Friday, January 6, 2012

. பிறவித்தொல்லை நீங்கியது




எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தி என்

அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி



(உரைவிளக்கம்) அருள் உண்மையைக் கண்டடைந்து , ஆனந்த வாழ்வுபெறவேமனிதனுக்கு இறையாணை ஏற்பட்டுள்ளது. இந்த உண்மைஅறியப்படாதவரை, உயிருக்கு இந்த மெய்ஞ்ஞானம் விளங்காதவரைபிறவிச்சூழல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றதாம். ஒவ்வொருபிறவியிலும் உயிருக்குப் பலப்பலவாகிய துன்பங்கள் நேர்ந்து , அறிவுவிளக்கமும், அனுபவமும் சிறிது சிறிதாக விளைகின்றன. ஓர் உயிருக்குஏற்படுகின்ற பிறவி இவ்வளவுதான் என்று கணக்கிட்டுச் சொல்லிவிடமுடியாது. இதனால் இந்தப் பிறவியைப் பெருங்கடலுக்குஒப்பிடுகின்றனர். கடல் பெரிதாகத் தோன்றலாம்.நடுக்கடலில்இருப்பவருக்குக் கரையே தென்படுவதில்லைதான் எனினும்அக்கடலுக்கு ஒரு கரையிருக்கும் என்பதும் , அக்கரையேறிவாழ்வுறலாம் என்பதும் மனிதனின் எண்ணம், ஆனால் இந்தப்பிறவிக்கடல் இருக்கிறதே இதற்கு எல்லையே இல்லை! கரையேஇல்லை என்பது இங்கு குறிக்கப்படுகின்றாது. அப்படியானால் இந்தஎல்லையில்லாத பிறவிப் பெருங்கடலிலிருந்து மீள்வது எப்படி?



பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார்


இறைவனடி சேரா தார்.


என்பது வள்ளுவர் கண்டதும் முன்னோர் முடிவுமாம். இறைவன்திருவடியை அறிந்து பற்றிக்கொண்டுவிட்டால் போதும், அதுவேஒருவனுக்குப் பிறவாத பிறவிக்கடலைக் கடந்த பெருநிலையாம் என்பதுகருத்து, இப்படி இறைநிலையுற்று, மேல் பிறவாமையெய்தி விடுவதால்ஒருவன் பிறவிக் கடலை கடந்துவிட்டான் என்றால், அவனுக்கு இந்தஇறையனுபவம் விளங்கும் மனிதவுடல் இல்லையாகிவிடுகின்றது. ஆகையால் கடவுளின்பானுபவத்திற்கு வழியில்லாது, உலகில்வாழ்வற்றுப் போய்விடுவதுதான் இப்பிறவியைப் பெற்றதின் பயனோ? ஓர்ஆன்மாவுக்கு இந்த இறை ஞானாஞ்பவ தேகம் வருமுன்னும்,தேகநீக்கத்தின் பின்னும் இருக்கும் நிலை எதுவோ அதுவேநீடிக்கின்றது உண்மையாம் ஆகையால் பிறவா நிலையைஅடைந்துவிட்டதால் ஏதோ கடவுள் நிலையைப் பெற்றுவிட்டதாகக்கொள்ளுதல் பொருந்தாது. அப்படிப் பிறவாநிலையில் எவ்வளவு காலம்அருக்கிக்கிடந்தும் பேரின்பப்பயன் விளங்காது. ஆகையால்அப்பெரும்பயன் உண்டாக மறுபடியும் அவ் ஆன்மாவுக்கு மனிதப்பிறப்புவழங்கப் படவேண்டியது அவசியமாம், இறைவனும் அந்தப் பக்குவஆன்மாவுக்கு உரிய காலத்தே மனிதப் பிறப்பு தேகம் வழங்கி விடுவதுஉண்மை,. எனவே, பிறவாநிலை பிறவிக்கடலை கடந்து விட்டதாகாது. அது பிறவிக் கடலின் எல்லை, அல்லது கரையாகக் கொள்ளமுடியாது. நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங் கருணையோடுஎன்றென்றும் விளங்குகின்றவராவர். அவரது எல்லையற்ற கருணையின்ஐந்தொழில் எப்பொழுதும் விளங்கிக்கொண்டே யிருப்பது. அப்பெருங்கருணையின் தோற்றமே இத்தேகாதி பிரபஞ்சக்காரியப்பாடுகள் யாவுமாம். இந்த இறையருட் பிரபஞ்சத்தத்தில்தோற்றுவிக்கப்பட்டுள்ள மனிதப் பிறவியில்தான் கடவுள் உண்மைவிளக்கம் வெளிப்பட்டுள்ளது. அதாவது, நித்தியமானஅருட்பெருங்கடவுளே, ஓர் ஆன்ம சிற்றணுவினின்று இவ்வுண்மைவிளக்க அறிவு கொண்டு மனிதனாய்க் தோற்றி நின்று உணர்கின்றதாம். இதுவே மனிதனின் உண்மையான, இயற்கையான, கடவுள்நிலையாயுள்ளது ஆதலின் இவனதுபிறவிச்சூழல், அக்கடவுள் நிலையில்அருள் ஐந்தொழில் நிலைக்களனாகவே யுள்ளதாம். இவ்வுண்மைகொண்டு அக நின்று அருள் வாழ்கின்றவனே என்றும் மறையாது, இறவாது, மேற்பிறாவாது, தன்னை உடல் அடிவினனாகக் கருதி அல்லல்பிறவியை யொழிக்க முயன்று புறத்தே அலையுறுவதாலும் , அகத்தேஅடங்கியொடுங்குவதாலும், பிறவாமைஎய்தினாலும் கூடப் பயனின்றாம்.



கடவுளான்ம உண்மையுடன் விளங்குகின்ற மனிதன் அகத்தேஅல்லலில்லா ஆனந்தபதி நிறை தேக வாழ்விலும் உழல்கின்றான். இவன்தேக வாழ்வில் விருப்பு வெறுப்பு கொண்டு அவத்தைப்படுகின்றதைவிட்டு, அகமிருந்து அருள் வாழ்வு வாழ்த் தொடங்கினால் அந்த அருளேஇவனைச் சுத்த உடம்பு கொண்டு சுகானந்தமோடு விளங்கச் செய்துவிடுவதாம். இதனால் அல்லல் பிறவி முற்றும் ஒழிந்து போகின்றது. இவனைச் சூழ்ந்திலங்கௌம் எல்லையில்லாத பிறவிப் பெருங்கடல் ,முடிவில்லாத அருள் ஐந்தொழில் விளங்கிக் கொண்டேயிருக்கும்எல்லையற்ற ஆனந்த சாகரமாக விளங்குவதாம். இந்த எல்லையற்றஅருட் பெருங்கடலுக்குக் கங்குகரை இல்லை என்பது உண்மையே! இதில் வாழ வந்த சுத்த சன்மார்க்கியை அருள் அம்பலமாகியதீண்டதரிய வெளிநிலைக்குத்தூக்கி கொண்டு, என்றென்றும் தன்மயமாய்வாழச்செய்துவிட்டா நம்பதி. இந்தநிறை இன்ப இறைநிலையே பிறவிப்பெருங்கடல் கடந்த பெருநிலையாம் . நம் திருவருட்பிரகாசவள்ளலுக்கு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தனிப்பெருங்கருணையால் ,எல்லையில் இருங்கடல் அல்லது பெருங்கடல் நிலையைக்கடத்திவிட்டு, அல்லல் செய் பிறாவியை நீக்கிவிட்டு ஆனந்த நிலையில்ஏற்றி வைத்துள்ளார் என்பதை உலகுக்கு உணர்த்துவன இவ் அகவல்அடிகள்.



அகவல் உரைவிளக்கம்


சுவாமி சரவணானந்தா


No comments:

Post a Comment