கர்ம வியாதி என்றால் என்ன?
அரசு வேலை என்பது இன்றும் ராஜ மரியாதை தருவதாகத்தான் இருக்கிறது.என்னதான் ஐ.டி.எனப்படும் சாப்ட்வேர் வேலையில் இருந்தாலும்,சாப்ட்வேர் இளசுகள் பேசும் பொய்கள் மிகவும் நம்பும்படியாகவும், தமது மரியாதையை செல்போன் டவர் அளவிற்கும் உயர்த்தும்விதமாக தனது பழக்கவழக்கத்தை வைத்துக்கொள்வதால், தமிழ்நாட்டின் இளைய சமுதாயம் ஐ.டி.வேலை பார்ப்பது மிகவும் உயர்ந்த கவுரவம் என நம்பிக்கொண்டிருக்கிறது.
அதே சமயம், ஐ.டி.வேலை பார்ப்பவர்கள் அங்கிருந்து நிரந்தரமான, பாதுகாப்பான, வேலை மிகவும் குறைந்த அரசாங்கப்பணிக்குத் தாவுவதை ஒரு கடமையாகக் கொண்டிருக்கிறது.என்னதான் ரூ.50,000/- ரூ.75,000/- மாதச் சம்பளம் வாங்கினாலும்,ஐ.டி.பணியாளர்களுக்குத் தெரியும் ‘இந்த வேலை நிரந்தரமில்லை;எந்த நிமிடமும் இந்த வேலையிலிருந்து நாம் வெளியேற்றப்படுவோம்.அப்படியே தாக்குப்பிடித்தாலும், அதிகபட்சம் ஐந்து அல்லது பத்துவருடங்கள் தான் இதில் ஒட்டிக்கொண்டிருக்க முடியும்’என்று.
அதனால்,கடந்த 2008,2009 ஆம் ஆண்டுகளில் ஐ.டி.அறிவுப்புலிகள் அங்கிருந்தவாறே மத்திய மாநில அரசுப் பணிகளுக்குத் தாவத் தொடங்கியுள்ளனர்.தனது அரசுப்பணிச் சேர்க்கைக்காக எல்லாவிதமான குறுக்கு(?!) வழிகளையும் பின்பற்றி ஜெயித்துக்கொண்டிருக்கிறார்கள்.அதுபோகட்டும்.அவர்களாவது நல்லா இருக்கட்டும்.
நாம் நமது ஆன்மீகத்தை இங்கே பார்ப்போம்:
ஒரு அரசு ஊழியர் தனது அரசுப்பணியை சுமார் இரண்டு ஆண்டுகளில் நிரந்தரப்படுத்திவிடுகிறார்.சுமார் 300 நாட்கள் வேலை பார்த்தாலே,தான் ஒரு நிரந்தர அரசு ஊழியர் ஆகிவிடுகிறார்.அதே 300 நாட்கள் வரை மட்டுமே அவரால் ஓரளவு அப்பாவியாக இருக்கமுடியும்.அதன் பிறகு,அவர் திறமையாக லஞ்சம் வாங்க கற்றுக்கொள்கிறார்.கூடவே,மதுவுக்கும் அடிமையாகிவிடுகிறார்.இந்த இரண்டு பழக்கத்திற்கும் அவரது சக ஊழியரால்/ஊழியர்களால் அடிமைப்படுத்தப்படுகிறார்.
ஐந்துவருடங்களில் அவரது லஞ்சப்பணமானது,பங்களாவாகவும், பண்ணை வீடாகவும்,தங்க வைர நகைகளாகவும்,பங்கு பத்திரங்களாகவும்,மனையாகவும்,வீடுகளாகவும் மாறிவிடுகிறது.லஞ்சத்தின் அளவினைப் பொறுத்து அவருக்கு ஏதாவது ஒரு கர்மவினை(வயிறெரிந்து தரும் லஞ்சம்) நோயாகவும் மாறிவிடுகிறது.வாங்கும் சம்பளம் வீட்டுச்செலவுக்கும்,வாங்கும் லஞ்சம் கர்மவினை நோய்க்கு மருத்துவச்செலவாகவும்,மொடாக்குடிக்கான செலவாகவும் செலவழிந்துவிடுகிறது.
சுமார் 10 வருடத்துக்கும் மேலாக,லஞ்சம் வாங்குபவரின் வீட்டுப்பெண்கள் தடம் மாறிப்போகின்றனர் அல்லது லஞ்சம் வாங்குபவரின் பிரியமான உறவு திடீரென இறந்துபோய்விடுகிறது. மேலும்,பிரியமான உறவுகளில் சில மன நோயாளியாகவும்,வம்சப்பரம்பரையில் சில அல்லது ஒரு உடல் அல்லது மனக்குறைபாடுடைய குழந்தையும் பிறக்கிறது.
அரசுப்பணியைத் தவிர, வர்த்தகம் செய்பவர்களுக்கும் கர்மவினை நோய் வரத்தான் செய்கிறது.எப்படியெனில்,நியாயமான லாபம் வைக்காமல், கொள்ளைலாபம் அடிப்பவர்களுக்கும் இதே நிலைதான்.அது பலசரக்கு,கணிப்பொறி,பொழுதுபோக்கு,கேளிக்கை,உணவு விடுதி,வாகனக் கட்டுமானம்,சேவைத் தொழில்கள்,தனியார் வங்கி(உதாரணமாக இந்தியாவில் முதன் முறையாக ஏ.டி.எம்மை அறிமுகப்படுத்திய வங்கி நிர்வாகம்),செல்போன் நிறுவனங்கள்,போக்குவரத்து நிறுவனங்கள்,தரகுத் தொழில் என சகலவிதமான தொழில்களையும் அடுக்கலாம்.
சரி! அப்போ எல்லோரும் கர்ம நோயுடன் தான் வாழ்ந்துவருகிறார்களா? இல்லை.
தனது மனசாட்சிப்படி,நியாயமாக வேலை பார்ப்பவர்கள்,நியாயமாக தொழில் செய்பவர்கள்,யாரையும் மறைமுகமாக ஏமாற்றாமல் இருப்பவர்கள்,நண்பனின் மனைவி காம இச்சைக்கு அழைத்தும் அந்த அழைப்பை நிராகரிப்பவர்கள்,தன்னைச் சுற்றி இருப்பவர்களின் குடும்பத்தை எந்த விதத்திலும் கெடுக்காதவர்கள்,பிறருக்கு உதவுவதையே தனது சுபாவமாகக் கொண்டிருப்பவர்கள், லஞ்சம் வாங்குவதை அவமானமாக நினைப்பவர்கள், கலப்படம் செய்யாமல் வாழ்பவர்கள்,தனது சகோதரியை பகடைக்காயாக வைத்து அரசியல் பதவியை அடையாதவர்கள்,தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு ஆறுதல் கூறுபவர்கள் இவர்களெல்லாம் தமது வாழ்நாள் முழுக்க நிம்மதியாக வாழ்வார்கள்.தனது வாழ்நாளில் ஒருதடவையாவது திடீரென செல்வந்தவராவார்கள்.வாழ்க வளமுடன்! வெல்க இந்து தர்மம்!! சீறி எழுக இந்துத்துவம்!!!
i agree above your said. those who are getting money or any benifit through corruption, defently they punished by god. my relation also got like the effect. please be honest, serve inability people, live the life with own wife.
ReplyDeleteபாவ புண்ணியத்தை பிறகு(செத்த பின்பு) பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் பலர் துணிந்து எதையும் செய்கின்றனர்.செத்தபின்பு,அதன் தண்டனையை அனுபவிப்பது இருக்கட்டும்.இப்போது ஆடாத ஆட்டம் போடும் அரசு ஊழியர்கள்,அரசியல்வாதிகள்,அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவருமே ஏழரைச்சனி(11.12.2011 வரை கன்னி ராசிக்காரர்கள்), அஷ்டமச்சனி (11.12.2011 வரை கும்பராசிக்காரர்கள்) வரும்போது திமிராகப்பேசியவர்கள் படும்பாடை நாமே சகித்துக்கொள்ளமுடியாது. அதேசமயம்,நியாயமாக சம்பாதிப்பதற்குரிய வளங்கள்,வாய்ப்புக்களை இந்தியாவின் முட்டாள் மற்றும் நயவஞ்சகமும்,சுயநலமும் கொண்ட அரசியல்வாதிகள் கெடுத்துக்கொண்டிருக்கின்றனர்.நியாயமாக வாழவே முடியாத நிலை உண்டாகிக் கொண்டிருக்கிறது.இது சம்பந்தமாக ஒரு தனி வலைப்பூவே போடலாம்.அதுவும் விரைவில் . . .
ReplyDeleteஎனது ஜோதிட அனுபவம் எதையும் ஜோதிடம்/பாவ புண்ணியம் என்ற நோக்கில்தான் பார்க்க வைக்கிறது.இந்த வலைப்பூவை எழுத எனது 15 வருட அனுபவம் மட்டுமே உதவியது.
ReplyDeleteஇந்த வலைப்பூ தகவலையும் உங்களுக்குத் தெரிந்த அரசுப்பணியாளர்களின் வாழ்க்கையை முழுமையாக விசாரித்துவிட்டு, ஒப்பிட்டுப்பார்த்தால் இந்த வலைப்பூவின் தத்துவார்த்தம் புரியும்.