Saturday, March 13, 2010

சேமிப்பதன் அவசியம்:



சேமிப்பது எதற்காக?



1.சேமிப்புதான் நம்முடைய வளமான வாழ்க்கைக்கு ஆதாரம் என்பதை முதலில் உணர வேண்டும்.



2.சேமிக்கும்பழக்கம் ஒரு குணமாகவே சிறுவயதுமுதல் உங்கள் குழந்தைகளின் மனங்களில் விதைக்கப்பட்டு,பழக்கப்படுத்த வேண்டும்.

3.அத்தியாவசியம் எது,அனாவசியம் எது என்பதைப் பகுத்துப் பார்த்து அனாவசியச் செலவுகளைத் தள்ளிப்போடும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

4.கையில் பணம் இல்லையென்றாலும்,கடன் மூலமாக சில சேமிப்புக்களைச் செய்ய முடியும்.அது சரியாகவும் இருக்கும்.ஆனால்,அந்த வகை சேமிப்பின் மூலமாகக் கிடைக்கும் வருமானம் கடன் தொகையைக் காட்டிலும் அதிகமாக இருக்குமா? என்பதை கவனித்துக்கொள்ள வேண்டும்.



5.உதாரணமாக,வீட்டுக்கடன் வாங்குகிறோம்.அது கடன் தான் என்றாலும்,வீடு என்ற சொத்து நமக்குக் கிடைக்கும். நம்முடைய அத்யாவசிய தேவையான குடியிருக்கும் இடத்துக்கு வாடகை கொடுப்பது மிச்சமாகும்.பின்னாட்களில் வீட்டின் மதிப்பு உயரும்போது நம்முடைய சேமிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.அந்த வகையில் பார்த்தால்,கடன் வாங்கிச் செய்யும் சேமிப்பு சிறந்ததுதான்.



6.அதைச் சொல்லும்போதே இதையும் சேர்த்தே சொல்ல வேண்டியிருக்கும்.சேமிக்கும் நோக்கத்துக்காகக் கடன் வாங்குவதைப் போல,செலவழிப்பதற்காகவும் கடன் வாங்கினால் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும்.கடன் அட்டைகள் எனப்படும் க்ரடிட் கார்டுகள் அந்த ரகம்தான்.(அமெரிக்கக் கண்டுபிடிப்பு அல்லவா?.பந்தாவான ஈர்ப்பும்,எரிச்சலான முடிவும் தரும்)

சரியாக திட்டமிட்டு வட்டி கட்டாமல் பணத்தைச் சுழல வைக்கலாம் என்றெல்லாம் கணக்கு போடுவோம்.ஆனால்,சிக்கிக்கொண்டால், சேமிப்பு எல்லாம் காணாமல் போய் சுழலில் மாட்டிக்கொண்ட துரும்பின் கதையாகிவிடும்.



இந்த ஐந்துவிஷயங்களும் உங்களை பணக்காரராக்கும் அனுபவ மந்திரங்கள் ஆகும்.



No comments:

Post a Comment