நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் 2008,2009 ஆம் ஆண்டுப்பதிவுகளில் பல ஆன்மீக,ஜோதிட இதழ்களிலிருந்து எதிர்காலம் பற்றிய கணிப்புகளை வெளியிட்டிருந்தோம்;அதில் பல விஷயங்கள் இந்த ஆண்டுக்குள் நிஜமாகிவிடும்;அப்படி நிஜமாவதை இன்னும் விரைவு படுத்திட நாம் செய்ய வேண்டியது ஊருக்கு 1000 பேர்களை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைக்க வேண்டும்;அந்த 1000 பேர்களும் 31.12.2012க்குள் 1,00,000 தடவைகள் ஓம்சிவசிவஓம் ஜபித்துமுடித்திருக்க வேண்டும்.
இதை எப்படி நடைமுறைப்படுத்துவது? மூன்று வழிகளில் நீங்கள் இதை செயல்படுத்திடலாம்.
ஒன்று:இந்த பதிவில் தரப்பட்டிருக்கும் படத்தை 1000,2000,5000,1000 பிரதிகளாக அச்சடித்து,உங்கள் ஊரில் அமைந்திருக்கும் பழமையான சிவாலயத்தில் பிரதோஷநாட்களில் விநியோகிக்க வேண்டும்.உங்களால் வெறும் 10 பேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்துவிட்டால்,உங்களின் மன உளைச்சல் நீங்கிவிடும்.(ஆமாம்! கடன்,நோய்,எதிரி,கர்மவினை எதுவாக இருந்தாலும் அது அடியோடு நீங்கிவிடும்)எனக்கு அப்படித்தான் நடந்திருக்கிறது.எனவே,நீங்களும் சுகமாக,நிம்மதியாக,செல்வச் செழிப்போடு வாழ வழிகாட்டுகிறேன்.
இரண்டு: குறைந்தது 1000 ஓம்சிவசிவஓம் நோட்டீஸ்கள் உங்கள் ஊரில்,உங்கள் சொந்தச்செலவில் அச்சடித்து ஆன்மீகக்கடலுக்கு தபாலில் அனுப்பி வைக்கலாம்;இந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் இவ்வாறு குறைந்தது ஒரு கோடி நோட்டீஸ்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் சிவாலயங்களில் ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகள் மூலமாக விநியோகிக்க தயாராக இருக்கின்றார்கள்.இவ்வாறு விநியோகிக்க தயாராக இருக்கும் ஒவ்வொரு ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகளும் தினமும் ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று: இந்த ஓம்சிவசிவஓம் நோட்டீஸை இணையதளங்கள்,குரூப் எனப்படும் மின் அஞ்சல் குழுக்கள் வழியாக வாரம் ஒருமுறை வீதம்,52 வாரங்களுக்கு அனுப்பிக்கொண்டே இருப்பது;இணையதளம் மூலமாக என்பது இலவசமாக புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும்(அப் லோடு) வலைதளங்களை பயன்படுத்தி,( உதாரணமாக www.picscrazy.com )தினமும் 20 முறை ஓம்சிவசிவஓம் நோட்டீஸை அப் லோடு செய்து கொண்டே இருத்தல்;இவ்வாறு இந்த 2012 ஆண்டு முழுவதும் நீங்கள் செய்ய வேண்டும்.( பிக்ஸ் க்ரேஸியில் நிர்வாணப்படங்களும்,வக்கிரமான படங்களும் தான் இருக்கின்றன.அவரவர் தமது வக்கிரமான எண்ணங்களை பதிவு செய்கின்றனர்.நாம் அப்படிப்பட்டவைகளிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றிட ஓம்சிவசிவஓம் நோட்டீஸை அப் லோடு செய்கிறோம்)
இவற்றில் பங்கேற்க முடியாதவர்கள், வேறு விதங்களிலும் உதவி செய்யலாம்.மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
நீங்கள் செய்யும் இந்த சிறு ஆன்மீக சேவையால், பலரது வாழ்க்கையே வளமாக மாறப்போகிறது;எனவே, கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஓம்சிவசிவஓம் மந்திரத்தைப் பரப்ப வேண்டுகிறேன்.
ஓம்சிவசிவஓம் பரவ,பரவ ஒவ்வொரு மனிதனும் ருத்ர அம்சமாக மாறுவான்;மேலும் சித்தத் தன்மையை அடையப்போவது உறுதி.முயலுவோமா?
ஓம்சிவசிவஓம்
வீரமுனி ஜயா வணக்கம் இந்த தலைப்புக்கு இந்தகக் கருத்து பொருத்தமானது என்பதால் மீண்டும் பதிய விரும்புகின்றேன்…..
ReplyDeleteதிருச்சியை சேர்ந்த எனது நன்பர் ஒருவர் அமெரிக்காவில் பொறியியல் துறையில் கல்வி கற்று வருகின்றார் அவர் என்னிடம் ஒரு விடையம் பற்றி கூறினார்.
நாடுகள் பொருளாதாரம் உலகம் பற்றி சக வெள்ளை இன நன்பர்களுடன் பேசிக்கெண்டு இருக்கும் பொழுது இந்தியா எப்பொழுது வல்லரசு ஆகும் என்ற கேள்வி எழுந்ததாம் அதற்கு ஒரு வெள்ளை இன நன்பர் சொன்னாறாம் அது கனவில் கூட நடக்கதென்று காரணம் அதற்கு அந்த வெள்ளை இன நன்பர் கூறுய பதில்:-
ஒரு நாடு வளமானதாக மாற வேண்டுமெனில் நாட்டின் இளஞ்ஞர்களின் கையிலே உள்ளது ஆனால் இந்திய இளஞ்ஞர்களில் அனேகமானோர் நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை அமைபதுப்ம் நடிகர்களின் பின்னால் திரிவதிலும் பொன்னான நேரத்தை வீணடிக்கின்றனர். நடிகர்கள் அவர்களுடை பிள்ளைகள் என வம்சாவளியாக சினிமாவில் நடித்து வங்கிக்கணக்கை உயர்த்திக் கொள்வார்கள். ரசிகர் மன்றங்களை வைத்திருப்பவர்களின் கெதி தகப்பன் செய்ததை பிள்ளையும் செய்யும் பிள்ளையும் ரசிகர் மன்றங்களை உருவாக்கும்.
ஒரு வகையில் இதுவும் நன்மைக்குத்தான் இந்தியா அதிகமான இளஞர் சக்தி கொண்ட நாடு அவர்கள் இப்படி ரசிகர் மன்றங்களை வைத்திருப்பது அமெரிக்காவுக்கு நல்லது இந்திய இளஞ்ஞர்கள் தங்களுடைய பகுத்தறிவை பயன்படுத்தத் துவங்கினால் சீனாவுக்கு நிகராக வளர்ச்சி அடைய துவங்கி விடுவார்கள் சீனாவினால் வளர்ச்சியால் ஏற்படும் ஒற்றைத் தலைவலியையே தாங்கமுடியவில்லை. இதில் இந்தியாவுமா? எனவே இந்தியா இப்படி இருப்பதே நல்லது என அந்த வெள்ளை இன நன்பர் கூறினாறாம்.
சினிமா என்பது அதில் ஈடுபடுபவர்களுக்கு தொழில் பார்ப்பவர்பளுக்கு பொழுதுபோக்கு வாழ்க்கையில் பொழுதுபோக்கு வேண்டும் ஆனால் பொழுதுபோக்கே வாழ்கையாக வைத்திருப்பது கேவளம்.
எப்பொழுது இவர்கள் திருந்துவார்களோ இப்படியே இருக்கும் பட்சத்தில் இந்தியாவை சுற்றியுள்ள சிறிய நாடுகள் வல்லரசான ஆன பிறகும் இந்தியா இதே நிலைமையிலே இருக்கும் 2020ல் 2030ல் 2050ல் 2075ல்
சொல்லிக்க்கொண்டே போகவேண்டியதான்!
பாசமிகு துடிப்புள்ள தமிழ் இளஞ்ஞர்களே நாம் சித்தர்களின் வம்சாவளி அல்லவா கேவளமான நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை அமைத்து கேவளப்படவா பிறந்தோம் உங்களுடைய பொன்னான காலத்தை இந்த கேவளமான குப்பை நடிகர்களுக்காக ஏன் வீணடிக்கின்றீர்கள் 5நிமிடம் பகுத்தறிவைப் பயன்படித்தி சிந்தியுங்கள்
சீனாவின் வளர்ச்சியைப் பார்த்து உலகமே பிரமிக்கின்றது.
இந்தியாவின் நிலை????????????????
எப்பொழுது இதை உணர்ந்து ரசிகர் மன்றங்கள் மூடப்படுகின்றதோ? பிறகு இந்தியா தானக வல்லரசாகும்
பாலசிங்கம்
அன்புநிறை பாலசிங்கம் அவர்களுக்கு,தாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.அதே சமயம்,சினிமாவுக்கும்,கவர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும்படி நமது அரசியல் தலைகள் பத்திரிகைகள்,டிவிக்களை மறைமுகமாக 1980களில் வலியுறுத்தின.எனக்குத் தெரிந்தவரையில் தமிழ்நாட்டின் இளைய சமுதாயத்தை கவர்ச்சி மயக்கத்தில் ஆழ்த்த ஆரம்பித்த பத்திரிகை குமுதம் ஆகும்.இன்று இதைப் பின்பற்றாத பத்திரிகைகள்,பருவ இதழ்களே இல்லை எனக் கூறலாம்.இதற்காகவெல்லாம் நாம் அசரக்கூடாது.நமது தமிழ்நாட்டையும்,இந்தியாவையும் நாமே சீரமைப்போம்.வெளிநாட்டிலிருந்து கல்யாணம் செய்து வந்து யாரும் இதைச் செய்யப் போவதில்லை;ஆன்மீகத்தின் பக்கமாக நமது இளைய சமுதாயத்தை 0.0001 சதவீதம் திருப்பிவிட்டாலே போதும்.அதை என்னால் ஆன அளவுக்கு செய்கிறேன்.நீங்களும் வாருங்கள்;இணைந்து பணியாற்றுவோம்.2020க்குள்ளாக நமது நாட்டை உலகின் முதன்மையான,சக்திவாய்ந்த நாடாக மாற்றுவோம்.எந்த உலக அமைப்பும் நமக்கு சான்றிதழ் தரத் தேவையில்லை;நம்மைக் கொள்ளையடித்தே வல்லரசான இங்கிலாந்தே இன்னும் உயிர் வாழும்போது,ஏழாம் அறிவுப்பொக்கிஷமாக இருக்கும் நாம்,நமது தேசம் கேவலம் சினிமா கவர்ச்சியினால் முன்னேறாமல் போய்விடுமா? சீனாவின் வளர்ச்சி வெறும் ஊளைச்சதை என்பது பலருக்குத் தெரியாது.இந்த உண்மையை வெளிப்படுத்தாமல் இருக்கும் வேலையை இந்தியாவின் பெரும்பாலான பத்திரிகைகள் தெளிவாகச் செய்கின்றன.ஏனெனில்,பெரும்பாலான பத்திரிகையாளர்கள் கம்யூனிஸ்டுகள்.அவர்களுக்கு சீன தேசபக்தி தான் இருக்கும்.நாம் நமது தேசத்தை சீரமைப்போம். ஒரே ஒரு விவேகானந்தரை கிறிஸ்தவ உலகத்தால் சமாளிக்க முடியவில்லை? ஒரே ஒரு ஓஷோ கேட்ட கேள்விகளுக்கு இன்னும் பதில் சொல்லத் தெரியாத இந்த வெள்ளைக்காரர்களா நமக்கு சான்று தருவது? நமது இளைஞர் சமுதாயம் சினிமாக்கவர்ச்சியில் இருந்தாலும்,சின்சியரில் இந்தியர்கள் போல எந்த நாட்டுக்காரனும் இல்லை;வெள்ளைக்காரன்களைப் பற்றித் தெரியாதா? குரூப் செக்ஸ்,ஓரின செக்ஸினை உலக மயமாக்கிய இவனுங்களே உலக வல்லரசுகளாக இருக்கும்போது, ஆன்மீகத்தை உயிர் நாடியாக இருக்கும் நமது நாடு சிலிர்த்தெழும்போது எந்த ஒரு மேல்நாடும் தாக்குப்பிடிக்காது.இதுவும் 31.12.12க்குள் நிகழ்ந்தே தீரும். பகுத்தறிவு சீனாவில் கிடையாது.வெறியை தனது மதமாகக் கொண்டதே சீனாவின் ஆத்மா.அதே வெறியாலேயே அது அழியப்போவதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.
ReplyDelete