Tuesday, March 9, 2010

பாவ புண்ணியம் பற்றி எனது சிந்தனைகள்


நாம் வசதியாக வாழ என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் என்னிடம் கேட்டார்.எனது முன்னோர்கள்,எனது அப்பா மற்றும் அம்மா ஆழ்ந்த இறைபக்தியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.இருந்தும் ஏன் நாங்கள் குடும்பத்துடன் கஷ்டப்படுகிறோம்?

நியாயமான கேள்வி! நமது தமிழ்நாட்டில் மட்டும்(இராமாயணகாலத்தில் இலங்கை தற்போது போல ஒரு சிறு தீவாக இல்லை;யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 2000 கிலோ மீட்டர்கள் வரை பரந்து விரிந்து இருந்தது.இரண்டு மதுரைகள் நகரங்களாக இருந்தன.இரண்டு மதுரைகளும் ஆழிப்பேரலையால் அழிந்துவிட்டன.)ஆக,சுமார் 20,00,000 வருடங்களாக மனித இனமாக வாழ்ந்துவருகிறது.அப்போதிலிருந்து,சுமார் 30,000 தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறோம்.(நூறு ஆண்டுக்கு 3 தலைமுறை என வைத்துக்கொள்ளுவோம்)பாவங்கள் செய்வது பல தலைமுறைகளாக நம்மை பாதிக்கிறது.மாந்திரீகம் செய்வது நமது 21 தலைமுறைகளைப் பாதிக்கும்.(இதுபற்றி விரிவாக விரைவில் தனி வலைப்பூவாக)


ஆக,பாவங்கள் பெரும்பாலும் ஏமாற்றுதல்,பொய் சொல்லுதல்,காமக்குற்றங்கள்,குடும்பக்கடமைகளிலிருந்து மீறுதல்(மனைவி அல்லது கணவனின் காம இச்சையை தீர்க்காமலிருந்தாலும் அது கொடும் பாவம்தான்),குழந்தைகளை வளர்த்து ஆளாக்காமல் மனைவி அல்லது கணவனின் பொறுப்பில் விட்டு விட்டு ஓடிவிடுதல்,சொத்துக்காக சண்டைபோடுதல்/ஏமாற்றுதல்/கொலை செய்தல்/மாந்தீரீகம் செய்து பங்காளியை சுயசிந்தனை இன்றி ஆக்கிவிடுதல்,கோயில் சொத்துக்களை திருடுதல்,விபச்சாரம்,அரசு சொத்துக்களை திருடுதல்,முறையின்றி அனுபவித்தல் இந்த செயல்களில் ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ செய்தால் அது குறைந்தது ஐந்து தலைமுறைகள் வரை பாதிக்கும்.


கலிகாலத்தில் ஒரு பெண் உங்களை காம இச்சைக்கு அழைத்து நீங்கள் அவளது ஆசையை நிறைவேற்றாமலிருத்தல்,ஒரு ஆண் உங்களை காம இச்சைக்கு அழைத்தும் பெண்ணாகிய நீங்கள்(முன்பு உங்களுக்குத் தேவைக்குப் பயன்படுத்திவிட்டு) அந்த ஆணினை ஏங்க வைப்பது,உங்களது காம அனுபவங்களை பெருமையாக பிறரிடம் சொல்லி அவர்களை ஏங்க வைப்பது,பிறரது முறையற்ற உறவுகளை தம்பட்டம் அடித்துக்கொண்டே இருப்பது,காம இச்சையூட்டும்/காம வெறியேற்றும் படங்கள்/வீடியோக்கள்/கதைகளை பரப்புவது, பிறருக்கு வலுக்கட்டாயமாக அனுப்புவது,கேட்காமலேயே கொடுத்து அவர்களை கெடுப்பது, குடிக்கும்,போதைக்கும்,விபச்சாரத்திற்கும் சக ஊழியரை/நண்பரை/நண்பியை/மனைவியை/கணவனை/சகோதரனை/சகோதரியை அடிமைப்படுத்துவது இவையெல்லாம் பாவமூட்டையை அதிகப்படுத்தும் வழிமுறைகள்.இப்படியிருப்பதால் எப்படி வசதியாக வாழமுடியும்?



அதனால்தான் இறைவழிபாடும்,இறை மந்திர ஜபமும்,பவுர்ணமி பூஜை வழிபாடு,திரு அண்ணாமலை வழிபாடு,கிரிவலம்,அன்னதானம்,கண் தானம், ரத்த தானம்,ஆடை தானம்,விஷய தானம்,ருத்ராட்ச தானம், இறைவனைப் பாடுதல்,சாளக்கிராம தானம், ஆன்மீகப்பிரசங்கம், மரம் நடுதல்,பசு மடம் அமைத்து வயதான பசுக்களை பராமரித்தல்,பசுவிற்கு அகத்திக்கீரை வழங்குதல், கோயில் கும்பாபிஷேகத்தில் உடல் உழைப்பு வழங்குதல்,தண்ணீர்பந்தல் அமைத்தல்,பிறருக்கு மந்திர ஜபம் உபதேசித்தல்,குலதெய்வத்திற்கு ஏராளமான வழிபாட்டு முறைகளைச் செய்தல்,அனாதைகள்,ஆதரவற்ற விதவை,முதியோர்களைப் பராமரித்தல்,ஏழைப்பெண்ணிற்கு திருமணம் செய்வித்தல்,குறிப்பிட்ட அமாவாசை அல்லது பவுர்ணமி அல்லது நட்சத்திர நாளன்று காசியில் உள்ள கங்கையில் நீராடுதல்,மற்றும் கோதாவரி,தாமிரபரணி,காவிரி,வைகையில் நீராடுதல்,சித்தர்கள் வழிபாடு செய்தல்,பசுதானம் செய்தல்,திரு அண்ணாமலையில் அன்னதானம் செய்தல்,சதுரகிரிக்கு குறிப்பிட்ட அமாவாசைகள் வரை சென்று சிவனை வழிபடுதல்,விநாயகர் கோவில் அமைத்தல், மகாலட்சுமி மற்றும் குபேர பூஜைகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் செய்தல்,சத்திய நாராயண பூஜை செய்தல்,பவுர்ணமி பூஜையை அம்பாள் கோவிலில் நடத்துதல்,அம்பாள் சன்னதியில் பவுர்ணமி பூஜை தினத்தன்று இரவில் காயத்ரி மந்திரம் ஜபித்தல்,பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் கடலில் இடுப்பளவு நின்று சூரியன் அல்லது சந்திரனைப்பார்த்து 9ன் மடங்குகளில் சில குறிப்பிட்ட மந்திரங்களை ஜபித்தல் . . . என ஏராளமான வழிபாட்டுப் பரிகாரங்களை சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் தொடர்ந்து செய்ய வேண்டிவரும்.அப்படிச் செய்தால்,நாமும் நமக்கு முந்தைய மூன்று தலைமுறை வரையிலும் பாவங்கள் தீர்ந்து நிம்மதியாக வாழமுடியும்.வசதி வாய்ப்புக்கள் நம்மை தேடிவரும்.



இன்னொரு உதாரணம் ஒன்றைக் கூறவிரும்புகிறேன்: கார்த்திகை மாதம் வரும் தேய்பிறை சிவராத்திரி நாளன்று மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை திரு அண்ணாமலை குபேரலிங்கத்தை வழிபட்டுவிட்டு,இரவு 7.00 மணிக்கு கிரிவலம் சென்றால் குபேர சம்பத்து கிடைக்கும் என என்னுடைய மானசீககுரு பி.எஸ்.பி.ஐயா அவர்கள் எனக்கும் உபதேசித்தார். இந்த உபதேசத்தின்படி,நான் கடந்த 3 ஆண்டுகளாக குபேர கிரிவலம் சென்றுள்ளேன்.எனது வாழ்க்கையில் மிக மெதுவான செல்வ வளர்ச்சியே ஏற்பட்டு வருகிறது.

எனக்கு ஆழ்ந்த சந்தேகம் ஏற்பட்டது? ஏன் நமது மானசீக குருவின் ஆலோசனைப்படி நடந்தும் எனக்கு ஏன் ஒரே ஒரு முறை குபேர கிரிவலம் சென்றதும்,குபேர சம்பத்து கிடைக்கவில்லை?

எனது பிறந்த ஜாதகம்,எனது மகள்களின் பிறந்த ஜாதகங்கள்,எனது அப்பாவின் பிறந்த ஜாதகம்,எனது தாத்தாவின் பிறந்த ஜாதத்தைப்பார்க்கும் போதுதான் தெரிந்தது எனது முன்னோர்களின் கர்மவினைகள் ஒரு லாரியளவுக்கு (?!)இருக்கிறது.அதை என்னால் ஆன மட்டும் இந்த கலியுகத்தில் கரைக்க முயன்றுவருகிறேன்.அப்படி நான் ஒருவேளை முழுமையாகக் கரைத்துவிட்டால்,எனக்கு குபேர சம்பத்து கிடைக்கும்.ஒருவேளை என்னால் அந்த் கர்மங்களை முழுமையாகக் கழிக்க முடியாவிட்டால்,எனது வாரிசுகளுக்கு கிரிவலத்தின் மகிமைகளை விவரித்து எனது மூன்றாம் தலைமுறையையாவது நான் குபேர சம்பத்துள்ளவர்களாக மாற்றுவேன்.
ஒரே ஒரு முறை மட்டுமே கிரிவலம் சென்றாலே நமக்கு மறுபிறவி கிடையாது என்பது அருணாச்சல புராணம் சொல்லும் நீதிக்குறிப்பு.இருக்கட்டுமே.என்னால் ஆனமட்டும் கிரிவலம் சென்று எனது தலைமுறையை நிம்மதியாக வாழ வழிசெய்துகொள்கிறேனே! சரியா எனது ஆன்மீகக்கடல் வாசகர்களே!!!

No comments:

Post a Comment