Friday, January 6, 2012

ஜீவகாருண்யத்தை கடைப்பிடித்தால் வாஸ்துக் குறைபாடு நீங்கும் என்பது உண்மையா?


ஒரு வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தாலே அந்த வீட்டில் ஜீவகாருண்யம் (பிற உயிரை துன்பப்படுத்தாமல் இருப்பது) இருக்காது என்பதுதான் விதி. வாஸ்து குறைபாடு காரணமாக வாரிசுகளை திட்டுவது, அடிப்பது, சாதாரண விடயங்களுக்கும் தம்பதிகளுக்குள் சண்டை ஏற்படுவது போன்றவை வாஸ்து குறைபாட்டால் ஏற்படும். அதனால் அங்கு ஜீவகாருண்யம் இருக்காது.

சமைத்த சாப்பாட்டை நிம்மதியாக சாப்பிட முடியாது. சமையல் நடந்து கொண்டிருக்கும் போதே வீட்டில் சண்டை, சச்சரவுகள் துவங்கிவிடும். இதனால் கணவர் கோபித்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்று விடுவார். மனைவியும் சமைத்த சாப்பாட்டை சாப்பிடப் பிடிக்காமல் கீழே கொட்டும் நிலை ஏற்படும்.

நவகிரகங்களின் ஆட்சி ஒருபுறம் நடந்தாலும், தங்கியுள்ள வீட்டின் வாஸ்து சாஸ்திரமும் மனிதனை ஆட்டுவிக்கும். அதனால்தான் அதனை கிரகப்பிரவேசம் (கிரஹப்பிரவேசம்) என்று கூறுகின்றனர். எனவே வீடு நன்றாக வாஸ்துப்படி அமைத்தால்தான் சிறப்பாக இருக்கும்.

காற்று, வெளிச்சம் உள்ளிட்ட பஞ்சபூதங்களையும் முறைப்படுத்தி வீட்டை அமைத்துக் கொள்வதையே வாஸ்துப்படி வீட்டை அமைக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறினர்.

உதாரணமாக ஈசானியம் ஒரு இடத்தின் உயிர்மூச்சு. அப்பகுதியில் ஜன்னல் அமைக்க வேண்டும். அக்னி மூலை என்பது தென்கிழக்கு, அங்கு சமையலறை அமைப்பது பலன் தரும்.

அடுத்தபடியாக தென்மேற்குப் பகுதி குபேர மூலை எனப்படும். அதனை மூடிமறைத்து, பாதுகாப்பாக வைக்க வேண்டும். தென் மேற்கு பருவக்காற்று உடல்நிலைக்கு உகந்ததல்ல. அதனால்தான் குபேர மூலையை மூடிவைக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

குபேர மூலை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டிய இடம் என்பதால் அங்கு பாதுகாப்பான இடமாக கருதப்பட்டது. அங்கு பணம், நகை, பீரோ உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

ஆகவே, வாஸ்து இல்லாத இடத்தில் ஜீவகாருண்யம் இருக்காது. வாஸ்து இல்லாவிட்டால் அங்கு ஜீவராசிகள் வாழ முடியாது. வாஸ்து குறைபாடு உள்ள வீடுகளில் துர்தேவதைகள், கெட்ட சக்திகள் வளரும்.

No comments:

Post a Comment