒரே மகனை சொந்த வீட்டை விட்டு துரத்தி,மேலும்ரூ.700/-க்கு வருமானம் பார்த்துவருகிறார்.ஆக,நாகராஜின் மாமியார் முத்துலட்சுமிக்கும்,நாகராஜின் அப்பா சிவானந்தத்திற்கும் வித்தியாசம் ஒன்றுமே இல்லை.இருவருமே பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவர்கள்.
வீட்டை விட்டு நாகராஜை விரட்டிய சம்பவம்,ஒரே நாளில் கோதைக்குத் தெரிந்தது.மறுநாளே,கோதை,
‘என்ன வீடு போச்சா! என்னை அடிக்க உன் அப்பனையும் ஆத்தாளையும் அனுப்பினேல்ல .நீ இனிமே பிச்சைதாண்டா எடுப்பே’ என்று சாபம் விட்டாள்.
விடுவானா நாகராஜ், ‘ நானாவது இனிமேதான் பிச்சை எடுக்கப் போறேன்.நீ நம்ம பிள்ளைகளோட தினமும் கோயிலுக்குப் போய் பிச்சை எடுத்துதானடி சாப்பிட்டுக்கிட்டு இருக்கே.உன் ஆத்தா உன்னை பிச்சை எடுக்க விட்டுட்டாளா’ என்று பதிலடி கொடுத்ததும், கோதை போனை வைத்துவிட்டாள்.
தற்போது,மாதம் ஒருமுறை நாகராஜின் சொந்த ஊருக்கு வரும் கோதை, நாகராஜின் நட்பு வட்டம்,உறவினர் வட்டம் இருக்கும் வீடுகளுக்குப் போய் நாகராஜைப் பற்றி அவதூறாகப் பேசிக்கொண்டே இருக்கிறாள்.மறுபுறம், நாகராஜைப் பற்றி, நாகராஜின் அப்பாவான சிவானந்தம் தன்னுடைய பங்கிற்கு நாகராஜின் நட்பு வட்டத்திடம் இழிவாகப்பேசிக்கொண்டே இருக்கிறார்.நாகராஜ் இந்த இரண்டையும் முறியடிக்காமல், தனது மனைவியே, தனது அப்பாவே என்ற பாசத்தில் இவர்களுக்கு எதிராக “தாக்குதல் நடவடிக்கை” எடுக்காமல், ‘தற்காப்பு நடவடிக்கை’எடுத்துக்கொண்டே இருக்கிறான்.

தவிர, நாகராஜின் ஆத்ம நண்பர்கள் பலர்,காவல்துறை,கட்டப்பஞ்சாயத்து, ரவுடி,அரசியல் என எல்லாத் துறைகளிலும் இருக்கின்றனர்.அனைவருமே,நாகராஜின் மீதான பாசத்தால், கோதைக்கு எதிராக டைவர்ஸ் வழக்குப் போடும்படி வற்புறுத்திக்கொண்டே இருந்தனர்.ஆனால்,நாகராஜ் அதைச் செய்ய வில்லை.
கோதையைப் பற்றியும்,கோதையின் உறவினர்களைப் பற்றியும்,கோதையின் கிராமத்தைப் பற்றியும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறான் நாகராஜ்.எனவே,டைவர்ஸ் கேஸ் போட வில்லை.

இந்தச் சம்பவத்தில் அனைவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன.நாகராஜின் முன் அனுமதி பெற்ற பின்னரே இந்த சம்பவத்தை நாம் ஆன்மீகக்கடலில் பிரசுரிக்கிறோம்.இதில்,நாகராஜ் என்ன செய்திருக்க வேண்டும்? வாசகர்களே! பதில் கூறுங்கள்.



2 comments:

  1. Nagaraj spoil his life and his children’s life also. Nobody bother the children’s life. So Get diverse and live his children only. Otherwise kid life get problem. That child’s living with his mother, his life also same thinking and living that stile only. After children is also follow the same way. Nagaraj’ fathers End of his life he wants some help. That time maybe all give the help for his money motive only. Then only his father thinks. Maybe Nagaraj’s sisters give some help to nagaraj.
    They future children living current way in his life, but in this world thing wrong only. So get diverse only best.

    ReplyDelete
  2. வேணு அவர்களுக்கு நன்றிகள்!!! தனது மகள்களை தன்னுடன் வளர்ப்பதிலேயே குறியாக நாகராஜ் இருக்கிறார்.தங்களது கருத்தை நாகராஜீக்கு அனுப்பிவிட்டோம்.தங்களது கருத்து நாகராஜீக்கு மிக்க ஆறுதலாகவும்,வழிகாட்டியாகவும் இருக்கும்.

    ReplyDelete