Saturday, January 21, 2012

எஸ்.இராமச்சந்திராபுரத்தில் இருக்கும் ஜீவசமாதி கோவில் சடையாண்டி










விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,சுந்தரபாண்டியம் கிராமத்தின் அருகில் இருக்கும் ஜவுளிவர்த்தகர்களை உருவாக்கும் கிராமம் எஸ்.ராமச்சந்திராபுரம் ஆகும்.நெசவாளர்கள் அதிகம் வாழும் இந்த கிராமத்தில் வடக்குத் தெருவுக்கும் செங்குளம் கிராமத்திற்கும் இடையே இருக்கும் நந்தவனத்தில் அமைந்திருப்பது சடையாண்டி கோவில் ஆகும்.மிகவும் சக்திவாய்ந்த துறவி ஒருவரின்  ஜீவ சமாதி ஆகும்.இப்பகுதியில் பலரது பெயராக சடையாண்டி இருக்கிறது.ஜவுளித்தொழிலில் கொடிகட்டிப்பறக்கும் போத்தீஸ் ஜவுளிக்கடையின் நிறுவனரின் பெயரும் சடையாண்டி!

இதுபோன்ற ஜீவசமாதிகள் தமிழ்நாடு முழுவதும் சில லட்சம் ஜீவசமாதிகள் இருக்கின்றன.இந்த ஜீவசமாதிகளில் ஏதாவது ஒன்றில் அமாவாசை,கிரகணம்,தமிழ்மாதப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு,பவுர்ணமி நாட்களில் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,நமது நீண்டகாலப் பிரச்னைகள் தீரும் என்பது அனுபவ உண்மை.

உரியநாட்களில் குரு ஓரையில் முதல் 12 நிமிடங்களில் ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்.உதாரணமாக,வரும் ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11.00 முதல் 11.12 வரையிலும்,மாலை 6.00 முதல் 6.12 வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்.ஓரையில் மிகவும் புனிதமான ஓரை குரு ஓரை ஆகும்.எந்த ஓரையாக இருந்தாலும்,அந்த ஓரையின் முதல் 12 நிமிடங்கள் மிகவும் சக்திவாய்ந்ததாகவும்,அளவற்ற தெய்வீக ஆகர்ஷணத்தைப் பெற்றுத்தருவதாகவும் இருக்கிறது என்பதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.
ஒவ்வொரு நாளிலும் வரும் குரு ஓரை நேரப்பட்டியல் வருமாறு:
திங்கள் காலை 8 முதல் 9;மதியம் 3 முதல் 4;இரவு 10 முதல் 11;நள்ளிரவு 3 முதல் 4;
செவ்வாய் காலை 5 முதல் 6;காலை 12 முதல் 1;இரவு 7 முதல் 8;நள்ளிரவு 2 முதல் 3;
புதன் காலை 9 முதல் 10;மாலை 4 முதல் 5;இரவு 11 முதல் 12;
வியாழன் காலை 6 முதல் 7; மதியம் 1 முதல் 2;இரவு 8 முதல் 9;நள்ளிரவு 3 முதல் 4;
வெள்ளி காலை 10 முதல் 11; மாலை 5 முதல் 6; இரவு 12 முதல் 1;
சனி காலை 7 முதல் 8; மதியம் 2 முதல் 3; இரவு 9 முதல் 10;நள்ளிரவு 4 முதல் 5;
ஞாயிறு காலை 11 முதல் 12; மாலை 6 முதல் 7;நள்ளிரவு 1 முதல் 2 வரை;
இந்த நேரங்களில் இராகு காலமோ,எமகண்டமோ வரத்தான் செய்யும்.அப்படி வந்தாலும்,அந்த ராகு காலம்,எமகண்டத்தை விட, ஓரையே அதிசக்தியுடன் செயல்படும் என்பதை பழமையான ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.இந்த நேரங்களில் எந்த ஒரு சுபகாரியங்களையும் ஆரம்பிக்கலாம்.உலகில் எந்த ஒரு நாடாக இருந்தாலும்,இந்த நேரப்படிதான் குரு ஹோரை ஆரம்பிக்கும்.இந்த குரு ஹோரையில்  முதல் 12 நிமிடங்கள் மிக மிக மிக புனிதம் மிக்க நேரம் ஆகும்.

ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment