பஞ்சமகாபாதகங்கள்
1.கள்
2. காமம்
3. கொலை
4. களவு
5. பொய்
இவ்வைந்தும் கொடிய துக்கத்தை உண்டு பண்ணும். இவ்வைந்திலும் கொலை விசேஷ பாவம் என்னினும் 1. கள் உண்டவனுக்கு 2. காமம் உண்டாகாமல் இருக்காது. 3. கொலை செய்யத் துணிவு வராமல் இராது. 4. களவு செய்யாமல் இரான் 5. பொய் பேச அஞ்சான். ஆகையால் இந்த ஐந்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம். இவற்றில் ஒன்றை அடைந்தவன் ஆனாலும் அவனை மற்றவை தொடராமல் இரா.
அறிந்துசெய்யும்பாவங்கள்
மனிதர்கள் 1. மோகத்தாலும், 2. மறதியாலும் 3. அபிமானத்தாலும், 4. அகங்காரத்தாலும் 5. செல்வச் செருக்காலும், 6. தாட்சண்ய உடன்பாட்டாலும், 7. உணவு பற்றியும் 8. புகழ்பற்றியும் 9. வழக்கம் பற்றியும் பாவச் செயல்களைச் செய்கின்றனர்.
அறியாமல்செய்யும்பாவங்கள்
நடக்குங் காலத்திலும், நீராடுங்காலத்திலும், சயன காலத்திலும், தனக்குத் தோன்றாமல் பாவங்கள் நேரிடக் கூடும். இதன்றி அவை மனத்திற்குப் புலப்படாமலும் உண்டாகும்.
No comments:
Post a Comment