Wednesday, January 11, 2012

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் வழிபாட்டு நாட்களும் அதன் பலன்களும்








தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னதியில்,அதுவும் அந்த நாளில் இராகு காலத்தில் அவரது மூலமந்திரத்தை ஜபித்தவாறு வழிபாடு செய்து வருவதன்மூலமாக பின்வரும் நன்மைகள் உண்டாவதை கடந்த எட்டு மாதங்களாக ஆராய்ந்து உணர்ந்திருக்கிறேன்.

முதல் தேய்பிறை அஷ்டமிக்கு திண்டுக்கல் தாடிக்கொம்புவில் அமைந்திருக்கும் அருள்மிகு சவுந்தர ராஜப்பெருமாள் கோவிலுக்கு வருகைதந்தவர்கள் என்னுடன் நான்கு பேர்கள்.

இரண்டாம் தேய்பிறை அஷ்டமிக்கு தாடிக்கொம்புவுக்கு வரும்முன்பாக இந்த நால்வருக்கும் அவரவர் தொழில்,குடும்பம்,திறமைக்கேற்றவாறு பொருளாதார அபிவிருத்தி அதிரடியாக நிகழ்ந்துள்ளது.

எனக்கு ரூ.5000/-கடன் ஒரே நாளில் தீர்க்குமளவுக்கு வருமானம் மொத்தமாக ஒரே நாளில் கிடைத்தது.

ஜாப் ஒர்க் செய்து வரும் எனது ஜோதிட வாடிக்கையாளர்,முதல் தேய்பிறை அஷ்டமிக்கு வரும்போது ஆர்டர் கிடைக்க வில்லையே ? என ஏங்கினார்.ஒரே மாதத்தில்,ஆர்டர்கள் குவிய,இவரால்,அத்தனை ஆர்டர்களையும் முடிக்க முடியாத அளவுக்கு பயங்கர பிஸியாகிவிட்டார்.

இன்னொருவர்,அரசு ஊழியர்.அவரது பூர்வீக சொத்து சார்ந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.

இறுதியாக,ஜவுளிக்கடை வைத்திருக்கும் ஒருவருக்கு நீண்டகாலமாக அவருக்கு வர வேண்டிய இருந்த ஒரு பெரிய தொகை,(ரூ.24,000/-) ஒரே நாளில் வசூலானது.

கர மற்றும் நந்தன வருடத்தின் தேய்பிறை அஷ்டமி நாட்களும்,சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி இருக்கும் தமிழ்நாட்டு நகரங்களும்!!!



சென்னை அருகிலிருக்கும் படப்பை;காஞ்சிபுரம் அருகிலிருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி;
சிதம்பரம்;
சீர்காழி;
திருச்சி மலைக்கோட்டை அருகில்;

தேவக்கோட்டை அருகிலிருக்கும் தபசு மலை;

காரைக்குடி அருகே இலுப்பைக்குடி;

திண்டுக்கல் தாடிக்கொம்பு!!!                     16.1.2012 திங்கள்;                            14.2.2012 செவ்வாய் மதியம் 2.09 முதல் 15.2.2012 புதன் காலை 11.52 வரை;                                 15.3.2012 வியாழன்;                          13.4.2012 வெள்ளி காலை 10.34 முதல் 14.4.2012 சனி காலை 9.17 வரை;(வெள்ளிக்கிழமையை கணக்கில் எடுத்துக்கொள்ளவும்)                            13.5.2012 ஞாயிறு;                                   11.6.2012 திங்கள் காலை 9.56 முதல் 12.6.2012 செவ்வாய் காலை 9.30 வரை;(திங்கட்கிழமையை கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்)                                   11.7.2012 புதன்;                                     9.8.2012 வியாழன் மதியம் 12.42 முதல் 10.8.2012 வெள்ளி மதியம் 2.37 வரை;                                     8.9.2012 சனிக்கிழமை காலை 6 முதல் 9.9.2012 ஞாயிறு காலை 6.35 வரை;(சனிக்கிழமை!)                       8.10.2012 திங்கள்;                                   6.11.2012 செவ்வாய் மதியம் 1.23 முதல் 7.11.2012 புதன் மதியம் 1.45 வரை;                                       6.12.2012 வியாழன்(ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் அவதார திதி!!!);                                     4.1.2013 வெள்ளி மாலை 5.54 முதல் 5.1.2012 சனி மாலை 4.24வரை;(சனிக்கிழமையை கணக்கில் எடுத்துக்கொள்ளவும்);    3.2.2013 ஞாயிறு;                                       4.3.2013 திங்கள் மாலை 4.18 முதல் 5.3.2013 செவ்வாய் மதியம் 1.58 வரை;(செவ்வாய்க்கிழமையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவும்);                               3.4.2013 புதன்;        

எனதருமை ஆன்மீகக்கடல் வாசகர்களே! தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில்களை உருவாக்குவோம்;தமிழ்நாட்டை சொர்க்க பூமியாக்குவோம்!!!

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment