Wednesday, March 3, 2010

திருஅண்ணாமலையைப் பற்றி ரமணமகரிஷி


திரு அண்ணாமலையைப் பற்றி ரமண மகரிஷி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகில் உள்ள கிராமம் திருச்சுழியில் 30.12.1887 நள்ளிரவு ஒரு மணிக்குப் பிறந்தார்.தமிழ் வருடம் பிரமாதி வருடம் மார்கழி மாதம் 16 ஆம் நாள் திங்கட்கிழமை புனர்பூசம் நட்சத்திரத்தில் மார்கழி பவுர்ணமியன்று பிறந்தார்.இவரது அப்பா திரு.சுந்தரம் அய்யர்.அம்மா திருமதி.அழகம்மை.நாகசாமி என்ற அண்ணனுக்கும்,நாகசுந்தரம் என்ற தம்பிக்கும் சகோதரனாகப்பிறந்தவர்.இவரது இயற்பெயர் வேங்கடராமன்.

1.9.1896 அன்று திரு அண்ணாமலைக்கு வந்துசேர்ந்தார்.கி.பி.1911 ஆம் ஆண்டில் ஹம்ப்ரீஸ் என்ற ஆங்கிலேயர் ரமண மகரிஷியை சந்தித்தார்.அவரைத் தொடர்ந்து பல ஆங்கிலேயர்கள் வந்துகொண்டே இருந்தனர்.அனைவரும் ரமணரின் சீடர்களானார்கள்.ரமணமகரிஷியைப் பற்றி பால் பிரண்டன்,சாட்விக்,சாமர்செட் மாம் ஆகியோர் புத்தகங்கள் எழுதினர்.செல்ப் ரியலிசேஷன், எ சர்ச் இன் சீக்ரெட் இந்தியா என்ற புத்தகங்களால் ஐரோப்பாவும்,அமெரிக்கக் கண்டமும் ரமணமகரிஷியைத் தேடி வந்தது.

திரு அண்ணாமலையைப் பற்றி ஏராளமான ரகசியங்களை வெளிப்படையாகச் சொன்னவர் முதன் முதலில் ரமண மகரிஷி தான்.அவர் சொன்ன பல அண்ணாமலைத் தகவல்கள் பிற்காலத்தில் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டன.

இதனால்,இன்று(3.3.2010) கிரிவலப்பாதை முழுவதும் வெள்ளைக்காரர்களின் பாதையாக மாறிவிட்டது.

பிரமாதி வருடம் சித்திரை முதல்நாள்,(14.4.1950)ரமண மகரிஷி அவர்கள் ஒரு ஜோதியாக ரமண மகரிஷியின் ஆசிரமத்திலிருந்து திரு அண்ணாமலைக்குள் புகுந்தார்.

ஆனாலும்,அவர் சொல்வது என்னவெனில்,திரு அண்ணாமலையைச் சுற்றிலும் 25 சதுர கிலோமீட்டர்களுக்கு நானே உங்களின் ஞான குருவாக இருப்பேன் என சொல்லிவிட்டு,திரு அண்ணாமலையில் நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.கிரிவலப்பாதையில் நம்மை வழிநடத்திட . . .

ரமண மகரிஷியின் சிந்தனைகள் இன்று 13 இந்திய மொழிகளிலும்,23 ஐரோப்பிய மொழிகளிலும் வெளிவந்துள்ளன.

சுமார் 50,000 புத்தகங்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்று ரமண மகரிஷிகளின் ஆசிரமத்தில் இருக்கும் நூலகமும் ஒன்று.

No comments:

Post a Comment