Wednesday, January 25, 2012

விஜயாபதி விஸ்வாமித்ரர் கோவிலுக்கு குடமுழுக்கு







ராமாயணத்தில் ஸ்ரீஇராமச்சந்திரமூர்த்திக்கு குருவாக இருந்தவர் ப்ரம்ம ரிஷி விஸ்வாமித்ர மகரிஷி!!! இவர் இன்னும் தமிழ்நாடு,நெல்லை மாவட்டம்,ராதாபுரம் தாலுக்கா அருகில் இருக்கும் விஜயாபதி கிராமத்தில் சூட்சுமமாக தவம் செய்துவருகிறார் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை ஆகும்.கி.பி.1700 இன் முற்பகுதி வரையிலும் விஜயாபதி,இன்றைய தூத்துக்குடி அளவுக்கு மிகப்பெரிய மாநகரமாக இருந்திருக்கிறது.கி.பி.1700 வரை நிறைவடையும் 25,000 ஆண்டுகளாக உலகத்தின் முக்கியத் துறைமுகநகரமாக விளங்கியிருக்கிறது.தேரோடும் வீதிகளும்,ஏராளமான சிவாச்சரியார்களும் வாழ்ந்த புனித நகரமாகும்.

17,50,000 ஆண்டுகளுக்கு முன்பு,இப்பகுதியில் விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் செய்த யாகத்தை தாடகை என்னும் அரக்கி தடுக்க முயன்றிருக்கிறாள்.அவளை விஸ்வாமித்ர மகரிஷியின் ஆணைப்படி,ஸ்ரீஇராமச்சந்திரரும்,அவரது தம்பிஸ்ரீ லட்சுமணனும் வதம் செய்தனர்.இந்த சம்பவம் ராமாயணத்தில் இருக்கிறது.தாடகை அரக்கியாக இருந்தாலும்,அவள் ஒரு பெண் என்பதால்,ஸ்ரீஇராமச்சந்திரமூர்த்திக்கு ப்ரம்ம ஹத்தி தோஷம் உண்டானது.இந்த ப்ரம்ம ஹத்தி தோஷத்தை நீக்கிய இடம் இந்த விஜயாபதி ஆகும். இப்பேர்ப்பட்ட சிறப்புமிக்க விஜயாபதி விஸ்வாமித்ர மஹாலிங்கசுவாமி திருக்கோவிலின் குடமுழுக்கு எதிர்வரும் கர வருடத்தின் தைப்பூசத்தன்று 7.2.2012 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற இருக்கிறது.எனவே,ஆன்மீகக்கடல் வாசக வாசகிகளே! அனைவரும் விஜயாபதிக்கு வருக!!!விஸ்வாமித்ரர் அருளை பெறுக!!!

படங்களில் இருப்பவை விஜயாபதியில் அமைந்திருக்கும் விஸ்வாமித்ர மஹாலிங்க சுவாமி திருக்கோவிலின் சில பகுதிகள் ஆகும்.ஒரு பிரதான சாலையின் ஓரத்தில் ஓம குண்ட கணபதி சன்னதி நம்மை வரவேற்கிறது;அதன் அருகிலேயே ப்ரம்மரிஷி விஸ்வாமித்ரமகரிஷி அவர்கள் செய்த யாக குண்டம் தற்போது கிணறாகக் காட்சியளிக்கிறது;அதற்கடுத்தபடியாக,ப்ரம்ம ரிஷி விஸ்வாமித்ரமகரிஷியின் கோவில் இருக்கிறது.இன்றைய காயத்ரி மந்திரத்தை நமக்கு அளித்தவர் இந்த ப்ரம்ம ரிஷியே! இதே ப்ரம்ம ரிஷி தனது சீடனுக்காக புதிய பிரபஞ்சத்தையே படைத்தார் என்பதும் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான ரீதியான வரலாறு ஆகும்.


(பூமியின் தெற்குத் திசையின் வானத்தில் புதிதாக பிறந்த நட்சத்திரத் தொகுதிகள் இருப்பதை வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.இதைப் படைத்தது ப்ரம்மரிஷி விஸ்வாமித்ர மகரிஷியேதான்!!!)

அடுத்ததாக தொலைவில் இருப்பதே,விஸ்வாமித்ர மகரிஷி அவர்கள் உருவாக்கிய விஸ்வாமித்ரமஹாலிங்க சுவாமி திருக்கோவில் ஆகும்.


சூட்சுமமாக பல தெய்வீக ரகசியங்களை உள்ளடக்கியது இந்த விஜயாபதி ஆகும்.நேர்மையாளர்கள் மற்றும் வலுத்த பூர்வபுண்ணியம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த விஜயாபதிக்கு வர முடியும்.

விஜயாபதி ஸ்ரீவிஸ்வாமித்ர மஹாலிங்க சுவாமி திருக்கோவிலின் குடமுழுக்கு செய்தியை வெளியிடுவதில் ஆன்மீகக்கடல் பெருமகிழ்ச்சி கொள்கிறது.


ஓம்சிவசிவஓம் 




No comments:

Post a Comment