Thursday, January 19, 2012

தை அமாவாசையைப்(22.1.12 ஞாயிறு மதியம் முதல் 23.1.12 திங்கள் மதியம் வரை) பயன்படுத்துவோம்


பல லட்சக்கணக்கான வருடங்களாக இந்துக்களால் விஞ்ஞான பூர்வமாக ஆராயப்பட்டு, முடிவில் நமது முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஏற்ற நாட்களாக மூன்று நாட்கள் ஒரு வருடத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அவை ஆடி அமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை!!!
ஆடி அமாவாசையன்று சூரியன் முழு பலத்துடன் இருப்பார்.ஏனெனில்,அடுத்த மாதமான ஆவணி மாதமே சூரியன் சிம்ம ராசியில் ஆட்சி பெறும் மாதம்.புரட்டாசி அமாவாசையானது மிக மிக புனிதமான நாளாகும்.நாம் வாழும் பூமி,சூரியக்குடும்பம்,மில்கி வே இவை அனைத்தும் நமது முன்னோர்கள் வாழ்ந்து வரும் கன்னி ராசி மண்டலத்தைச் சுற்றி வருகிறது.எனவே, புரட்டாசி அமாவாசை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.


சூரியன் பலமிழந்து மீண்டும் பலம் பெறும் முதல் மாதமே தை மாதம்.அந்த தை மாதத்தில் வரும் அமாவாசையானது,ஆடி அமாவாசைக்குச் சமானமான புண்ணிய மாதம் ஆகும்.கர வருடத்தின் தை அமாவாசையானது 22.1.12 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.51க்குத் துவங்கி, 23.1.12 திங்கட்கிழமை  மதியம் 1.01 க்கு நிறைவடைகிறது.இந்த நேரம் இந்திய நேரம் ஆகும்.ஆக,22.1.12 ஞாயிற்றுக்கிழமை இரவுதான் தை அமாவாசை ஆகும். இந்த நாளில் புனித நதிகள் அல்லது ராமேஸ்வரம் அல்லது காசி அல்லது ஹரித்வார் முதலான இடங்களில் நீராடி அன்னதானம் செய்தால் அதை விட பெரும் புண்ணியம் வேறு கிடையாது.அண்ணாமலையிலும் அன்னதானம் செய்யலாம்.
22.1.12 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் இராகு காலம் வருகிறது.மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும்; 23.1.12 திங்கள் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும் குரு ஹோரை அமைந்திருக்கிறது.இந்த  நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தைத் தேர்ந்தெடுத்து நாம் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயங்களுக்குச் சென்று ,ஒரு தனிமையான இடத்தில் மஞ்சள் விரிப்பில் அமர்ந்து,இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்து,நெற்றியில் விபூதி பூசி,மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமது ஒரு ஜபம் ஆயிரம் கோடி மடங்கு பலனாக நமக்குக் கிடைக்கும்.இவ்வாறு கோயில்களுக்குச் செல்ல முடியாதவர்கள்,தமது வீட்டிலேயே ஜபிக்கலாம்.

இந்த நாளில் அண்ணாமலை அல்லது சதுரகிரிக்குச் சென்று,அங்கும் ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,ஒரு தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தமைக்கு,ஒரு லட்சம் கோடி(கூகுள்= 1க்குப்பின்னால் 100 சைபர்கள்) தடவை ஜபித்தமைக்கான பலன்கள் நம்மை வந்து சேரும் என்பது உறுதி.

சரி,எதற்காக தை அமாவாசையன்று இந்த குறிப்பிட்ட நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?

நாம் படும் கஷ்டங்கள் சீக்கிரம் தீராதா ? என்ற ஏக்கம் பல நாளாக,நாளாக எரிச்சலாக மாறி நம்மையே நாம் திட்டிக்கொண்டே இருக்கிறோமா? அப்படிப்பட்டவர்களுக்காகவே இந்த மாதிரியான நேரத்தைக் கணித்து,ஓம்சிவசிவஓம் ஜபிக்க வலியுறுத்துகிறோம்.

வசதியும் ,நேரமும் உள்ளவர்கள் தை அமாவாசை நாளான 22.1.12 ஞாயிற்றுக்கிழமையன்று அண்ணாமலைக்குச் சென்று,காலை 6 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளும்,மதியம் 12 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளும், இரவு 7 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளும் அன்னதானம் செய்வது நன்று.காலையில் அன்னதானம் முடித்த கையோடு கிரிவலம் செல்லலாம்;

அல்லது

இரவு அன்னதானத்தை நிறைவு செய்த கையோடு தை அமாவாசை கிரிவலம் செல்வது இன்னும் சிறப்பான பலன்களைத் தரும்.ஏனெனில்,அன்னதானத்தை அண்ணாமலையில் அதுவும் தை அமாவாசையன்று செய்தவன்,தனது முந்தைய 30 தலைமுறையினரின் கர்மவினைகளைத் தீர்க்கிறான்.
ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;அன்னதானம் செய்வோம்;இந்த பிறவியிலேயே சகல விதமான கஷ்டங்களும் நீங்கி செல்வச்செழிப்போடும், நிறைவான வாழ்க்கை வாழ்வோம்.

ஓம்சிவசிவஓம்

3 comments:

  1. அருமையான தகவல்களுக்கு நன்றி அய்யா

    ReplyDelete
  2. வாழ்வில் மேன்மை பெற நல்ல தகவல்களை உரியநேரத்தில் வழங்குவதற்கு நன்றி அய்யா.

    ReplyDelete
  3. Migavum arumaiyaana , arputhamaana thagavalkal. Naan Raameswaram senru pithur kadan seiyaa intha thagaval uthaviyulluthu, Nanri.

    ReplyDelete