Saturday, January 21, 2012

வேர்களை வெளிக்காட்டும் வரலாறு பகுதி 23


மெக்காலேவின் சுயரூபம் பகுதி 3 ஆராய்ந்து எழுதியவர்  ஈரோடு டாக்டர் எம்.எல்.ராஜா MBBS,DO,அவர்கள்;                செல் எண்:9443370129
மெக்காலேவின் விஷமப் பிரச்சாரங்கள் தொடர்கின்றன:

10.Teaching Sanskrit, we are to teach false history. False astronomy,false medicine,because we find them in company with a false religion=ஸம்ஸ்க்ருதம் கற்பிப்பது என்பது வரலாறு,வானவியல்,மருத்துவம் ஆகியவற்றைத் தவறாகக் கற்பிப்பதாகும்.ஏனென்றால் அவை  ஒரு தவறான மதத்துடன் தொடர்பு கொண்டுள்ளன.

அடுத்தவர்கள் வழிபாட்டு முறையை மதித்து சகல சுதந்திரமும் தந்து வரும் நமது மதத்தின் உயர்வு எத்தனை மகோன்னதமானது?1891 செப்டெம்பர் 11 ஆம் தேதி சிகாகோ ஸர்வ மத சபையில் சுவாமி விவேகானந்தர் நமது மதத்தின் சிறப்பை உயர்வை உலகறிய முழங்கினார்.பாரதத்தின் வரலாறு,வானவியல்,மருத்துவம் தான் உலகம் விஞ்ஞான வரலாற்று உண்மையாக நாலந்தா,தட்சசீலம் மற்றும் காஞ்சிபுரம் பல்கலைக்கழகங்களின் மூலமாகத் தான் கற்றுத் தெளிந்தது.ஒரே கட்டுரையில் இவ்வளவு அதிகமாகப் பொய்கள் மெக்காலேவால் மட்டுமே புனைந்தெழுத முடியும்.
11.I would at one stop printing of Arabic,Sanskrit books.No stipend will be given to any student.= நான் ஸமஸ்க்ருத,அரபிய புத்தகங்களை அச்சிடுவதை உடனடியாக நிறுத்துவேன்.இம்மொழிகள் படிக்கின்ற மாணவர்களுக்கு உதவித் தொகை தரக்கூடாது.


12.The English language might well and thoroughly tought=ஆங்கில மொழி நன்றாக முழுமையாகக் கற்றுத் தர வேண்டும். பயிற்று மொழியாக ஸமஸ்க்ருதத்தை நீக்கிவிட்டு,அதனுடைய இடத்தில் ஆங்கிலத்தைக் கொண்டு வர வேண்டும்.இதுதான் மெக்காலேவின் திட்டம்.
இதனுடைய நோக்கம் என்ன என்பதை சிந்திப்போம்.

தாமஸ் பேபிங்கடன் மெக்காலே(1800 முதல் 1859) என்ற ஆங்கிலேய அதிகாரி,பாரதத்தின் கல்வி முரை பற்றிய தனது அறிக்கையான Minute of Education by T.B.Macaulay,2nd February 1835 என்பதை கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரலான வில்லியம் சேவண்டிஷ் பெண்டின்க் என்பவருக்கும், ஆங்கில அரசுக்கும் சமர்ப்பித்தார்.இதில் அவர் கூறிய அப்பட்டமான பொய்கள்,தவறான வாதங்கள் ஆகியவற்றையும்,இவ்வறிக்கை மூலம் பாரதத்தில் பயிற்றுமொழியாக ஸமஸ்க்ருதம் மற்றும் இதர பாரத மொழிகளை நீக்கிவிட்டு,அந்த இடத்தில் கிறிஸ்தவ ஆங்கிலத்தை அவர் கொண்டு வந்ததையும் சென்ற இதழ்களில் சிந்தித்தோம்.இதன் நோக்கத்தை இந்த அறிக்கையிலேயே மெக்காலே குறிப்பிட்டுள்ளார்.

மெக்காலேவின் நோக்கம்:


We are at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern & a class of persons, India in blood and colour, but English in tasters, in opinions,in morals and intellect.=இப்போது ஆள்கிற ஆங்கிலேயர்களாகிய நமக்கும்,ஆளப்படுகிற கோடிக்கணக்கான பாரத மக்களுக்கும் (இந்துக்களுக்கும்) இடையே மொழிபெயர்ப்பாளர்களாக இருக்கும் ஒரு கூட்டத்தை உருவாக்க, நாம் நன்கு முயற்சிக்க வேண்டும்.இந்த மொழிபெயர்ப்பாளர்கள்,நிறத்தாலும் இரத்தத்தாலும் இந்தியர்களாகவும்,(ஆனால்) விருப்பங்கள்,கருத்துக்கள், நெறிமுறைகள் மற்றும் சிந்தனா முறையில் ஆங்கிலேயர்களாகவும் இருப்பார்கள்.

மக்கள் தாங்கள் பேசுகின்ற மொழியை மாற்றிக் கொள்ளும்போது, அவர்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறைகளும் மாறுபட்டுப் போய்விடுகின்றன.ஏனென்றால் மொழி என்பது கலாச்சாரம்,பண்பாடு,வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டது என்பதுடன் பண்பாடு,வாழ்க்கைமுறை , மொழி மூலமாக விரிவடைவதும் உண்மையே.மொழி இவற்றை வெளிப்படுத்துகிறது;பிரதிபலிக்கின்றது.உதாரணமாக, “க்ருஷ்ணரின் புல்லாங்குழலை ராதா திருடிவிட்டாள்” என்று நமது பாரத நாட்டின் எந்த மொழியில் கூறினாலும்,அம்மொழி பேசும் நமது மக்கள்,இதன் உட்பொருளான ராதாவிற்கு க்ருஷ்ணனின் பால் இருந்த உள்ளார்ந்த அந்த மாசு மருவற்ற உன்னதமான அன்பு,பிரியம் பாசத்தைத் தெளிவாக உணர்வார்கள்.ஆனால்,இதையே ஆங்கிலத்தில், “Radha has stolen Krishna’s flute” என்று கூறும்போது, முக்கியமாக ஆங்கிலேயரிடம் சொல்லும்போது, அந்த உன்னதமான அன்பை அவர்கள் உணர்வதில்லை.வெறும் திருட்டு என்று தாழ்ந்த அளவில் மட்டுமே அவர்கள் புரிந்து கொள்ள முடியும்.ஆகவே,மொழியும்,கலாச்சாரம் பண்பாடு மற்றும் வாழ்க்கை முறை ஆகியவையும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை.ஒன்று மாறுபடும்போது, மற்றவையும் மாறுபடவே செய்யும்.ஆகவே,நாம் வேற்று நாட்டு மொழியை அன்றாட வாழ்க்கை மொழியாக ஏற்றுக்கொள்ளும்போது,நாம் அந்த மொழி மற்றும் அந்த நாட்டின் கலாச்சாரம்,பண்பாடு , வாழ்க்கை முறைக்கு மாறிப்போக நேரிடும்.ஆகவே, நாம் நமது நிலையிலிருந்து மாறி அந்த நாட்டிற்கு மனதளவில் அடிமைத்தனம் பூண்டவர்களாக மாறுகின்றோம்.ஆகவே தான் மெக்காலே நமது  பாரத மொழிகளைப் பயிற்றுமொழியிலிருந்து நீக்கிவிட்டு, நம் நாட்டுக் கல்விமுறையில் ஆங்கிலத்தைக் கொண்டு வந்தான்.பாரத நாட்டின் மொழிகள் அனைத்தும்,நமது பாரதக் கலாச்சாரத்தை,பண்பாட்டை,நம் முன்னோர்களின் வாழ்க்கைமுறையைப் பிரதிபலிக்கின்றன.ஆகவே,நாம் நாமாகவே வாழ்கின்றோம்.மாறாக நமது அன்றாட வாழ்க்கை மொழியாக கிறிஸ்தவ ஆங்கிலத்தை ஏற்கும்போது நாம் (கிறிஸ்தவ)ஆங்கிலக் கலாச்சாரத்திற்கு அடிமை ஆகின்றோம்.இதனாலேயே மெக்காலேவின் கல்வித்திட்டத்தால், பாரதம் விஞ்ஞானத்தில் உலகில் முதன்மை இடத்தில் இன்றைக்கு இருக்கின்ற நிலையிலும், நம்மில் எண்ணற்றோர் நமது நாட்டைத் தாழ்வாகவும்,மேற்கத்திய நாடுகளை உயர்வாகவும் மிகவும் நம்புகின்றனர்.

இங்கிலாந்தில் மெக்காலே:


இவ்வாறு பாரதத்தில்,தனது தேசத்திற்கும்,மதத்திற்குமான தனது பணியைச் செவ்வனே செய்து முடித்த மெக்காலே 1837 இல் இங்கிலாந்து திரும்பினான்.அங்கும் தனது பாரத விரோதப் பணிகளைத் தொடர்ந்து செய்து வர ஆரம்பித்தான்.முதலாவதாக பாரதத்தின் அரசு நிர்வாக ஆட்சியாளர்களின் நியமனத்தில் ஒரு புது முறையைக் கொண்டு வரத் திட்டமிட்டான்.இதுவரை, கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரல் மற்றும் உயரதிகாரிகள், தங்களின் உறவினர்கள் மற்ரும் வேண்டியவர்களை அப்பணியில் அமர்த்தி வந்தனர்.இந்த ஆட்சியாளர்கள் கவர்னர் ஜெனரல் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டும் விசுவாசமாக இருந்தனர்.மேலும் பாரதம் வந்ததும்,பாரதத்தின் ஒப்புயர்வற்ற மேன்மைகளைக் கண்டு வியந்து போயினர்.ஒரு சிலர், ஒரு சில சமயங்களில் பாரத விசுவாசிகளாக மாறி,பாரதத்தை நேசிக்கவும் ஆரம்பித்தனர்.உதாரணமாக,ஆரம்பகாலத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேஸ்டிங்க்ஸ், ஸ்ரீமத் பகவத் கீதையின் மேன்மை கண்டு சொக்கிப் போனார்.பாரதத்தின் உயர்வு சிறப்புகள் அந்த அளவிற்கு அவர்களை ஆட்கொண்டது.ஆங்கில அதிகாரிகளின் இந்தப் போக்கு,நாளடைவில் பாரதத்தில் ஆங்கில அரசு விரிவடைவதற்கும், தொடர்ந்து நீடிப்பதற்கும் மிகப்பெரிய தடையாக இருக்கும் என்று மெக்காலே நம்பினான்.ஆகவே,இவ்விஷயத்தில் ஒரு புதிய திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர மெக்காலே முடிவு செய்தான்.
I.C.S.தேர்வு முறை

மெக்காலேவின் திட்டப்படி,பாரத நிர்வாக ஆட்சியாளர்கள்,பாரத நிர்வாகப்பணி(Indian Civil Service) தேர்வு மூலம் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும்.இது ஒரு பன்முனைப் போட்டித் தேர்வு(Competetive Examination) ஆகும்.இதற்கான பாடத்திட்டங்களை மெக்காலே தலைமையிலான ஒரு குழு முடிவெடுக்கும்.இதன்மூலம்,தேர்ந்தெடுக்கப்படும் ஒரு I.C.S.அதிகாரி,மேற்கு நாடுகள் மற்றும் அவற்றின் விஷயங்கள் பற்றி உயர்வான மதிப்பும்,பாரத நாடு மற்றும் அதன் விஷயங்கள் பற்றி மிகத் தாழ்வான கருத்தும் கொண்டிருப்பார்.இவ்வாறு கிறிஸ்தவ ஆங்கில அரசுக்கு முற்றிலும் விசுவாசமாகவும்,பாரதத்திற்கு முற்றிலும் விரோதமான கருத்துக்கள் மற்றும் மனோபாவம் ஏற்படுத்தும் விதத்திலும் இந்த பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன.


மெக்காலேவின் ஏற்பாட்டிற்குச் சாதகமாக அமையும் வண்ணம்,இங்கிலாந்து நாடாளுமன்றம் 1853 இல் பாரத ஆட்சிப்பணி (Indian Civil Service) பற்றி ஒரு சட்டம் இயற்றத் துவங்கியது.பாரத ஆட்சிப் பணிக்கான கட்டுப்பாட்டு வாரியத்தலைவரான(The President,Board of Control) சர்.சார்லஸ் வுட்(Sir.Charles Wood), இந்தச் சட்டவரைவை (Law Bill)இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 1853 இல் அறிமுகப்படுத்தினார்.மெக்காலே இதற்கு முழு ஒப்புதலும் ஆதரவும் தந்தான்.1833 ஆம் ஆண்டின் பாரத சட்டத்தின் சில வரைவுகளை மாற்றி அமைத்து, பாரத ஆட்சிப்பணித்தேர்வானது,பலமுனைப் போட்டித்தேர்வு (Competetive Examination)முறையில் அமைந்திருக்கும் வண்ணம் மெக்காலே தகுந்த முயற்சிகளைச் செய்தான்.ஆனால்,முதன்முறையில்,இந்த சட்டவரைவு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சரியான வரவேற்பைப் பெறவில்லை;இதனால்,மெக்காலே இதில் நேரிடையாகத் தலையிட்டான்.இரண்டாம் முறை இந்த சட்ட வரைவு, ஜீன்23,1853 இல் மீண்டும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.உடல்நிலை சரியில்லாத நிலையிலும்,இதை ஆதரித்து சுமார் ஒன்றரை மணிநேரம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மெக்காலே பேசினான்.இங்கிலாந்து ராணியின் மனோநிலையும் இதற்கு ஆதரவாகவே இருந்தது.இது அவரின் 1854 ஆம் ஆண்டின் பேச்சில் தெளிவாகத் தெரிந்தது. இதுவும் மெக்காலேவிற்குச் சாதகமாக அமைந்தது.(இவ்விவரங்கள் அனைத்தும் Life and letters of Macaulay,2nd volume புத்தகத்தின் 283 முதல் 288,314 முதல் 316 மற்றும் 320 பக்கங்களில் உள்ளன.இணையத்தில் இந்தப் புத்தகத்தை நாம் பிரதி எடுக்க முடியும்) இதன்பின் இந்த சட்ட வரைவு சட்டமானது.பாரதத்தில் இருந்த ஆங்கில ஆட்சியாளர்களும் இதனை ஏற்றுக்கொண்டனர்.

இதன் பின்னர்,சர் சார்லஸ் வுட் இந்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருகின்ற பணிகளைச் செய்ய ஆரம்பித்தார்.இதற்காக மெக்காலேவைத் தலைவராகக்(chairman) கொண்ட ஒரு குழுவை அமைத்தார்.  தொடர்ந்து நான்கு அல்லது ஐந்து நாட்கள் கடுமையாகப் பணி செய்து, பாரதத்திற்கு செல்லும் ஆட்சிப்பணியாளர்கள் கிறிஸ்தவ இங்கிலாந்தை உயர்வாகவும்,இந்து பாரதத்தைத் தாழ்வாகவும் கருதி,இங்கிலாந்திற்கு முழுவிசுவாசமாக உழைக்கும் வண்ணம் ஒரு I.C.S. பாடத்திட்டத்தை மெக்காலே உருவாக்கினான்.இவ்வாறு பாரதத்தில் ஆங்கில ஆட்சி பரவி நீடிக்கச் செய்கின்ற தனது முதல் திட்டத்தை நன்கு திட்டமிட்டு மெக்காலே செயலுக்குக் கொண்டு வந்தான்.


நன்றி:சுதேசிச் செய்தி,பக்கங்கள் 21,22; ஜனவரி 2012.
ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment