கோரக்கர் சித்தர் திருவாய் மலர்ந்தருளிய சந்திரரேகை என்னும் நூலில் காணப்படும் உட்பொருட்களில் சிலவற்றை உங்களிடம் ஒப்படைக்கிறேன்:
கலியுகத்தில் ஏற்படும் கால பருவமாற்றங்கள்; கிரக நிலைகளின் மாற்றங்களின் விபரங்கள்; இன்னின்ன காலங்களில் மக்கள் இத்தன்மையாக வாழ்வார்கள்; தமிழ்நாட்டில் இன்னின்னவர்கள் ஆள்வார்கள் என்றும் விளக்கமாக எழுதியிருக்கிறார்.புராதன தமிழ்நடையை அறிந்த எவரும் இந்த புத்தகத்தில் மறைந்திருக்கும் அர்த்தங்களை புரிந்து கொள்ளலாம்.
கலியுகாதி 5049 இல் வெள்ளையரின் ஆட்சி நீங்கி நாடு சுதந்திரமடைந்து சமரச ஆட்சி நிலவும்;பாரத பூமியை விதவை அரசாளுவார்;தமிழ்நாட்டை சூரியக்கொடி 36 ஆண்டுகள் ஆளும்;இதில் கூத்தாடிகள் ஆட்சி நிகழும்;அரசாங்கமே கர்ப்பத்தடையை செய்ய வலியுறுத்தும்;அரிஜன மக்கள் படிப்பறிவு பெற்று பட்டம் பதவிக்கு வருவார்கள்;பிராமண குலத்தவர்கள் தாழாத மனிதரிடம் தாழ்ந்து நின்று ஊண் பொருளை உணவாய் கொள்வர்.மது மாமிசம் சாப்பிடுவார்கள்;
கோவில் சிலைகளை வெளிநாடுகளுக்கு திருடிச் செல்வர்;போலிச்சாமியார்கள் ஜடாமுடியுடன் காஷாயம் பூண்டு
கபடம் கொண்டு சித்தர்கள் என்று பெயர் சூட்டிக்கொண்டு மாந்தரை கெடுத்தும்,காசு பணம் பறிப்பார்கள்;கன்னிப்பெண்களை வெளிநாடுகளுக்குக் கடத்துவார்கள்; ஜாதி நிலை மாறி இனசங்கம் கோஷ்டிகள் ஏற்படும்;இவையெல்லாம் நடக்கிற இந்தக் காலத்தில் கி.பி.2000 இல்.
நாகப்பட்டிணம் அருகே இருக்கும் வடக்குப் பொய்கை நல்லூர் அருள்மிகு திருவிகற்ப துரிய ஜீவசமாதி பீடத்திற்கு போகர் வருவார் என்றும்,அது சமயம் ஜோதிலிங்கம் தோன்றும் என்றும் பட்டவர்த்தனமாகக் கூறி இருக்கிறார்.
நன்றி: கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி,நிர்வாக வெளியீடு,வடக்குப் பொய்கை நல்லூர்.
ஓம்சிவசிவஓம்
ஓம் கோரக்கரே போற்றி! போற்றி!! போற்றி!!!
No comments:
Post a Comment