Friday, January 6, 2012

பெர்முடா மர்மங்கள்

பெர்முடா மர்மங்கள்


மர்ம முகோணம் மரண முக்கோணம்

அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவுக்குக் கிழக்காக, தீர்க்க ரேகைக்கு மேற்காக 40 டிகிரியில் பெர்முடா என்ற தீவின் அருகாமையில் அமைந்துள்ள பகுதிதான் பெர்முடா முக்கோணம். இந்த முக்கோணத்தைத் தான் இப்படி மர்ம முகோணம் – மரண முக்கோணம் என்று அழைக்கின்றனர். காரணம், இது வரை சுமார் 40 கப்பல்களும், 20 விமானங்களும், சிறு சிறு மரக்கலங்களும் இப்பகுதி மீது செல்லும் போது காணாமல் போனதால் தான். இவற்றோடு அதில் பயணம் செய்த ஆயிரக்கணக்கான மனிதர்களும் மாயமாய் மறைந்து போய் விட்டார்கள் என்பதுதான் பெரிய சோகம். வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொ ரிகொ ஆகிய முன்றுதுறைமுகங்களை இணைக்கும் பகுதி இது.

இந்த பெர்முடாப் பகுதியில் கப்பல்கள் ஏதும் சென்றாலோ அதன் மேல் விமானங்கள் போன்றவை பறந்தாலோ அவை திடீரென மறைந்து விடுகின்றன. ஏன், எதற்கு, எப்படி அவை மறைகின்றன என்பது சரிவரத் தெரியாமல் ஆராய்ச்சியாளர்கள் திகைக்கின்றனர். குறிப்பாக விபத்துகளில் அநேகமானவை பஹாமாஸ் மற்றும் புளோரிடா நீர்ச்சந்தியைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே நிகழ்ந்திருக்கின்றன. அவற்றிற்கான காரணம் என்ன என்பதும் தெரியவில்லை. ஒருவேளை அவை கடலுக்குள் இழுக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து ஆராய்ந்து பார்த்தபோது ஆழ்கடல் பகுதியில் அப்படி எதுவும் கிடைக்கவில்லை.

மனிதனை விட தொழில்நுட்பத்திலும், அறிவிலும் மேலோங்கி இருக்கும் வேற்று கிரக மனிதர்களின் ஆராய்ச்சிப் பகுதியாக இது இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. வேற்றுக் கிரகவாசிகள் கடத்திச் செல்கின்றனர் என்றும், மக்களும் விமானங்களும் காற்றில் கரைந்து காணாமல் போய் விடுகின்றனர் என்றும், அமானுஷ்ய சக்தி படைத்த ஆற்றக் மிக்க ஆவிகளின் வேலைதான் இது என்றும் பலவித கருத்துகள் நிலவுகின்றன.

சிலர், விமானம், கப்பல்கள் மூழ்குவதற்கு கடலில உண்டாகும் பயங்கர சூறாவளிகள் காரணமாக இருக்காலாம்; சுனாமி போன்ற இராட்சச அலைகள் உருவாகி.. கப்பல்களையும், விமானங்களையும் மூழ்கடித்திருக்கலாம் என்று கூறுகின்றனர். பெர்முடா முக்கோணத்தின் மறு பகுதியில் உள்ள (பூமி உருண்டையில் மறுமுனை பகுதி) ஜப்பான் நாட்டு கிழக்கு கடற்கரைப் பகுதி – ட்ராகன் முக்கோணம் (பிசாசுக் கடல்) என்று அழைக்கப்படுகிறது இங்கும் பல கப்பல்கள் மயமாய் மறைந்துள்ளன. இந்த இரண்டு முனைகளிலுமே காந்த ஈர்ப்பு விசையானது அதிகமாக இருக்கிறது. இந்த இரண்டு கடல் பகுதிக்கும் எதோ ஒருவித தொடர்பு இருக்கவேண்டும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் அப்படி இந்தப் பகுதியில் என்னதான் இருக்கிறது எனப் பார்த்து விடுவோம் என துணிச்சலுடன் அமெரிக்க – ரஷ்ய விஞ்ஞானிகள் 14 பேர் நவீன கருவிகளுடன் கூட்டாகச் சென்றனர். ஆனால் திடீரென அவர்கள் ஏதோ ஒரு விசையால் செலுத்தப்பட்டவர்கள் போல் கடலுக்குள் மூழ்கிக் காணாமல் போயினர். எப்படி மூழ்கினர், ஏன் மூழ்கினர், அதன் பின் அவர்கள் உடல் என்ன ஆனது என்பதை மற்றவர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

பெர்முடா மர்மங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன

No comments:

Post a Comment