Saturday, January 14, 2012

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் 12.1.2012:இதுவரையிலும் எழுதப்படாத சில உண்மைகள்!!!


சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரன்=இவர் பி.ஏ.எகனாமிக்ஸ் படித்தவர்;இவர் கல்லூரி மாணவராக இருக்கும்போது அறிவுபூர்வமான ஆத்திகராக இருந்தார்;யாரைப் பார்த்தாலும்,நீ கடவுளைப் பார்த்திருக்கிறாயா? என வம்புக்கு இழுப்பார்;ஆம் நான் பார்த்திருக்கிறேன் என்று கூறினால்,எனக்குக் காட்டு என கேட்பார்.எதிராளி பதிலளிக்க முடியாமல் திணறுவான்.ஒருவர் நரேந்திரனிடம்,நீ கடவுளைப் பார்க்க வேண்டுமெனில், தட்சிணேஸ்வரத்தில் இருக்கும் காளி கோவில் பூசாரி ராமகிருஷ்ணரைப் போய்ப் பார்;அவர் உனக்கு கடவுளை காட்டுவார் என வழிகாட்டிவிட்டார்.
நரேந்திரன் ஸ்ரீஇராமகிருஷ்ணரை சந்தித்தார்.அவரிடம், “நீங்கள் கடவுளை பார்த்திருக்கிறீர்களா?” எனக்கேட்டார். அதற்கு ஸ்ரீஇராமகிருஷ்ணர், “ஆம்,பார்த்திருக்கிறேன்.உன்னிடம் பேசுவது போல ,பேசியிருக்கிறேன்” என உறுதியான குரலில் கூறியிருக்கிறார்.
நரேந்திரன், “நான் கடவுளைப் பார்க்க முடியுமா?” என வழக்கம் போல கேட்டிருக்கிறார்.
அதற்கு ஸ்ரீஇராமக்ருஷ்ணர், “உன்னாலும் கடவுளை பார்க்கவும்,அவரிடம் பேசவும் முடியும்.அதற்கு என்னால் உதவ முடியும்” என்று பதிலளித்திருக்கிறார்.பிறகு நடந்தது இந்து தர்மத்தில் எழுதப்பட வேண்டிய சரித்திரம் ஆகும்.

அமெரிக்காவில் சிகாகோவில் முதன்முதலில் நடைபெற்ற சர்வ சமைய மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் நமது இந்து தர்மம் பற்றி பேசினார்;அவரது பேச்சின் மூலமாக இந்துதர்மத்தின் பெருமையை இந்த உலகமே புரியத்துவங்கியது;அன்று முதல் இன்று வரையிலும் அமெரிக்காவுக்கு எந்த இந்துத்துறவி சென்றாலும்,அவருக்கு சுவாமி விவேகானந்தருக்குச் சமமான மரியாதை கிடைப்பது இதனால்தான்!!!
ஆனால்,அமெரிக்கா சர்வசமயமாநாட்டை கூட்டியது எதற்காகத் தெரியுமா?
அனைத்து மதங்களின் பிரதிநிதிகளையும் இந்த சர்வ சமய மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்து,அவர்களின் மத்தியிலேயே “கிறிஸ்தவமே உலகின் மிகச்சிறந்த மதம்” என்று அறிவிக்கவே! சுவாமி விவேகானந்தரின் ‘அமெரிக்க சகோதர,சகோதரிகளே!’ என்ற பேச்சினால்,அவர்களின் திட்டம் பாழானது.

சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் பயணிக்கும்போதும் தனது பெயரை மாற்றிக்கொண்டே இருந்தார்.சுவாமி தயானந்தா, சுவாமி சித்தானந்தா என்று. . . அவர் சென்னையில் மிகக் குறுகிய காலத்தில்  பிரபலமானது எதனால் தெரியுமா? இங்கிலீஷ் பேசும் இந்துச்சாமியார் என்பதாலேயே! சென்னையில் அவர் தன்னை சுவாமி விவேகானந்தர் என்ற பெயரில் உலா வர,அந்த பெயரையே  சென்னையில் இருக்கும் பத்திரிகைகள் பிரபலப்படுத்திட,அதுவே அவரது நிஜப்பெயராகிவிட்டது.

சுவாமி விவேகானந்தர் சொன்ன இரண்டு தீர்க்க தரிசனங்கள் இனிமேல் நடைபெற இருக்கிறது.

1:- எதிர்காலத்தில் சென்னையிலிருந்து ஒரு மாபெரும் ஆன்மீகப் பேரொளி கிளம்பும்.இந்த உலகத்தின் தலையெழுத்தையே அது  மாற்றும்.(வெகு விரைவில் வர இருக்கும் சித்தர்களின் ஆட்சியை அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்)

2.சீனா இந்தியா மீது படையெடுக்கும்.(ஏற்கனவே,இந்தியா சீனா போர் வந்துவிட்டது.இன்னொரு முறை அவ்வாறு நடைபெறும்)
இவரது பேச்சுக்களின் தொகுப்பாக பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன.நாம் சுறுசுறுப்பாக நமது வேலை/தொழிலில் ஈடுபட இவர் எழுதிய கர்மயோகம் என்னும் நூலை அடிக்கடி வாசிப்பது நன்று.ஒவ்வொரு இளைஞருக்கும் அவசியமான,தன்னம்பிக்கையூட்டும் நூல் இது.

கன்னியாக்குமரியில் இருந்து செயல்படும் விவேகானந்தா கேந்திரத்தில் இருந்து விழிமின்,எழுமின் என்ற புத்தகம் ஒவ்வொரு இந்துவின் வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம் ஆகும்.மறைக்கப்பட்ட பல இந்துமதத்தின் பெருமைகளை இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து செயல்படும் ஸ்ரீஇராமகிருஷ்ண மிஷனை,அடிக்கடி தொல்லை கொடுப்பது மேற்கு வங்காள கம்யூனிஸ்ட் ஆளும் கட்சியின் வழக்கமாக இருந்தது.கடவுள் நம்பிக்கையில்லாத  கம்யூனிஸ்டு கட்சியானது,அரசியலே தெரியாத ஸ்ரீஇராமகிருஷ்ண மிஷன் துறவிகளை சித்திரவதை செய்வது ஒரு குரூர அரசியல் இல்லையா?அதே சமயம்,அன்னை தெரசாவின் மிஷனரி ஆஃப் சேரிட்டிக்கு அளவற்ற சலுகைகளை அள்ளி வழங்கியதும் இதே மே.வங்கத்தின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிதான்.இதற்குப் பெயர்தான் செக்யூலரிஸமாம்!!!

கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னத்தை கட்டும் முன்பாக,அந்த இடத்தில் சுவாமி விவேகானந்தர் தவம் செய்த இடம் என்ற ஒரு போர்டை நிறுவியிருந்தனர்.அந்த போர்டை அந்தப் பகுதி கிறிஸ்தவ மீனவர்கள்,அந்த பகுதி பாதிரியின் ஆலோசனைப்படி, பிடுங்கி எறிந்துவிட்டனர்,எறிந்ததோடு,உடனே,அந்த பாறையில் ஒரு சிலுவையை நட்டு,இது கிறிஸ்தவருக்குச் சொந்தமானது என்று வீம்புக்கு ஒருபோர்டினை நட்டிருக்கின்றனர்..இது போல தமிழ்நாடு,இந்தியா முழுக்க இன்று வரையிலும் கிருத்திரியம் செய்து வருவது உண்மை.


இந்துக்களாகிய நாம் இந்து என்ற உணர்வுடன் ஒன்றிணையாதவரையிலும் இதுபோன்ற கிறுக்குத்தனங்களோடு மல்லுக்கு நின்றே ஆக வேண்டும்.

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment