இறை சேவையில் முழுமையாகத் தங்களைக் கரைத்துக் கொண்டு,இறைவனுடன் இரண்டற
கலந்த பக்தர்களே சித்தர்கள் ஆவர்;இத்தகைய சித்தர் ஒருவர் இறைவனுக்காக கதறிக் கதறி அழுகின்ற
கண்ணீர்த்துளிகள் வானில் இருந்து பூமியில் விழும்;அப்படி பிரபஞ்சத்திலேயே முதன் முதலில்
விழுந்த போது இரண்டு இளம் தளிர்களைக் கொண்ட தீர்க்க சுந்தர விருட்சம் என்ற சிறு செடி
பூமியில் முளைத்து எழுகிறது;
பிறகு,அந்த சித்தரின் கண்ணீர்த்துளிகளை மட்டுமே உணவாக ஏற்றுக் கொண்டு,வளர்கிறது;இப்படி
100 யுகங்கள் கடந்ததும் அந்த சித்தர் ஈசனுடன் இரண்டற கலந்துவிடுகிறார்;
100 யுகங்களுக்கு மேல் எந்த இறைஅடியாரும் ஈசனிடமிருந்து தனித்து இயங்கிட
முடியாது;அவர் ஈசனுடன் கலந்தே ஆக வேண்டும் என்பது வாலை நியதி;
இப்படி ஒரு சித்தர் ஈசனுடன் கலந்தப் பின்னர், அடுத்து வரும் சித்தர்
அந்தச் செடிக்குத் தம்முடைய பக்திக் கண்ணீரை அடுத்த 100 யுகங்களுக்குச் சமர்ப்பிக்கிறார்;
ஒருவேளை,ஒரு சித்தர் ஈசனுடன் கலந்தப் பின்னர்,அடுத்த சித்தர் உடனடியாக
வராவிட்டால்(வரும் காலம் கனியாவிட்டால்) அந்த பக்திச் செடி எவ்வளவு யுகங்களாக இருந்தாலும்
பக்திக் கண்ணீருக்காக காத்துக் கொண்டிருக்கும்;சித்தர்களின் பக்திக் கண்ணீரைத் தவிர
வேறு எதன் மூலமாகவும் அந்தச் செடி வளராது;
இப்படி 1000 சித்தர்களின் பக்திக் கண்ணீரால் வளர்க்கப்பட்ட தீர்க்க சுந்தரச்
செடியே ஒரு மரமாக வளர்ந்து பூத்துக் குலுங்குகிறது;1000 யுகங்களின் முடிவில் அந்தச்
செடி ஒரு சிவாலயத்தில் சுயம்பு லிங்கமாக உருமாறுகிறது;
அப்படி உருமாறும் தீர்க்க சுந்தர விருட்சத்தின் தண்டு,வேர்,கிளை பகுதிகள்
அந்த ஆலயத்திற்கு உரிய சுயம்பு லிங்க மூர்த்தியாகவும்,அதன் கனிகள் அந்த ஆலயத்தின் ஸ்தல
விருட்சமாகவும் அமைந்துவிடுகிறது;
ஒரு திருத்தலத்தில் உள்ள ஈசனைத் தரிசிப்பதும்,அங்குள்ள ஸ்தல விருட்சத்தைத்
தரிசிப்பதும் ஒன்றே என்பது முன்னோர்களின் அனுபவப் பழமொழி!
தீர்க்க சுந்தர விருட்சம் ஒவ்வொரு யுகத்திலும்,ஒவ்வொரு உலகத்திலும் வெவ்வேறு
பெயர்களைக் கொண்டிருக்கிறது;நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் தீர்க்க சுந்தர விருட்சம்
“வேப்ப மரம்” ஆகும்;இந்த தீர்க்க சுந்தர விருட்சத்தின் ரூப சக்தியைக் கொண்டு விளங்கும்
இடம் வைத்தீஸ்வரன் ஸ்தலத்தின் ஸ்தல விருட்சமான வேப்பமரம் ஆகும்;
இதன் தரிசனம் எப்பேர்ப்பட்ட கொடிய நோய்களையும் தீர்க்கும் சக்தி வாய்ந்தது;
ஓம் அகத்தீசாய நமஹ
வாழ்க பைரவ அறமுடன்,வளர்க வராகி அருளுடன்!!!
No comments:
Post a Comment