உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான சராசரி மனிதர்களுள் நானும் ஒருவன்;அவர்களிடமிருந்து நான் வித்தியாசப்படுவது இரண்டு மூன்று விஷயங்களில் மட்டுமே! 1989 முதல் ஜோதிடத்தை தொழிலாகப் பார்த்துவருகிறேன்;எந்த ஒரு ஜோதிட அல்லது ஆன்மீகப்பரிகாரத்தையும் எனது குருநாதர்களே சொன்னாலும்,அதை ஆராய்ந்து பார்த்தபின்னரே, அதை பிறருக்கு ஜோதிடப் பரிகாரமாகச் சொல்வது வழக்கம்;யாரும் ஜோதிடத்தின் பெயரில் ஏமாறக்கூடாது? என்ற எனது இயல்புகுணமே இதற்குக் காரணம்.
ஜோதிடத்தின் அடிப்படை அறிவின் மூலமாக தினசரி நவக்கிரகங்களை கவனித்து,நெருங்கிய நட்பு வட்டத்திடம் அது தொடர்பாக பகிர்ந்துகொள்வது எனது வழக்கம்;ஜோதிட ஆர்வலர்கள் மூலமாக அவரவர் திசை புக்தியை கணித்து,அவர்களின் தினசரிவாழ்க்கையை விசாரித்து ஜோதிட உண்மைகளைக் கண்டறிவதும் எனது சுபாவம்;அடிக்கடி எனது மானசீக ஆன்மீக குருவாகிய மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் சொல்வார்:அனுபவம் முந்தியது;சாஸ்திரம் பிந்தியது;
ஆக,ஜோதிடப்புலமை,ஆராய்ச்சி மனப்பான்மை, ஒவ்வொருவரின் சுபாவத்திற்கு ஏற்ப வழிகாட்டுதல்;உலகிலேயே மிக எளிய அதே சமயம் அதிக சக்திவாய்ந்த சுயபரிகாரங்களை எனது ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஆன்மீக விருந்தாகப் படைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.
தினமும் ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதன் மூலமாக கிடைத்த பல்வேறு சிவ அனுபவங்களைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன்;மிரண்டேன்; நானும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவதன் மூலமாக எனக்கு ஏற்பட்டு வரும் தெய்வீக அனுபவங்களை ஓராண்டுக்கு முன்பு நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டிருக்கிறேன்.ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு,எனக்குக் கிடைத்த அனுபவங்களை வெளியிட எனது ஆன்மீக குரு அனுமதி தரவில்லை;மேலோட்டமாக ஒன்று மட்டும் சொல்லலாம்;உங்களை விட எனக்கு நிறைய மன உளைச்சல்கள்,குடும்பப் பிரச்னைகள்,பணக்கஷ்டங்கள்,கடன் தொல்லைகள்,எல்லோரும் என்னைப் புறக்கணித்தல் போன்றவைகள் இருந்தன; இப்போது அவை அனைத்தும் தீர்ந்துவிட்டன;
தினமும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வருவதால்,ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஏற்பட்டிருக்கும் ஆன்மீக அதிசய அனுபவமும்,அதன் பிறகு அவரவர் வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் பண ரீதியான பிரமாண்டமான எழுச்சியையும் பற்றி தினமும் நமது ஆன்மீகக்கடல் வாசகர்கள் என்னிடம்,போனிலும்,மின் அஞ்சலிலும் தெரிவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.அவைகளைக் கேட்டு நான் செய்து வருவது சாதாரண ஆன்மீக வழிகாட்டுதல் இல்லை; என்பது புரிந்துவருகிறது; அவைகளைப் பற்றி விரிவாக எழுத இந்த ஒரு ஆன்மீகக்கடல் போதாது;எப்போது நாம் நேரில் சந்திக்கிறோமோ,அப்போது விவரிப்பதே முறை!!!
நமது தமிழர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு;ஒருவர் மிகச் சிறந்த வழிபாட்டு முறையை வெளிப்படுத்தினால்,அதை வாசிக்கும்போதே இது மிகச் சிறந்த வழிபாடு என்று உணர்ந்துவிடுவார்கள்;இருந்தாலும் அதை மூன்று அல்லது நான்கு பேர்களிடம் செக் செய்துவிட்டு, ஆரம்பிக்கலாம் என நினைப்பார்கள்: அதற்குள் அவர்களுக்கு அதைச் செயல்படுத்திப் பார்க்கும் மனநிலை மாறிவிடும்;இதை சோடாபாட்டில் உற்சாகம் என்று கூறுவர்;சோடாபாட்டிலைத் திறந்ததும்,நுரை பொங்கும்;அதோடு சரி;அப்புறம் வெறும் சோடாபாட்டில் மட்டும் இருக்கும்.அதுபோல !!!???
அதே சமயம், அந்த மூன்று நான்கு பேர்களின் பின்னணி,வயது,ஆன்மீக அனுபவங்கள் போன்றவற்றைப் பற்றி விசாரிப்பதில்லை;இது போதாதா? பொறாமை கிளம்புவதற்கு!
தென்காசியில் 40ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சிக்கு தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தவர் சிவகடாட்சம் ஸ்ரீலஸ்ரீ
மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் மதுரையில் நடத்திய ஆன்மீக வகுப்புகளையும் பற்றி அறிந்தவர்களுக்குத் தெரியும்.அவர் ஆராய்ச்சி செய்ததை நான் வழிமொழிகிறேன்;(பரப்புகிறேன்) அவ்வளவுதான்;அவரது ஆன்மீக ஆராய்ச்சிகளை பரப்புவதற்கு என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நான் பெருமைப் படுகிறேன்.
இந்த ஆன்மீகக்கடலின் பதிவுகளை நீங்கள் வாசிக்கிறீர்கள் எனில்,அது எனது திறமை காரணம் அல்ல;உங்களின் குல தெய்வத்தின் ஆசிர்வாதத்தினால் வாசிக்கிறீர்கள்;இவைகளில் ஏதாவது ஒன்றை மட்டும் ஓராண்டு வரை செயல்படுத்திப் பார்த்தீர்கள் எனில்,உங்களின் தலையெழுத்தையே நீங்கள் மாற்றத் துவங்கிவிட்டீர்கள் என்றே அர்த்தம்.இதிலும் விதி வேலை செய்யும்.எப்படி?
நீங்கள் ஓம்சிவசிவஓம் தினமும் ஜபித்து வருகிறீர்கள் அல்லது ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு தினமும் செய்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்;இந்த இரண்டைப்பற்றியும் அறிந்த தமிழ் ஆன்மீக வாதிகள் மிக மிகக் குறைவு;ஏனெனில்,இதை சுமார் 25 நூற்றாண்டுகளுக்குப் பிறகு,(2500 ஆண்டுகள்!!!) நமக்காக ஆராய்ச்சி செய்து கண்டறிந்தவர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்;நமக்கோ சில வாரங்களில் ஒரு சில தெய்வீக அனுபவங்கள் கிடைத்திருக்கும்;நம்மால் சும்மா இருக்க முடியுமா? இதை யாரிடமாவது தம்பட்டம் அடிக்காமல் நமக்குத் தூக்கம் வராது;நாம் தம்பட்டம் அடிப்பதே நம்மை அவர்கள்(நம்மைச் சுற்றியிருப்பவர்கள்/ நம்மிடம் பழகுபவர்கள்/நமது நட்பு வட்டம்/நமது உறவினர் வட்டம்) புகழ்ந்து தள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.
அப்படி தம்பட்டம் அடித்ததும்,நம்மை நன்றாகப் புரிந்தவர்கள் நாம் எப்படி சொன்னால் நம்புவோமோ அப்படி ஒரு ஆன்மீகப் பொய்யை சொல்லி,நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜப்த்தையோ/ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டையோ நிறுத்திவிடுவர்.நாமும் மீண்டும் சராசரி வாழ்க்கைக்குப் போய்விடுவோம்.இதுதான் பெரும்பாலான தமிழர்களின் இயல்பு; சரி! இதை வெளியிட்ட ஆன்மீகக்கடல் இணைய தளத்திடம் சந்தேகம் கேட்போம் என்ற எண்ணம் வெகுசிலருக்கே உருவாகியிருக்கிறது.
ஆன்மீகக்கடலின் பதிவுகளை நம்பி 100 சதவீதம் களத்தில் இறங்கலாம்;உங்களது கர்மவினைகள் தீர ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ஓராண்டு வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வர வேண்டும்; ஒரு நாளுக்கு ஒரு தடவை வீதம் ஓராண்டு வரையிலும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு செய்து வர வேண்டும். அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்லும்போது ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இவ்வாறு குறைந்தது 6 தடவை கிரிவலம் சென்றபின்னரே,நமது கடுமையான பிரச்னைகள் தீர வழி உருவாகும்;(கவனிக்கவும் : உருவாகத்தான் செய்யும்) அதிக பட்சமாக ஒரு வருடத்தில் 24 தடவை அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;ஒவ்வொரு தடவையும் ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறும்,இதுவரை சொல்லப்பட்டுள்ள அனுபவ வழிமுறைகளைப்பின்பற்றியும் செயல்படுத்த வேண்டும். முயலுவோமா?
ஓம்சிவசிவஓம்
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் படமும் ,வழி பாட்டு முறையும் மறு பதிவிட இயலுமா?
ReplyDeleteவெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு ஏற்ப அதாவது இங்கு கிடைக்கும் வழிபாட்டு பொருள்களுக்கு ஏற்ப வழிபாட்டு முறையை தயவு செய்து வெளியிடவும் --பத்மநாபன் ஜோர்டான்
ஐயா, வணக்கம்
ReplyDeleteமிக நல்ல பதிவு. எல்லோருக்கும் பயன்தரக்கூடிய அருமையான செய்தி. ஒம் சிவ சிவ ஒம் ஜபித்த பிறகா அல்லது நவகலச யாகம் செய்த பின்னரா உங்களுக்கு பிரச்னைகள் தீர்ந்து நன்மைகள் வர தொடங்கியது? மேலும் விளக்கம் அளிக்க முடியுமா?
நன்றி.
கந்தையா இங்கிலாந்து
பித்ரு தோஷம் இருப்பவர்களுக்கு நவகலசயாகம் செய்தபின்னரே,கிடுகிடு வளர்ச்சி உண்டாகும்.மற்றவர்களுக்கு ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தாலே போதுமானது.கடுமையான பண நெருக்கடியிலிருப்பவர்கள் தினமும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்துவர வேண்டும்.எனக்கு நவகலசயாகம் செய்த பின்னரே,முன்னேற்றம் ஏற்படத்துவங்கியது.
ReplyDeleteஐயா, வணக்கம்.
ReplyDeleteதங்கள் பதிலுக்கு பலகோடி நன்றிகள். சொர்ண பைரவர் மறுபதிவுகளும் வரவேற்கத்தக்கது. சகல வாசகர்களினதும் அன்பும் ஆதரவும் உங்கள் தளத்திற்கு என்றும் உண்டு.வாழ்க.வளர்க.
கந்தையா இங்கிலாந்து